ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II 10: மாதங்களில் நான் மார்கழி.
இன்னம்பூரான்
16 12 14
இன்று மார்கழி மாதம் பிறந்தது. ஐப்பசியில் தீபாவளி கொண்டாடினோம். புத்தாடை பூட்டினார்கள். கார்த்திகையில் சொக்கப்பானை கொளுத்தினோம். இன்று வைகறையில் கோஷ்டிகானமாக, உன் பள்ளியறை முன் நின்று திருப்பள்ளியெழுச்சிப் பாடி, உமது உறக்கத்தை மென்மையாக கலைத்தோம்.
'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்..'
என்று உன்னுடன் உறவாடினோம்.
அதன் தொடராக மதியம் பக்தி விஜயமாக கேசவனை, பாண்டு ரங்கனை, விட்டலனை சேவித்தோம்.
அதன் தொடராக ' நவீன' ஆண்டாள் திருக்கல்யாண வைபோகத்தைக் கண்டு களிப்போமாக.
No comments:
Post a Comment