ஒரு பிறந்த நாள் வாழ்த்து
விஞ்ஞானம் படித்தோர் புராணத்தைப் படிக்காமலேயே, அதன் கருத்துக்களை அறியாமலேயே, புராணம் என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை ஒதுக்கக்கூடாது என்பது தான் எனது விருப்பம் ஐயா.
~ என் விருப்பமும் அதே. விஞ்ஞானத்தையும் முறைப்படிப் படித்து தெளிவு பெற வழிமுறைகள் உளன.
விஞ்ஞானம் என்ற தொடர்ந்து மாற்றலை ஏற்புடைய வகையில் ஏற்கும் மாபெரும் சாத்திரத்தொகுப்பை 'பகுத்தறிவு' அல்லது 'அறிவியல்' என்ற குறுகிய சந்துகளில் அடைப்பது அதற்கு விளைவிக்கும் அநீதி. தொன்மையில்லையேல் மனிதம் இல்லை. ஹிந்து சனாதன தர்மம் பல வ்கையான சிந்தனைகளை உள்ளடக்கியது என்றாலும், விவிலயத்தமிழையும் அரபியத்தமிழையும் அன்புடன் அரவணைக்கும் தமிழகம் (Tamil diaspora) யாதொரு பிரமேயமில்லாமல் ஒரு சமயத்தை மற்றும், இடம், பொருள், ஏவல் ஆகிய தமிழ் ஆய்வு புரிதல்களை ஒதுக்கலாகாது என்பது தான் காளை ராஜனின் ஜ்ன்மதின வாழ்த்தாக அமைகிறது என்க.
கனிவுடன்,
இன்னம்பூரான்
No comments:
Post a Comment