Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, October 23, 2013

சிறுகதை இலக்கியமும் விமர்சனமும்: 3




சிறுகதை இலக்கியமும் விமர்சனமும்: 3


Innamburan Innamburan Tue, Dec 4, 2012 at 6:08 PM



சிறுகதை இலக்கியமும் விமர்சனமும்: 3
அப்டேட்: 23 10 2013:
பத்மாவதி சரித்திரம் & சாஸ்தாப் பிரீதி
இன்னம்பூரான்

''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''
~ சிறு கதை இலக்கியம்  பாதரசம் தடவிய கண்ணாடி. காலாவட்டத்தில் அங்குமிங்கும் பாதரசம் கலைந்து இருந்தாலும், கீறல்கள் விழுந்திருந்தாலும், பிரதிபலிப்பு இருக்கத்தான் செய்கிறது. தனிமனிதரையும் பிரதிபலிக்கலாம். சமுதாயத்தையும் பிரதிபலிக்கலாம். அதன் ஒரு பிரிவை மட்டும் பிரதிபலிக்கலாம். ஆக மொத்தம் கற்பனையின் ஆணிவேர், நிஜம். பனங்காட்டு நரியை பற்றி படித்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். பார்க்கலாம்.
இன்னம்பூரான்
02 012 2012
*
என் சிந்தனை: எதை எழுதுவது? எதை விடுவது? கதையை இணைத்து, அதை விமரிசிப்பதா? அல்லது கதாசிரியரின் பாமர கீர்த்தியை எழுதுவதா? அவருடைய வம்சத்தின் கீர்த்தி எழுதுவதா? என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதா? எல்லாம் செய்ய வேண்டியது தான். ஒரு சிறிய அறிமுகம்.
*

சிறுகதை இலக்கியமும் விமர்சனமும்: 3.1


அன்றொரு நாள் நண்பரொருவர் கேம்ப்ரிட்ஜிலிருந்து வந்திருந்தார். சிறிது நேரம் அளவளாவிய பின்னர் அவர் தமிழ் புதின படைப்பாளர்களில் மூத்த சிற்பியான அ.மாதவையாவின் பேரன் என்று தெரிய வந்தது. ‘அன்றொருநாள்’ தொடரில் அக்டோபர் 22, 2012 அன்று நான் அ.மாதவையாவை பற்றியும், அவரது புகழ் வாய்ந்த மைந்தர்கள் திரு. மா. அனந்தநாராயணன், திரு. மா.கிருஷ்ணன்  பற்றியும், மாதவையாவின் அண்ணனின் மைந்தனும், பிரபல எழுத்தாளரும் ஆன பெ.நா. அப்புசாமி பற்றியும் எழுதியதை சொன்னேன். அதை படித்து மனமகிழ்ந்த அவர், ஒரு தவறை சுட்டிக்காட்டினார். ‘அ.மாதவையா எழுதியது கமலாம்பாள் சரித்திரம் அல்ல. பத்மாவதி சரித்திரம் என்றார். சரி தான். ஆனால் பாருங்கள். என்னுடைய ஸ்லிப் ஆஃப் தெ டங்க் ஒரு ஆருடம் போல அமைந்துவிட்டது என்று வந்த விருந்தாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் தெரிய வந்தது. அந்த புதிரை பிறகு அவிழ்க்கலாம்! 
தற்காலிகமாக ‘கடெப்ஸில்’ (தேக்கம்) கிடக்கும் ‘தமிழார்வம்’ தொடரில் தற்கால புதுமை உரைநடையை பற்றி எனக்கும் ராஜத்துக்கும் கருத்துப் பரிமாற்றம் இருந்தது. சிலப்பதிகாரத்திலேயே உரைநடை இருந்தது. எனினும், தற்காலத்து புதுமை தமிழ் உரை நடை இலக்கியங்களில் புதின/சிறுகதை உரை நடைக்கு வித்திட்டவர்கள் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா, பி.ராஜம் ஐயர்.  கலைமகள் (மார்ச் 1979) இதழில் அ.மாதவையா அவர்களை பற்றிய கட்டுரையில், பெ.நா. அ. அவர்கள் சொல்கிறார் (அது ஆங்கிலத்தில், மா.கிருஷ்ணனின் சொற்களில் தான் எனக்குக்கிடைத்தது. அதனுடைய தமிழாக்கம்.):
‘தற்காலம் (1900 -2000) வரை உரைநடை இலக்கியம் தமிழில் இல்லை. அதை படைத்ததில் அ.மாதவையாவுக்கு பெரும்பங்கு உண்டு. அவர் தற்கால தமிழ் இலக்கிய உரைநடைக்கு முன்னோடி. காலம், இடம், மொழி இவைகளுக்கு அப்பால், இலக்கிய படைப்பாளர்களுக்கு ஆர்வமும், அதீத ஒப்புமையும் இருக்கக்கூடும். அ.மா. அவர்களின் உரை நடைக்கும் தாக்கரே என்ற ஆங்கில புதின படைப்பாளருக்கும் ஒப்புமை காணக்கிடைக்கிறது.’ 
பெ.நா.அப்புசாமியின் துணை எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. ராஜம் சொன்னது போல ஒவ்வொருவருக்கும் அவரவர் பாணி. திரு.வி.க. அவர்கள் இரு உரை நடைகளை மாற்றி, பாமரனுக்காக மூன்றாவது உரை நடை பயின்றார். இது நிற்க. 
பாமரகீர்த்தி எழுதுவதா? இலக்கியத்தைப் பகிர்ந்து கொண்டு விமர்சனம் செய்வதா? இரண்டும் வேண்டும். ஏனெனில், அ.மாதவையா ஒரு ஆதர்ஷ மனிதராக வாழ்ந்தார். ஒரு நிகழ்வை மட்டும் சொல்லி விட்டு, ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''க்குப் போகிறேன்.
அரசு பதவியிலிருந்து முன்னதாக ஓய்வு பெற்று, பென்ஷன் முழுதையும் ஒரே தவணையில் ( கம்யுடேஷன்) பெற்றுக்கொண்டு சொந்த ஊரில் பெருங்குளம் ஹவுஸ் என்று தன் இல்லத்தை அமைத்துக்கொண்டு, ஒரு குடிலில் அச்சகம் அமைத்து ‘பஞ்சாமிருதம்’ என்ற தமிழ் இலக்கிய இதழை நடத்தி வந்தார். 1925ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாளில் , பிற்பகல் 3:30 மணிக்கு மதராஸ் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில், தமிழைப் பயிற்று மொழியாக வைக்க வேண்டும் என்று பேசி முடித்து உட்கார்ந்த இருக்கையிலேயே, மூளை ரத்தநாள வெடிப்பால் உயிர் துறந்தார் மாதவய்யா.‘
இனி ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''. அந்தக்காலத்துக் கதையாயினும் சமுதாயத்தைக் காட்டமாக விமரசிக்கும் இந்தக்கதையை பற்றி, மற்றவர்களின் கருத்துக்கிடைக்குமானால், என் விமரிசனத்தைப் பிறகு எழுதுகிறேன். இல்லையானாலிம், அடுத்த இழையில்.
இன்னம்பூரான்
04 12 2012
*
சாஸ்தாப் பிரீதி-அ.மாதவையா

