கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]
இன்னம்பூரான்
30 11 2016
- இந்தியா விடுதலை அடைவதற்கு சில நாட்கள் (19 ஜூலை 1947) நமது அண்டை நாடாகிய கடாரத்தின் [பர்மா/மியான்மார்] தந்தை என்று போற்றப்பட்டவரும், அந்த நாட்டு பொதுவுடமை கட்சியின் தந்தையும், கலோனிய ஆட்சியில் பிரதமராகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றவரும் ஆன ஆங்க்ஸான் அவர்களும் அவருடைய அமைச்சரவையும் [7 நபர்] சுட்டுக்கொல்லப்பட்டனர். [தற்காலம் அவரது மகள் ஆங்க்ஸான் ஸு யி மிகவும் பிரபலம்.] அவருடைய காலத்துக்கு முந்திய பிரதமர் ஊ சா வின் கைக்கூலிகள் , அரசு நிர்வாகக்குழு அமர்வு அறையில் புகுந்து இந்த கைங்கரியத்தை செய்தனர். பிற்காலம் அந்த ஊ சா தூக்குமேடையில் ஊசலாடி செத்தான், சட்டரீதியாக. கோர்ட்டில், வெளியேறிய பிரிட்டீஷ் சிப்பாய்கள் ஊ சாவுக்கு பல துப்பாக்கிகளை விற்றது தெரிய வந்தது.
- அக்காலம் பள்ளி இறுதி ஆண்டு படித்து வந்த என்னை இது மிகவும் பாதித்தது. ஃபோரம் என்ற இதழ் நடத்தி வந்த ஜோஷிம் ஆல்வா அவர்கள் இதை எல்லாம் புரியும்படி எடுத்துக்கூறியிருந்தார். அக்காலம் என் தந்தை என்னிடம் கூறிய தகவல் (என்னிடம் வேறு ஆதாரமில்லை.) நேருவின் அமைச்சரவையை ஒழிக்க ஒரு அண்டை நாட்டு பயங்கரவாதிகள் கும்பல் பயணித்த லாரியை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மடக்கி, அவர்கள் எல்லாரையும் கொன்று நம் தலைவர்களை காப்பாற்றினார்கள். அதை சர்தார் படேல், (ஹோம் மினிஸ்டர்) நேருவிடம் எடுத்துக்க் கூறினார். தந்தையிடம் ஒரு ஆவணம்/ ஊடகம் இருந்தது. அதன் பெயர் எனக்குத் தெரியாது.
- கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு பின் வந்த நேற்றைய இந்திய செய்தி:
- மதுரையில் 27 11 2016 அன்று அல் க்வைடாவுடன் சம்பந்தப்பட்டவர்களும், சித்தூர், கொல்லம், மைசூர், நெல்லூர், மல்லபுரம் ஆகிய இடங்களில் கோர்ட்டுகளில் குண்டு வீசியவர்களும் ஆன மூவர் கைது செய்யப்பட்டனர். நாலாவது ஆசாமி சென்னையில் அகப்பட்டான். மல்லபுரம் குண்டு வீச்சு நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் மூலம் தெரிய வந்த செய்தி: நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவது, அமெரிக்கன், ரஷ்யன், இஸ்ரேல் தூதரங்களையும், ஹைதராபாத் கோர்ட்டையும் குறி வைப்பது, அவர்களில் ஒருவன் பள்ளியை துறந்த மாஜி மாணவன். பி.காம் படித்த மற்றொருவன் கோழிக்கறி வணிகர். மூன்று பிராந்திய போலீஸ் படைகள் ஒத்துழைத்து, அவர்களை பிடித்தது. ஒருவரின் தந்தை குற்றச்சாட்டுகளை மறுக்கிரார்.
- மொத்தம் 22 இந்திய பிரபலங்களை பிலாக்கணத்திற்கு இலக்காக கொலை செய்வதாக, இவர்கள் உத்தேசமாம்.
- நவம்பர் 8க்கு பிறகு, கடந்த 20 நாட்களில் விமானம் மூலம் கடத்த முயன்று பிடிபட்ட பணம்:
மும்பாய்: 12.5 கோடி
டில்லி 6.2 “
கொல்கத்தா 5.9 கோடி;
மற்றவை: 4.4 கோடி;’
இது எல்லாமே கறுப்புத்தான் என்று சொல்லக்கூடிய சான்றுகளை அவர்கள் முன் வந்து அளிக்கவில்லை. தவிர முதல் வாரத்தில் 5 கோடி, பின்னர் 24 கோடி பற்றி விசாரணை நடந்தது. தவிர, கணக்கிடமுடியாத வகையில் ஹரியானாவிலிருந்து பல கோடிகள் ஒரு பிரத்யேக விமானத்தில் நாகாலாந்துக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தலித் மக்களுக்கு வரி சலுகைகள் உண்டு. நோ வருமான வரி. அவர்களின் வரவு எகிறுவதாக சந்தேகம். 135 கிலோ தங்கமும் பிடிபட்டது.
செல்லாக்காசாக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பல பயங்கரவாதத்துக்கு போகிறது என்று அரசின் கூற்று. நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஆங்க்ஸான் படுகொலையை போல... வேண்டாம். மோடியும் 22 பேர்களும் பிழைத்துப்போகட்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Aung_San_BNA.jpg/220px-Aung_San_BNA.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment