Saturday, May 30, 2015

நாளொரு பக்கம் 32

நாளொரு பக்கம் 32

Thursday, the 26rd March 2015
“The Art is Ageless program focuses on individual well-being and the agelessness of human creativity.”
-Heidi Beyer: Presbyterian Manor:Farmington: USA

முதுமை, வயது என்ற எல்லையை கடந்து, இந்த பூவுலகிலேயே ஒரு அமரத்துவம் பெற்று விடுகிறது. பெரும்பாலோர் ஓய்வு பெற்றதுமல்லாமல், கடமைகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள். நோய் நொடி படுத்தினாலும், பொதுவாக எல்லாரும் ஒருவாறு சமாளித்துவிடுகிறார்கள். சிலருக்கு ஆலயம் செல்வது சாலவும் நன்று. மற்றும் சிலருக்கு தொல்லைக்காட்சி ஒரு டைம் பாஸ். அரசியல் இருக்கும் வரை, மதாபிமானங்கள்/அவமதிப்புகள் இருக்கும் வரை பட்டிமன்றங்களுக்கு நீடுழி வாழ்வு. கசமசாவின் சுவையே தனி!
கீர்த்தானரம்பம் இவ்வாறு இருக்கும்போது, பல முதியோர்களை அணுகமாட்டேன் என்கிறாள், நித்ரா தேவி. என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுங்கால், ஹைடி பேயர் சொல்வதை கேட்டு பயன் அடையலாம். மிஸெளரி மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில், அவர் மதபோதகர். அவ்வூரின் மையமே பாலின வன்முறை செய்த குற்றவாளிகளின் கூண்டு. பெரும்பாலோர் அங்கு ஊழியம் செய்பவர்கள். அத்தகைய பின்னணியிலும் முதியவர்களிடம் கலை ஆர்வம் வளர்க்க ஹைடி பேயர் உதவுகிறார். முதியோர் கலைக்காட்சிகளும், விழாக்களும், பரிசுகளும் அங்கு முதியோர்களின் வாழ்வில் நிறைவு கொணருகின்றன. இங்கும் சங்கீதம் இடம் பெறுவது மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள். 
கலையார்வம், இலக்கியார்வம், ரசனை, சிறார்களுக்கு பொருத்தமான போதனை எல்லாமே நிறைவு தந்து, இளமையை வரவழைப்பவை தான்.
-#- 

சித்திரித்துக்கு நன்றி: http://dmh.mo.gov/img/smmhc/sign5.jpg

No comments:

Post a Comment