செங்கோட்டைக்கும் கொல்லத்துக்கம் இடையிலே, தென்னிந்தியா இருப்புப்பாதை சுமார் இருபது மைல் நீளத்துக்கு, குறிஞ்சி நிலத்தை ஊடுருவிச் செல்கின்றது. அந்தப் பிரதேசம், மலைவளத்திலும் இயற்கைக் காட்சியின் வனப்பிலும், இத்தேசமெங்குமே இணை எதிர் இன்றிச் சிறந்ததாகும். நெடுகவே பலவளஞ் செறிந்து விளங்கும் மேற்குமலைத்தொடர், இப்பாகத்திலே கண்கவர் அழகுடன் செல்வவளமும் மலிந்து,

சந்தனமரம், தேக்குமரம், காப்பிக்கொட்டை, தேயிலை, சாதிக்காய், ஏலக்காய், மிளகு, கிராம்பு முதலிய பல்வேறு பொருள்களை விளைவிக்கும் குளிர்ந்த பசிய சோலைகளுடன் பொலியாநிற்கும். மெதுவாகவே செல்லும் ரயில்வண்டியிலிருந்து இருபுறமும் மலைக்காட்சியைக் காண மனோகரமாயிருக்கும். சில சமயங்களில் காட்டுயானைகள் அங்கே வருவதுண்டு. இப்பாதையிலுள்ள ஆரியன் காவு என்னும் ஸ்தலம் மிகவும் அழகானது. அதன் சமீபத்தில் ரயில் வண்டி சற்றேறக்குறைய மூவாயிரம் அடி தூரத்துக்கு மலையை ஊடுருவித் தோண்டியுள்ள குகைமார்க்கமாகச் செல்கின்றது. ஆயின் நம்கதை நிகழ்ந்த காலத்திலே, குகைவழியும் இல்லை, ரயிலும் இல்லை. அந்தப் பிரதேசத்துக்கு ரயில் வந்து கொஞ்சகாலம்தான் ஆகிறது. ஆரியன் காவு என்னும் பெயர், அங்குள்ள ஆரியன், ஐயன், ஹரிஹரபுத்திரன் என்னும் சாஸ்தாவின் கோயிலை ஒட்டி வந்தது.
அசுரர்கள் அமிர்தத்தைப் பானஞ் செய்து நித்தியத்துவம் பெற்றுவிடாதபடி, அவர்களை ஏமாற்றும் பொருட்டு, மகாவிஷ்ணு மோகினி அவதாரமெடுத்த பொழுது, அந்த மோகினிக்கும் பரமசிவனுக்கும் ஹரி ஹர புத்திரன் உற்பவித்த புராண கதையைப் பலர் அறிந்திருக்கலாம். காட்டு யானைகள் சஞ்சரிக்கும் வனப்புமிக்க அம் மலைப்பாங்கிலே, அந்த ஹரிஹர புத்திரர் கோயில்கொண்டு வாழ்வதும், வர்ண பேதமின்றிப் பல்லாயிரம் பக்தர்கள் அவரை வழிபட்டுக் கொண்டாடுவதுமே, நம் கதையைச் சார்ந்த விஷயங்களாகும். திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து செங்கோட்டை - கொல்லம் வழியாக மலையாளம் செல்லும் பிராமணப் பிரயாணிகளுக்கு, ஆரியன் காவில் மலையாளத்து மகாராசா ஏற்படுத்தியிருக்கும் ஊட்டுப்புரை, வழித்தங்கலுக்கு வசதியான இடம். ஆகவே, ஆண்டாண்டுதோறும் அக்கோயிலில் நடக்கும் சாஸ்தாப் பிரீதி என்னும் விசேஷச் சடங்குக்கும் விருந்துக்கும், பிராமணர்கள் திரள் திரளாகக் கூடுவதுண்டு. பிரக்கியாதி பெற்ற சாஸ்தாவின் தரிசன மகிமையும், அன்று நிகழும் விருந்துச் சாப்பாட்டின் சிறப்பும் யாவரும் அறிந்தனவே. செல்வச் சுருக்கமும் சீரண சக்திப் பெருக்கமும் ஒருங்கே வாய்ந்து, ஆங்காங்குள்ள பல புண்ணியஷேத்திரங்களைச் சென்று தரிசித்து, அவ்வவ்விடங்களில் ஏற்பட்டிருக்கும் ஊட்டுப்புரை, சத்திரம், கோயில்களில் பணச்செலவின்றி வயிறுபுடைக்க உண்டுகளித்து, தாம் கண்ட பற்பல தெய்வங்களின் ஏற்றத்தாழ்வையும் வரசக்திகளையும் பற்றிக் கதைபேசியும் வாதாடியும் ஒருநாள்போலப் பல நாளையும் ஆண்டுகளையுங் கழிக்கும் பிராமணோத்தம கோஷ்டிகள் எல்லாம், கிழக்கேயுதிக்கும் ஞாயிறு மேற்கே உதிக்கினும், ஆரியன் காவு சாஸ்தாப் பிரீதியன்று, அங்கு கூடாதொழியார். இத்தகைய கோயில் பெருச்சாளிகளின் யதார்த்தமான தெய்வ பக்தியும் விசுவாசமும் ஆழ்ந்து பரிசோதிக்கத் தக்கதன்று. ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''
ஆரியன் காவில் அன்று சாஸ்தா பிரிதி. மணி பன்னிரண்டாகிவிட்டது. வெயில் கடூரமாய் இருந்தது. இலை அசங்கவில்லை. மேற்குத் திக்கிலிருந்து வரும் இரண்டு பிராமணர், ஆரியன் காவை நோக்கி மூச்சிழைக்க நடந்து வந்துகொண்டிருந்தார்கள். மலையேற்றம் அதிகம் இல்லை. ஆனால் தொந்திகளின் பெருமையினால், அவர்கள் வியர்த்து விருவிருத்து, வாய்திறந்து மூச்சு விட்டு, வெகு சிரமத்துடன் நடந்து வந்தார்கள். கோயில் இன்னும் அரை மைலுக்கு மேலிருக்கும். பொழுதாகி விட்டது. ஆகவே அவர்கள் இயன்றமட்டும் அவசரமாக நடந்தார்கள். கடைசியில் ஆரியன் கோயிலை அடைந்தவுடன், அவர்களில் ஒருவர் களைப்புற்று, குளத்தின் கரையில் கீழே விழுந்துவிட்டார். மற்றவர் பரபரப்பாய் விசாரித்ததில், இன்னும் சடங்கு முடியவில்லை, அவர்கள் வந்தது நல்ல சமயந்தான் என்று தெரிய வரவே, களைப்புற்றவரைத் தேற்றி, அவசரப்படுத்திக் கையுதவினார். பின்பு, இருவரும் வேகமாய் நீராடி, சந்தியாவந்தன ஜபங்களை முடித்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழைந்தார்கள். பழைய பெருச்சாளிகளாகிய அவர்களுக்கு, எங்கே உட்கார்ந்தால் நல்ல சாப்பாடு போதுமானபடி கிடைக்கும் என்பது தெரியும். ஆனால், கோயிலில் கூட்டம் அதிகமாயும், இவர்கள் உட்கார உள்ளங்கை யகலமுள்ள இடம் கிடைப்பதும் அரிதாயுமிருந்தது. யாவரும் சளசளவென்று பேசிக்கொண்டு மிருந்தனர். விருந்துச் சமையல் முடிந்து, சாஸ்தாவின் பூசையும் முடிந்தாய்விட்டது. ஆயின், வழக்கம்போல், ஐயன் இன்னும் எவர்மேலும் ஆவேசமாகி