Showing posts with label Martin Luther King. Show all posts
Showing posts with label Martin Luther King. Show all posts

Friday, April 6, 2018

மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 7



மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 7


இன்னம்பூரான்
04 04 2018
பிரசுரம்: http://www.vallamai.com/?p=84540#respond

"My feets is tired, but my soul is rested." 
நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது.

இன்று மார்ட்டீன் லூதர் கிங் என்ற கிருத்துவ மத போதகர் மெம்பிஸ் என்ற அமெரிக்க நகரில் இனவெறியர்களால் சுடப்பட்டு அமரரான தினம். அந்த மாமனிதர் சுயமரியாதையை முன்னிறுத்தி மதாபிமானத்தையும் வாழ்வியலையும் விளக்கியதை இன்று நாம் திரும்பிப்பார்ப்போம். 

“...நாட்டின் பலபகுதிகளிலிருந்து சஹுருதயர்களாகிய நாம் (ஜெயகாந்தனுக்கு பிடித்த சொல் இது.), விடுதலை விரும்பிகளாகிய நாம், நண்பர்களும், சக ஊழியர்களுமாகிய நாம் கூடியிருக்கிறோம். கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் செல்மா: அலபாமாவிலிருந்து நடந்தே வந்திருக்கிறோம். கடுமையான பாலைத்திணையை கடந்து வந்தோம். மலைகள் ஏறி பள்ளத்தாக்குகளில் இறங்கி நடந்தோம். சுற்றி வளைந்த பாதைகளில் நடந்து வந்தோம். பாறைகளில் சாய்ந்து இளைப்பாறினோம். ஆதவனின் வெப்பம் வீசும் கதிர்களால் அயர்ந்து போனோம். கொட்டும் மழையில் நனைந்தோம். சகதியில் உழன்று முன்னேறினோம். களைப்பினால் உடல் வாடியது; நமது பாதங்களில் ஏகப்பட்ட வலி உபாதை. எனினும், நான் உங்கள் கூட்டத்தின் முன் நின்று நாம் நடந்த பெரிய அணிவகுப்பை கண்டு மனமுவந்து பேசுகிறேன். உங்களுக்கு போலார்ட் என்ற சஹோதரியை தெரியுமோ? அவர் வெகு தூரம் நடந்து வந்த போது, பஸ் சவாரி செய்திருக்கக்கூடாதா என்று சிலர் கனிவுடன் கேட்டார்கள். இலக்கணம் அறியாத அந்த மாதரசி கூறிய பொன்வாக்கைக் கேளுங்கள்: “ என்னுடைய பாதங்கள் (feets) களைத்துப்போய்விட்டன. ஆனால் என் நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது.” அந்த வசனத்தில் உறையும் வாய்மையை நீங்கள் மெச்சவேண்டும். நாம் இங்கு வந்து சேரமுடியாது என்று அச்சுறுத்தினார்கள். ஆனால், நடந்தது என்ன? உலகமே நாம் இங்கு வந்து குழுமியதை கண்டு வியந்து போனது. யாரும் நம்மை அசைக்க முடியாது (கைத்தட்டல்). செல்மா என்ற இடத்திலிருந்து மாண்ட்கோமரி என்ற இந்த இடத்துக்கு நாம் வந்து சேர்ந்தது நமது சுயமரியாதை வரலாற்றில் ஒரு திருப்பு முனை. பத்து வருடங்கள் முன்னால் இங்கு தான் நீக்ரோ என்ற நசுக்கப்பட்ட இனத்தின் நவீன சுயமரியாதை இயக்கத்துக்கு வித்து இடப்பட்டது.
இவ்வாறு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்திய மார்ட்டின் லூதர் கிங் என்ற நீக்ரோ காந்தியின் சுயமரியாதை இலக்கணத்தின் சிறிய முன் பகுதி இது. அவசியம் ஏற்படும் போது மற்றதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவு செய்வேன். இந்த தொடரில் அவரது சுயமரியாதை இலக்கை தன்மானம் என்று அழைப்பது தான் சரி. அத்தகைய சீரிய போக்கை புறக்கணித்து தமிழ் நாட்டில் உலவி வந்த காழ்ப்புணர்ச்சி சுயமரியாதை இயக்கத்தினால் நாம் தன்மானம் இழந்தோம். அறுபது வருடங்களாக நசுக்கப்பட்ட மக்களை அவர்களில் அரசு ஆணை மூலமாக முன்னேறிய செல்வந்தர்களே சாதி, இனம், மதம் ஆகியவற்றை பகடையாக வைத்து, மேலும் நசுக்குவதை காண்கிறோம். நல்ல காரியங்கள் செய்ய சுபமுஹூர்த்தம் பார்க்க தேவையில்லை. நமது மக்கள் மஹாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போன்ற செல்மா - மாண்ட்கோமரி யாத்திரை நடத்தி தன்மானம் காப்பாற்றிய மத போதகர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவை முன்னிறுத்தி நல்வழி செல்வோம் என்று கனவாவது காண்கிறேன். அத்தருணம் அவரது ‘நான் ஒரு கனா கண்டேன்’ என்ற சொற்பொழிவையும் படிக்குமாறு உங்கள் யாவரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லதே நடக்கட்டும்.
(தொடரும்)


