Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

Wednesday, September 19, 2018

நீதி, நெறி நழுவாமல்…1

நீதி, நெறி நழுவாமல்…1

இன்னம்பூரான்
2018-09-18
மக்களை கட்டி மேய்ப்பது எளிது அன்று. உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் கட்டுப்பாடு இல்லையெனில் ஊரையே மேயும்.கரையை கரைக்கும். மரையை கழட்டும். கூறையை பிரிக்கும். சூறையாடும். கூறு போடும், பொது சொத்தை.
சிங்கம், புலி, புரவி, எருது, பசு மாடு எல்லாவற்றின் மீதும் ஆளுமை செலுத்தும் மனிதனை அவனுடைய தனயன் கூட மதிக்காததைக் கண்கூடாக பர்க்கிறோம். மனித இனம் கூடி வாழ்வதை விரும்புகிறது. அதற்காக, தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைக்கவும் கற்றுக்கொள்கிறது. அது சமுதாய நலன் பொருட்டு இன்றியமையாத தியாகம் என்று தோன்றினாலும், உண்மையில் தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும் தந்திரம் எனலாம். சமுதாய நலனும், சுயநலமும் ஒரே பாட்டையில் பயணிக்க இயலவில்லை என்றால், உதட்டளவில் சமுதாய நலம் நாடி, செயலில் சுயநலம் தேடி இயங்குபவர்களை சமூக விரோதிகள் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை. நீதி அவர்களை இனம் கண்டு தண்டிக்கவேண்டும். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது கூட ஒரு உருவகம் தான். பாரத தேசமும், குறிப்பாக தமிழகமும் தொன்மையானவை, அவற்றின் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவை போற்றத்தக்கவை என்பது போல கிரேக்க/ ரோமானிய வரலாறு, இலக்கியம், தத்துவம், கலாச்சாரம்,பழமை ஆகியவையும் போற்றத்தக்கவை என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.
ஜஸ்டியா அகஸ்டா என்ற ரோமானிய நீதி தேவதை ஒரு அலங்கரிக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பது ஜனவரி மாதம் 8ம் தேதி 13 கி.மு. முதல் ஒரு ஆலயத்தைல் துவக்கப்பட்டதாக ரோமானிய தொன்மை கூறுகிறது. அகஸ்டஸ் என்ற ராஜாதி ராஜன் தான் நீதி தேவதையை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அவள் திறந்தக் கண்ணிளாள். கி.பி. 16ம் நூற்றாண்டில் தான் அவளது கண்மலர்கள் மூடப்பட்டன, பாரபக்ஷமில்லால் இயங்குபவள் என்பதை முன்னிறுத்த. அவளுக்கு செல்வம், அதிகாரம், பதவி ஆகியவற்றுக்கு முக்கியத்வம் கொடுக்கத் தெரியாது. கண்கட்டுடன் காணப்படும் நீதி தேவதை முதலில் ஸ்விட்சர்லாந்தில் பெர்ன் நகரில் 1543ல் அவதரித்தாள். லண்டனில் இருக்கும் ஓல்ட் பெய்லி நீதி மன்றம் பழமையானது மட்டுமல்ல; பிரபல வழக்குகள் அங்கு மன்றாடப்பட்டன. அங்கு அருள் பாலிக்கும் நீதி தேவதைக்கு ‘கண்மூடி’ கிடையாது. அந்த கோர்ட்டாரின் தலபுராணம் நல்லதொரு விளக்கம் தருகிறது. புராதன ரோமானிய தேவதை விழிப்புடன் தான் இருந்தாள். அவள் ஒரு கன்னிகை தேவதை என்பதால் பாரபக்ஷமின்மைக்கு உத்தரவாதம் உளது என்கிறது. இப்போது தேவதா விசுவாசத்தை சற்றே நகற்றி வைத்து விட்டு, நீதி பரிபாலனத்தைப் பற்றி சில வரிகள்.
மக்களை கட்டி மேய்க்க சமுதாய விதிகள் தேவை. அவற்றில் சில வேலியை மேய்க்கும் என்பது வரலாறு
அடிக்கடி கூறும் கசப்பான உண்மை. கட்டை பஞ்சாயத்து முரட்டுத்தனமாக குருட்டு நீதி வழங்குவதை ஊடகங்கள் அவ்வப்பொழுது சன்னமான குரலில் எடுத்துரைக்கின்றன. பிறகு யாவரும் மறந்து விடுவார்கள். சில சமுதாயங்கள் சட்டம் அனுமதிக்கும்/ வரவேற்கும் கலப்பு மணங்களை தடை செய்யும், சட்ட விரோதமான வன்முறை எதிர்ப்புக்களை கண்டு கொள்ளாது. அரசாங்கம் என்றதொரு அதிகார மையம் இருந்தால், சமுதாய நலன் அக்கறையுடன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. விதிகள், அதற்கேற்ப இயற்றப்படும்; அவற்றை அரசு நிர்வகிக்கும்; நீதி மன்றங்கள் சட்டத்தை பாதுகாக்கும். மாண்டெஸ்கோ என்ற சிந்தனையாளர் Separation of Powers என்று எழுதிய அரசியல் கோட்பாடுகளை இதற்கு முந்திய ஒரு வரியில் அடக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே தொடரவேண்டி இருக்கிறது. இது ஒரு முகாந்திரம் மட்டுமே.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/b/ba/NewarkJustice1.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.co

Wednesday, December 16, 2015

விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

இன்னம்பூரான்
15 12 15
Published: Vallamai 15 12 2015
http://www.vallamai.com/?p=64717#comments

ஆராய்ச்சிமணி அடித்தக் கறவைப்பசுவுக்கும், வண்ணாத்தியிடம் ஜஹாங்கீர் துப்பாக்கி நீட்டியதும் வகுக்கப்பட்ட விதியல்ல; நீதிபோதனை.
மின்னிதழ்களிலும், மின்குழுமங்களிலும் தற்காப்புக் கருதி நான் நீண்டகாலம் எழுதுவதில்லை.‘நாவினால் சுட்டவடு..’ என்று தெரியாமலா சொன்னார், வள்ளுவர் பெருந்தகை? மதிக்கப்படாவிடினும், மிதிபட வேண்டாம் அல்லவா! இது நிற்க.
சிந்தனையும் சொல்லும் இணைந்து செயல்படுபவை. ஆங்கிலத்தில் algorithm என்ற சொல் கொடி கட்டிப்பறக்கிறது; சாதனை படைக்கிறது; அதற்கு’ வழிமுறை’ என்று தமிழ்ப் பொருள் கூறப்படுகிறது. என்னுடைய கணிப்பில் அது மேலான,புடம் போட்ட வழிமுறை. நான் மதிக்கும் algorithm: ‘விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன்.’ என்பதே. இன்று ‘மருத்துவத்தின் மூன்று வி (நீ)திகள்’ என்ற தலைப்பில் சித்தார்த் முக்கர்ஜீ என்ற மருத்துவர் எழுதிய கட்டுரை ஒன்றை படித்ததின் விளைவாக எழுகிறது, இந்தத் தொடர். நான் விதித்துக்கொண்ட விதியை மீறி, நீதி பேசுகிறது. குறைப்பிரசவம் ஆனாலும் ஆகலாம். அப்போது விட்டு விட வேண்டியது தான். விதி யாரை விட்டது? இதுவும் நிற்க.
சென்னை வெள்ளத்தில் நகரே சிதிலம் அடைந்தது. தமிழ்நாடு முழுதும் சேதம் அடைந்தது. மனம் பதைத்து, பல தடங்கல்களை கடந்து, மூட்டைகளை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு டிசம்பர் 7 அன்று எடுத்து சென்றால், அத்தியாவசிய பொருள்கள் மிகுதியாக வந்தன; மிகுதியாகப் போயின. செல்வந்தர்கள் பால் பாக்கெட்டுக்குக் கையேந்தினர். ஏழை பாழை தாராளமாக் வழங்கினர். பேதமில்லாத உலகம். எண்பதைத் தாண்டிய முதியோர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து செயலாற்றினர்; நம் வீட்டு சிறுவர்/சிறுமிகளோ, உலகின் பலபகுதிகளிலிருந்து whatsapp மாயா மச்சீந்திரா உபாயங்கள் மூலம் உடனக்கடி அபயம் அளித்து வந்தனர். Blue Cross நிறுவனத்தின் Dawn அவர்கள் அசகாய வேலை செய்து உயிர் மீட்டனர். மற்றும் பல மனிதநேய நிகழ்வுகள், உருக்கமான செய்திகள், எண்மெய்ப்பாடுகளும், வளைய வந்த மனித அபிமானங்களும், சுவபாவங்களும், பல பாடங்களைக் கற்பித்தன. மேற்படி செயல்பாடுகளில் ஒன்று கூட விதிக்கு உட்பட்டவை அன்று. அன்றாட இயல்பு வாழ்க்கையில் இவை இடம் பெற்றிருக்கப்போவதில்லை. அவை நீதிதேவதையின் வழிமுறை.
மேல்தளத்து (அதாவது பாதுகாப்பாக இருந்த) மக்கள் ரூல் பேசினார்கள். அரசை கண்டித்தார்கள். ஆக்கிரமிப்புகளை பற்றியும், நீராதாரம் பற்றியும், ‘அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்’ என்று முடியா வழக்குகளை சகதியிலும், ஊடகங்களிலும், மின்/மின்னா குழுக்களிலும் பேசி வந்தனர். பிராவகத்து போராளிகளுக்கு இதெல்லாம் இரண்டாம் பக்ஷம். அவர்கள் விதியை மறந்தனர். நீதியை நாடினர்.
வாழ்வியலில் நாம் சிரத்தையுடன் (பஹுகார்யமாக), அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு, பக்குவமான தீர்வுகளை நாடுகிறோம். வாகை சூட முடியவில்லை; பகை தான் புகைக்கிறது. சில உதாரணங்களுடன், இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.
Lord Keynes said, ‘In the long run, we are all dead’. ஆம். நிரந்தரவாழ்க்கை யாருக்கும் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். நமது ஊர்களில் 99.99 % வீடுகளில் வாசற்படி தெருவை ஆக்கிரமித்து இருக்கும். நடைபாதைகள், சின்னச்சின்ன குருவிகளுடன் செத்துப்போயின. அரசு கட்டிடம் வாசலில் நடை பாதைக்கு முள்வேலி பாருங்கள்! இது குடிமகனின் செயலா! அரசின் கொடுமையா? ‘இன்று வீட்டுமனை விலை ஆகாயத்தைத் தொடுகிறது. ஏரிக்கரையில் ஒரு குட்டிப்பகுதியை கைப்பற்றி, குடிசை போட்டு, காரை வீடு; மாடி வீடு; பல தளங்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று, கேட்ட லஞ்சத்தைக்கொடுப்பது விதிக்கும் முரண்; நீதிக்கும் முரணாக விதியை உலுக்கிவிட்டேன்.’ என்பவர்களின் முதலையீடுகளை, ஏன் உயர் அதிகாரி செல்வி அமுதா இடிக்கமாட்டார்? நீரை வெளியேற்ற வேண்டி,அவசர கட்டத்தில் சில சில உப விதிகள் அடிபட்டுப்போயிருக்கலாம். ஆனால் நீதி நிலைத்து நின்றதே.
லஞ்ச லாவண்யத்தின் தீமைகளை பற்றி எமது சிறிய சிந்தனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. வாய்ச்சொல் வீரர்களை பற்றியும் பேச்சு எழுந்தது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநீதி; விதிக்கு முரண். இந்தியாவின் முதல் லஞ்சஒழிப்புச் சட்டத்தில் லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை உண்டு. ஆனால், வழிமுறை அவ்வாறு இல்லையே. இந்தியா முழுதும் நாம் நாட்தோறும் கண்ணாரக்காண்பது கோடிக்கணக்கான லஞ்சம், ஊழல், சால்ஜாப்பு, அரசியல் வாதிகளில் பலரின் தீவினைகள். இந்தப்பின்னணியில் ஏரி ஏன் உடையாது? நதி ஏன் பெருக்கெடுக்காது? கடல் ஏன் கொந்தளிக்காது? வீடு ஏன் முழுகாது? உயிர் ஏன் பிரியாது? ஒவ்வொரு கட்டுமானத்திலும் – ஏரிக்கரை, தூர் வாருதல், ரோடு, கட்டிடங்கள், பாலங்கள், அன்றாட பராமரிப்பு – இவைகளில் உள்ள குறைகள், ‘ஈயத்தைப் பார்த்து இளைத்ததாம் பித்தளை’ என்ற வகையில் இன்று சந்தி சிரிக்கின்றன. இவைகளெல்லாம் விதிகளின் கீழ்படிதலாக, நீதியை கற்பழித்துக் கட்டப்பட்டனவையே. சாணக்ய நீதிப்படி உரியகாலத்தில் விதி மீது சதி செய்தவர்களை கடுமையாக தண்டிக்காதவர்களையும் தண்டிக்க வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை உரத்த குரல் எழுப்பி கண்டிப்பவர்களும், அரசு உயர் அதிகாரியின் விளக்கங்களும் விதியை பற்றி விளாசலாம். நீதி எங்கே போயிற்று? முதற்கண்ணாக, தமிழ்நாடு சென்னையை விட பெரியது. தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது என்ன? கடலூர் மூழ்க, செம்பரம்பாக்கம் என் செய்தது?
இரண்டாவதாக, நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். விசாலமான நோக்கு வேண்டும். இரக்க சுபாவம் வேண்டும். மருத்துவத்தில் முதலுதவி கொடுப்பது வரிசை விதியை விலக்கும் நீதி. அது போல ஏழைபாழைகளுக்கு முதலில் வாழ்வாதாரம் கொடுத்து எல்லாருக்கும் உடனடி உதவி கொடுக்க வேண்டும். நம்மால் ஏன் ராணுவம் போல் இயங்கவில்லை என்பதை பரிசீலனை செய்யவேண்டும். வெட்கக்கேடு! பரிதவிக்கும் மக்களை விட்டு, மேட்டுக்குடி வீஐபிகளை காப்பாற்ற சொன்னார்கள், அதிகார மையங்கள் என்று ராணுவம் கூறும் போது, நாக்கிப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது.
எந்த எந்த அளவில் எந்த எந்த அன்றாட அரசு ஆணைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது ஒரு பூடகமான விஷயம். இலைமறைவு; காய் மறைவு. விதியை மீறும் நீதி அழிப்பு. காங்கிரஸ் ஆட்சியிலேயே சென்னையில் வீடுகளை வாடகைக்கு விடும் தீர்மானங்களை அமைச்சர்கள் கையில். பிற்காலம் அது புழக்கடைக்கு வந்தது. எல்லாத்துறைகளிலும் அன்றாட தலையீடுகள் தான் பேயாட்டம் ஆடின. காவலராயினும், ஆசிரியராயினும், குமாஸ்தாவாயினும், பொறியாளராயினும், அந்தந்தத்துறைத்தலைவர்கள் கையாலாகதவர்களாயினர். உயர் அதிகாரிகள் கொள்கை வகுப்பதும், அதற்கு நேரமும், அடிப்படை ஞானமும் இல்லாத நிழல் மனிதர்களும், அவர்களின் கூடாநட்பு கொண்ட அமைச்சர்களும், அன்றாட வரத்துப்போக்குக்களில் விதி மீறி, நீதி தவிர்த்து நடமாடும் காலம் பழுத்தது. அணைகள் பாதுகாப்பையும், அரவணைப்பையும் காலங்காலமாக அந்தந்தத்தலத்தில் பொறுப்பும், பதவியும் வகிக்கும் உதவி பொறியாளர் தான் செய்கிறார் என்பதை தலைமை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.
இனி ஒரு விதியும் அதை வழிமுறை நடாத்தும் நீதியையும் கொணருவோம். மாநிலம் முழுதும் எல்லா பிராந்தியங்களும், நீர்நிலைகளும் பற்றிய முழு உண்மை நிலை, எந்த விதமான கலப்பில்லாமல், அசல் புள்ளி விவரங்களுடன், மெத்த விசாரணையின் அறிக்கையுடன் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். அதற்கு முன்னால், பல விதங்களில் தண்டோரோ போட்டு மக்களின், அதிகாரிகளின், ஆர்வலர்களின் சாக்ஷியம் பெறப்படவேண்டும். அது நேர்காணலில் நடக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணத்தின் வரலாறு வேண்டும். Logging என்ற உடனடி தகவல் பதிவு செய்யப்பட்டதா என்ற விஷயத்துக்கு சத்தியபிரமாணமும் வேண்டும். மற்றபடி சான்றும் வேண்டும். என்ன நிவாரணம் கிடைக்கிறதோ அதை விட, விதி வகுக்கும் திறனும், நீதி வழங்கும் மூதறிஞர்களும் கிடைப்பது தான் தேசத்தின் விதியை நிர்னயிக்கும்.
நீதியில்லையேல் பீதி: நீதியில்லையேல் வீதி; நீதியில்லையேல் மீதியில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://arthamullainiyamanam.files.wordpress.com/2013/05/074sattam.jpg
இன்னம்பூரான்
இன்னம்பூரான்
இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் அவரது பூர்வீகம். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.

அண்ணாகண்ணன் ( அமுதசுரபி மாஜி ஆசிரியர்) wrote on 16 December, 2015, 13:07

ஒரே கட்டுரையில் சிக்கல்களை அலசி, தீர்வுகளை முன்வைத்துள்ளார். இவற்றை நடைமுறைப்படுத்த, திடமான தலைமையுடன் மின்னாளுகை நுட்பங்களைச் சிறப்புறப் பயன்படுத்த வேண்டும்.

Thursday, October 31, 2013

விடாது கருப்பு!

அப்டேட்! லாலுவையும், ஜகுவையும் என்ன செய்யல்லாம்?
இன்னம்பூரான்
31 10 2013

விடாது கருப்பு!

Innamburan S.Soundararajan 11 March 2013 21:57

விடாது கருப்பு!

‘நீதியிடமிருந்து, உயர்பதவியினாலும், அரசியல் ஆதிக்கத்தினாலும் தப்பிக்க முடியாது.’
~ பிரதமர்: 11 03 2013 
விதி வலியது என்பர் சிலர். மதியிழந்தோர் ‘தொப்’ என்று விழுவர் என்பர் சிலர். கதி இது தான், பொய்யும், புனைசுருட்டுமாக வாழ்வோருக்கு, என்பர் சிலர். எது எப்படி இருந்தாலும் நீதி வழுவாது என்பதற்கு ஒரு சான்று, இங்கே.

அவன் (58) அரசியல்வாதி; மக்களிடையே நன்மதிப்பு. தன் கட்சியின் தலைமை தாங்கும் வாய்ப்பு கிட்டக்கூடும். அது மட்டுமல்ல. மின்சக்தித் துறையின் திறன்மிகுந்த அமைச்சர். அவள் (60) பிரபல பொருளியல் நிபுணர். இருபது வருட இல்லற வாழ்க்கையில் ஐந்து குழந்தைகள். ஒளிமயமான வாழ்க்கை எனலாம். எல்லாம் இன்று குப்புறக்கவிழ்ந்தன. குழந்தைகள் பாவம்.

நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்ததற்காக, இன்று எட்டு மாத சிறை தண்டனை அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டது. உடனே பிரசுரமும் ஆகி விட்டது. முதலில் இழைத்த குற்றம்: அவன் 2003ல்  வேகத்தடையை மீறி காரை ஓட்டினான். அது பெரிய குற்றம். உரிமத்தில் பதிவு செய்து விடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் காரோட்டும் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே, மூன்று முறை பிடிபட்டதால், இந்த தடவை கேமராவிடமிருந்து தப்ப முடியாத அவன், அந்த நிமிட சூழ்நிலையை (கேமராவுக்குக் கிடைத்த பிரகாசம் கம்மி.) குறுக்குப் புத்தியுடன் கணித்து, குற்றத்தை மனைவியை ஒத்துக்கொள்ள வைத்தான். அந்த பினாமி பேத்து மாத்து பெரிய குற்றம். அவள் அதை ஒத்துக்கொண்டதும் குற்றம். நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்தக் குற்றம்.  பல வருடங்கள் ஓடோடி போயின. இருவரும் மேலும், மேலும் பிரபலமாயினர்.

கனம் ஸெளத்வார்க் கோர்ட் ஜட்ஜ் ஸ்வீனி அவர்களின் தீர்வு 5 பக்கம் தான். எளிய ஆங்கிலம். சுற்றி வளைத்து ஒன்றும் பேசப்படவில்லை. அதை இணைத்திருக்கிறேன். அவனை (Chris Huhne) பார்த்து அவர் சொன்னது, அவனுக்கு, நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருந்திருக்கும்.

~ ‘நீ குறுக்கு புத்தியுடன் மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் கொடியவன்.’

~ ‘நல்லது என்ன நடந்தது என்றால், உங்கள் இருவரின் மாயாஜாலம் வெட்ட வெளிச்சத்தில் வந்து விட்டது.’

~’ எத்தனை பொய்கள்! ‘

~ ‘துர்பாக்கியம் தான். நீங்கள் இருவரும் நெறி தவறாமல் வாழ்ந்திருந்தால் புகழேணியின் உச்சியில் இருந்திருப்பீர்கள். என் செய்வது? நீங்களே தலையில் மண் வாரி போட்டுக்கொண்டீர்கள்.’
~ ‘நீ உச்சாணிக்கிளைலிருந்து வீழ்ந்து விட்டாய். ஆனால், நீ உன் குற்றத்தை மறைக்காமல் இருந்தால், இந்த நிலைக்கு வந்து இருக்கமுடியாது.’ (நீ அதற்கு லாயக்கு இல்லை.)

~’ செய்த குற்றம் பெரிது. உனக்கு சால்ஜாப்புச் சொல்ல ஒன்றுமே இல்லை.’

அவளை (Vicky Pryce) பார்த்து அவர் சொன்னது, அவளுக்கு இரட்டை தண்டனை. ஏனெனில், அவன் கோர்ட்டுக்கு தன்னுடைய புதிய சிநேகிதியுடன் (Carina Trimingham) வந்திருந்தான்!

~’ நீ சூதுவாது நிறைந்தவள். கணவனுக்கு ஆசைக்கிழத்தி ஒருவள் இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், அவனை பழி வாங்கத்துடித்தாய்.’

~’ஆனால், தன் குற்றத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொண்டு, தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைத்து, நீ போலீசிடம் சொல்லாமல், ஊடகங்களிடம் போனாய்.’

~’ விடாது கருப்பு’ என்பதை அறிந்தும், பேத்து மாத்து செய்தாய்.’

~ முதலில், கணவனுக்காக சட்டவிரோதமாக உதவி செய்ததை நீ பொருட்படுத்த வில்லை. கணவனின் கட்டாயம் என்கிறாய். அது உண்மைக்கு ஒவ்வாத வாதம்.’ 

~’ ஆனால். அவனுடைய ஆசைக்கிழத்தி சமாச்சாரம் உன்னை பழி வாங்கும் பாதையில் இழுத்துச்செல்லும்போது, உன்னையும் மாட்டவைத்துக்கொண்டாய்.

உபரி சமாச்சாரங்கள்:
~ இந்த வழக்கில் அரசு செலவு: £117,558/- அதில் ஓரளவாவது குற்றவாளிகளிடம் வாங்கியிருப்பார்கள் போல. மேலும், £31,000 கேட்கப்போவதாக, போலீஸ் சொல்கிறது.
~ அவனின் கட்சித்தலைமை தண்டனை முடிந்த பின் அவர்களுக்கு நல்ல நேரம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறது.
~ குடும்ப நண்பர் ஓக்ஷாட் பிரபு, ‘இது அவர்கள் இருவருக்கும் பிரத்யேக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு துக்ககரமான சம்பவம்...’ என்றார்.

கொசுறு செய்திகள்:
அவள் பசங்களையே தந்தையை நிந்திக்க வைத்தாள்;
அவனுடைய ஆசைக்கிழத்திக்கு பெண்பாலார் சம்பந்தமும் இருந்தது வெளி வந்தது.
*
சரி. இது இங்கிலாந்து சமாச்சாரம். பொய் சொன்னதுக்காக மற்றொரு பிரபல அமைச்சர் ஜெயிலுக்குப் போனார். தன் சிநேகிதியின் தாதியின் வீசாவை பற்றி தன்னுடைய துறையிலேயே மென்மையாக விசாரித்த அமைச்சருக்கு வேலை போய் விட்டது.

நம் நாட்டில் எழும் வினாக்கள்:

~ சிசுவதை சட்டவிரோதம். ஹரியானா செல்வந்தர்கள் முதல் உசிலம்பட்டி ஏழைகள் வரை இந்த குற்றம். நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ கொத்தடிமை சட்டவிரோதம். செங்கல் சூளைகளிலும், மற்ற வகைகளிலும் நடக்கிறது. நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ சிறாரிடம் வேலை வாங்குவது சட்டவிரோதம். உங்கள் தெருவில் டீக்கடைகளில் காண்பது என்ன?
நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?
~
 இரண்டாம் தாரம் சட்டவிரோதம். அரசு ஊழியம் என்றால் வேலை இழக்க நேரிடும். எத்தனை அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை மீறி, பதவியில் இருக்கிறார்கள்! நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.

இன்னம்பூரான்
11 03 2013
உசாத்துணை:

1633204_efc43155.jpg
102K

sk natarajan 12 March 2013 02:17

சிந்திக்க வைக்கும் பதிவு 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

செல்வன் 12 March 2013 02:28

2013/3/11 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
~ சிசுவதை சட்டவிரோதம். ஹரியானா செல்வந்தர்கள் முதல் உசிலம்பட்டி ஏழைகள் வரை இந்த குற்றம். நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ கொத்தடிமை சட்டவிரோதம். செங்கல் சூளைகளிலும், மற்ற வகைகளிலும் நடக்கிறது. நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ சிறாரிடம் வேலை வாங்குவது சட்டவிரோதம். உங்கள் தெருவில் டீக்கடைகளில் காண்பது என்ன?
நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?
~
 இரண்டாம் தாரம் சட்டவிரோதம். அரசு ஊழியம் என்றால் வேலை இழக்க நேரிடும். எத்தனை அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை மீறி, பதவியில் இருக்கிறார்கள்! நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.

அரசு கம்பனிகள் அனைத்தும் தனியார் மயமானால் தான் இந்த பிரச்சனைகள் தீரும்.

--
செல்வன்

Nagarajan Vadivel12 March 2013 02:45

//அரசு கம்பனிகள் அனைத்தும் தனியார் மயமானால் தான் இந்த பிரச்சனைகள் தீரும்.//
திரும்பவும் மொதல்ல இருந்தா

அமெரிகா தாங்கும் உசிலம்பட்டி உட்பட தமிழ்நாடு தாங்காது
தனியார் மருத்துவம் தலைதூக்கியபின் கருவில் உள்ள பெண்குழந்தையை அழிக்கும் தொழில் கொடிகட்டிப் பறந்தது
நாங்க  தமிழர்கள்
சட்டத்தைச் சட்டப்படி மீறுவது எப்படின்னும் தெரியும்
சட்டவிரோதமான செயலைச் சட்டப்படி செய்யவும் தெரியும்
நாகராசன்

Tulsi Gopal 12 March 2013 03:13

நியூஸிலாந்து நாட்டிலும்  எனக்குத் தெரிஞ்சவரை 'ஏய் நான் யாருன்னு தெரியுமா'ன்னு  சவுண்டு வுட்டுக்கிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து பிரபலங்களு அரசியல் 'வியாதி'களும் தப்பிக்க முடியாது.

சீரியஸ் ·ப்ராடு ஆ·பீஸ்னு ஒண்ணு இருக்கு. அவுங்களுக்கு வேலையே கண்ணுலே விளக்கெண்ணெய்
ஊத்திக்கிட்டுப் பார்க்கறதுதான்.  பாராளுமன்றத்தின் மவொரி இனத்து பெண் அங்கத்தினர், ஒரு குறிப்பிட்ட
செலவுக்காகக் கொடுத்த அரசு நிதியை, தன்னோட உடல் இளைக்கறதுக்கான அறுவை சிகிச்சைக்குச் செலவு
செஞ்சுட்டாங்க. இவுங்களொட அறுவை சிகிச்சையையும், அழகான உடலையும் பாராட்டி, ஒரு பெண்கள்
பத்திரிக்கையில் வந்துச்சு. இது போதாதா? பொதுக் காசைத் தனக்குச் செலவு செஞ்சுக்கிட்டக் குற்றம்
நிரூபிக்கப்பட்டு இப்ப ரெண்டே முக்கால் வருஷம் சிறைதண்டனை கிடைச்சிருக்கு. குற்றத்துக்கு உடந்தையா
இருந்த அவுங்க கணவருக்கு ரெண்டு வருஷம்  ( home detention) ஹ†வுஸ் அரெஸ்ட்.

ஒரு மந்திரி, வீடு மாறிப்போகும்போது அவரோட பூனைகள் ரெண்டை அங்கேயே விட்டுட்டுப்போயிட்டார். 
11 நாள் கழிச்சுத்தான் அதுகளைக் கொண்டு போக வந்தார்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி,
 RSPCA அவர்மேலே மிருகவதைக் குற்றம் சாட்டி அவருக்கு எச்சரிக்கை விட்டுச்சு. இவரே ஒரு சமயம்
குடிச்சுட்டு கார் ஓட்டுனதாக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அடைஞ்சார். இதெல்லாம் மந்திரி பதவியில்
இருக்கும்போது நடந்துச்சு.

பிரதமரின் கார் குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகமாப் போச்சுன்னு போலீஸ் கேஸ் புக் பண்ணினது, கோர்ட்லே
வழக்கு பதிவாகி ஓட்டுனருக்குத் தண்டனையும், உள்ளெ இருந்த பிரதமருக்கு எச்சரிக்கையும் கிடைச்சது.

ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினர் மகளுக்கும், அவுங்க நண்பருக்கும் நண்பரின் காருக்குத் தீவச்சுட்டாங்கன்னு
குற்றம் பதிவாகி தண்டிச்சதுன்னு சிலதைச் சொல்லலாம்.

 பார்லிமெண்ட் அங்கம் ஒருவர் ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்டுட்டு  பணம் கொடுக்காமப் போயிட்டார்ன்னு  ஒரு  குற்றம். கடைசியில் ஃபைன் கட்டினார். 

ஏய்...யாருடா அண்ணன் மேலே  குத்தம் சொன்னது. அடிச்சு நொறுக்குங்கடா  ஹோட்டலைன்னு  ஆங்காரமாக வரும் அடிபொடிகள் இங்கே இல்லாமப்போச்சு பாருங்க:-)))))
2013/3/12 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
விடாது கருப்பு!

‘நீதியிடமிருந்து, உயர்பதவியினாலும், அரசியல் ஆதிக்கத்தினாலும் தப்பிக்க முடியாது.’
~ பிரதமர்: 11 03 2013 

என்றும் அன்புடன்,
துளசி
[Quoted text hidden]

Subashini Tremmel 12 March 2013 05:20

2013/3/12 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
[Quoted text hidden]
இன்னும் கூட இந்தப் பட்டியல் நீளலாம். 

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.
சமுதாயத்தின் நன்மையில் அக்கறை கொண்டோர் குறைவே. சுயநலத்தை மட்டுமே பேணும் சமூகமாக இருக்கும் வரை இன்னமும் பட்டியல் நீளும்.  சிந்தனை  மாற்றம் அடிப்படையில் தேவை.

மதுரையில் ஒரு பேராசிரியரிடமும் தினமலர் பத்திரிகை நிருபரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். இறைவழிபாட்டின் அடிப்படையில் எத்தனை ஏமாற்று வேலைகள் நடக்கின்றன என எங்கள் உரையாடல். நம் அறிவிற்கு நம்ப முடியாத ஒரு விஷயம்.. மதுரையில் ”அயல்நாடு செல்ல உதவி  செய்யும் மாரியம்மன்” என்று ஒரு அம்மன் கோயில் வந்துள்ளதாம். இதற்கு பத்திரிக்கையில் விளம்பரமும் தருகின்றார்கள். ஏமறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவருக்கு பலன் தான் என்ற சூழல். என்ன சொல்வது?

சுபா

இன்னம்பூரான்
11 03 2013
உசாத்துணை:

Innamburan S.Soundararajan 13 March 2013 15:00
To: mintamil@googlegroups.com
நன்றி பல. பேராசிரியர் காஷுவலாக பதில் போட்டிருக்கிறார். அவருக்கு உள்குத்து, ஊமைக்குத்து சமாச்சாரங்கள் நன்றாகவே தெரியும் என்பதால். சுபாஷிணி சொன்னமாதிரி, நமது சமுதாயம், தனது எல்லா பரிமாணங்களிலும், அடிப்படை சிந்தனை மாற்றத்தை அவசரமாக நாடாவிடின், தேசம் குட்டிச்சுவராகி, சரிந்து, உடைந்து விடும். ஒவ்வொருவரும் தன்னை சட்டபரிபாலன வழியில் இயக்கிக்கொண்டால் தான், தலை தப்பும். அது வரை பேசி, பயன் இல்லை. அந்த வழியில் ஒரு சிலராவது கருத்துத் தெரிவித்தால், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கிடையில் டெலீட் சக்கரவர்த்திகள் டெலிட்ட்டு கொம்மாளம் போடலாம்.
இன்னம்பூரான்
13 03 2013

rajam 13 March 2013 15:35
To: "Innamburan S.Soundararajan"

On Mar 13, 2013, at 8:00 AM, Innamburan S.Soundararajan wrote:

நன்றி பல. பேராசிரியர் காஷுவலாக பதில் போட்டிருக்கிறார். அவருக்கு உள்குத்து, ஊமைக்குத்து சமாச்சாரங்கள் நன்றாகவே தெரியும் என்பதால். சுபாஷிணி சொன்னமாதிரி, நமது சமுதாயம், தனது எல்லா பரிமாணங்களிலும், அடிப்படை சிந்தனை மாற்றத்தை அவசரமாக நாடாவிடின், தேசம் குட்டிச்சுவராகி, சரிந்து, உடைந்து விடும். ஒவ்வொருவரும் தன்னை சட்டபரிபாலன வழியில் இயக்கிக்கொண்டால் தான், தலை தப்பும். அது வரை பேசி, பயன் இல்லை. அந்த வழியில் ஒரு சிலராவது கருத்துத் தெரிவித்தால், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கிடையில் டெலீட் சக்கரவர்த்திகள் டெலிட்ட்டு கொம்மாளம் போடலாம். 

ஆகா, அப்படியே செய்துவிடலாமே!! :-) உங்கள் அனுமதியும் கிடைத்துவிட்டது! :-)

Innamburan S.Soundararajan 13 March 2013 15:40
To: rajam
ஒரு திருத்தம். டெலீட் மஹராஜிகளும்.

rajam 13 March 2013 15:48

பின்னே, மஹாராஜிகள் இல்லாமெ கொம்மாளம் போடமுடியுமா?!!! 

Monday, March 11, 2013

விடாது கருப்பு!

விடாது கருப்பு!
1 message

Innamburan S.Soundararajan Mon, Mar 11, 2013 at 9:57 PM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com