Tuesday, May 20, 2014

‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி...’

‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி



இன்னம்பூரான்
20 05 2014

என்றோ ‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி...’ என்று செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்கள் பாடியது, The Hindu/IBN Live/ The Times of India ஆகியவற்றின் இன்றைய அப்டேட்டை பார்த்த போது, என் உள்செவியில் ஊசலாடியது. புதிய அரசு 26ம் தேதி தான் பதவியேற்கப்போகிறது. அதற்குள், ‘உன்னத இலக்ஷியம்’ என்ற பொருள்படும் ‘ஆதர்ஷ்’ மாடமாளிகை ஊழல் பொருட்டு, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மஹாராட்டிராவின் இரு உயர் அதிகாரிகளின் பதவி நீக்கம் இன்று விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் ஒரு பொருட்டல்ல. ஒருவர் பொய்யும் புரட்டுமான ஆவணங்களை, கலைக்டர் என்ற முறையில் ஏற்றுக்கொண்டார் என்ற குற்றசாட்டு. பர்த்தியாக ? அவருடைய ஐஏஎஸ் மனைவிக்கு ஒரு அப்பார்ட்மெண்டு. அவர் என்னமோ கார்கில் தியாகி அல்ல. மற்றொருவர் உரிய அனுமதி பெறாமலே, தன்னிச்சையாக கட்டிடத்துக்கு முறை தவறிய சலுகை காட்டினார். அவருடைய திருமகனாருக்கு ஒரு அப்பார்ட்மெண்ட். அவர் என்னமோ கார்கில் தியாகி அல்ல. இவர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்து இரு வருடங்களாயின. ஏன் இந்த மெத்தனம்? விசாரணை கமிஷனும் இவர்களின் குற்றத்தை சுட்டியது. 
புதிய பிரதமர் என் செய்கிறார் பார்ப்போம்.
ஆம் ஆத்மிக்கு காம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்டிரீஸ், திரு.முகேஷ் அம்பானி, மாஜி ஆயில் மந்திரி ஆயிலி (மன்னிக்கவும், மொய்லி) ஆகியோரை, டில்லி அரசின் லஞ்ச ஒழிப்பு இலாக்காவுடன் ஒத்துழைக்கக் கூறி, டில்லி உயர் நீதி மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்று முழங்குபவர்களுக்கு இது தேவையா? நீதிபதி சொன்னது கர்ணகடூரம். டில்லி அரசு முறைகேடாக வழக்கை நடை மாற்றப்பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.நாளைக்கு, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கட்டும். ஒரு கை பார்க்கிறோம் என்பார்களோ! என்னமோ!
புதிய பிரதமர் என் செய்கிறார் பார்ப்போம்.
சீன் மாறுகிறது. டில்லியில் எல்லா இலாக்காக்களும் ‘தன்னிலை விளக்கங்கள்’ தயார் செய்யும் போது, சிவில் செர்வீஸ்ஸின் முதன்மை அதிகாரி அவர்கள் ‘விட்ட குறைகள், தொட்ட குறைகள், விடாத குறைகள், தொடாத குறைகள் எல்லாவற்றையும் பட்டியலிடுக என்று ஆணித்தரமான ஆணையிட்டு விட்டார். 
‘...மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி...’
புதிய பிரதமர் என் சொல்கிறார் பார்ப்போம்.
-#-

No comments:

Post a Comment