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, December 19, 2015

நாளொரு பக்கம் 41

நாளொரு பக்கம் 41


Sunday, the 5th April 2015
“The thing that makes you exceptional, if you are at all, is inevitably that which must also make you lonely. “
- Lorraine Vivian Hansberry (May 19, 1930 – January 12, 1965)

Lorraine, whom we tragically lost to pancreatic cancer at her prime, was the first black woman to write a play performed on Broadway. Her family had struggled against segregation, challenging a restrictive covenant and eventually provoking the Supreme Court case Hansberry v.Lee. Her best known work, the play ‘A Raisin in the Sun’ highlights the lives of Black Americans, living under racial segregation in Chicago. 
Martin Luther King, Jr. paid her this tribute: "Her creative ability and her profound grasp of the deep social issues confronting the world today will remain an inspiration to generations yet unborn."
Reading her quote, knowing her background, one cannot resist the hard-won lesson of Life, she shares with us.  One has to learn to live with himself or herself only for long spells at great deprivation of social life, if one has to achieve something exceptionally great.
-x-

Image Credit::https://i2.wp.com/www.rugusavay.com/wp-content/uploads/2013/07/Lorraine-Hansberry-Quotes-5.jpg

Wednesday, April 3, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 3: அச்சான்யம்!




அன்றொரு நாள்: ஏப்ரல் 3: அச்சான்யம்!
6 messages

Innamburan Innamburan Tue, Apr 3, 2012 at 12:41 PM
To: mintamil , thamizhvaasal
அன்றொரு நாள்: ஏப்ரல் 3:
அச்சான்யம்!

அமெரிக்காவில் அமரிக்கையாக அமர்ந்து கொண்டு அன்றொரு நாள்; ஏப்ரல் 3, 1968 அன்று நிகழ்ந்த ‘ஏசு பிரானின் கடைசி விருந்துணவு’ போன்ற கடைசி சொற்பொழிவு ஒன்றை பற்றி எழுதாவிடில், என் மனம் நிம்மதி பெறாது. அந்த உரையில் புதைந்து கிடந்த ஆன்மீகம், தொன்மையின் தாக்கம், மறை பொருள், தீர்க்கதரிசனம்,பிரக்ஞை, அச்சான்யம் (தீநிமித்தம்) எல்லாம் நம்மை உலுக்கி, குலுக்கி எடுத்து விடுகின்றன. அந்த உரையிலிருந்து சில பகுதிகள், சுருக்கமாக:
  1. ஏனிந்த ஹர்த்தால்?
அநீதி தலை விரித்தாடுகிறது...ஒரு ஜன்னல் உடைந்தாற் கூச்சல் போடுபவர்கள், 1,300 கடைநிலை ஊழியர்களுக்கு நகராட்சி இழைக்கும் அநியாயத்தைக் கேட்டால், அழிச்சாட்டியமாக மெளனம் சாதிக்கிறார்கள். நான் இதழ்களை குற்றம் சாட்டுகிறேன்... சத்தியத்திற்கு என்றும் தோல்வி கிடையாது. நாம் தியாகம் செய்வோம் அல்லவா. வெற்றி உத்தரவாதம்...

  1. மனித உரிமை:
அமெரிக்காவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், ‘சொன்னதை செய்’. சட்டப்புத்தகத்தில் போட்டு விட்டு,அதை கடாசினால் எப்படி,ஐயா? இது சைனாவோ.ரஷ்யாவோ இல்லை. பேச்சுரிமை, கூடி இயங்கும் உரிமை, ஊடக உரிமை, உரிமைக்குப் போராட உரிமை எல்லாம் இருக்கிறது என்று சொல்லி விட்டு, எங்கள் மேல் நாய்களையும் ஏவுவதும், தண்ணீர் பீச்சுவதும் தப்பு இல்லையா?... நாங்கள் விடப்போவதில்லை.

3.பொருளியல் ஹர்த்தால்:
நாங்கள் ஏழை தான். ஆனால், எங்கள் சமூகத்தின் செல்வம் கொஞ்சநஞ்சமில்லை. 30 பிலியன் டாலர் வருடத்துக்கு (1968). இது அமெரிக்காவின் ஏற்றுமதியை விட அதிகம். எங்களிடம் சக்தி இருக்கிறது. சேகரம் செய்ய இயலும். யாரிடம் கெஞ்சவும், கொஞ்சவும் தேவையில்லை. எங்களுக்கு அநீதி இழைத்தால், நாங்கள், உங்களுக்கு விற்கமாட்டோம்; உங்களிடம் வாங்க மாட்டோம். உங்கள் செல்வம் படுத்துப்போகும்.

