Friday, November 21, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 5

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 5

துர்சொப்பனம்

இன்னம்பூரான்
21 11 2014

இன்று காலை 3 மணிக்கு அடித்துப்பிடித்துக்கொண்டு எழுந்தேன். கையும் காலும் உதறல் வேறு. வாய் குளறியது. கிட்டத்தட்ட காண்டீபத்தை நழுவ விட்ட அர்ஜுனன் மாதிரி. நாவும் உலர்ந்தது. மேனியும் கறுத்தது. கிருஷ்ணன் வரவில்லை. ஆனால், ‘தெய்வமகனார்’ ஸோம்பால் கோலோச்சிக்கொண்டிருக்கிறார் போல மங்கலான காட்சி! நீண்டதொரு கனவு; வலி கொடுத்தக்கனவு. வண்டலூர் புலி தேவலை என்று ஆலம்பாக்கத்தில் பேச்சு; அக்கம்பக்கத்திலும் அதே! அதே! உங்கள் நேரம் பொன்னானது என்பதால் சொப்பனாதிகாரத்தின் ஒன் மினிட் வெர்ஷன் கீழே. சரி. ஸ்டேண்ட்ஸ் கரெக்ட்டட். டூ மினிட் வெர்ஷன்.

நம் நாட்டு மக்கள்பிரதமர் தாடி முடி துறந்து விடுகிறார். அடுத்து ஜனாதிபதி ஜனாப் அவர்களும் ராஜிநாமா. தேர்தல் நடந்தமாதிரி இருந்தது. கனவினுள் கனவு என்று அதை புறக்கணித்து விடுகிறேன். ஆனாலும் பணம் லாரி லாரியாக நடமாடியது கனவில் வந்தது இன்னும் மறக்கவில்லை. 

கனவில் வந்த கதாபாத்திரங்கள்:

லொள்ளு மகராஜ் -ஜனாதிபதி;
ஸோம்பால் ராஜரிஷி - பிரதமர்
தமிழனுக்கு இடம் கொடு என்று கூவியதற்கு ஜனாதிபதி செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவருடைய பெருந்தன்மையும், பிரதமரின் குறுக்கு புத்தியும் பற்றி குறிப்பிடத்தான் வேண்டும். சுவாமி இன்பானந்தா உதவி பிரதமரானர்.கதவை மூடிக்கொண்டு அவர்கள் எடுத்துக்கொண்ட ஏகோபித்த முடிவுகள்:
  1. தலைவர் இரக்கமணி அவர்கள் சென்னை வாழ் ஆலோசகர்.
  2. ஆடிட்டர் ஜெனெரல் டிஸ்மிஸ். (ஹிட்லர் செய்தது அது தான் என்று நான் முனகியது நன்றாக நினைவில் இருக்கிறது.);
  3. ரோபட்படேரா அவர்கள் நிலம், மனை, மாடிவீடு வகையறா ஸ்தாவர சொத்து அமைச்சர்;
  4. தென்கோடி ஆல் இன் ஆன் அழகு ராசா நிதி அமைச்சர்;
  5. ஓ. ரோஜா அவர்கள் இராணுவ அமைச்சர்;
  6. கூட்டணி: விஷ்ணு படை, எல்லா தமுக்க கட்சிகளும்; நவீன சோங்கிரஸ்;
  7. அண்டார்ட்டிக்காவுக்கு பிரதமர் ஸோ.ரா.ரிஷி நல்லிணக்கப் பயணம். பத்தாயிரம் சிஷ்யகோடிகள் கூட வருவதால், கப்பல் பயணம். ஆளுக்கு 17 தாரிவால் கம்பிளி தானம்; 
  8. பிரதமருக்கு மட்டும் தான் ரோஜா மாலை. இந்த தியாகவுணர்ச்சியை பாராட்டி, தலைவர் இரக்கமணி அவர்கள் தங்கள் நாளிதழ் டமாரத்தில் ஒரு கவிதை எழுதினார். அதில் ஒரு வரி: ‘ராஜாவுக்கு ரோஜா கொடு, தம்பி/ ரோஜாவை ராஜாவுக்கு கொடு, பாப்பா’.
  9. பதவியேற்கும் விழாவில், அழையா விருந்தினர்களும் உட்பட, ஆளுக்கு ஏழு இட்லி வழங்கினார், ஒரு மானில முதல்வர் ஐஸ்வர்ய தாஸ்;
  10. ஆல் ஜெயில் காலி. எல்லா சிறை வாசிகளும் விடுவிக்கப்பட்டர்கள். ஆளுக்கு 214 ரூபாய் அழுதார்கள்.
ஸோம்பால் ராஜரிஷி காபினெட் மீட்டிங்கில் பஜனை செய்தார். ஆட்டுமந்தை போல மாந்தர்கள் மெய்மறந்தனர்.

கனவு கலைந்தது.
முழிப்பு கண்டது.
சொல்லவும் செய்தேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://theglamoroushousewife.com/wp-content/uploads/2012/11/nightmare.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment