நாளொரு பக்கம் 29
Tuesday, the 24rd March 2015
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.
-திரிகடுகம் 6
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும்:
தற்புகழ்ச்சியையே தவிர்ப்பது கடினம். சுயநலத்திற்காகவோ, மரியாதை நிமித்தமாகவோ, பணிவன்புடனோ பிறர் புகழ்மாலை சாற்றினால் உச்சி குளிர்ந்துவிடும். மற்றவர் பேணுவதை நாடுவீர்கள். அதை லஜ்ஜையுடன் கையாளுவது சாலத்தகும்.
பேணார்
திறன் வேறு கூறின் பொறையும்:
புகழ் வரவு. இழிச்சொல்லோ பற்று (அதாவது [-]). இழிச்சொல்லை ஜீரணம் செய்வது கடினம். அது சொற்போரையோ, கைகலப்பையோ துவக்கலாம். தேவையா? பொறுத்தாள்வதே விவேகம்.
அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்:
பிறருக்கு மைம்மாறு செய்யும் தருணம் கிட்டினால், அதை கொடுப்பினையாக கருதாமல், கைம்மாறு எதிர்பார்ப்பதைத் தவிர்த்து, ‘பணி செய்து கிடப்பது என் கடனே’ என்ற ஆளுமை தான் நற்பயன். செருக்கு என்றால் அகந்தை என்ற பொருள் இங்கு இல்லை. அது பெருமிதத்தைக் குறிக்கிறது.
-#-
No comments:
Post a Comment