Tuesday, May 20, 2014

மும்மணிக்கோவை 2014: 3



மும்மணிக்கோவை 2014: 3

நீதி சதகம்:

கருப்புப்பண ஒண்டுக்குடித்தனமாகி விட்ட ரூபாய் நோட்டுகளில் அண்ணல்  காந்தியின் சித்திரம் போடவேண்டாம். (1.1)

பாத்திரமறிந்து பிச்சையிடு: [அ-து] மான்யம்/சரிபாதி/இலவசம் போன்றவற்றை அளந்து போடவும். வரிப்பணம் அல்லவா. (1.2.)

தர்மபரிபாலனம் செய்க. (1.3)

வைராக்ய சதகம்:

பிரதமரும், முதல்வர்களும், வத்ஸ்ராயணம் செய்தெடுத்த அமைச்சரவைகளுக்கு Sir Ivor Jennings பரிந்துரைத்த வகையில் தலைமை தாங்கவேண்டும். (2.1)

தலைமை கனக்கும்; தலை கனம் கூடாது. (2.2)

படோடாபம் ஓடோடி வந்தடையும். புறம் தள்ளுக. (2.3)

சிருங்கார சதகம்:

மக்களை காதலி. (3.1)

காதலுக்கும் பொறுப்பு உண்டு. (3.2)

பென்ணுரிமை உனது கவசம். (3.3)

தொடரும் & தொடருக.
18/19/20 05 2014

பி.கு. இந்தியா வளம் பெற, புதிய அரசுகளுக்கு...







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment