Tuesday, August 30, 2016

வெட்கக்கேடு

Innamburan S.Soundararajan

வெட்கக்கேடு


Wed, Aug 31, 2016 at 11:12 AM







வெட்கக்கேடு

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Wed, Aug 31, 2016 at 11:08 AM

வெட்கக்கேடு


உலகெங்கும், அவ்வப்பொழுது, மனிதனின் ஒழுங்கீனம், களவாணி தன்மை, கொடுங்கோல் ஆளுமை, ஆகியவற்றைப் பற்றி தகவல்கள் வருகின்றன. இந்தியாவில் அவை அதிகமாக காணக்கிடைக்கின்றன. மும்பையின் செல்வந்தர் பகுதியான கஃப் பரேட், சென்னையின் அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையின் சில பகுதிகள் தவிர, பெரும்பாலும் நடைபாதைகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால், நடக்க லாயக்கில்லை. செல்வந்தர்கள் தான், இந்த குற்றத்துக்கு தலைமை தாங்குபவர்கள். அதருமமிகு சென்னையின் ராஜபாட்டைகளில், விதிகளை மீறி, தவறான எதிர் பாதைகளில் இருசக்கரவாஹனங்கள் ஓடோடி வருவதையும், அதை கண்டும் காணாமலும் காவல்துறையினர் அசால்ட்டாக இருப்பதும், குடித்து கார் ஓட்டுபவர்கள் சகட்டுமேனிக்கு கொலை செய்வதும் கண்கூடு. இந்த பீடிகை நாமே தன் தலையில் சகதியை வாரிப்போட்டுக்கொள்வதற்கு சில உதாரணத்துளிகள்.

இனி, பெரிய விஷயத்துக்கு போவோம். ஒடிஷா மாநிலத்தின் இயற்கை வளம் அபாரமானது. அங்குள்ள காலஹண்டி மாநிலம் விவசாயத்துக்கு உகந்த செழிப்பான பூமி. ஏழையின் காஷ்மீர் என்று கூட சொல்வார்கள். அத்தனை அழகு மிகுந்த பிரதேசம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி மழை கூட உண்டு. பழங்குடிகள் ஒடிஷாவின் மண்ணின் மைந்தர்கள். அவர்கள் பெரும்பான்மையைர் என்றாலும், ஊருக்கு இளைத்த இனம். பொலாங்கீர், காலஹண்டி, பூல்பானி என்ற அண்டை மாநிலங்களுக்குக் கலைக்டர்கள் நியமனம் செய்யும்போது, ஒரு பெரிய ஆய்வே நடக்கும், அந்த காலத்தில். மனிதநேயம் மிகுந்தவர்களும், ஏழைபங்காளனுமாக இருப்பவர்களை, நிர்வாகத்தில் யதார்த்ததை புரிந்து கொண்டு விதி அனுசரணை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற பரிவு தான் அதற்கு பின்னணி. 

1977=80 களில் ஒடிஷா மாநில பழங்குடிகளின் இயற்கை வள சொத்துக்களை (கெந்து இலை, சால் மர விதைகள் வகையறா) சூறையாடிய ஒப்பந்தக்காரர்கள் மிகவும் இரக்கமற்ற கும்பல் தான் என்பதில் ஐயமில்லை.  எனினும், இந்த மூன்று மாநில கலைக்டர்கள் என்னுடைய தணிக்கை அணுகுமுறையை அனுசரித்தார்கள். நானும் ஏழைபாழைக்கு உதவும் வகையில் விதிகள் தளர்த்தப்படுவதை ஊக்கப்படுத்தினேன். அந்த காலத்தில் இருந்த இந்த நல்லுறவால், பழங்குடிகளுக்கு நன்மை செய்ய முடிந்தது, எங்களுக்கு எதிராக அநாமதேயக்கடிதங்களை ஒப்பந்த்தக்காரர்கள் அனுப்ப ஏற்பாடு செய்தாலும்.

இந்த பின்னணியில் அண்மையில் நடந்த கொடூரத்தை பாருங்கள்.மஜ்ஹி எனப்படும் பழங்குடிகள் தன்மானம் காப்பவர்கள். திரு. தானா மஜ்ஹி அவர்களின் மனைவி திருமதி.அமனா தேய் காலஹண்டி மாநில மருத்துவமனையில் இறந்தார்: காசநோய். விதிப்படி அமரர் ஊர்தி இலவசமாக தரப்படவேண்டும். ஆனால், அவர் ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டியை விட பலவீனன் ஆதலால், தன் சிறிய மகள் பின் தொடர, அவர் மனைவியின் சடலத்தை சுமந்து,  நடக்கத் தொடங்கினார். பிறகு ஏதோ உதவி கிடைத்தது. அதை விடுங்கள். அவர் தன் மனைவிக்கு முக்கியமான மூன்றாம் நாள் சடங்கு செய்யமுடியவில்லை. கலைக்டர், உதவி கலைக்டர், அந்த கழுதை, இந்த கழுதை எல்லாம் இவரை விசாரணை செய்ய வேண்டுமாம். அந்த தினம் வலுக்கட்டாயமாக் இழுத்துச்சென்று அவரையும், அவரது மகளையும் கலைக்டர் அம்மா முன்னால் ஆஜர் செய்ததும், அந்த  பெண் சிகாமணி, ‘நீ தான் உன் மனைவியை கொன்றாயா?’ என்று வினவினாராம்.

இந்த அபகீர்த்தி உலகெல்லாம் பரவ, பஹ்ரைன் முதல்வர் நிதி உதவி செய்திருக்கிறார். பழங்குடி சமுதாயங்கள், விழிப்புணர்ச்சியுடன் போராட துவங்கி விட்டனர். நாம் அவர்களுக்கு ஜே போட்டால் போதாது. நமது சமுதாய இனபேதங்களை, பேச்சில் மட்டும் இல்லாமல், செயல் மூலம் ஒழிக்கவேண்டும்.

மேலும் நம்மை கலங்கவைக்கும் செய்திகள் உளன. சொன்னால் பொல்லாப்பு!

கீழ்க்கண்ட செய்தியை படித்து, வெட்கி தலை குனியுங்கள்.



இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment