சிரிச்சு மாளலெ! ~10
இன்னம்பூரான்
01 08 2014
சமீபத்தில் அழகர் கோயில் போயிருந்த போது அங்கு வானர மேலாண்மையை கண்டு மகிழ்ந்தோம். ஓடோட, என் புத்திரி அவற்றை படம் பிடித்துக்கொண்டாள். அனுப்பவதில் தான் தொய்வு. அமெரிக்கா போன பிஸி தான். இன்றைய செய்தி ஒன்றை பார்த்து விட்டு என் கவலைகள் பறந்தோடின. தனியாக இருக்கும்போதே சிரித்துக்கொண்டிருக்கிறேன்! கொஞம் லூசு தான். என்ன பண்றது?
மஹா கனங்கள் - ராஹுலிலிருந்து மோடி வரை - வாழும் டில்லியில் ஸ்க்ரீச் என்று வானர இசை கேட்டால் அது மந்தியில்லை. கூலிக்கு ‘ஸ்க்ரீச்சும்’ நரோத்தமர்கள் (சொல்லிப்பிட்டேன்; நான் யாரையும் குறிப்பிடவில்லை.) குரங்குகளை விரட்டுகிறார்களாம்! ஆனானப்பட்ட வெங்கையா நாயுடு அவர்கள் நேற்று ராஜ்ய சபையில் தாக்கல் செய்த அறிக்கை படி மனித வானரங்கள் வானர வானரங்களை அச்சுறுத்தி விரட்டுகிறார்களாம். நம்ம பனையூர் பேட்டைக்கு அருகில் வேங்கை புலி தரிசனம் கொடுத்ததால், பெருங்களத்தூருக்கு பறந்தோடி வந்தேன். இங்கும் ஒன்று சுத்துகிறதாம். இனி, காலை 4.00 மணிக்கு உலாவ செல்லாமல் 4.01க்கு போகவேண்டும். கையில் ஒரு தடி வேறே. இதை விடுங்கள். யானை கூட்டங்கள் வந்து கந்து வட்டி வாங்கி நட்ட கரும்பு தண்டுகளை அபேஸ் செய்து விடுகிறதுகளாம். அவங்க பேட்டையில் அனாயசமாக, தரகர்களுக்கு அழுது விட்டு, குடித்தனம் போன விபசாயிகள் பட்டாஸ் வெடித்து அவற்றை துரத்த முனைகிறார்களாம். சாமி! டில்லிக்கு போங்க. நம்ம பெரிசுகள் அங்கே வானர விரட்டல் மன்னர்கள். சிலரை புலி வேஷம் போட்டுக்கொண்டு இங்கே வரச்சொல்லுங்கள். நான் காலாகாலத்தில் வாக் போக செளர்யமாக இருக்கும். ஆனை வேஷம் எப்டிப் போட்றது? நம்ம க்ரூப்லெ குண்ட்ன்ஸ் இல்லையே. எதற்கும் பிள்ளையாரப்பனை துணைக்குக் கூப்பிடவேண்டாம். அவர் அந்தப்பக்கம். உங்க கற்பனை யானையை தட்டி எழுப்புங்கள். பல தீர்வுகள் கிடைக்கும். சில பைத்தியக்கார பரிந்துரைகள்:
- ஆனைக்குட்டியை அபேஸ் பண்ணி கொண்டுவந்து விட்டு ப்ளேக்மைல் செய்யலாம்; அதற்குள் ஆனைக்குட்டி உம்மை மோதி மிதித்து விடும்.
- பட்டாஸ் வெடித்து விரட்டலாம். நம்ம இந்திய பட்ஜெட் மாதிரி புஸ்வாணமாக அது போய்விட்டால், கரும்பும் போச்சு, வீட்டுக்கூரையும் போச்சு.
- ‘கும்கி’ வைத்து விபீஷண சரணாகதி அடையச்சொல்லலாம். அந்த யானைக்கும் உருண்டை சாதம் கொடுக்க ஐவேஜி இருக்கா?
- நடக்ககூடிய ஒரு வழி: ஒரு எலிக்கு பயிற்சி கொடுத்து யானையின் காதில் புகுத சொல்லலாம். ஆனால் ஆனையுடன் எலியும் போய்விடும்! ஒரு எலிப்பட்டாளம் வளர்த்துக் கொள்க.
- கரடி வந்தா என்ன செய்வது? யான் அறியேன். மதஎசுஇந்திரனை கேட்டால், தீர்வு கிடைக்கலாம்.
-#-
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment