அப்டேட் 2:
‘45வது இடத்தில் ஜெயசீலன் என்பவர் இருக்கிறார். தமிழர் என்று தோற்றம். மொத்தத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறைவு தான்.
‘தமிழ்’ என்ற பாடம் எடுத்தால் கை நிறைய மார்க் வாங்கலாம் என்பது என் கணிப்பு. அது பற்றி நான் எழுதிய கையேட்டு நூலுக்கு, திரு.நரசய்யா அவர்கள் அணிந்துரை அளித்து மெருகேற்றினார். எத்தனை மாணவர்கள் படித்தார்களோ?
ஆர்வமுள்ளவர்கள் இருப்பின், மேலும் பல உத்திகள் வழங்கலாம்.
இன்னம்பூரான்
12 06 2014’
*
அப்டேட் 2:
திரு.ஜெயசீலன் சொல்வது, “...சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவி செய்த ஒரு உயர் அதிகாரி தான் என் மாடல். நான் தமிழில் தேர்வு எழுதினேன். தமிழுக்கு இது வெற்றி. தாய்மொழி மூலம் கல்வி பெறுவதை போற்றுபவன், நான். ஐஏஎஸ் வகையறா தேர்வுக்கு மொழி ஒரு பிரச்னை அல்ல. என் பெற்றோர்களுக்கு உயர்கல்வி கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் உந்துதல் தான் எனக்கு ஊக்கம் அளித்தது. நான் கிராமத்தில் படித்தவன். சென்னையின் மனிதநேயம் அக்காதமி போன்ற மையங்கள் எனக்கு வழி காட்டின.” தமிழில் வினாக்களை தொகுத்து அளிக்க மாநில அரசு உதவவேண்டும் என்பது அவரது வேண்டுகோள். தேர்வில் கெலித்த 1122 நபர்களில் 100 நபர்கள் தமிழ் நாட்டிலிருந்து. சென்னையில் உள்ள வசதிகள் மிகவும் உதவின, என்கிறார், 143 வது இடம் பிடித்த செல்வி. கே.வெற்றிச்செல்வி. அடிக்கடி மாதிரி வினாத்தாள்களுக்கு விடை எழுதுவது நல்ல பயிற்சி என்று சொல்லும் அவர், ஐஏஎஸ் எழுத விரும்பிய அவருடைய தந்தைக்கு சிவகங்கை மாநிலத்தில் தேவையான வசதிகள் கிடைக்க வில்லை என்றார். இவர் சென்னை எதிராஜ் கல்லூரி மாணவி. [இவர்கள் இருவரும் நான் கூறியதை எதிரொலிக்கிறார்கள். ]
உசாத்துணை: Printable version | Jun 13, 2014 2:42:48 PM | http://www.thehindu.com/news/national/tamil-nadu/ias-topper-from-tamil-nadu-took-exam-in-tamil/article6110306.ece
© The Hindu
Update:
கால் காசானாலும் கவர்ன்மெண்ட் உத்தியோகத்துக்கு மவுசு என்பார்கள், ஒரு காலத்தில். அது தேய்ந்து போய் விடவே, மவுசும் மங்கியது என்றாலும், அழுத்தித் துடைத்தால், அபரஞ்சி தங்கம் போல் மின்னும். பொருத்தமான உதாரணம்: பெற்றோர்களால் ‘எமக்கு கெவுரதை கொணர்ந்த்தான்’ என வாழ்த்தப்படும் திரு. கெளரவ் அகர்வால் (29), ஹாங்காங்கில் ஒரு மாபெரும் பன்னாட்டு நிறுவனத்தில் படா சம்பளம் வாங்கி இருந்த மாஜி மானேஜர். இவர் ஐ ஐ டி & ஐ ஐஎம் பட்டதாரி. அதை உதறி விட்டு, 2012ல் இந்தியாவின் போலீஸ் உயர்தர அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கெளரவ், நேற்று வெளி வந்த அறிவிப்புப்படி, ஐஏஎஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதல் நம்பராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். விடாப்பிடியாக இந்த கடும்போட்டியில் கலந்து கொண்ட அவர்,
‘காசு மழை பொழிந்த ஹாங்காங் வேலையை விட, அரசு பணியில் இருந்தால், சிக்கல்களை சமாளிக்க இயலும்; மக்களுக்கு பணி செய்யமுடியும். என் குடும்பம் என்னை ஊக்கிவித்தது. ஐஏஎஸ்சுக்கு என்று பிரத்யேகமாக பயின்றேன். ஒரு நாளைக்கு 10 -12 மணி நேரம் படித்தேன்.’ என்று பொருள்பட கூறினார். அவர் ஐஏஎஸ் நேர்காணல் ஆன சில நாட்களிலேயே ப்ரீதியைதிருமணம் செய்து கொண்டார். ப்ரீதிக்கும் ரொம்ப ப்ரீதி.
நன்றி:
ஐ ஏ எஸ் வகையறா:
CIVIL SERVICES (MAIN) EXAMINATION,2013
S.NO. ROLL NO NAME
LIST BELOW. [சற்று முன் வெளியானது.]
45வது இடத்தில் ஜெயசீலன் என்பவர் இருக்கிறார். தமிழர் என்று தோற்றம். மொத்தத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறைவு தான்.
‘தமிழ்’ என்ற பாடம் எடுத்தால் கை நிறைய மார்க் வாங்கலாம் என்பது என் கணிப்பு. அது பற்றி நான் எழுதிய கையேட்டு நூலுக்கு, திரு.நரசய்யா அவர்கள் அணிந்துரை அளித்து மெருகேற்றினார். எத்தனை மாணவர்கள் படித்தார்களோ?
ஆர்வமுள்ளவர்கள் இருப்பின், மேலும் பல உத்திகள் வழங்கலாம்.
இன்னம்பூரான்
12 06 2014
சித்திரத்துக்கு நன்றி: இந்திய அஞ்சல் துறை.
No comments:
Post a Comment