Monday, February 29, 2016

இன்னம்பூரான் பக்கம்: II.8: ஒரு துளி தேன்பாகு: 8: JK

இன்னம்பூரான் பக்கம்: II.1
ஒரு துளி தேன்பாகு

இன்னம்பூரான்
29 02 2016

மின் தமிழ் என்றதொரு அருமையான இணைய குழுவின் பதிவுகளில் ஒன்றில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிந்தனைகளை தமிழில் எடுத்துரைக்க இயலாது என்று பொருட்பட ஒருவர் கூறுவதை கேட்டு மன சஞ்சலமடைந்தேன். அந்த இழை திசை மாறி பயணிப்பதால், இந்த தொடரை துவக்குகிறேன், ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற அடிப்படையில். அறிமுகங்கள் கூட அன்றாடம் சிறிதளவே வரும்.

ஜேகே அவர்களை நான் நன்கு அறிவேன். கல்லூரியில் படிக்கும்போது, பாடம் தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் செல்லும். நாங்கள் மூவர் அணி (கேயார்வி, ராமு, சுந்து) தவறாமல் சைக்கிள் பயணத்தில் வசந்த பவனம் சென்று ஜேகே அவர்களின் உரைகளை கேட்போம். பக்குவமின்மையானால், நான் தினந்தோறும் அவரிடம் கேள்விக்கணை தொடுப்பேன். அவரும் பொறுமையாக பதிலளிப்பார். கடைசி நாளன்று எனக்கு ஒரு மணி நேர பேட்டி கொடுத்தார். பக்குவமின்மை சிறிதளவு குறைந்தது.  என் மகவுகளை அவரது சிந்தனைகளை கேட்க வழி வகுத்தேன். 45 வருடங்கள் கழிந்த பின் அவரை பின்பற்றிய ஒருவரிடம் பாடம் கேட்டேன். பக்குவமின்மை மேலும் சிறிதளவு குறைந்தது. பின்னர் ஒரு வாரம் வசந்த பவனத்தில் நிம்மதி வாரமாக கழித்தேன். பக்குவமின்மை மேலும் சிறிதளவு குறைந்தது.

கடந்த ஒரு வருடமாக நானும் திரு.பி.எஸ்.ஆர். ராவ் அவர்களும் நாட்தோறும் தோழமை பாராட்டுகிறோம். அவர் ஒரு பிரபல எழுத்தாளர்; தமிழில் 30-40 நூல்களை எழுதியவர்.அவர் மனமுவந்து கொடுத்த ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் படித்ததின் நற்பயனாக, தமிழார்வம் கூடியது. பக்குவமின்மை கணிசமான அளவு குறைந்தது. அந்த நூல் -438 பக்கங்கள்: நர்மதா பிரசுரம் 2007. காப்புரிமை பற்றிய குறிப்பு தென்படவில்லை. எனினும் ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டேன். அப்போது அவர் சொன்னதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.  அந்த நூலிலிருந்து சில துளிகளை எடுத்துரைக்கும் போது, அவற்றிற்கு நான் தான் பொறுப்பு. திரு.பி.எஸ்.ஆர். ராவ் அல்ல. துளிக்கூட தயக்கமில்லாமல், முழுமையாக புரிந்து கொள்ள, அந்த நூலை வாங்கி விடுங்கள் என்பேன்.

இன்றொரு துளி:
“...நான் கூறுபவைகள் உங்களுக்கு ஏற்புடையவையாக இல்லாவிட்டால், அவற்றை நீங்கள் நிராகரித்து விடுங்கள். அன்பு, பரிவு, சினேகம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகத்தில் இருந்து வரும் மோசமான நிலையைப் பற்றி உங்களுடன் கலந்து உரையாடவே நான் இங்கு வந்திருக்கிறேன்...”
-ஜே.கே.
[தொடரும்]

Image credit: http://thumb7.shutterstock.com/display_pic_with_logo/655813/655813,1300452117,5/stock-photo-treacle-trickle-treacle-syrup-overflowing-from-a-silver-desert-spoon-73403080.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


-------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னம்பூரான் பக்கம்: II.2
ஒரு துளி தேன்பாகு
இன்னம்பூரான்
மார்ச் 1, 2016

"இளம் வயதில் நான் படித்த ஒரு சுயமுன்னேற்ற நூல் எனது வாழ்வின் போக்கை மாற்றியமைத்தது. பெரும் பயன் பெற்ற நான், மற்றாவர்களும் பயன் அடைவதற்காகவே சுயமுன்னேற்ற நூல்கள் எழுதலானேன்." ~ திரு.பி.எஸ். ஆர். ராவ்.

இவருடன் எனக்கு ஏற்பட்ட நட்பு எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது என்று சொல்லும் நான், அவரது நூலிலிருந்து ஒரு மேற்கோள் தருகிறேன். ஜேகே உலகத்திலேயே போற்றப்படும் சிந்தனையாளர். அவர் நமது சிந்தனைக்கு முதலிடம் தருகிறார்.

"நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்றா நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது."
- ஜேகே.

திரு.பி.எஸ். ஆர். ராவ் இந்த நூலை எழுதவதற்கு ஒரு தவமிருந்தார் என்றால் மிகையாகாது. நிறைய படித்து, சிந்தனையில் அவற்றை புடம் போட்டு, திட்டங்கள் போட்டு, ஜேகேயின் சிந்தனைக்களத்தை (அறிவுரைகள் இங்கில்லை.) அலசி, வடித்து இந்த 860 பக்க நூலை எழுதியிருக்கிறார். நான் அத்தனையும் பதிவு செய்ய இயலாது. நீங்களும் படிக்க மாட்டீர்கள். எனவே, என் திட்டப்படி அவருடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர் தொண்டரடிப்பொடியாராக வரவேண்டும். அதற்காக துளி 1 இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி, வணக்கம்.

--------------------------------------------------------------------மேல், பல்லாயிரக்கணக்கான சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். அவற்றை கேட்க சான்றோர்கள் கூடுவார்கள். ஒலி நாடாக்கள் ஆயிரக்கணக்கில். "நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்றா நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது." என்று திரும்பத்திரும்ப கூறிய ஜே.கே. அவர்களுக்கு இன்றளவும் ஒரு விசிறிக்கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நமது பி.எஸ்.ஆர்.ஆர். அதற்கு விதி விலக்கு. ஏனெனில், அவர் ஜே.கே.யை பரிசீலனைக்கு உட்படுத்தி, தனக்கேற்ற வாழ்நெறியை, சுய சிந்தனையையின் வெளிப்பாடாக, அமைத்துக்கொண்டார் என்பதை காண்கிறேன். அத்துடன் அவர் நின்று விட்டிருந்தால், இந்த தொடர் துவக்கப்பட்டு இருக்காது.

அவர் எழுதிய ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் ' இது மொழிபெயர்ப்பு அல்ல; ஜே.கே. சிந்தனைகளை உள்நிறைந்த தத்துவ நடை பயிலல்; அனைவருக்குமான எளிய தமிழில் ஜே.கே. சிந்தனைகளின் பரிசுப் பதிப்பு' என்று நர்மதா பதிப்பகம் கூறுவது மிகையல்ல என்பதை கண்டு கொண்டேன
Attachments area
Preview attachment JK PSRR INNAMBURAN.pdf
இன்னம்பூரான் பக்கம்: II.3
ஒரு துளி தேன்பாகு: ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 2, 2016

ஜே.கே. அவர்கள் உலகமுழுதும் பல நகரங்களில் 65 ஆண்டுகளுக்கு மேல், பல்லாயிரக்கணக்கான சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். அவற்றை கேட்க சான்றோர்கள் கூடுவார்கள். ஒலி நாடாக்கள் ஆயிரக்கணக்கில். "நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்றா நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது." என்று திரும்பத்திரும்ப கூறிய ஜே.கே. அவர்களுக்கு இன்றளவும் ஒரு விசிறிக்கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நமது பி.எஸ்.ஆர்.ஆர். அதற்கு விதி விலக்கு. ஏனெனில், அவர் ஜே.கே.யை பரிசீலனைக்கு உட்படுத்தி, தனக்கேற்ற வாழ்நெறியை, சுய சிந்தனையையின் வெளிப்பாடாக, அமைத்துக்கொண்டார் என்பதை காண்கிறேன். அத்துடன் அவர் நின்று விட்டிருந்தால், இந்த தொடர் துவக்கப்பட்டு இருக்காது.

அவர் எழுதிய ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் ' இது மொழிபெயர்ப்பு அல்ல; ஜே.கே. சிந்தனைகளை உள்நிறைந்த தத்துவ நடை பயிலல்; அனைவருக்குமான எளிய தமிழில் ஜே.கே. சிந்தனைகளின் பரிசுப் பதிப்பு' என்று நர்மதா பதிப்பகம் கூறுவது மிகையல்ல என்பதை கண்டு கொண்டேன்.

பிற பின்னர்.

தொடர் தொண்டரடிப்பொடியாராக வரவேண்டும். அதற்காக துளி 1&2(pdf) இணைக்கப்பட்டுள்ளன. நண்பர்களின் விருப்பத்திற்கு அடி பணிந்து, நான் எழுதிவரும் மற்ற குழுமங்களிலும் பதிவு செய்ய தொடங்குகிறேன்.


நன்றி, வணக்கம்.

[தொடரும்]
-----------------------------------------------------------
இன்னம்பூரான் பக்கம்: II.4
ஒரு துளி தேன்பாகு: ஜே.கே.

இன்னம்பூரான்
மார்ச் 3, 2016

மலர்விழி மங்கை 'ஒருபடி தேன்' என்று சொன்னதற்கு, நான் பி.எஸ்.ஆர்.ஆர். அவர்களுக்குத் தான் நன்றி கூறவேண்டும். தேமொழி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி,  ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்' என்ற நூலை திரும்பத் திரும்ப புரட்டிப்படித்தேன். பி.எஸ்.ஆர்.ஆர். தவமிருக்கவில்லை என்று புரிந்தது. அவர் அருந்தவத்தில் ஆழ்ந்து, சிந்தனையில் மூழ்கி, வஸ்த்ராயணம் செய்து, ஜே.கே. அவர்கள் உலகமுழுதும் பல நகரங்களில் 65 ஆண்டுகளுக்கு மேல், பல்லாயிரக்கணக்கான சொற்பொழிவுகளை வரிசைப்படுத்தி, ஒலி நாடாக்களை கவனமாக கேட்டபின், ஜே.கே.நூல்களை படித்து, ஆங்கிலத்தில் ஒரு  concordance வரைந்து, அதன் பின் தன் மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார் என்பது தெளிவாக தென்படுகிறது.

எனவே,   ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்'  என்ற நூல் தனித்துவம் படைத்தது. சொல்லப்போனால், எனக்கு அதை ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும்  மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தனக்குத்தானே விடுதலை அளித்துக்கொண்ட ஜே.கே. அவர்கள் தனது தலைமை உரையில். 'உண்மையிடம் அழைத்துச்செல்ல பாதைகள் எதுவும் கிடையாது. சமயம் புனித நூல்கள்,சடங்குகள், பூஜைகள் போன்றவற்றையைக் கொண்டு உண்மையை நெருங்க முடியாது. ஒரு அமைப்பு மனிதனின் தனித்தன்மையை அழித்து விடுகிறது. உண்மையை ஒழுங்குப்படுத்த முடியாது. (Truth cannot be organized.). ' என்றார். (நூல்: பக்கம் 10).

இனி, இவ்விழையில் , திரு.பி.எஸ்.ஆர்.ராவ் அவர்களை பற்றி அதிகம் எழுதப்போவதில்லை. நாம் துரித நடை பழகவேண்டுமல்லவா!

யேசு ராஜன் அளித்த ஆங்கில பதிவை படித்தேன். இன்று அதை புரிந்து கொள்ள முடிந்தவர்கள் சொற்பம். அது பற்றி உரிய தருணத்தில் பேசுவோம்.

இன்னம்பூரான்












இன்னம்பூரான் பக்கம்: II.5

ஒரு துளி தேன்பாகு: 5:  ஜே.கே.

இன்னம்பூரான்
மார்ச் 5, 2016

ஜே.கே. அவர்களின் சிந்தனைகளை பகுத்து அறிவதற்கு முன் அவருடைய பரிந்துரை ஒன்றை கவனித்து பயனைடைய வேண்டும். அவருடைய கருத்துக்களம் முழுதும் கணிசமான அளவு செலவு செய்து, தமிழ் உள்பட பல மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருடைய விசிறிகள் அவருடைய காலத்துக்கு பின் ஒரு ஸ்தாபனம் அமைத்து செயல் படுகின்றனர். அது அவருடைய இயங்கிய இடத்தில் தான் இயங்குகிறது. அவர்களுடைய ஆர்வம் மெச்சத்தக்கது.

இந்த ‘ஒரு துளி தேன்பாகு: ஜே.கே.’ தொடர் அந்த ஸ்தாபனத்தின் பதிவுகளுடன் தொடர்பு கொண்டதல்ல ~ 1. ஜே.கே. அவர்களின் பரிந்துரை; 2. காப்புரிமை பிரச்னை தவிர்ப்பு; 3. ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூலின் தனித்துவம்.

ஜே.கே. அவர்களின் பரிந்துரை: 

“ பலர் தங்களை என்னுடைய வாரிசு என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ...நான் இதை மீண்டும் சொல்கிறேன். நான் யாரையும் என் வாரிசாக நியமிக்க வில்லை....நான் இருக்கும்போதோ அல்லது இறந்த பிறகோ அப்படி யாரும் உரிமை கோராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.”. [நூல்: பக்கம் 6]

-#-
இன்னம்பூரான்

இன்னம்பூரான் பக்கம்: II.6

ஒரு துளி தேன்பாகு: 6:  ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 6, 2016

"நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்ற நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது."

என்ற ஜே.கே. யின் அணுகுமுறை மற்ற குருமார்களின் அணுகுமுறைக்கு எதிர்மறை. மதகுருமார்கள் எல்லாருமே சீடர்கள் குருவின் சொல்படி நடக்கவேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவார்கள். நாத்திகம் போதிப்பவர்களும் அவ்வாறே தான் இயங்குகிறார்கள். போதனை என்ற சொல் ஜே.கே. யின் அகராதியில் இல்லை எனலாம். 

“...ஒருவன் தன்னுடைய சூட்சும புத்தி, [Discernment] விடாமுயற்சி, ஊக்கம் [perseverance ] போன்றவற்றைக் கொண்டு தான்  தன்னை வாட்டிவரும் பிரச்சினைகளைப் பற்றிய உண்மை நிலையை க் கண்டு கொள்ளமுடியும். நம்மில் நிறைய பேர்கள், தங்களுடைய சோம்பேறித்தனத்தின் காரணமாக, தையும் ஆழ்ந்து கவனிக்க முயற்சி செய்வதில்லை...இந்தியாவில் நான் மேற்கத்திய தத்துவங்களை விளக்கிக்கூறி வருபவன் என்று கூறி வருகிறார்கள். வெளி நாடுகளில் நான் தியானத்தில் மூலம் உண்மையையும் பரம்பொருளையும் கண்டுகொள்ள உதவும் கிழக்கிந்திய நம்பிக்கையை [Oriental mysticism] விளக்கி வரும் ஒரு மதகுரு என்று கூறி வருகிறார்கள்." [நூல்: ப.12.13].

I am inclined to believe that cross-references, in a carefully selective and relevant manner, will add to the utility of this series to interested readers. Here we go.

An excerpt from an introductory  to the book: Krishnamurthy: Reflections on Self: Open Court: 1997

***
Described by the Dalai Lama as "one of the greatest thinkers of the age", Jiddu Krishnamurti has influenced millions throughout the twentieth century -- including such notables as Joseph Campbell, Dr. Jonas Salk, Aldous Huxley, Van Morrison, Bertrand Russell, Henry Miller, and Bruce Lee -- and his work continues to inspire even a decade after his death. Born of middle-class Brahmin parents in 1895, Krishnamurti was recognized at age fourteen by Theosophists Annie Besant and C.W. Leadbeater as the anticipated world teacher and proclaimed to be the vehicle for the reincarnation of Christ in the West and of Buddha in the East. In 1929 he repudiated these claims and traveled the world, sharing his philosophical insights and establishing schools and foundations.

Because Krishnamurti had no interest in presenting theories, his thought is far removed from academic philosophy in the analytic tradition, yet his insights remain extremely relevant to contemporary philosophical theories and to people who are passionately interested in understanding themselves and the world. Rather than a theorist, Krishnamurti was a seer and a teacher. He saw inherently distorting psychological structures that bring about a division in every person's consciousness between "the observer" and "the observed". This division, he believed, is a potent source of conflict -- both internally for the individual and through the individual externalized for society as a whole. Krishnamurti envisioned a radical transformation in human consciousness and offered a way to transcend these harmful structures.

Krishnamurti: Reflections on the Self is a collection of Krishnamurti's writings and lectures about the individual inrelation to society. In Reflections, he examines the importance of inquiry, the role of emotions, the relation between experience and the self, the observer/observed distinction, the nature of freedom, and other philosophical ideas.

"In my own life Krishnamurti influenced me profoundly and helped me personally break through the confines of my own restrictions to my freedom". -- Deepak Chopra, M.D.
-x-



இன்னம்பூரான் பக்கம்: II.7

ஒரு துளி தேன்பாகு: 7  ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 7, 2016

இந்த தொடர் ஒரு அறிமுகம் மட்டும் தான்.இதின் பக்கபலம்  'வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் மட்டுமே. ஜே.கே.திறந்த மனது வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். குறுக்கும் நெடுக்குமாக (cross references) வரும் மற்றவை, இடம், பொருள், ஏவல் கருதி பொருத்தப்படுபவை. அவற்றுக்கு நான் மட்டும் தான் பொறுப்பு.  