4. பொது:
ஒரே புயல், மழை, ஊதகாற்று. இதற்கு அஞ்சாமல் கூடியிருக்கிறீர்கள்...இது சின்ன ஊர் தான். ஆனால். வரலாறு படைப்போம். நான் உலகம் முழுதும், பழங்காலத்திலிருந்து, உங்கள் முன், நடந்து காட்டப்போகிறேன். மனம் என்ற என் புஷ்பக விமானத்தில், எகிப்திலும், சிவந்த கடலிலும், காவற்காட்டிலும், இறைவன் வரன் அளித்த பூமியிலும், வானளாவவும், உம்மையும் அழைத்துக்கொண்டு உலாவுவேன். கிரேக்க நாடு, ஒலிம்பஸ் மலை,ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரட்டீஸ், யூரிபிடீஸ், அரிஸ்டோஃபேன், ரோமானிய ராஜாங்கம்,, புனர்மலர்ச்சி சகாப்தம், சமய சீர்திருத்தம் செய்த மார்ட்டின் லூதர், அப்ரஹாம் லிங்கன் வரை, உங்களை அழைத்துச் செல்கிறேன். அச்சமில்லை. அச்சமிருந்தால் தான் அச்சம். இல்லையா?
உங்கள் முன்னிலையில் ஆண்டவனிடன் பிரார்த்திக்கிறேன். ‘எனக்கு இந்த நூற்றாண்டில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எனக்கு நீண்ட ஆயுள் தா.’

 மலையேறுகிறேன் என்றார், விவிலய தொன்மையில் மோசஸ்ஸின் மறைவையும், ஜோஷுவாவின் வரவையும் சுட்டினாற்போல். அவர் மேலும் சொன்னது: 

‘எனக்கு கொலை எச்சரிக்கைகள் வந்த வண்னம் உளன. நமது வெள்ளைய சகோதரர்களில் சிலர் என்ன கொடுமை செய்வார்களோ? நான் அஞ்சவில்லை. என்றோ நடந்தது போல், பரமபிதாவின் ஆணைக்கிணங்க மலை ஏறினேன். தேவதரிசனம் ஆச்சுது. நமக்கு அவர் வரனளிக்கும் நாட்டை பார்த்தேன். நாம் சேர்ந்து ஆன்மீக யாத்திரை  செய்வோம். எனக்கு மனித பயமில்லை...”

அந்தோ பரிதாபம்! அவர் சொல்லி முடிக்கவில்லை. மறுநாள் (ஏப்ரல் 4, 1968) அன்று நோபல் பரிசு வாங்கிய மார்ட்டின் லூதர் அவர்கள், 39 வயதில், டென்னஸி மாநிலத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அன்றொரு நாள்: ஜனவரி:15:முன்னம் அவனுடைய நாமம் கேட்டால்...’ என்ற இழையில் அவரை பற்றி விவரமாக எழுதியிருக்கிறேன். அவரது உடலில் குண்டு பாய்ந்தது. ஆத்மா நித்யவாசம். சிரஞ்சீவி.
வாழ்க அவர் நாமம்.
இன்னம்பூரான்
03 04 2012Inline image 1


உசாத்துணை:


Geetha Sambasivam Tue, Apr 3, 2012 at 12:54 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
மெம்பிஸில் இவர் சுடப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்து வரச் சொல்லி இருந்தீர்கள்.  ஆனால் எங்கள் பெண், மாப்பிள்ளைக்கு அப்போது தான் காரின் ஜன்னலை உடைத்துத் திருட்டு நடந்திருந்ததால் வெளியே எங்கும் அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.  :(((( கிளம்பும் வரையிலும் எங்குமே செல்லவில்லை இம்முறை. :((((((

On Tue, Apr 3, 2012 at 5:11 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொரு நாள்: ஏப்ரல் 3:
அச்சான்யம்!



யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Tue, Apr 3, 2012 at 2:29 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இ சார்

இதெல்லாம் வெளிநாட்டில் ரூம் போட்டு யோசிக்கிறீர்களோ???

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

Innamburan Innamburan Tue, Apr 3, 2012 at 3:48 PM
To: thamizhvaasal@googlegroups.com
உள் மனதில்,பென்.


2012/4/3 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
[Quoted text hidden]

Subashini Tremmel Fri, Apr 6, 2012 at 11:23 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
இந்த நாளில் இவரை நினைத்துப் பார்க்க வைத்த உங்கள் பதிவிற்கு நன்றி.

சுபா


Subashini Tremmel Fri, Apr 6, 2012 at 11:25 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/4/3 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
மெம்பிஸில் இவர் சுடப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்து வரச் சொல்லி இருந்தீர்கள்.  ஆனால் எங்கள் பெண், மாப்பிள்ளைக்கு அப்போது தான் காரின் ஜன்னலை உடைத்துத் திருட்டு நடந்திருந்ததால் வெளியே எங்கும் அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர்.  :(((( கிளம்பும் வரையிலும் எங்குமே செல்லவில்லை இம்முறை. :((((((

ஹ்ஹ்ம்ம்.. அடுத்த முறைம் மெம்பிஸ் செல்லும் போது எந்த் அசம்பாவிதங்களும் நிகழாமல் நீங்கள் நிறைய பார்த்து படங்களும் கொண்டு வந்து பகிர்ந்து கொள்ளுங்கள் திருமதி கீதா.

சுபா