Shalini Letter 1.
உதயன் கேர் ஷாலினிகளுக்கு முதல் கடிதம்.
இன்னம்பூரான்
29 04 2020
கல்வி என்ற ஆலயத்துக்கு எட்டு திசைகளிலும் கோபுரங்கள் உண்டு. பாடம் படித்து முன்னேறலாம். மற்ற புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளலாம். சான்றோர் சொல்லுக்கு பணிந்து மேலும் கற்கலாம். இணையவழி கல்வி துரிதமாக வளர்கிறது. கடிதங்களும் எழுதலாம்; படிக்கலாம்;பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் மீது என்னைப்போன்ற ஆர்வலர்களுக்கு நேசமும் பாசமும் இருப்பது போல, எனக்கு பிரியமான மாணவ மாணவிகள் தேவகோட்டையில் ஒரு நடு நிலைப்பள்ளியில் வெளுத்து வாங்குகிறார்கள். நான் அவர்களை சந்திக்க சென்றபோது, ஒரு ராணுவப்பள்ளியின் கட்டுப்பாட்டை முன் நிறுத்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தார்கள். அசந்து போகாமல் இயல்பாகவே பல கேள்விகள் கேட்டு என்னை அசத்தியது, ஆறாம் வகுப்பு மாணவி.
இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் பள்ளியை சிறப்பாக நடத்துகிறார். ஆசிரியர் குழாமும் அப்படியே. பெற்றோர்கள் ஒத்து உழைக்கிறார்கள். என்னுடைய நிகழ்வுக்கு அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. ஏனெனில், அவர்கள் அன்றாடக்கூலிகள். ஒரு நாள் கூலியை விட்டால், பட்டினி தான். நான் போய் அவர்களில் சிலரை பார்த்தேன். எனது சகபாடியான ஜெர்மனி-வான செல்வி. சுபாஷிணி உங்களுடன் வந்து உரையாடியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவர் அண்மையில் அந்த பள்ளிக்கு சென்ற செய்தி வந்ததும், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கடிதம் உங்களுக்கு பயன் தருமானால் அடிக்கடி எழுதுவதாக உத்தேசம். எனது கடிதங்களோ, யூட்யூப் உரையோ, வாட்ஸ் அப் உரையாடலோ, ஸ்கைப் நேர்காணலோ, உங்கள் கல்விமேன்மையை, வேலை செய்யும் திறனை, பொது அறிவை, நாட்டு நடப்பு புரிதலை அதிகரிக்க முடியாவிடின், அவற்றை நிறுத்தி விடுவேன்.
சில உபரி வினாக்கள்:
virus: தமிழில்:…..
கடிதம்: தமிழில் அதே பொருள் உள்ள சொற்கள்.
Who got two Nobel Prizes?
பெனிசிலின் கண்டு பிடித்தது யார்?
பாரதியார் பாடல்களின் இரண்டின் முதல் வரி எழுதவும்.
Eureka! இது என்ன?
வூஹான் மாநிலம் எங்கே இருக்கிறது?
கை கழுவதின் முக்கியவத்தை டாக்டர்களுக்கு முதலில் கூறியவர் யார்/
Who is Harry Potter?
What computer games you play?
-x-
Homework: Translate this letter into English.

No comments:
Post a Comment