Showing posts with label பாடாண் திணை. Show all posts
Showing posts with label பாடாண் திணை. Show all posts

Monday, May 27, 2013

தமிழ் இலக்கியம் 3




தமிழ் இலக்கியம் 3

Innamburan S.Soundararajan Mon, May 27, 2013 at 5:07 PM



தமிழ் இலக்கியம் 3
தமிழ்நாடு நாடுவது பாடாண் திணை

இன்னம்பூரான்
MAY 14, 2011 1:05 PM
இரு வருடங்களுக்கு முன் வல்லமை இதழில் பிரசுரமான கட்டுரையின் மீள்பதிவு, இது. இன்றைய நாட்டு நடப்புகளை மந்தில் கொண்டு படிப்பது உகந்த பாதை.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் அறவழி அரசின் மேலாண்மை பேசப்பட்டது.  அதை நாம் மீண்டும், மீண்டும் படித்துத் தெளிவு பெறுவது நலம் பயக்கும். இதை ‘அரசியல்’ சார்புள்ள பகுதியிலும் பதிவு செய்யலாம்.
இன்னம்பூரான்
28 05 2013
--------------------------------------------------------------------------------------------------------
கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால், மணிமேகலையின் மைய செய்தியையும் பாடாண் திணையின் ஈகையையும் கொடையையும் அறிவுரையையும் இணைத்து, யான் எழுதிய கட்டுரை ஒன்றின் பகுதி இது:
= ” …அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்,
மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்…”
=; “இத்தகைய ஈகையும், கொடையும் பாடாண் திணை இலக்கியத்தில் மட்டும்தான் பொருந்தும், அன்றாட வாழ்க்கையில் இயலாது என்று மேகலையின் இலக்கியச் சுவையையும், மறுக்க இயலாத மனிதநேயத்தையும் கண்டு ஒதுக்கி விட்டோமா என்ன?”
அதை இன்று முன்னிறுத்த, என்னை வற்புறுத்துவது, மக்களின் தேர்தல் தீர்வு. தமிழ் இலக்கியத்தில், புறப்பொருள் வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறும் ஏழு புறத் திணைகளின் முடிபுரையான பாடாண்திணை, ஓர் அறிவுரைச் சுரபி. இது தலைமைப் பண்புகளின் உயர்வைப் பாடுகிறது. அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்ட அரசியல் தலைமையைப் போற்றி, அறிவுரைகள் பல அளித்து, ஒரு சன்மார்க்கக் கையேடாக அமைகிறது.
மக்கள் அளிக்கும் பொன்வாக்கின் பயனாக, தலைமை என்னும் சிறப்பு அடைவோருக்கு, அத்தருணத்தில் அருமருந்தாக அமையும் மூலிகை என்க. கடவுள் வாழ்த்து, அரசனை வாழ்த்துதல் ஆகியவையும் பெருமை சேர்க்கின்றன. இன்றைய அரசியல் நிலையில், பாடாண் திணையை வாழ்த்தி வணங்கி, வரலாறு காணாத முறையில் மக்களின் பேராதரவையும், ஆணி வேரென நம்பிக்கையையும் பெற்று, முதல்வராக மே 15, 2011 அன்று பதவி ஏற்கப் போகும் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களிடம் அதை முன்மொழிவது, நம் கடனே.
Inline image 1
ஏனெனில், பாடாண் திணை நுட்பமாகத் தலைமையை ஆராய்ந்து பாராட்டிப் புகழ்ந்து, மேலும் உயர்த்தும், பொருந்தி இருந்தால். மக்களிடையே அந்த ஆளுமை பரவி அவர்களையும் உயர்த்தும். இவர்களைக் கொண்ட சமுதாயம் முழுதும் உயர்ந்த பண்புகளால் சிறக்கும். பண்புகளின் உயர்வைப் பாடும் பாடாண் திணையே, நன்னெறி நாடும் தமிழ் மக்களுக்கு, உகந்த தமிழ்த் தூண். நங்கூரமும் அதுவே. கலங்கரை விளக்கும் அதுவே.
கடவுள் துணை
‘…இன்னது செய்தல் இயல்பு என இறைவன்
முன்னின்று அறிவன் மொழி தொடர்ந்தன்று…’
‘…ஒன்றில் இரண்டு ஆய்ந்து முன்று அடக்கி நான்கினால்
வென்று களம் கொண்ட வேல் வேந்தெ – சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி
ஏழ்கடிந்து இன்புற்று இரு.’
திணை யாதாயினும் இறையின் துணை நாடுவது நலமே.
ஒரு பார்வை:
‘பாடாண் பாட்டே, வாயில் நிலையே
கடவுள் வாழ்த்தொடு, பூவை நிலையே,
பரிசில் துறையே, இயன்மொழி வாழ்த்தே,
கண்படை நிலையே, துயிலெடை நிலையே,
மங்கல நிலையடு, விளக்கு நிலையே,
கபிலை கண்ணிய புண்ணிய நிலையே,
வேள்வி நிலையடு, வெள்ளி நிலையே,
நாடு வாழ்த்தொடு, கிணையது நிலையே,
பரிசில் விடையே, ஆள்வினை வேள்வி,
பாண் ஆற்றுப்படையே, கூத்தர் ஆற்றுப்படையே,
பொருநர் ஆற்றுப்படையே, விறலி ஆற்றுப்படையே,
வாயுறை வாழ்த்து, செவியறி உறூஉக்
குடை மங்கலமொடு, வாள் மங்கலமே,
மண்ணு மங்கலமே, ஓம்படை, ஏனைப்
புறநிலை வாழ்த்தும், உளப்படத் தொகைஇ
அமர்கண் முடியும் அறுவகை ஆகிய
கொடிநிலை, கந்தழி, வள்ளி, குணம் சால்
புலவரை அவர்வயில் புகழ்ந்து ஆற்றுப் படுத்தல்,
புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல்,
நிகழ்ந்த காமப் பகுதியுள் தோன்றிய
கைக்கிளை வகையும், பெருந்திணை வகையும்,
நல்துனி நவின்ற பாடாண் பாட்டும்,
கடவுள் பக்கத்தும், ஏனோர் பக்கத்தும்,
மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின்
கண்ணே தோன்றிய காமப் பகுதியடு
ஆங்கு அவ்வாறு எண்பகுதிப் பொருளும்
பாங்குற உரைப்பது பாடாண் பாட்டே (9)”
என்று பாங்குடன் தொடங்குகிறது, கடவுளை வாழ்த்தி, பாமரப் பெண்ணாகிய விறலியை வாழ்த்தியும் புலவரைப் புகழ்ந்தும் வாழ்வியல் நோக்கியும் இந்த அறிவுரை ஊற்று.
ஒரு ஆசி:

