Thursday, January 23, 2014

கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 8 9முற்றும்]



கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 8

Innamburan S.Soundararajan Thu, Jan 23, 2014 at 7:50 PM

௵1800 ~ ௵2056: இது ஒரு 256 வருட சகாப்தம். ஆங்கிலேயரின் நடவடிக்கையில் குறை காண இயலாது. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றை த.ம.அ.வுக்காக, மின்னாக்கம் செய்துள்ளேன். தற்கால பட்டப்படிப்பின் தரக்குறைவு வெள்ளிடை மலை. 1940ம் வருடத்திய அண்ணா அவர்களின் மனவலி எனக்கு புரிகிறது. அவருடைய தம்பிகளுக்குத்தான் புரியவில்லை. அதனால், இன்று நிலைமை இன்னும் மோசம். விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்!  தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! அடுத்த வருடம் தி.மு.க. பதவியேற்பும், நகாசு வேலையும்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். [இந்த அழகில்  வீரப்ப மொய்லி அவர்கள் இரண்டுங்கெட்டான் மொய் எழுதியிருக்கிறார். எல்லாரும் கை தட்டி இருக்கிறார்கள்!] 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.  எல்லாம் டபிள் மாமாங்கம்! 15 வருடங்கள் கழித்து 2010ல் பலிகடா பாவ்லா! அசட்டுத்தனமான முரண்டு கெடுபிடி. எனக்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது. மற்றவர்களை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.
நன்றி, வணக்கம், வெட்கம்.

(முற்றும்)
இன்னம்பூரான்

27 12 2011
30 01 2014
சித்தரத்துக்கு நன்றி:https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/p403x403/988338_534460486643301_1810643166_n.jpg

கஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 7

A

COLLECTION

OF

OFFICIAL DOCUMENTS

IN

TAMIL LANGUAGE

CONSISTING OF ARZEES AND OTHER PAPERS FILED IN THE COURS OF JUSTICE

FOR THE USE OF CANDIDATES 

FOR THE INDIAN CIVIL SERVICE

COMPILED BY THE ORDER O THE RIGHT HONOURABLE THE SECRETARY OF STATE FOR INDIA

BY
LIEUT. W.F. WRIGHT

MADRAS STAAFF CORPS TAMIL TRANSLATOR TO THE GOVERNMENT OF MADRAS

MADRAS
PRINTED FOR THE GOVT OF MADRAS
BY
CALEB FOSTER
AT THE FOSTER PRESS, 23, RUNDALL’S ROAD
VEPERY
1868
மடலாடும் குழுவில் ஒரு நண்பர் இந்த தமிழ் புரியவில்லையே என்று எழுதியிருந்தார். பகுதி 5ல் கூறிய மாதிரி மராட்டி, பெர்சியன் மொழிகளின் தாக்கம், இன்று கூட அரசு மொழியில் உளது.
நுணுக்கங்களின் விளக்கம். 
1.கலைக்டர் பதில் போட்டால், அதில் நஜிமுத்தீனை பண்புடன் சாயபு என்று தான் விளிப்பார். 
2. கடிதத்தில் மரியாதை இருக்கிறது;அடிமைத்தனம் இல்லை.
3. அர்ஜி என்றால் கடிதம் எனலாம், மனு எனலாம்.
4. இனாயத்து நாமா என்றால் கடிதம் எனலாம். ஆணை எனலாம். ஆக்கியாபத்ததும் அது தான்: ஆஞ்ஞினை. இன்றளவும் ஒரியாவில் அது பேச்சு வழக்கில்.
5. பசலி, அடங்கல் எல்லாம் தமிழ்நாட்டில் புரியும், இன்றும். 
6. விதேயன் என்பது நேர்த்தியான சம்ஸ்க்ருத சொல். 'அடி பணிந்த' என்ற பொருளை தலை குனியாமல் சொல்வது.
7. அரசு மொழி மக்களுக்கு புரிவது இல்லை, டாக்டர் மொழியை போல. தலை சுற்ற ஆசை இருந்தால், ஒரு அரசாணையை( எந்த நாட்டினது ஆனாலும் படியுங்கள். சுற்றிய தலை நிற்காது!)

நான் இந்த கடிதத்தை இங்கு பதிவு செய்ததின் காரணம் இது ஒரு பாட நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்த நூலின் முகப்பு மேலே.
கேள்வி:
1868 லிருந்த அரசாளுபவரின் அக்கரை, சிரத்தை, தெளிவு, நிர்வாக பொறுப்பு எங்கே எப்போது தொலைந்தது?
இன்னம்பூரான்
29 01 2013


கஷ்டோபனிஷத்: 1 -11: பகுதி 6
Inline image 1


No. 68

மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,
     
திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.
     
பாக்கி கட்டாத தண்டை செயது கொண்டிருந்த கல்லியாணகுப்பம் கிராம மணியக்காரர் கணக்குப்பி... இவர்களை அனுப்பும்படி துரையவர்கள்  ஆக்கியாபத்த 769வது நம்பர் இனாயத்துனாமா சேர்ந்து அறிந்து கொண்டேன்.

துரையவர்கள் இப்படி அனுபபிய உததரவின் பயத்தினாலே அவர்கள் இருவரும் செலுத்தவேண்டிய பாக்கியை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.

இப்போ அடங்கல் பார்க்கவேண்டிய காலமாயும் மேற்படி மணியக்கார, கணக்கபி.. இவர்கள் என் உத்தரவின்படி அந்த காரியத்தில் இருந்து கொண்டிருக்கிறபடியினாலே  நாலது பசலி ஜமாபந்தியின் போது மேற்படியார்கள் 2   பேரையும் அது வரையில் அவர்கள் நடத்தைகளைக்கண்டு மனுவு செய்து (நூபு நூபு) ஆஜர்ப்படுத்துகிறேன். ஆகையால் சங்கதி மனுவு செய்து கொண்டேன்.

1864 வருடம் ஜனவரி மீ 8 உ
திருவள்ளூர்
தங்கள் விதேயன்
என் பின் குறிப்பு:
நடைமுறை ஆட்சிமொழி இவ்வாறு இருப்பதில் என்ன குறை கண்டு,
நாடு விடுதலை ஆன பிறகும், 
சென்னை மாகாணம் தமிழ்நாடாக மறுபிறவி எடுத்த பிறகும், 
அந்த அந்த காலகட்டத்தில்
அமைச்சரகமும், அமர்வும், ஆணையும், ஆவேசமும், 
இசைவும், ஈர்ப்பும், உதட்டசைவும், ஊறுகாய் சுவையும், 
எடுத்தாளும் உத்தியும், ஏமாற்றமும் தந்து, 2014 வரை
ஒருமனதாக ஒதுக்கப்பட்ட தமிழை
ஓதாமல் இருக்க நம்மவருக்கு மனம் வந்தது?
*
ஜனாப் நஜிமுத்தீன் சாயபுவின் மடலில் நுணுக்கங்கள் பல உளன. அது பற்றி, கருத்துகளுக்குக் காத்திருக்கும்
இன்னம்பூரான்
23 01 2014 (150 வருடங்களுக்குப் பிறகு)


No comments:

Post a Comment