இன்னம்பூரான் சரடு 3
தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!
தோஸ்த்! வஸ்தாத் ! உஸ்தாத் !
நான் சுல்தான் கீ பப்டி என்ற ஊரில் ராஜ்யபரிபாலனம் [அசிஸ்டெண்ட் கலைக்டர்] செய்து கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாததால் ரொம்ப அவஸ்தைப்பட்டேன். லக்டி என்றால் விறகு. லட்கி என்றால் பொண்ணு. விறகு வாங்கினதில் ஒரு தாவா, ஓட்டல் ஓனருக்கும், விறகு மண்டி ஓனருக்கும். அதற்கு நியாயமான தீர்வு வழங்கினேன். ஆனால், எல்லாரும் கொள்ளைச்சிரிப்பு. லக்டீ கீ பதிலாக லட்கீ வாங்கி விற்கறதாக நான் எழுதிய அனுமார் வால் தீர்ப்பு அபத்தமாக இருந்தது. ஊர் சிரிச்சுப்போச்சு. அந்த மாதிரி தான் பஹூ என்றால் மருமகப்பெண். பஹீ என்றால் வரவு செலவுக்கணக்குப்புஸ்தகம். பஹூவை பஹீ என்று கூப்பிட்டு விட்டு, அவள் ஒரு குரல் கூக்குரலெடுத்து அழுத பின் தான் , அந்த விவாகரத்துக் கேஸே வாபஸ் வாங்கப்பட்டது. குரங்கைப்பிடிக்கப்போய் அது பிள்ளையார் பிடித்தக் கதையாகி விட்டது என்று சிலாகித்தார்கள். இது நிற்க.
அங்கு உருதுவுக்கு செல்வாக்கு என்பதால், ஜனாப் ஜலாலுதீன் சாஹேப் ‘தோஸ்த்’ ஆன எனக்கு ‘உஸ்தாத்’ ஆனார். அவர் பக்கத்து மைதானத்தில் குஸ்தி அக்காடா வைத்திருந்த ‘வஸ்தாத்’ சோம்தத் அகர்வாலை பற்றி ஒரு லோக்கல் கதை சொன்னார். அதான், ‘தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!’.
இந்த ரகசிய என்கெளண்டர் போலீஸ் வேலைக்கு மூன்று பேரும் விண்ணப்பம் செய்தனராம். காலியிடம் ஒன்று மட்டுமே.
டெஸ்ட்:
என் நிழலாகிய தோஸ்திடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து, ‘அந்த அறையில் உன் மனைவி/கணவன் இருக்கிறார். சுட்டுக்கொன்று விட்டு வா.’ தோஸ்த் அழுத வண்ணம் திரும்பி வந்து ‘சுட கை வரவில்லை.’ என்றார். அவர் நிராகரிக்கப்பட்டார். அடுத்து வந்த உஸ்தாத்துக்கும் இதே அதோகதி! வஸ்தாத்தோ வாகை சூடினார். அது எப்டி?
அவர் அந்த அறையில் நுழைந்தவுடன், சரமாரியாக குண்டுகள் வெடித்தன. பின்னர், கைக்கலப்பு சண்டைக்கான அறிகுறிகள், சத்தம், கூச்சல், அழுகை, முனகல், மவுனம். அவர் வெளியில் வந்து புகாரித்தார். ‘என்னது இது? நீங்கள் துப்பாக்கியில் வெத்துவேட்டு வைத்திருப்பதை சொல்லவேண்டாமா? சுட்றேன். சுட்றேன். நோ எஃபெக்ட். அப்றம் அடிச்சுக்கொன்னேன்.’ அவருக்கு உடனே கை மேல் வேலை.
இந்த காலத்தில் எல்லா வேலைகளிலும் ஆண் பெண் சமானம். மூவரில் யாரு யாரு எந்த பால்? ஏன்?
உடனே பதில் போடுவதாக செல்வன் சொன்னார். பேலியோ டையட் துணிவு.
கமான் செல்வன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 5, 2016
No comments:
Post a Comment