Monday, June 9, 2014

மோடியும், நீயும், நானும். 2





மோடியும், நீயும், நானும். 2



இன்னம்பூரான்
ஜூன் 10, 2014

தலைப்பு இன்றும் தொடருகிறது. அரசியல் துறையில் சொல்லின் செல்வர்கள் கோலோச்சுவார்கள், ஒரு சொல்லுக்கு பல படைப்பாளர்கள் இருப்பதால்; ஒரு பொருளை பல கோணங்களில் கூறமுடியும் என்பதாலும். தலைமைக்கு கோனார் நோட்ஸ் எழுதி தர ஒரு பட்டாளமே இருக்கும். சர்ச்சில், நேரு, படேல், மோடி போன்றவர்கள் அவரவது சிந்தனையை தாங்களே நன்கு பகிர்ந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.

இந்திரா காந்தியின் ‘கரீபீ ஹடாவ்’ /20 பாயிண்ட் பட்டியல் நினைவில் இருக்கிறதோ? அவை கானல் நீர் ஆனதை அறியீரோ? அவருடைய திருமகனாரும் அடுத்த பிரதமரும் ஆன ராஜீவ் காந்தி, ஏழைகளுக்கு மான்யம் 16% தான் சேர்கிறது என்று சொன்னதும் நினைவில் இருக்கிறதோ? எதற்கும் இருக்கட்டும் என்று பழைய ஏடுகளை புரட்டினால், ‘அறம் செய்ய விரும்பு’ போன்ற கொள்கைகளுக்கு எதிர்வாதம் புரியாமல், செயல் ரீதியாக அவற்றை ஒதுக்கி தள்ளுவது தான் அரசியல் கட்சிக்ளுக்கு வாடிக்கை என்பது நிதர்சனமாகும். திரு.நரசிம்ஹராவ், தேவ் கெளடா ஆகியோரால் துவக்கப்பட்ட சில நற்காரியுங்கள் உறைந்து கிடக்கின்றன. அவற்றை உயிர்ப்பிக்கவேண்டும்.

 “ ஏக் பாரத் - ஷ்ரேஷ்டா பாரத்” என்ற மூலமந்திரத்தை உச்சாடனத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், கடமையாற்றலிலும் காணவேண்டும் என்றால், இந்தியமக்கள் யாவரும், எங்கிருந்தாலும், அங்கிருந்தபடியே எச்சரிக்கையாக இருந்து, ஏகாக்ரக சிந்தையுடன் பாரதமாதாவை வாழ்த்தி, வணங்கி தன்னுடைய முழு ஆற்றலையும் அவளது பாதாரவிந்தங்களில் சமர்ப்பிவிக்கவேண்டும்.  பிரதமர் மோடி சூத்ரதாரியாக இருக்கட்டும். அந்த பணிக்கு அவருடைய நியமனம் ஆகி விட்டது.
இனி மக்கள் நலம் மக்கள் கையில்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://a2.img.mobypicture.com/ae56525e92c4e27e21274791abe2cf7b_view.jpg



No comments:

Post a Comment