வந்து பிரசன்னமாகி, தான் திருப்தி யடைந்ததை வெளியிட்டு, பிரசாதம் கொடுக்கவில்லை. அதன்பொருட்டு எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர். கோயிலில் வெளிப் பிராகாரத்துக்குள் ஒரு நாய் வந்துவிட்டது. அதனால் பூஜையும் விருந்தும் அசுத்தமாகி விட்டது. அதனால்தான் ஐயனுக்குக் கோபம், என்றார் சிலர். சிலர், வந்தது பூனைதான், நாய் இல்லை, அதனால் அசுத்தமில்லை, என்றனர். வேறு சிலர், கோயில் சுயம்பாகிகளில் ஒருவன் கையில், ஒரு நாயர் ஸ்திரீஒரு முறத்தைக் கொடுக்கும்பொழுது அவள் கை அவன்மேல் பட்டும், அவன் ஸ்நாநம் செய்யாமல் மடைப்பள்ளியில் வேலை செய்ததனால்தான் ஐயனுக்குக் கோபம் என்றனர். பின்னும் சிலர், ஊட்டுப்புரைகளிற் சிலவற்றை அடைத்துவிடுவது என்ற திருவாங்கூர் சமஸ்தானத்தாரின் யோசனைதான், தீன தயாளுவாகிய ஐயனது கோபத்துக்குக் காரணமென்றனர். இவ்வாறாக, பலர் பலவண்ணம் கூக்குரலிட்டு வாதாடிக் கொண்டிருப்பினும், எங்கே இடம் போய்விடுமோ என்ற பயத்தினால், ஒவ்வொருவரும், தத்தம் ஸ்தானத்திலேயே நிலையாயிருந்தனர். ஆகவே, இரட்டையிரட்டை வரிசைகளாய் உள்ள பந்திகளினூடே, நூதனமாய் வந்த பிராமணர் இருவரும், திரிந்து திரிந்து பார்த்தும், அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயத்தில், முன்பு களைப்புற்றுக் கீழே விழுந்தவரும் இப்பொழுதுகொடும் பசியினால் வருந்திக் கொண்டிருப்பவருமான கிருஷ்ணையருக்கு, முரட்டு யுக்தி ஒன்று தோன்றிற்று. உடனே அவர், தன் நண்பர் இராமையர் காதில் அதை ஊதினார். கசுகசுவென்று இருவரும் சில நிமிஷம் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு, ஆபத்துக்குப் பாவமில்லை யென்று நினைத்தோ, அல்லது சாகத் துணிந்து விட்டால் சமுத்திரம் முழங்கால் என்று எண்ணியோ, தங்கள் குயுக்தியை நிறைவேற்றத் துணிந்துவிட்டனர்.
பூசை முடிந்து ஒருமணி நேரமாய் விட்டது. பூசாரி நைவேத்யஞ் செய்த தேங்காய் பழம் முதலிய பிரசாதங்கள், அப்படியே திரள் திரளாய் இருந்தன. மூச்சு முட்டும்படி, பூசையறை, தூப தீபங்களால் நிறைந்திருந்தது. நாவில் நீரூறும்படி மணக்க மணக்கச் செய்து வைத்திருந்த போஜன பதார்த்தங்களெல்லாம், ஆறிக்கொண்டிருந்தன. பிராமணப் பாடகர்கள் மூவர், ஐயனது திவ்ய மங்கள குணங்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர். ஐயன் மனமிரங்கி, இன்னும் எவர்மேலும் ஆவேசமாகிப் பிரசன்னமாக வில்லை. எல்லாருக்கும் அலுப்பும் பசியும் அதிகரித்துக் கொண்டிருந்தன. இங்கனமிருக்கும் பொழுது, அதோ அந்த பிராமணரைப் பாருங்கள்! அவர் தொந்தியினும் பருத்த தொந்தி அங்கு எவருக்குமில்லை. ஒரு தூணிற் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு, இராமையரால் அணைக்கப்பட்டு, கிருஷ்ணையர் உடலெல்லாம் உதறி நடுங்கினார். முதலில் ஒருவரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆயின், அடுத்த நிமிஷத்தில் ''அதோ ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வந்துவிட்டான்!'' என்ற சந்தோஷகரமான பேரொலி கோயிலெங்கும் முழங்கிற்று. பாடகர்கள் தங்களுக்கெட்டிய மட்டும் உயர்ந்த குரலில் ஐயனைப் புகழலானார்கள். ஐயனது ஆவேசத்தைப் பார்க்கும் வண்ணம், பலர் எழுந்து வந்தனர். தாசிக்குத் தண்ணீர்க் குடத்திற் கண், என்னும் மூதுரை விளங்க, அங்ஙனம் எழுந்து வந்தோரெல்லாம், தத்தம் ஸ்தானத்திலே மேல்வேஷ்டியோ, துண்டோ, போட்டுவிட்டே வந்தனர். ''உவாய்! உவாய்! உவாய்!'' என்று, அப்பெரு முழக்கமும் அடங்கும்படி கர்ச்சித்தார் கிருஷ்ணையர். இப்பொழுது பார்த்தால், சற்று நேரத்துக்கு முன், மலையேறி வருவதில் மூச்சிளைத்துக் களைத்து விழுந்தவர் இவர்தானோ என்று சந்தேக முண்டாகும். ஐயன் உள மகிழ்ந்து ஆவேசங் கொண்ட மகா புருஷனை, பிரதானிகரான ஐந்தாறு பிராமணர்கள் சூழ்ந்து, அணைத்துப் பிடித்து, பூசையறைக்குள் ஐயன் சந்நிதிக்கு மெதுவாகக் கொண்டு சென்றனர். கிருஷ்ணையரோ, கண்மூடி, கால்களை உதறிக்கொண்டு, பிரக்ஞையின்றி, வலிப்புற்றவர் போலவே இன்னும் தோன்றினார். பூசையறைக்குள், சந்நிதிக்கும் பிரசாதங்களுக்கும் நடுவே, ஒரு பலகையின் மேல் அவரை உட்கார வைத்தனர். அப்பொழுது, அவர், வெறியயர்ச்சியின் வேகம் சற்று தணிந்து, பலகையி லிருந்தபயே சுழன்று, ஆடலானார். மற்றவர்கள், கைகட்டி, வாய்புதைத்து, வெகு வணக்கத்துடனும் மரியாதையுடனும் திருவுளக் கருத்தை விசாரிக்கலாயினர். ''சுவாமி! ஐயனே! உன் குழந்தைகள் நாங்கள். ஒன்றும் அறியாதவர். உன்னைத் தவிர வேறு கதியில்லை. தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் ஏதாவது செய்துவிட்டால் நீயே பொறுத்தருள வேண்டும். தன் பிள்ளைகளுக்கு வேண்டிய புத்தி சொல்லி அவர்களைத் திருத்துவது, தந்தையின் கடமை யன்றோ? எங்கள் ஐயனாகிய நீயே கோபம் கொண்டுவிட்டால், நாங்கள் மற்றென் செய்வோம்? நீ என்ன உத்திரவு கொடுத்தாலும் நாங்கள் செய்யச் சித்தமா யிருக்கிறோம். ஏழைகளாகிய எங்கள்மேல் இரங்க வேண்டும். உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கதி யார்?''
