Sunday, May 31, 2015

நாளொரு பக்கம் 35

நாளொரு பக்கம் 35


Monday, the 30th March 2015

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.
- திரிகடுகம் 7

இந்த செய்யுளின் உவமைகள் பாராட்டத்தக்கன. ஒன்று: பொருத்தம். இரண்டு: அழுத்தம். மூன்று: படிப்பினை. 

நோஞ்சானால் பயில்வானை தாக்குப்பிடிக்க முடியுமா? சிறுதுரும்பும் பல் குத்த உதவும். ஆனால், அதனால் குண்டாம்தடிக்கு ஈடு கொடுக்கமுடியாது. நல்லாதனார் கூறிய உவமை: உள்ளல் என்ற சின்ன பறவை வாளை மீனை எடுக்கமுடியாது. அதே மாதிரி, ‘சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்’ செல்வந்தனாக இருந்தாலும் சான்றோர் அவையில் அஃஃறிணையான நன்மரம் தான். இதையெல்லாம் பார்த்தால், ஆழ்ந்த உறக்கத்தில் கண்ட கனவை ஊமையால் சொல்ல முடியாது என்ற உருவகம் நினைவுக்கு வருகிறது என்கிறார்.
தமிழில் உள்ள அறநூல்கள் ஒரே விஷயத்தைக்கூட சுவை கூட்டி, உவமான உவமேயங்களுடன், பல அணிகள் சேர்த்து, எப்படிப் பார்த்தாலும் உறைக்கும் படி உரைப்பது வழக்கம்.
-#-


சித்திரத்துக்கு நன்றிள் http://i.somethingawful.com/u/garbageday/2013/drew/ragesoap.jpg

No comments:

Post a Comment