Showing posts with label Return of the Magi.. Show all posts
Showing posts with label Return of the Magi.. Show all posts

Sunday, April 7, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 8 பட்டாக்கத்தியும் ‘சதக்’கத்தியும்?




அன்றொரு நாள்: ஏப்ரல் 8 பட்டாக்கத்தியும் ‘சதக்’கத்தியும்?
7 messages

Innamburan Innamburan Mon, Apr 9, 2012 at 12:52 AM

To: mintamil , thamizhvaasal


அன்றொரு நாள்: ஏப்ரல் 8
பட்டாக்கத்தியும் ‘சதக்’கத்தியும்?
இந்திய தலைநகரமாகிய டில்லி மாநகரத்தில் பஹதூர் ஷா ஸஃபர் மார்க் என்ற ராஜபாட்டை ஒன்று இருக்கிறது. என்ன சாதனை செய்ததற்கு இந்த மரியாதை? மொகலாய வம்சாவளியின் இறுதி வாரிசாக, பிரிட்டீஷ் ஆளுமையின் கால் கட்டை விரலுக்கு அடியில் சும்மா கிடந்த இந்த இஸ்பேட் ராஜா, புரட்சியாளர்கள் வற்புறுத்தினதால், அவர்களின் கூட்டத்துக்கு, விருப்பமில்லாமல் தலைமை தாங்கினார். தண்டிக்கப்பட்டார். ஆனால், அக்டோபர் 5, 1984லியே தபால் தலை மூலம் சிறப்பிக்கப்பட்ட மங்கள் பாண்டே பெயரில் வீதி சமைக்க, அரசு சம்மதிக்கவில்லை. அவன் ஒரு பாமரன்.
மெய்கீர்த்தி பாடுபவர்களும், தற்புகழ்ச்சி தம்பிரான்களும் வரலாறு எழுதுவதின் பலிகடா, நிஜமாகவே நடந்தேறிய சம்பவங்களும், அவற்றின் படிப்பினைகளும். சான்றாக, வேலூர் சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திர போராட்டம் என்று கொதித்தெழுபவர்கள் மறந்தும் உரைக்காத சம்பவங்கள்: அந்த சிப்பாய்கள், கோட்டையை பிடித்தும், அசட்டுத்தனமாக அதை கோட்டை விட்டதும், கருவூலக்கொள்ளையில் திசை திரும்பியதும். எம்டன் கப்பிலில் வந்திருந்தால் தான் டாக்டர் செண்பகராமன் பிள்ளை அவர்களில் நாட்டுப்பற்று உறுதியாகுமா? அல்லது வீரபாண்டிய கட்டபொம்மன் ஜேக்ஸன் துரையிடம் கிஸ்தி மறுக்கவில்லை என்பது பொய்த்து விடுமா? அந்த மாதிரி, மங்கல் பாண்டே தான் இந்திய விடுதலை வேள்வியின் எஜமானன் என்பதும் சற்று மிகையே. அதற்காக, அவருக்கு மீரட்டில் சிலை எழுப்பியதில் குறை காணவேண்டிய தேவையும் இல்லை.
மங்கல் பாண்டே 19 வயதில் கம்பெனியின் படையில் சேர்ந்த சிப்பாய். ஏழு வருடங்கள் அப்பழக்கு இல்லாமல் பணி புரிந்தவர். ஆனால் மாட்டு/பன்றி கொழுப்பு தடவிய துப்பாக்கியின் பொறியை கடிக்க மறுத்தார். தன்னுடன் இருந்த சிப்பாய்களை உசுப்பினார். யாரும் பொருட்படுத்தவில்லை. அவர் அணிந்திருந்த்து ராணுவ சீருடையல்ல. மேலணி ராணுவ கோட்டு. கால் சராய்க்கு பதிலாக, வேஷ்டி. பங்க் ( கஞ்சா) அடித்து விட்டு உளருகிறான் என்று வாளாவிருந்தனர். போதாக்குறைக்கு, இவருடைய கலகத்தை அடக்க வந்த பிரிட்டீஷ் அதிகாரிகளை சுட்டுக்காயப்படுத்தினார். ஆளை சுடாமல், குதிரையை வீழ்த்தினார். அத்துடன் நிற்காமல், தற்கொலை செய்து கொள்ள முனைந்து, அதிலும் தவறி, பிடிப்பட்டார். மேஜர் ஜெனெரல் ஹெர்சே இவரை நிராயுதபாணியாக்கினார். ஏபரல் 8, 1857 அன்று அவரை தூக்கிலிட்டார்கள். இந்த சம்பவத்துக்கு தொடர்பு இல்லாமல், ஆங்காங்கே கலகங்கள் நடந்ததும், டில்லியில் மும்முரமான ஆங்கிலேய முற்றுகை துவக்கப்பட்ட தினம் ஜூலை 1, 1857.
முதல் சுதந்திரயுத்தம் அல்லது பெரிய சிப்பாய் கலகம் என்று பெயர் எது வைத்தாலும், அதில்,மங்கல் பாண்டேயின் பங்கு உண்டு. ஆனால் அதை மிகைப்படுத்துவது, அவருக்கு நியாயம் வழங்காது. 
தலைப்பின் தாத்பர்யம் என்ன? பெர்சிவல் ஸ்பியர்ஸ் பிரபல வரலாற்று ஆசிரியர். அவர் உரைத்தது: ‘இந்த சிப்பாய் கலகம் பழமை இந்தியாவின் இரங்கல் இசையாக அமைந்து விட்டது. இடைக்கால பட்டாக்கத்திக்கும் இறக்குமதியான சனியனுக்கும் (‘சதக்’ கத்தி) ( பயனெட்டுக்கு சனியன் என்று பெயர் என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். ‘தேவ்’ அகராதி விளக்கம் அளிப்பாராக.) நடந்த சண்டை, இது. தோல்வி அடைந்தவர்களின் மரணம் வீணாகி விடவில்லை. ஒரு புதிய தலைமுறை விடுதலை வீரர்கள் தோன்றினர்.
இவ்வாறு எழுதும் முன், ஆதாரங்கள் தேடினேன், விழுந்து, விழுந்து. நுணுக்கமாக, முன்பின் தெரியாத விஷயங்களை ஆராய்ந்து, பத்து அருமையான வரலாற்று நூல்களை படைத்த திரு. ஆர்.வி.ஸ்மித் அவர்கள் ஹிந்து இதழில் டிசெம்பர் 8, 2003 எழுதிய கட்டுரை கிடைத்தது. அது தான் உசாத்துணை.
இன்னம்பூரான்
08 04 2012 
Inline image 1

Geetha Sambasivam Mon, Apr 9, 2012 at 12:58 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
சான்றாக, வேலூர் சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திர போராட்டம் என்று கொதித்தெழுபவர்கள் மறந்தும் உரைக்காத சம்பவங்கள்: அந்த சிப்பாய்கள், கோட்டையை பிடித்தும், அசட்டுத்தனமாக அதை கோட்டை விட்டதும், கருவூலக்கொள்ளையில் திசை திரும்பியதும்//


//அந்த மாதிரி, மங்கல் பாண்டே தான் இந்திய விடுதலை வேள்வியின் எஜமானன் என்பதும் சற்று மிகையே//

மங்கள் பாண்டே தான் ஆதிமூலம் என்பது மறுக்க முடியாத ஒன்றல்லவோ!

போஸையும், வீர சாவர்க்கரையும் நினைவில் இருத்தாத  இந்திய அரசு மங்கள் பாண்டேயை எப்படி நினைவில் இருத்தும்??? 

On Mon, Apr 9, 2012 at 5:22 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:



திவாஜி Mon, Apr 9, 2012 at 1:16 AM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com


2012/4/9 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
போஸையும், வீர சாவர்க்கரையும் நினைவில் இருத்தாத  இந்திய அரசு மங்கள் பாண்டேயை எப்படி நினைவில் இருத்தும்??? 

கி.காளைராசன் Mon, Apr 9, 2012 at 1:32 AM

To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.



மங்கல் பாண்டே தன்னால் இயன்றதைச் செய்துள்ளார். அவரது கொள்கைப் பற்று, தேசத்திற்கு விமோசனமானது.
அவருக்கு எனது அஞ்சலி.
--
அன்பன்
கி.காளைராசன்

coral shreeMon, Apr 9, 2012 at 2:11 AM
To: Innamburan Innamburan

அன்பின் ஐயா,

வணக்கம். மிக சுவாரசியம்.... நன்றி.

அன்புடன்

பவளா.


Tthamizth Tthenee Mon, Apr 9, 2012 at 3:00 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

மக்கள்  மறந்தேபோய்விட்ட மறு பக்கங்களை நினைவுபடுத்த உங்களைப் போல் யாராவது இருந்தால்தான் முடியும்
.

நீங்கள் செய்வதும் ஒரு அருமையான கலகம்தான்
இந்தக் கலகம் நாரதர் கலகம்
நன்மையில் முடியட்டும்
அன்புடன்
தமிழ்த்தேனீ 


Subashini Tremmel Mon, Apr 9, 2012 at 5:55 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

இவரைப் பற்றி கேள்விப்பட்டிராத எனக்குப் புதிய செய்தி. 

நன்றி
சுபா


Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்




அன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்
2 messages

Innamburan Innamburan Sun, Jan 1, 2012 at 6:56 PM
To: mintamil , thamizhvaasal


அன்றொரு நாள்: ஜனவரி: 1
சிசு தரிசனம்
‘ ... கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்... அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது... அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்... அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்...’
~ விவிலியம்: மத்தேயு: அதிகாரம் 2: 1,2,9,10,11
மேற்கத்திய கலாச்சாரம் தழுவிய புத்தாண்டு தினத்தில், திருமலை வெங்கடேசனை தரிசிக்க ஏகப்பட்ட கூட்டம். சந்துஷ்டியை தேடி அலையும் மானிடர்களுக்கு, ஏதோ ஒரு பிரமேயம் கிடைத்தால் போதும். குழந்தைகளை இனம் தெரியாத உபத்ரவங்கள் படுத்தினால், ஹிந்து குடும்பங்கள் மசூதியில் சென்று, தொழுகை முடிந்த பின் ‘துவா’ பெறுவது உண்டு. ஹிந்துக்கள் நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதாகோயிலுக்கும் பயபக்தியுடன் செல்வதும் உண்டு. ‘சிசு தரிசனமும்’ சமய எல்லைகளையும், சம்பிரதாய லக்ஷ்மணரேகைகளையும்  கடந்ததுவே. பீடிகை முடிந்தது.

கிருஸ்துமஸ் பண்டிகை முடிந்தவுடன், சாங்கோபாங்கமாக, ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. விவிலயத்திலுள்ள அந்த கதை பற்றிய உன்னத ஓவியங்களை லியோனார்டா வின்ஸி என்ற பன்முகக் கலைஞர் வரைந்தார். டீ.எஸ்.எலியட் என்ற கவிஞர் ஆன்மிகக்கவிதைத்தொடரொன்று படைத்தார். 1931ம் வருடத்தில் எழுதப்பட்ட உசாத்துணையில் இருக்கும் நூல் சொக்கவைக்கும் சொக்கத்தங்கம். இனி கதை சுருக்கம்:
இது ‘பட்டொளி பாதை’யே தான், ஒரு நக்ஷத்திரம் வழித்துணையாக இயங்குவதால். ஸில்க் ரோடு. ஒரு உயர் பிரஞ்ஞை உந்த, உந்த, மூன்று சீன ‘தாவோ’ ஞானிகள் புனித யாத்திரையை தொடங்கினார்கள். இது சீன புத்தாண்டு விழா மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் நல்வரவு என்று அவர்கள் உணர்ந்தார்கள். 
இலக்கு:பெத்லஹேம்.நாட்க்கணக்காக நடந்த பின், பெத்லஹேம் அடைந்து திருக்குமாரனை தொழுத பின், (கம்சனை போன்ற) ஹீராட் மன்னன் அறியாத வழியில் திரும்பியபோது, ஒரு பாலைவனச்சோலையை அடைந்தார்கள். அங்கு ‘மாகி’ எனப்படும் சமூகம் அவர்களுக்கு விருந்தோம்பினர். கைகட்டி, வாய் புதைத்து அவர்களின் தலைவரான மாகி, வந்திருந்த ஞானிகளின் தலைவரான சிஃபு அவர்களுடன் நடத்திய ஆன்மீக உரையாடல்:
மாகி: வெகு தொலைவில் உள்ள சீனாவில், உங்களுக்கு தேவகுமாரனின் வருகை பற்றி எப்படித் தெரியும்?
ஸிஃபு: எமக்குள் திருக்குமாரன் ~ஒரு ‘புத்தர் பிரான்’ ~ அவதாரம் பற்றிய உள்ளொலி எழுந்தது. தியானமும், நக்ஷத்ரமும் வழி காட்டின. ஓரிரவு சிலுவை உருவில் எழுந்த ஒரு நக்ஷத்திரக்கூட்டம் பட்டொளி பாட்டையில் அழைத்து சென்றது.
மாகி: நீங்கள் சிசு தரிசனம் செய்தது எப்படி?
ஸிஃபு: அந்த விண்மீன் எம்மை பெத்லஹெமுக்கு அழைத்துச் சென்றது; ஒரே கூட்டம்; குழப்பம்; கலவரம்.அவரவர் ஊருக்கு திரும்பவேண்டும் என்ற அரசாணை. எங்களுக்கு தங்க இடம் கிடைக்கவில்லை. ஒரு விடுதியின் பின் உள்ள மாட்டு தொழுவத்தில் தங்கச் சொன்னார்கள். ஒட்டகங்களை கட்டி விட்டு, மூட்டை முடிச்சுகளை அவிழ்த்து விட்டு, அங்கு போனால், பல இடையர்கள் அங்கு. எதையோ கண்டு மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். ஒரு சுயம்பிரகாசமான ஒளி வீச்சு! நாங்கள் விழுந்து வணங்கினோம்; தொழுதோம். எம்முள் இருந்த உள்ளொலி உள்ளொளியாக பிரகாசித்தது. அது அன்னையில் அரவணைப்புப் போல எனலாம். தலை நிமிர்ந்தால், கண்கொள்ளாக்காட்சி! வைக்கோல் பிரிமணை மீது அன்னை மேரி. தொழுவத்தில், திருக்குமாரன். எங்களுக்கோ, மற்றவர்கள் போல, புனர்ஜன்மம். தொழுதோம், பக்தி பரவசத்துடன். ககன சாரிகை தான், போங்கள்!
ஒரு மாகி சமூகத்தினர்: கன்னி மாதாவின் குழவி! இது இறையின் அவதாரமே!
ஸிஃபி: ஆம். அப்படித்தான் தோன்றியது.
மாகி: நீங்கள் பரிசுகள் பல சமர்ப்பித்ததாக கேள்விப்பட்டோம்.
ஸிஃபி: ஓ! பொன்னும், மணியும், பூஜை புனஸ்காரம் செய்ய சூடம், சாம்பிராணி, ஊதுவத்தி, வாசனைப்பொடிகள், புனுகு, ஜவ்வாது, எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் நாட்டு வைத்திய அறிவுரைகள். பொன் நீரை சுத்திகரிக்கும்; நாங்கள் கொணர்ந்தவையில் கிருமிநாசினிகளும் உண்டு.
மாகி: அப்பறம்?
ஸிஃபி: எல்லாரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், அரசபயம் இருந்தது. மன்னன் ஹீராட் சிசுஹத்திக்குக் காத்திருந்தான்.
மாகி: என்ன ஆச்சு?
ஸிஃபி:கவலையற்க, நண்பரே. தாயும், சேயும் ஒரு மாகி நண்பர் வீட்டில் அடைக்கலம். உரிய நேரத்தில் திருக்குமாரர் மார்க்கபந்துவாக வந்து ‘டாவோ’ அறநெறியை பரப்புவார்.
மாகி: என்னே ஆச்சரியம்! இருள் நீங்கி பிரகாசம் வரும் வேளையில், நாம் ‘மித்ரா’ என்று ஆதவனை தொழும் வேளையில் திருக்குமாரர் அவதாரம்.
ஸிஃபி: ததாஸ்து. புதிய சகாப்தம் விடிந்ததாக, அசரீரி சொல்கிறது.
மாகி: என்னே ஆச்சிரியம்! மோசஸ் ஒரு குப்பியில் அடைபட்டு மிதந்ததாக சொல்கிறார்கள். தொழுவத்தில் தேவகுமாரன்.
ஸிஃபி: புத்தபிரான்கள் பலதடவை வந்தனர். அதற்கான அறிகுறிகளில் மாற்றமேதும் இல்லை.
மாகி: தொழுவம்: இது எதற்கு சின்னம் ஆகிறது?
ஸிஃபி: ஒருகால், அது நாம் விலங்கின இயல்புகளை துறக்கவேண்டும் என்பதற்கான சின்னமாக இருக்கலாம். இரக்க ஸ்வபாவத்தை நமக்கு அளிப்பதற்காக இருக்கலாம். இந்த தெய்வீக சிசுவின் சான்னித்யத்தை உணர்த்த இருக்கலாம்.
மாகி: ஸிஃபி! இந்த சிசுவின் மேன்மையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஸிஃபி: கெளதமர் சமீபத்தில் அவதரித்த புத்தர் பிரான். அவர் மாதிரியே, இந்த மாமுனியும் கருணாமூர்த்தியாகவும், குருநாதராகவும் விளங்குவார் என்று எனக்கு தோன்றுகிறது. குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்
01 01 2012
Adoration-of-the-Magi-c.-1725.jpg

உசாத்துணை:
Magre,M. (Translation: Merton, R.R.(1931) Return of the Magi.


Geetha SambasivamSun, Jan 1, 2012 at 7:58 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்//

உண்மையை "நச்"னு அழகாவும் ஆழமாகவும் சொல்லி இருக்கீங்க.இன்னம்புரார் டச் இது தானோ?  படிக்கிறச்சேயே கண்ணீர் அலை மோதிவிட்டது.  என்ன எழுத்து!  என்ன எழுத்து! அப்படியே உள்ளே போய் ஆழமாகப் பதிந்து தலையிலே இருந்து கால்வரையும் ஒரு சிலிர்ப்பு.  இம்மாதிரியான பதிவுகளில் உங்கள் கைகளில் தானாக ஒரு உணர்ச்சிப் பிரவாகம் வந்துவிடுகிறது.  பல சமயங்களிலும் லா.ச.ரா.வின் பாற்கடலும், புத்ரவும் நினைவில் வருகிறது.  இரு முறை ரசித்துப் படித்தேன்.

2012/1/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஜனவரி: 1
சிசு தரிசனம்
‘ ... கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்... அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது... அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்... அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்...’
~ விவிலியம்: மத்தேயு: அதிகாரம் 2: 1,2,9,10,11
மேற்கத்திய கலாச்சாரம் தழுவிய புத்தாண்டு தினத்தில், திருமலை வெங்கடேசனை தரிசிக்க ஏகப்பட்ட கூட்டம். சந்துஷ்டியை தேடி அலையும் மானிடர்களுக்கு, ஏதோ ஒரு பிரமேயம் கிடைத்தால் போதும். குழந்தைகளை இனம் தெரியாத உபத்ரவங்கள் படுத்தினால், ஹிந்து குடும்பங்கள் மசூதியில் சென்று, தொழுகை முடிந்த பின் ‘துவா’ பெறுவது உண்டு. ஹிந்துக்கள் நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதாகோயிலுக்கும் பயபக்தியுடன் செல்வதும் உண்டு. ‘சிசு தரிசனமும்’ சமய எல்லைகளையும், சம்பிரதாய லக்ஷ்மணரேகைகளையும்  கடந்ததுவே. பீடிகை முடிந்தது.

ஸிஃபி: கெளதமர் சமீபத்தில் அவதரித்த புத்தர் பிரான். அவர் மாதிரியே, இந்த மாமுனியும் கருணாமூர்த்தியாகவும், குருநாதராகவும் விளங்குவார் என்று எனக்கு தோன்றுகிறது. குருமுகங்கள் வந்து போகும். ஆனால், உன்னதமான சிஷ்யர்களுக்கு மட்டும் தானே ஞானம் கிட்டும்.
இன்னம்பூரான்
01 01 2012


உசாத்துணை:
Magre,M. (Translation: Merton, R.R.(1931) Return of the Magi.

--