இவ்வாறு பிராமணர் வருந்தி வேண்டிக் கொண்டதை ஒருசிறிதும் கவனியாது, ஐயன் ஆடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, இராமையர் சிறிது கோபத்துடன், ''சுவாமி! இது தர்மமா? வெகு தூரத்திலிருந்து உன் கியாதியைக் கேள்வியுற்றுத் தரிசிக்க வந்த பிராமணோத்தமர்க ளெல்லாம், மிக்க பசியுடன் உன் உத்திரவை எதிர்பார்த்து நிற்கின்றனர். சூரியனும் அஸ்தமிக்க லாயிற்று. அவர்கள் மேல் உனக்கு இரக்கமில்லையா? பிரசாதத்தை அநுக்கிரகஞ் செய்து, பிராமண போஜனம் மேல் நடக்கும்படி உத்திரவு செய்ய மாட்டாயா? இவ்வளவு ஆலசியம் போதாதா?'' என்று சொன்னார்.
உடனே ஐயன், ''உவாய்! உவாய்! உவாய்!'' என்று மறுபடியும் ஓலமிட்டு, தன் இரு கைகளையும் கீழே ஓங்கி அறைந்து, ஆவசத்தின் உக்கிரக மத்தியிலே, பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளினான். ''பிராமணர்கள் - பிராமணர்கள் - பட்டினியே - பட்டினியே - கிடந்தால் - என் பிசகா? என் பிசகா? உங்கள் பிசகுதான்! உங்கள் பிசகுதான்! ஆம்! முக்காலும் மூன்று தரம் உங்கள் பிசகுதான்! அதற்கு - நீங்கள் - பிரசாயச் சித்தம் - பிராயச் சித்தம் - செய்தாலன்றி - எனக்கு - திருப்தியாகாது. நான் போகவும் மாட்டேன். செய்கிறீர்களா? சொல்! செய்கிறீர்களா?'' உடனே ஊட்டுப்புரைக் கணக்கர் எதிரே வந்து, என்ன அபராதம் விதித்தாலும் தான் தண்டமிறுக்கச் சித்தமாயிருப்பதாகச் சொல்லி, மேல் உத்திரவை வேண்டினார்.
''இந்தப் பிராமணாள் - இந்தப் பிராமணாள் - ஒவ்வொருவருக்கும் - கூட ஒவ்வொரு சக்கரம் - அதிக தக்ஷணை - அதிக தக்ஷணை - கொடுக்க வேண்டும். கொடுக்கிறாயா? - கொடுக்கிறாயா?''
''சுவாமி! உத்திரவுப்படியே கொடுக்கிறேன்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.
''அந்தப் பரிசாரகப் பயல் - அந்தக் கொலைபாதகப் பயல் - அச்சியை - ஒரு சூத்திர ஸ்திரீயை - தொட்டுவிட்டு - குளியாமல் - என் மடைப்பள்ளிக்குள்ளே - இருந்த பயல் - கொண்டு வா அவனை இங்கே! கொண்டு வா இந்த நிமிஷம்!''
உடனே ஐந்தாறு பேர் கோயில் மடப்பள்ளிக்கும் மற்றப் பாகங்களுக்கும் சென்றோடிப் பார்த்தனர். ஆனால் அந்தக் 'கொலை பாதகப் பயல்' அகப்பட வில்லை.
''சுவாமி! அவன் ஓடிப்போய் விட்டான்'' என்றார் ஊட்டுப்புரை அதிகாரி.
''பிழைத்தான்! பிழைத்தான் இந்த விசை! இல்லாவிட்டால் அவனை - இல்லாவிட்டால் அவனை! - நல்லது - சவம் போகிறான் - இனிமேல் அவன் என் வேலை செய்ய வேண்டாம். என் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டாம், அந்தப் பயல்.''
''சுவாமி! ஆக்ஞைப்படி அவனை நீக்கி விடுகிறேன்'' என்றார், ஊட்டுப்புரை அதிகாரி.
பின்பு, பஜனமாகவோ, நோன்புக் கடனாகவோ, வந்திருந்த சிலர், தங்கள் தங்கள் முறைபாடுகளை ஐயனிடம் தெரிவித்துக் கொண்டனர். அவர்களில் இரண்டொருத்தருக்கே அநுகூலமான உத்திரவு கிடைத்தது. சிலர் மறுபடியும் வரும்படி உத்திரவு பெற்றார்கள். சிலர்க்கு உத்திரவு கிடைக்கவில்லை. விபூதியும் பிரசாதங்களும் கை நீட்டியவருக்கு ஐயன் உதவியபின், ஆவேசம் ஓய்ந்து முடிந்தது. மற்றவர் அப்பொழுது கவனியாவிட்டாலும், நாம் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்றும் நிகழ்ந்தது. பிரசாதம் பெற்றவர் பெரும்பாலார்க்கும், ஒரு வாழைப்பழமோ, ஒரு மூடித் தேங்காயோ, சிறிது விபூதியோ, இரண்டொரு புஷ்பமோதான் கிடைத்தது. நிற்க. ஆனால், இராமையர் பாகத்துக்கு மட்டும் ஏழெட்டுத் தேங்காய் மூடிகளும், இருபது முப்பது பழங்களும் கிடைத்தன. ஐயனாரின் ஆவேசப் பாத்திரமாகிய கிருஷ்ணையரும், அவர் நண்பர் இராமையரும், அக்கிர ஸ்தானங்களில் மணைகளின் மேல் வீற்றிருந்து, கோயில் அதிகாரிகளால் மிக்க மரியாதையுடன் உபசரிக்கப்பட்டு, திருப்தி போஜனம் செய்தனர். சாப்பாடான பின், ஊட்டுப்புரை அதிகாரியே அவர்களுக்குச் சந்தனாபிஷேகம் செய்து, ஜோடி தாம்பூலமும், வேசேஷ தக்ஷிணையும் உதவினார்.
---------------------------------------------------
மாதவையாவின் 'குசிகர் குட்டிக் கதைகள்' தொகுதியில் இருந்து பெறப்பட்டது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன் எழுதிய கதை. கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்த கதைகள் தந்த மாதவையாவைப் பற்றி கண்டனம் தெரிவித்த 'தி இந்து' நாளிதழ், ஒரே வருடத்தில், தானே முன்வநது தன் நாளிதழில் கதைகளை ஆங்கிலத்தில் எழுத அவரை வேண்டிக் கொண்டது.
உசாத்துணை & நன்றி:
தொகுத்தளித்த அழியாச்சுடர்கள்:
சித்திரதத்துக்கு நன்றி: http://www.noolulagam.com/book_images/840.jpg


shylaja Wed, Dec 5, 2012 at 1:07 AM



2012/12/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>


சிறுகதை இலக்கியமும் விமர்சனமும்: 3
''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''

~ சிறு கதை இலக்கியம்  பாதரசம் தடவிய கண்ணாடி. காலாவட்டத்தில் அங்குமிங்கும் பாதரசம் கலைந்து இருந்தாலும், கீறல்கள் விழுந்திருந்தாலும், பிரதிபலிப்பு இருக்கத்தான் செய்கிறது./
>>>>
ஆஹா என்ன அழகான  வரிகள்!  பாதரசம்  மங்கினாலும்  கண்ணாடிக்கு  பார்வை மங்காது..  உயிர் இருக்கிறவரை புறம் காட்டிவிடும்!  உண்மைதான்.

தனிமனிதரையும் பிரதிபலிக்கலாம். சமுதாயத்தையும் பிரதிபலிக்கலாம். அதன் ஒரு பிரிவை மட்டும் பிரதிபலிக்கலாம். ஆக மொத்தம் கற்பனையின் ஆணிவேர், நிஜம். பனங்காட்டு நரியை பற்றி படித்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்து விட்டேன். பார்க்கலாம்.
இன்னம்பூரான்
02 012 2012
*
என் சிந்தனை: எதை எழுதுவது? எதை விடுவது? கதையை இணைத்து, அதை விமரிசிப்பதா? அல்லது கதாசிரியரின் பாமர கீர்த்தியை எழுதுவதா? அவருடைய வம்சத்தின் கீர்த்தி எழுதுவதா? என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதா? எல்லாம் செய்ய வேண்டியது தான். ஒரு சிறிய அறிமுகம்.
*

சிறுகதை இலக்கியமும் விமர்சனமும்: 3.1


அன்றொரு நாள் நண்பரொருவர் கேம்ப்ரிட்ஜிலிருந்து வந்திருந்தார். சிறிது நேரம் அளவளாவிய பின்னர் அவர் தமிழ் புதின படைப்பாளர்களில் மூத்த சிற்பியான அ.மாதவையாவின் பேரன் என்று தெரிய வந்தது. ‘அன்றொருநாள்’ தொடரில் அக்டோபர் 22, 2012 அன்று நான் அ.மாதவையாவை பற்றியும், அவரது புகழ் வாய்ந்த மைந்தர்கள் திரு. மா. அனந்தநாராயணன், திரு. மா.கிருஷ்ணன்  பற்றியும், மாதவையாவின் அண்ணனின் மைந்தனும், பிரபல எழுத்தாளரும் ஆன பெ.நா. அப்புசாமி பற்றியும் எழுதியதை சொன்னேன். அதை படித்து மனமகிழ்ந்த அவர், ஒரு தவறை சுட்டிக்காட்டினார். ‘அ.மாதவையா எழுதியது கமலாம்பாள் சரித்திரம் அல்ல. பத்மாவதி சரித்திரம் என்றார். சரி தான். ஆனால் பாருங்கள். என்னுடைய ஸ்லிப் ஆஃப் தெ டங்க் ஒரு ஆருடம் போல அமைந்துவிட்டது என்று வந்த விருந்தாளி கொடுத்த தகவலின் அடிப்படையில் தெரிய வந்தது. அந்த புதிரை பிறகு அவிழ்க்கலாம்! >>>>>>

சீக்கிரம் சீக்கிரம் என்ன புதிரென தெரியவேண்டு  இ சார்!



தற்காலிகமாக ‘கடெப்ஸில்’ (தேக்கம்) கிடக்கும்>>>

கடெப்ஸ்? தமிழா  தங்கிலீஷா? என் மாமியார்  சொல்வார்  கிட்டக்க இருக்கற  கடை என்பதை  தான் ஆங்கிலம் கலந்துபேசுவதாக நினைத்து,’கிட்டன்ஸ்ல  இருக்கற கடை’ என்று அப்படியா  இந்த சொல்? 

‘தமிழார்வம்’ தொடரில் தற்கால புதுமை உரைநடையை பற்றி எனக்கும் ராஜத்துக்கும் கருத்துப் பரிமாற்றம் இருந்தது. சிலப்பதிகாரத்திலேயே உரைநடை இருந்தது. எனினும், தற்காலத்து புதுமை தமிழ் உரை நடை இலக்கியங்களில் புதின/சிறுகதை உரை நடைக்கு வித்திட்டவர்கள் முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா, பி.ராஜம் ஐயர்.  கலைமகள் (மார்ச் 1979) இதழில் அ.மாதவையா அவர்களை பற்றிய கட்டுரையில், பெ.நா. அ. அவர்கள் சொல்கிறார் (அது ஆங்கிலத்தில், மா.கிருஷ்ணனின் சொற்களில் தான் எனக்குக்கிடைத்தது. அதனுடைய தமிழாக்கம்.):
‘தற்காலம் (1900 -2000) வரை உரைநடை இலக்கியம் தமிழில் இல்லை. அதை படைத்ததில் அ.மாதவையாவுக்கு பெரும்பங்கு உண்டு. அவர் தற்கால தமிழ் இலக்கிய உரைநடைக்கு முன்னோடி. காலம், இடம், மொழி இவைகளுக்கு அப்பால், இலக்கிய படைப்பாளர்களுக்கு ஆர்வமும், அதீத ஒப்புமையும் இருக்கக்கூடும். அ.மா. அவர்களின் உரை நடைக்கும் தாக்கரே என்ற ஆங்கில புதின படைப்பாளருக்கும் ஒப்புமை காணக்கிடைக்கிறது.’ 
பெ.நா.அப்புசாமியின் துணை எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. ராஜம் சொன்னது போல ஒவ்வொருவருக்கும் அவரவர் பாணி. திரு.வி.க. அவர்கள் இரு உரை நடைகளை மாற்றி, பாமரனுக்காக மூன்றாவது உரை நடை பயின்றார். இது நிற்க. 
பாமரகீர்த்தி எழுதுவதா? இலக்கியத்தைப் பகிர்ந்து கொண்டு விமர்சனம் செய்வதா? இரண்டும் வேண்டும். ஏனெனில், அ.மாதவையா ஒரு ஆதர்ஷ மனிதராக வாழ்ந்தார். ஒரு நிகழ்வை மட்டும் சொல்லி விட்டு, ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''க்குப் போகிறேன்.
அரசு பதவியிலிருந்து முன்னதாக ஓய்வு பெற்று, பென்ஷன் முழுதையும் ஒரே தவணையில் ( கம்யுடேஷன்) பெற்றுக்கொண்டு சொந்த ஊரில் பெருங்குளம் ஹவுஸ் என்று தன் இல்லத்தை அமைத்துக்கொண்டு, ஒரு குடிலில் அச்சகம் அமைத்து ‘பஞ்சாமிருதம்’ என்ற தமிழ் இலக்கிய இதழை நடத்தி வந்தார். 1925ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாளில் , பிற்பகல் 3:30 மணிக்கு மதராஸ் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில், தமிழைப் பயிற்று மொழியாக வைக்க வேண்டும் என்று பேசி முடித்து உட்கார்ந்த இருக்கையிலேயே, மூளை ரத்தநாள வெடிப்பால் உயிர் துறந்தார் மாதவய்யா.‘>>>>>


ஓரளவு அ மாதவையா  பற்றி தெரியும் ஆனாலும் உங்க இடுகையில் நல்ல விவரங்கள். 


இனி ''பனங்காட்டு நரி சலசலப்பை அஞ்சாது.''. அந்தக்காலத்துக் கதையாயினும் சமுதாயத்தைக் காட்டமாக விமரசிக்கும் இந்தக்கதையை பற்றி, மற்றவர்களின் கருத்துக்கிடைக்குமானால், என் விமரிசனத்தைப் பிறகு எழுதுகிறேன். இல்லையானாலிம், அடுத்த இழையில்.>>>>>>>


படிச்சிட்டு வரேன். 

ஷைலஜா

Subashini Tremmel Thu, Dec 6, 2012 at 10:44 AM

தேடிப்பிடித்து முத்தாய் ஒரு கதையை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். 

>>ஐயன் மனமிரங்கி, இன்னும் எவர்மேலும் ஆவேசமாகிப் பிரசன்னமாக வில்லை. எல்லாருக்கும் அலுப்பும் பசியும் அதிகரித்துக் கொண்டிருந்தன. இங்கனமிருக்கும் பொழுது, அதோ அந்த பிராமணரைப் பாருங்கள்! அவர் தொந்தியினும் பருத்த தொந்தி அங்கு எவருக்குமில்லை. ஒரு தூணிற் சாய்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு, இராமையரால் அணைக்கப்பட்டு, கிருஷ்ணையர் உடலெல்லாம் உதறி நடுங்கினார். முதலில் ஒருவரும் அவரைக் கவனிக்கவில்லை. ஆயின், அடுத்த நிமிஷத்தில் ''அதோ ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வருகிறான்!'' ''ஐயன் வந்துவிட்டான்!'' என்ற சந்தோஷகரமான பேரொலி கோயிலெங்கும் முழங்கிற்று. பாடகர்கள் தங்களுக்கெட்டிய மட்டும் உயர்ந்த குரலில் ஐயனைப் புகழலானார்கள். ஐயனது ஆவேசத்தைப் பார்க்கும் வண்ணம், பலர் எழுந்து வந்தனர். தாசிக்குத் தண்ணீர்க் குடத்திற் கண், என்னும் மூதுரை விளங்க, அங்ஙனம் எழுந்து வந்தோரெல்லாம், தத்தம் ஸ்தானத்திலே மேல்வேஷ்டியோ, துண்டோ, போட்டுவிட்டே வந்தனர்.
>>
நன்கு ஊன்றி கவனித்துத் தான் இந்தக் கதையை ஆசிரியர் எழுதியிருக்கின்றார். 

மாதவையாபற்றிய உங்கள் சிறு குறிப்பும் பயனுள்ளதாக இருந்தது. அருமையான ப்ணி இது திரு.இன்னம்பூரான். வித்தியாசமான பதிவும் கூட. வாசித்து மகிழ்ந்தேன்.

சுபா

Kamala Devi Thu, Dec 6, 2012 at 12:00 PM


சுபாஷினியின் மடல் படித்தபிறகுதான்இப்படி ஒரு இடுகையே தெரிந்தது.. எப்படி விடுபட்டுப்போனதென்றறியேன். பலமடல்கள் மின் தமிழில் எனக்கு கிட்டுவதில்லை.
இ சார், நிங்ஙளின் நடை ஞான் அறியாத நடை. தமிழும் கூட பண்டத்த எழுத்தாளர்களின் அழகு பவனி .
வாழ்த்த என்ன தகுதி இருக்கிறது.
அன்பில் கமலம்


K R A Narasiah Thu, Dec 6, 2012 at 3:56 PM


மாதவய்யா ஹிந்து பத்திரிகையில், வாரம் ஒரு கதையாக், இருபத்தேழு கதைகள் எழுதினார்! இக்கதைகள் தாம் பின்னர், ஹிந்து பத்திரிகையாசிரியர் கஸ்தூரி ரங்க அய்ய்ங்காரால், 1912 ல், இரு தொகுதிகளாக Kusika's Short Stories என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.  பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1924 ல் மாதவய்யா இக்கதைகளில் பதினாறை மட்டும் தமிழாக்கம் செய்து குசிகர் குட்டிக் கதைகள் என்று இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ரிச்சர்ட் கென்னடி என்ற அமெரிக்கர் மணிக்கொடி காலத்துச் சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்த போது மாதவய்யா பற்றிச் சொன்ன கருத்தை சிட்டி மறுக்கிறார். (இதைப் பற்றி விவரமாக பின்னர் எழுதுகிறேன்)
1917 ல் தமிழ்ர் கல்விச் ச்ங்கம் என்ற ஒரு அமைப்பில் பங்கேற்று மாதவய்யா உழைத்தார். அவருடைய சிறிய தந்தையாரின் புதல்வர் அப்புஸ்வாமி அய்யர் தமிழ்ர் நேசன் என்ற அவ்வமைப்பின் ப்த்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். 

அப்பத்திரிகையின் முதல் இதழில் வெளி வந்த ஒரு செய்தி:
“சம்சார வாழ்க்கையைப் பற்றிப் பேசுமிடத்து, ஒரு வய்து நிறையாத பெண்சிசுக்களுள் 31 விதவைகளும், ஒன்றுக்கு மேல் இரண்டு வயதுக்குள் 34 விதவைகளும் இரண்டுக்கு மேல் மூன்று வயதுக்குள் 85 விதவைகளும், மூன்றுக்கு மேல் நான்கு வயதுக்குள் 149 விதவைகளும், நாலுக்கு மேல் ஐந்து வயதுக்குள் 383 விதவைகளும் மொத்தம் 15 வயதுக்குள் 23,068 விதவைகளும் 1911 வருஷ ஜனசங்கியைப் படி நம்முள் இருக்கின்றனர்”

மாதவய்யாவின் சமூக விழி[ப்புணர்வு குறித்து இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். 

எல்லாவற்றையும் விட அவரது கண்ணன் பெருந்தூது என்ற கதை நம்மை வியப்பில் ஆழ்த்தும்! அதில் அவர் பெயர் இல்லை ஆனாலும் அது அவர் தான் எழுதியிருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக சிட்டி சொல்வார்.

இறந்த மாதவய்யாவைப் பற்றி இப்பத்திரிகையின் கடைசி இதழில் அவரது மரணம் குறித்துச் சொல்லப்படுகிறது. அதில் ஒரு நெருங்கிய நண்பர், கிங்ஸ்பெரி பாதிரியார் (சி. வை. தாமோதரம் பிள்ளையின் புதல்வர்) ஒரு பாட்டும் எழுதியுள்ளார்.

நரசய்யா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Kamala Devi Thu, Dec 6, 2012 at 4:22 PM


எப்பேர்ப்பட்ட செய்திகளெல்லாம் நிங்ஙளிடமிருந்து வருகிறது சார் ?
தகவல் களஞ்சியம் நிங்ஙளின் இலக்கிய அனுபவங்கள்.
மின் தமிழின் அருமைகளில் ஒருவர் நிங்ஙள்
கமலம்




