நாளொரு பக்கம் 45
Thursday, the 9th April 2015
தியானம்
- ஸாத்விக குணமுள்ள மனிதன் எவ்வாறு தியானம் செய்கிறான் என்பதை அறிவாயா? அவன் இரவிலே படுக்கையின் திரைக்குள்ளிருந்து தியானஞ் செய்கிறான். அவன் தூங்குகிறான் என்று வீட்டிலுள்ளவர்கள் நினைக்கிறார்கள். தூய மனமுள்ள பக்தன், தன் அன்பை வெளிப்படையாகக் காட்டுவதில்லை.
- தியானம் செய்துகொண்டு வரும்போது பக்தன் யோகநித்திரை யென்னும் உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். அம்மாதிரி வேளைகளில் பல பக்தர்கள் ஏதாவது பகவத் ஸ்வரூபத்தைக் காண்கிறார்கள்.
- தியானம் செய்யும்போது முழுமனத்தையும் கடவளிடம் செலுத்தி ஆழ்ந்த தியானத்தி லமர்ந்திருக்கும்போது, பறவையொன்று மேலே வந்து உட்கார்ந்தாலும் தெரியாது. ஜகன் மாதாவான காளிதேவியின் திருக்கோயிலிலுள்ள கலியாண மண்டபத்தில் நான் தியானம் செய்யும்போது தூக்கணாங்குருவிகளும், வேறு சிறு பறவைகளும் என் மேலுட்கார்ந்து விளையாடுமென்று அக்காலத்தில் என்னைக் கண்டவர்கள் சொன்னார்கள்.
-ஶ்ரீமத் பிரம்மானந்த சுவாமிகளால் தொகுக்கப்பட்டதிலிருந்து.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.belurmath. org/D_image/brahmananda.jpg
No comments:
Post a Comment