இன்னம்பூரான் சரடு 4
பொதுவுடமைக்காரர்களும், முதலாளித்துவத்தினரும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கு ஜோக்கடிப்பார்கள். அவற்றில் சில அறுவைஜோக்குக்களாக அமையும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு விமானங்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக [சென்னை தமிழில் 'கண்டிப்பாக) தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு ஹெலிகாப்டர்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.
கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! மன்னிக்க வேண்டும். என்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை தர இயலாது.
சர்தார்ஜி ஜோக்குக்கள் மாதிரி, இத்தகைய ஜோக்குக்களில் பொய் மிகைப்படுத்தப்படலாம் அல்லது நிதர்சனம் தலையை நீட்டலாம். நம்பூதிரிபாத், பி.ராமமூர்த்தி, உமாநாத் போன்ற இந்திய கம்யூனிஸ்ட்கள் சொத்தையும், வரவையும் கட்சிக்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் கொடுக்கும் குறைந்த ஊதியத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஜீவா அவர்கள் அதைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. தற்கால ரஷியாவின் அழகு பனாமா கண்ணாடியில் பிரதிபலிப்பு.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment