Monday, May 11, 2015

நாளொரு பக்கம் 12

நாளொரு பக்கம்  12

Saturday,the 7th March 2015

தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில். 
~ திரிகடுகம் 2


நமது முன்னோர்களும், அவர்கள் செவ்வனே நடத்திய குடித்தனப்பாங்கும், பிறவிப்பயனும்  வாரிசுகளாகிய நமக்கு வம்சம் வம்சமாக வந்தடைந்த பாக்கியங்கள், குணங்கள். அவற்றின் நிறைவை போற்றி பாதுகாப்பது தகைமை, ஒழுக்கம், பாங்கு.

நாம் அன்றாடம் இனிய குணமுடையோர் பலரை கண்டு களிக்கிறோம். அவர்கள் ஏவியதை செய்வதும், பரஸ்பரம் ஒத்தாசையாக தன் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்வதும் நன்மை பயக்கும். உலகம் செழிக்கும்.

பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும் நான்கு மறைகளாவன. இவற்றை இக் காலத்தவர் ( நல்லாதனார் காலத்தவர்)  இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர்.  அவற்றை முறையே ஓதும் வேதியர் கூறிய வழியில் நடத்தலும் சாலத்தகும்.


இம்மூன்றும் மேலோர் செய்கை என்க.

சித்திரத்துக்கு நன்றி: https://gsuryalss.files.wordpress.com/2012/03/e0ae92e0aeb3e0aeb5e0af88e0aeafe0aebee0aeb0e0af8d.jpg

No comments:

Post a Comment