Friday, March 15, 2013

பாதாளக்கரண்டி


பாதாளக்கரண்டி
Published January 10, 2012 | page1image1504By இன்னம்பூரான்
page1image1736 page1image1904
இன்னம்பூரான்
page1image2512
அம்புலு மாமி ஊரிலேய பெரிய பிஸினஸ் புள்ளி. அம்பானியும், பிர்லாவும், டாடாவும் அவளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது அக்ரஹாரத்து ஆண்களின் அைசயா கருத்து. உள்ளூரக் குைமஞ்சாலும், அவாளுக்கு அதில் ஒரு திருப்தியும் உண்டு. ஆனா பின்ன இல்ைலயா? ெபரிய பண்ைண கனகசைபயிடேம கறாராகக் கந்து வட்டி வாங்கியவளாச்ேச. அவர் கருவிண்ேட போனார். என்ன ெசய்ய முடிஞ்சது? துட்டு போட்டு புரட்டறா. சரி. அெதன்ன பால் வியாபாரம் ேவேற? பத்து எருைம கறக்கறது. ஏழு சீைமப்பசு ேவேற. இவ இன்னும் ஆட்ைட கறக்கேல, ஒட்டகத்ைத கறக்கெல என்று ைகயாலாகாத ைதயூ கூட முணமுணப்பாள். ‘நீ போய் அவ கிட்ட புலிப்பால் ேகளுஎன்று சொல்லி விட்டு, ஏதோ என்.எஸ்.கிருஷ்ணன் ஜோக் அடிச்சுட்ட மாதிரி, கிளு கிளுன்னு சிரிச்ச புருஷன்காரன் சீமாச்சுைவ பாத்து அவ ஒரு முைறப்பு முறச்சாப்பாருங்கோ, அது பிள்ைளப்பூச்சி மாதிரி திைகச்சு நின்னுடுத்து. அன்னண்ைட, இன்னண்ைட நகரல்ைல. பின்ன என்ன நீங்கேள சொல்லுங்கோ. யாராவது மண்ைடெய போட்டாத்தான் அந்தச் சவுண்டி பிராமணனுக்கு நாலு காசு கிைடக்கும். அைதயும் மூணு சீட்டி விைளயாடித் தொலச்சுட்டு வந்து நிக்கும், ேபஸ்து அடிச்சாப் போல. அவன் மூஞ்சிேல அடிச்ச மாதிரி, இத்தைன மாட்ைட எப்படி இந்த அம்புலு மாமி ஒண்டிக்கட்ைடயா ேமய்க்கிறாள்? அைதக் ேகளும். சொல்ேறன்.
ேமலத்ெதரு பழனி இருக்காேன. அவன் ஒரு சண்டியர், மினி ரவுடி. அவன் கிட்ட ஒரு நோஞ்சான் பசு இருக்கு. ேவளாேவைளக்குக் கறக்கேலன்னா துடிச்சுப் போய்டும். அப்படி ஒரு அமுதசுரபி மடி! கனத்துப் போய்டும். பிச்ைசக்கோனார் அங்ேக கூட, என்ன சொன்னாலும், ேநரத்துக்கு போக மாட்டார். ரொம்ப ேபசினா, ‘கூவாேத, பழனிஎன்பதோடு சரி. அடங்கிப் போய்டுவான். அப்படி ஒரு ெபர்சனாலிட்டி! ஆனால், அம்புலு மாமி கிட்ேட தொைட நடுக்கம். பதிேனழு மாட்ைடயும் கறக்கறது மட்டுமில்லாமல், தீனி போடறது, சிைன மாட்ைடப் பராமரிக்கிறது, தொழுவத்ைதச் சுத்தம் பண்ணி, ேமய்ச்சலுக்குக் கூட்டிண்டு போய், ஹோட்டலுக்கு பால் சப்ைள எல்லாம் ஸப்ஜாடா பண்றாேர, ேவளா ேவைளக்குப், பசங்கைளயும் கூட்டீண்டு வந்து. விடிகாைலயில் காராம்பசுைவ கோயிலுக்கு ஓட்டிண்டு போறது, அவருைடய நாலாவது பிள்ைள, வாண்டு
கோவாலு. இத்தைனக்கும் மாமி கிட்ட அப்பப்ப அர்ச்சைன கிைடக்கும். அம்புலு மாமி ைக தாராளம் தான். ஆனா வாய் அதுக்கு ேமேல. ஆறு வருஷமா நடக்கறது. அவா இரண்டு ேபருக்கும் தொழில் உடன்பாடு வந்த விதம் ேகளுங்கோ. ேசர்ந்த புதுசிேல, ஒழுங்கா சொல்லிட்டு, காலம்பற மாடு எல்லாத்ைதயும் ஓட்டிண்டு போன பிச்ைச, கொல்ைலப்பக்கத் தட்டிக்கதைவ ஆட்டிப்பிட்டு, ‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது!’ அப்டீன்னு சொல்லிட்டு, நைடையக் கட்டிப்பிட்டான், சாயரைக்ஷயில். மாமி தான், ேமல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க, பதிேனைழயும் தொழுவத்திேல கட்டிப்பிட்டு, தண்ணி காமிச்சுட்டு, வந்தா. மறு நாள் காைலயில் வந்தால், எல்லா மாடும் குளிச்சுட்டு நிக்கறதுகள். பால் கறந்தாச்சு. மாமி சொன்னைத கோனார் எங்கிட்ட சொன்னார். இல்லாட்டா, எனக்கு எப்படி ெதரியும்?
பிச்ைச! ேகட்டுக்கோ. நீ காணாமப் போய்ட்ேட, சரி, ஒரு ேபச்சுக்கு சொல்ேறன், ெசத்துப் போய்ட்ேட. சூரியன் அஸ்தமிச்சுடாது. அம்புலுவொட தொழுவமும் அழிஞ்சுடாது. நீ யாருடா என்ைன பாப்பாத்திங்கறது? மரியாைத கொடுத்து நீங்கன்னு தாேன கூப்டேறன். அது உன்னோைட தொழிைல மதிச்சு. அது கிருஷ்ண பகவானோட தொழில். ஆமாம். இரண்டாம் தடைவ சொல்ல மாட்ேடன். மாட்ைட எல்லாம் தொழுவத்திேல கட்டி, தண்ணி காமிச்சுட்டுத்தான் போகணும். இஷ்டமில்ெலன்னா, இப்பேவ கணக்கு தீத்துப்பிடலாம்.’ இதுக்ெகல்லாம் பின்னாேல ஒரு சூக்ஷ்மம் இருக்கு. அப்றம் சொல்ேறன்.
சீட்டுப் பிடிக்கறா பாருங்கோ. இந்த முகம்மது யூனஸ் இவ கிட்ட மாேனஜ்ெமண்ட் பிச்ைச வாங்கணும், ஸ்வாமி! இதுவும் அஞ்சு வருஷமா நடக்கறது. இன்னிக்கி ரிஸர்வ் வங்கிைய வந்து சர்ப்ைரஸ் ஆடிட் பண்ணச்சொல்லுங்கோ. சர்ப்ைரஸ் என்ன சர்ப்ைரஸ்? ப்ைரஸ் கொடுத்துருவா.
நாணயம்னா அது தான் அம்புலு மாமி. ைக சுத்தம், வாய் சுத்தம். மனசு சுத்தம். அைதச் சொல்லுங்கோ. பூங்குடி ெபண்ணினேம அவளுைடய கண்ணைசவுக்கு அடிைம. அவர்களுக்கு ஜீவித நிர்மாதா மாமி தான். ைதயூ கூட, மனசு விட்டு அம்புலு மாமி புகழ் பாடுவாள். அப்படி ஒரு ஆபத்பாந்தவி, மாமி. கவைலப்படாமல் கடன் கொடுப்பாள். சீட்டு விதிகளுக்கு உட்பட்ட வட்டி, கமிஷன். வசூல் நூத்துக்கு நூறு. ரகஸ்யம் ெதரியுமா? அம்புலுனா ராஜாங்கம் தான். வச்சுது சட்டம். ஆனால். சீட்டு நிர்வாகத்துக்கு ஒரு கமிட்டி. எல்லாம் பொண்டுகள். ேசமிப்பு, கடன், வட்டி, வசூல் எல்லாம் கமிட்டியின் பொறுப்பு. மாமி ெவறும் ஆலோசகர். அதான் ரகஸ்யம். சொரைண இருக்கோல்யோ பொண்டுகளுக்கு. நோ மிஷ்ேடக்!
page3image544
காசு பணம் கொடுக்கும் சமய சஞ்சீவி மட்டுமில்ைல. பூங்குடியின் கைல ஆர்வத்துக்கு அம்புலு மாமி கொடுத்த புத்துயிர் பற்றி ேபசணும். சின்ன பசங்க எல்லாம் அத்தைன அழகாக் கூைட பின்னும். பனங்காடோல்லியோ! ஓைலக்குப் பஞ்சமா? கல்யாணம் மாமாவோட பிள்ைள பஞ்சு அெமரிக்காவில் ஏதோ ேவைல. லீவுக்கு வந்த போது, மாமிைய பாத்துட்டு வந்தான். அவன் கிட்ட ஒரு வார்த்ைத போட்டு ைவத்தாள். இதுக்ெகல்லாம் அங்ேக கிராக்கி இருக்கா என்று விசாரி என்று. டிைசய்ன்லாம் அனுப்பு என்று அன்புக் கட்டைள ேவறு. அவனும் மதிச்சு பண்ணாேன. லோக்கல் ஸ்கூல் ட்ராயிங்க் மாஸ்டைர வச்சுண்டு, ஒரு ைகத்தொழில் கலாசாைலேய ஆரம்பிச்சுட்டா. நாலு வருஷத்துெல பூத்துக் குலுங்கறது, பூங்குடி. கமலப்பொண்ணின் உண்டியலும் தான். பூங்குடி முள்ளுத் ேதன்குழல் உலகபிரசித்தம். அம்பாசமுத்ரத்திேல சொல்றாளாம்: அது பூங்குடி அக்ரஹாரம் இல்ைல. முள்ளுத்ேதன்குழல் அக்ரஹாரம் என்று. அந்த அளவுக்குப் ெபண்களுக்கு விடுதைல.
எங்ேக சத்து இருக்கோ அைதச் சொல்லத்தான் ேவண்டும். அம்புலு மாமி ஒரு இன்ஸ்டிட்யூஷன். அவைள, ‘என்ைன வந்து பாருஎன்று சொல்லும் உரிைம கல்யாணம் மாமாவுக்குத்தான் இருக்கு. ஒரு நாள்: ‘என்ைன கூப்பிட்ேடளாேம, அண்ணாஎன்று போய் நின்றாள். ஒரு தட்டு நிைறய பழங்கள். விதரைண என்றால், மாமி மாமி தான். ஏதோ லோகாபிராமமாக கொஞ்சம் ேபசிக்கொண்டார்கள். ஒரு ெவள்ளிக் கூஜா நிைறய டிகிரி காஃபியுடன், சொஜ்ஜியும் பஜ்ஜியுமா எடுத்துண்டு, பார்வதி மாமியும் கலந்து கொண்டாள். ேபச்சு போற தோரைணையப் பாருங்கோ.
பார்வதி: ஏதோ இந்த பூங்குடி பரேமஸ்வரன் கிருைபயில் நன்னா இருக்ேக. அன்னிக்கு அந்தக் கடங்காரன் ராகவன் உன் சொத்ெதல்லாம் பிடுங்கிண்டு உன்ைன வீட்ைட விட்டு விரட்டின போது, இந்தப் பரேமஸ்வரைன, ‘நீ ெதய்வமா?’ என்று ேகட்ேடன். அவன் தான் உன்ைன ரக்ஷித்தான். இவாளுக்கு என்னமோ புதுசாத் தோண்றதாம். நான் தான் அம்புலுைவக் ேகளுங்கோ என்று சொன்ேனன்.
அம்புலு: அன்னிக்கு அண்ணாவும் நீங்களும் தான் எனக்கு ெபருந்ெதய்வம். அண்ணா சொன்னா எனக்கு ஆஞ்ைஞ.
கல்யாணம் மாமா, அவருக்ேக உரிய ெமன்ைமயுடன்: ஆமாம். ராகவனோட பிள்ைள சீனுவுக்கு நீ தான் ஃபீஸ் கட்றாயாேம. உனக்குத் தாராள மனசு. ஆனா, அந்த கனகசைப வந்து எங்கிட்ட ஒரு குரல் அழுதுட்டுப்போனார்.
அம்புலு: அப்பா பண்ண தப்புக்குப் பிள்ைள பிைணயா? வரச்ச, போகச்ச, சீனு முள்ளுத் ேதன்குழல் அள்ளிண்டு போறான். சூடிைகயான பிள்ைள. (சிரிக்கிறாள்.)
கல்யாணம் மாமா: அதான் சொல்ல வந்ேதன். வயக்காட்டு ேவைல இல்லாத போது, நம்ம பசங்க எல்லாரும் ஆடு புலியாட்டம் ஆடிண்டு. சோம்ேபறியா இருக்காங்க. வீட்டில் ேவறு, உன் தயவால் ெபண் விடுதைல. ஒரு வழி சொல்ேலன். ஊேர உருப்படும். ‘பூங்குடி ஆண்கள் விடுதைல இயக்கம்ஒண்ணு ஆரம்பிக்கணும். (சிரிக்கிறார்.)
அம்புலு: நாேன நிைனச்ேசன். அசரீரி மாதிரி சொல்ேறள். ஊேர நந்தவனம். எங்க பாத்தாலும் பூ குலுங்கறது. வருஷம் பூரா வருமானம். நவ திருப்பதி கோயில்களுக்கு அனுப்பிச்சாேல போதும். நீங்க சொன்னா எல்லாரும் ேகட்பார்கள். எங்க சீட்டு வங்கியில் நூறு ெபர்ெசண்ட் போனஸ் கொடுக்கப் போறோம். கைலக்டர் வருவார். முதலுக்குப் பணமும் ஆச்சு. கவர்ன்ெமண்டும் ஆதரிக்கும். உங்களுக்கும் இந்த கோயில் நிர்வாஹம் ெதரிஞ்சவா. அப்படிேய நுங்கு பதனப்படுத்தி, ஒரு வியாபாரம்.
பார்வதி (சிரிச்சிண்ேட) டீல்!
இந்தச் சமயம் பார்த்து, சீனு வரான், ‘ெபரியம்மா! கிணத்திெல தோண்டி விழுந்துடுத்து. உங்காத்திேல போய் பாதாளக் கரண்டி எடுத்துக்கவா? ஏதாவது பாத்திரத்ைத பர்த்தியா வச்சுட்டு எடுத்துண்டு போ.’ ( இது கிராம வழக்கம். பாதாளக் கரண்டி சில வீடுகளில் தான் இருக்கும். கிணற்றில் விழுந்த சாமான்கைள எடுத் தபின், திருப்பிக் கொடுக்க மறக்கக் கூடாது என்பதற்கு இந்த ஏற்பாடு.)
page4image11112
கல்யாணம் மாமா: ஒரு ஆண்பிள்ைளயால் இப்படி கறார் பண்ண முடியாது. நீ தான் பிசினஸ் ெசய்ய லாயக்கு.
கதை முடியப் போறது. கொஞ்சம் முன் கதை. அம்புலுக்கும் மணவாளனுக்கும் பதிைனந்து வருஷம் முன்னாெல கல்யாணம். ஆறு வருஷம் முன்னாேல அஞ்சு நாள் ஜுரத்திெல மணவாளன் போய்ட்டான். குஞ்சு குளவான் இல்ைல. அவனுைடய தம்பி ராகவன் சொத்ெதல்லாம் பிடுங்கிண்டு அவைள விரட்டி விட்டான். கல்யாணம் மாமா தான் கொஞ்சம் ஜீவனாம்சத்துக்கு ஏற்பாடு பண்ணினார். அப்றம், ‘சவாேல சமாளி தான்’. இரண்டு வருஷம் முன்னாேல ஏதோ வழக்கு. ராகவன் பூண்டியாகி, ஒடிந்து, நொடித்துப் போய்விட்டார். போக்கு வரத்து அவ்வளவாக இல்லாட்டாலும், சீனு தூது போய் வருவான்.
இந்தப் பாதாளகரண்டி சம்பவம் ஊர்ெலேய ேபச்சாயிடுத்து. எல்லாம் பிச்ைசக்கோனார் உபயம்.
கைலக்டர் வந்த தினம், நன்றி நவிலல், அவரது பொறுப்பு. அத்தைன ஜனநாயகம்! அவர் ஜாலியாக குட்ைடப் போட்டு உைடக்க, ஒேர சிரிப்பு. கைலக்டர் சொன்னாராம். மாமி எெலக்க்ஷனுக்கு நின்னா போட்டி இருக்காது என்று.
*
பிரசுரம்: வல்லைம பொங்கல் சிறப்பிதழ் 2012 http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1268/
page5image7296