நந்தினி சுந்தர் காட்டிய மேற்கோள், இது: [ மேலதிக விவரங்கள், பின்னர்.]

ஏ.கே.ராமனுஜம் ஒரு புகழ்வாய்ந்த தமிழ் பேராசிரியர். மேன்னாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தமிழின் பெருமையை எடுத்தோதிய கன்னடத்து மேதை. அவருடைய ‘Speaking of Siva‘ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி:

இதை படித்தபின், குறிப்பாக, இறுதி வரியை படித்தபின் தற்கால இழிவு நிலையை கண்டு வருந்துவோர்களுக்கும் சரி, அரசு கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்திருப்போரும் சரி, வன்முறையில் அகம்பாவம் கொள்வோரும் சரி,பலவிதமான சிந்தனையாளர்களும் ‘எல்லாம் வந்து போகும்; எது தான் நிரந்தரம்?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்து போகலாம்.

'...The rich will make temples for Shiva,
What shall I, a poor man do?
My legs are pillars, the body the shrine, the head a cupola of gold.
Listen, O' lord of the meeting rivers,
things standing shall fall, but the moving ever shall stay...'

சிவபெருமானே!
செல்வந்தர்கள் உனக்கு ஆலயம் கட்டுவார்கள்.
நானோ ஏழை! என் செய்யலாம்?
என் கால்களே தூண்கள்; உடலே ஆலயம்; தலையே தங்கக்கீரிடம்.
சங்கமத்துத் தலைவா!
நின்றது வீழ்கிறது! நடையில் இருப்பதோ சாஸ்வதம்.

இது பஸவேந்திரா என்ற ஞானியின் வாசனா.
வாசனா தத்துவங்களை பற்றிய அடுத்தடுத்தத் துளிகளை ருசிப்பது, ஜே.கே.யை புரிந்து கொள்ள உதவலாம்.
-#-

***
இன்னம்பூரான் பக்கம்: II.8

ஒரு துளி தேன்பாகு: 8 ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 8, 2016

“வாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்” .

‘நின்றது வீழ்கிறது! நடையில் இருப்பதோ சாஸ்வதம்.’ என்ற வாசனா, ஜே.கே.  தன்னை புகழ்ந்த மேனாட்டினர் ஒருவரிடம் கூறிய கருத்தை முன் வைக்கிறது.

“ கிருஷ்ணமூர்த்தி என்ற ஒருவனை நினைவில் வைத்துக் கொள்வதினால் உலகத்திற்கு எந்த விதமான பிரயோஜனமும் கிட்டப்போவதில்லை. செம்பில் இருக்கும் பாலைப் பருகவேண்டுமே தவிர செம்பை வணங்கி வரக் கூடாது...என்னை நீங்கள் மறந்து விடுங்கள். நான் சொல்லுபவைகளை ஆழ்ந்து விசாரணை செய்யுங்கள்...” [பக்கம்: 23]

எனக்கு ஒரு அனுபவம் கிட்டியது. சென்னை வந்திருந்த ஜே.கே. பிரும்மஞான சபை தலைவர் ராதா பர்னியருடன், அந்த சபையின் பிரத்யேக கடற்கரையில் உலவ வந்திருந்தார். அந்த நிகழ்வை தற்செயலாக சில நிமிடங்கள் தொலைவிலிருந்து நான் காண நேரிட்டது. அது தான் அங்கு அவருடைய கடைசி உலவுதல். ஊடகங்களில் அது பின்னர் வெளியானது.

‘நின்றது வீழ்கிறது! ஆம். ஜே.கே.யின் பூதவுடல் மறைந்தது. 

நடையில் இருப்பதோ சாஸ்வதம்.’! ஆம். அவருடைய பயணம் தொடர்கிறது.

‘உளியினாலும், சுத்தியலாலும் சிதைக்க முடியாத வைரம் பாய்ந்த ரோஸ்வுட் கட்டையை கோடரியையும், அரிவாளையும் வைத்துக்கொண்டு உடைக்கமுடியுமா? அமுதம் போன்ற சான்றோர்களின்  வாசனா சாஸ்வதம். அழிக்க முடியாதது. அதைப்போய் வேதங்களும், ஆகமங்களும் என் செய்ய இயலும்?’

ஹேமகல்ல ஹம்பா என்ற 17வது நூற்றாண்டு சிந்தனையாளர் இவ்வாறு வினவியதின் உட்பொருள் சற்றே தெளிவுடன் இப்போது கிடைக்கிறது.
-#-

No comments:

Post a Comment