‘கஙகுல் கனைதுயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று..’
என்று மங்கல வாழ்த்து.
என் நாடே! வாழ்க!
‘தாள்தாழ் தடக்கையான்
நாட்டது வளம் உரைத்தன்று…
…எண்ணின் இடர் எட்டும் இன்றி வயல் செந்நெல்
கண்ணில் மலர்க் கருநீலம் – விண்ணின்
வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென்வேல்
நகைத் தாரான் தான் விரும்பும் நாடு.’
தமிழனும் தமிழ்நாடும், தமிழ் மொழியும் வாழிய! வாழியவே! வாழியவே!
இனி, மக்களின் எதிர்ப்பார்ப்பை, பத்து விருப்பங்களாக, ஒரு பட்டியல்:
=> 1. ஆளப் போகும் கட்சியின் உள் நிகழும் நிழல் முரண்களைக் களைய வேன்டும்.
=> 2. லஞ்சம், கட்டப் பஞ்சாயத்து, மணல் வாரி, ஒப்பந்த ஊழல்கள் வகையறாவை, போர்க் கோலத்தில், மகிஷாசுரமர்த்தினி மாதிரி இருந்து, அறவே, ஒழிக்க வேன்டும்.
=> 3. மின் துறையை முழுதே அலச வேண்டும்; மின்வெட்டைத் தணிக்க வேண்டும்.
=> 4. வருங்கால முதல்வருக்கு நல்லதொரு, கட்சி சார்பு அற்ற, ஆலோசகர் தேவை.
=> 5. அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு பச்சை சிக்னல் போக வேண்டும்.
=> 6. காவல் துறையில் கடுமையான மாற்றங்கள் தேவை.
=> 7. வருங்கால முதல்வர் தணிக்கை ரிப்போர்ட்டுகளைப் படிக்க வேண்டும்.
=> 8. ஊடகங்கள் பொறுப்புடன் நடப்பதற்கு வகை செய்ய வேண்டும்.
=> 9. கிராமங்களை உன்னத நிலைக்குக் கொணர வேன்டும்.
=> 10. இலவசங்கள் தேவையே இல்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளைப் பொதுநலம் நாடி, திருத்தி அமைக்க, ஏற்புடைய இலக்கணம் வகுக்கவேண்டும்.
சித்திரத்துக்கு நன்றி:http://1.bp.blogspot.com/_QIuFWFyY-b8/SdGuzlTDNcI/AAAAAAAAAuQ/RD9ASamejGk/s400/jeyacho.bmp

பிரசுரம்: VALLAMAI.COM


Thursday, May 2, 2013

அன்றொரு நாள்: மே 3: பாட்டீ!




அன்றொரு நாள்: மே 3: பாட்டீ!
11 messages

Innamburan Innamburan Sun, May 6, 2012 at 9:19 PM


ன்றொரு நாள்: மே 3:
பாட்டீ!
எனக்கு ஒரு அத்தான் இருந்தார். அவருடன் தெருவில் நடந்தால், தாமதம் மிகுந்து விடும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று, ‘படி கோணல்’/‘முற்றம் சிறியது’/‘ஓடுகள் சரியாக அடுக்கப்படவில்லை’, அது, இது என்று குற்றம் குறை சொல்லுவார். அவர் ஒரு கட்டிடக்கண்ட்ராக்டர். ஒரு பிரதமருக்கு இந்த மாதிரி ஒரு குணம். எந்த பெண்மணி வந்து போனாலும், உடையின் பார்டர் அமைப்பை உற்று நோக்குவார். அது பழகிப்போய் விட்டது. ஒரு காலத்தில், அவர் காஜா தைத்து, பெண்ணாடை தையல்காரராக பிரமோஷன் ஆனவர் தானே!
அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. சில இங்கே. ஆயிரக்கணக்கான ஜனம் உள்ள கூட்டத்தில் அவர் பேசுவது, அவரது வீட்டின் முன்னறையில், சாதாரணமாக அளவளாவுதல் போல் எளிமையாக இருக்குமாம். ஒரு உதாரணம்: 

‘எம் தலைமுறையின் உழைப்பு வரப்பை உயர்த்தியது. எம் குழந்தைகள் தர்மயுத்தம் செய்தனர். எம் பேரக்குழந்தைகள் நிம்மதியாக வாழவேண்டும்.’ ஒரு கடுமையான போர். நாட்டின் தலைமை, இவரிடம். ஜெயித்தது யார் என்பது தெளிவாக புரியவில்லை. இரு தரப்பும் மார் தட்டினர். இவர் உரைத்தது: ‘வாகை சூடுவதில் எமக்கு நிறைவு இல்லை. ஒரு புதிய வகை பருத்தி காய்த்ததா? பழங்கள் கனிந்தனவா? அதுவல்லவோ மனமகிழ்ச்சி தரும்’ .

அவரோ பெரிசு. அவருடைய அணுகுமுறை வியப்பை அளிக்கும். காரியம் சித்தியாகும். மனோதிடம் பாறாங்கல் மாதிரி. நேசமோ கனிவானது. வாசாலகம். கையில் செக்-லிஸ்ட். ராஜதந்திரமும், ஊடக ஆதரவும் அவருக்கு வலது/இடது கை. தொட்டதெல்லாம் பொன்னும், கன்னும் (gun). அவ்வாறு இருந்த போதிலும், போர்த்தலைமையில் நிகரற்றவரெனினும், இவருடைய கொள்கை: ‘அண்டையும், அயலும், அன்புடன் இயைந்து வாழவேண்டும்.’ அவருடைய ஆதங்கம்:’ நாம் ‘சாந்தி’ என்றால் அது ‘சமர்க்களம்’ என்று எதிரொலிக்கிறதே. வெற்றி நிச்சியம் என்றாலும் யுத்தம் வேண்டாம்’ என்பதே.  1948 ல் ஆண் வேடம் போட்டு, எதிரியான ஜார்டான் மன்னர் அப்துல்லாவிடம் சமாதானம் நாடி சென்ற வீராங்கனை அல்லவா?
இது எனக்கு நினைவூட்டுவது:புறப்பொருள் வெண்பாமாலை:பாடாண் திணை; துறை உடனிலை: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. அகம் என்றால் கள்ளக்காதல், புறம் என்றால் கத்திச்சண்டை என்ற குறுகிய அளவில் தற்காலத்து தமிழுலகம் புரிந்து கொண்டது என்று தோன்றுகிறது. ஐயா! அப்படியில்லை. ‘பாடாண்துணை’ பகுதிக்குப் போனால் அரசதர்மம், நீதியின் மேன்மை, சான்றோர், அமைதி எல்லாம் புரியும். ஒரு பார்வை:

‘... நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,
வரைய சாந்தமும், திரைய முத்தமும், 
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் 
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், 
நீல் நிற உருவின் நேமியோனும், என்று 
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, 
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? 
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;...’

அங்கு தமிழ் வேந்தன். இங்கு இஸ்ரேல் பாட்டி! ஜன்ம வைரியான எகிப்தின் ஜனாதிபதி, சமாதானம் நாடி இஸ்ரேல் வந்ததை பற்றி http://www.heritagewiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_நவம்பர்_20
இழையில் எழுதியிருந்தேன்.
அவர் சொன்னது:  எனக்கு இவருடன் பேசுவதில் தான் இணக்கம் இருந்தது. மிகவும் மனவலிமையுடைய போராளி அவர். அதனால், அவருக்கு சமாதானத்தின் அருமையும், பெருமையும் தெரியும். அவர் என் பேரக்குழந்தைக்குக் கொடுத்த பரிசிலை, ஆசையுடன் எடுத்துச் செல்கிறேன்.’
கோல்டா மீர் என்ற இஸ்ரேல் பிரதமர், இந்தியாவின் இந்திரா காந்தி, இங்கிலாந்தின் மார்கெரட் தாட்சர் மூவரும் ஆளுமை செலுத்துவதில் நிகரற்றவர்கள். இவர்களுக்கு இணையான ஆண் மேலாண்மை காணக்கிடைப்பது அரிது. இன்று திருமதி கோல்டா மீர் அவர்களின் ஜன்ம தினம். மே 2, 1896 அன்று பிறந்தவர், அவர்.
இன்னம்பூரான்
03/06. 04. 2012
Inline image 1

உசாத்துணை:

renuka rajasekaran Sun, May 6, 2012 at 9:55 PM

"அகம் என்றால் கள்ளக்காதல், புறம் என்றால் கத்திச்சண்டை என்ற குறுகிய அளவில் தற்காலத்து தமிழுலகம் புரிந்து கொண்டது என்று தோன்றுகிறது." - மாணிக்க வரி

மிக அருமையான உண்மை வெளிப்பாடு

மனம் உவக்கிறேன்; அதே நேரம் அறியாமையே ஒரு தகுதி என்றபடி தலை எடுக்கும், பெரும்பான்மை இளையவர்களின், எதிர் கால இலக்கிய வளம் குறித்தும் கரிசனம எழுகிறது

வணக்கம் 



shylaja Mon, May 7, 2012 at 4:09 AM


சித்தியை  இன்னும் படிக்கவில்லை பாட்டியைப்பார்த்துவிட்டேன்! நல்ல வர்ணனையோட ஆரம்பித்து  விவரித்தவிதம் வழக்கபோல அருமை இ சார்.  வாசாலகம்  என  சொல்லிருக்கீங்க என்ன அது?
//புறப்பொருள் வெண்பாமாலை:பாடாண் திணை; துறை உடனிலை: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. //
அடேயப்பா எங்கெருந்து பிடிக்கறீங்க?!
படத்துல  இங்கபாட்டி ரொம்ப ஸ்மார்ட்!  அதென்னவோ அந்தகாலத்துல நம்முர்பாட்டிகள் பலர் ஸ்மார்ட் தான்  என்னோட  அப்பா அம்மா வழிப்பாட்டிகள்  அறிவுக்கொழுந்துகள். ஏதாவது கொஞ்சம் என்கிட்ட  திறமைன்னு  சொல்பம் இருந்தால்  பாட்டிகளின் உபயம்தான். கண்பார்த்ததை கை செய்யும்.  அவர்கள் எல்லாம் படித்திருந்தால்  உயர்பதவியில் இருந்திருப்பார்கள்.. எங்கே அந்த நாளில்  வீட்டிற்குள்ளே பெண்ணைப்பூட்டிவைத்த விந்தை மனிதர்கள்  கோலொச்சிய காலமாச்சே !


Nagarajan Vadivel <Mon, May 7, 2012 at 5:19 AM


//வீட்டிற்குள்ளே பெண்ணைப்பூட்டிவைத்த விந்தை//
விந்தையாயிருக்கு.  வீட்டுச் சாவியும் கொத்துச் சாவியும் இப்ப யார் கையில இருக்கு?
நாகராசன்



Innamburan Innamburan Mon, May 7, 2012 at 5:30 AM

இது தனி மடல்,ஷைலஜா. என்னுடைய பாமர கீர்த்திக்கு நீ அவாளை பற்றியெல்லாம் விஷயதானம் செய்யணும். உன் அனுமதியில்லாமல், எதையும் எழுத மாட்டேன். நீ எனக்கு தனி மடல் அனுப்பலாம். இல்லை, மடலாடலாம். இதை மறக்காதே. இந்த ஆம்பிள்ளை தடியன்களுக்கு, பூட்டி வைத்த்ததை ஒப்புக்கொள்ள திராணி இல்லை. நான் பிடிக்கறதெல்லாம், என் சிந்தனைக்களத்திலிருந்து. ராஜம் கூட இதான் கேட்டாள். 'வாசாலகம்' என்றால் பேச்சுத்திறன். ஹரிகியை கேட்டா அவர் 'லொடக்'நு ஏதாவது எழுதுவார்!
அன்புடன், 
இன்னம்பூரான்
07 05 2012
பி.கு: இன்று வஸந்தா அஞ்சலி தினம். பெங்களூரு ஹிந்துவில் 'In Memoriam' வந்திருக்கோ?


shylaja Mon, May 7, 2012 at 6:42 AM
To: Innamburan Innamburan

சரி இ சார்
நே்ரம்
 கிடச்சதும் நீங்க சொன்னதை செய்றேன்  அப்றொம் த்ரிசக்தில ரமணன் விலகி ஏழெட்டு மாசம் ஆச்சு  அதனால் உங்க  அம்மா சொல்படி ராஜு  இப்போ  புக் ஆக  வாய்ப்பு இல்ல...வேற்அ யாரும்  வாய்ப்பு தந்தா  கண்டிப்பா சொல்றேன்
[Quoted text hidden]

Innamburan Innamburan Mon, May 7, 2012 at 7:28 AM

ஓஹோ! அப்டியா? முன்னாலேயே சொல்லமாட்டாயோ, பெண்ணே! கிழக்குப்பதிப்பகம் பார்க்கலாமா? இல்லை ஆங்கிலத்தில் எழுதி விடவா? உன்னுடைய ஆலோசனை வேணும்.. உன்னிடம் நான் கொடுத்திருப்பதை இங்கிலாந்துக்கு அனுப்பமுடியுமா? ஹிந்து பத்திரிகை பார்க்க முடிந்ததோ.



Geetha Sambasivam Tue, May 8, 2012 at 2:39 PM


நல்ல நினைவு அஞ்சலிக்கு நன்றி.  பாட்டியாலே இப்படியெல்லாம் ஜொலிக்க முடிந்ததென்றால் அந்தக் கால கட்டத்திலும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டு தான் இருந்திருக்கும். இல்லையா??? என்னோட ஓரகத்தியின் பாட்டியார் அந்தக் காலத்திலேயே சிதம்பரம் நகராட்சியின் சேர்மனாக இருந்திருக்கார்.  ஒன்பது கஜம் புடைவையோடு தான் நகராட்சிக் கூட்டங்களுக்குச் செல்வாராம்.   எண்பதுகளின் கடைசியில் தான் இறந்தார்.



Innamburan Innamburan Tue, May 8, 2012 at 4:27 PM

ஓரகத்தியிடம் கேட்டு, பாட்டியின் பாமர கீர்த்தி/பெயர் எல்லாம் அனுப்பவும். இந்த ஷிகாகோ துரை என்ன பிகு பண்ணிக்கிறாரு!



Geetha Sambasivam Tue, May 8, 2012 at 4:29 PM

அப்படியா?  துரை பிகு பண்ணிக்கொள்ளும் ரகம் இல்லை.

Innamburan Innamburan Tue, May 8, 2012 at 4:34 PM

சரி. அதனால் தான் மற்றவர்கள் பிரச்னை தெரியாமல் பேசக்கூடாது. நான் அவருக்கு விவரங்களும் அனுப்பிருக்கிறேன். முடிந்தால், சந்திப்பது நலம்.