Friday, October 16, 2015

பாரதமாதா -1

பாரதமாதா -1




இன்னம்பூரான்
17 10 2015

வாழ்க்கையில் அருமையான தருணங்கள் கிடைப்பது அரிது. அவை நொடியில் தோன்றி அடுத்த நொடியிலிருந்து கண்ணின் பாவையாக அமைவதும் உண்டு;  மறைமூர்த்திக்கண்ணனுடன் மறைந்து உறைவதும் உண்டு. இந்தியாவில் நாட்டுப்பற்று எப்படியெல்லாம் நமது முன்னோர்களை கவர்ந்து, பாரதமாதாவின் பாதாரவிந்தங்களில்  அவரவது தியாகத்தை சமர்ப்பிவித்து, விடுதலை வேள்வியில் அர்ப்பணிக்க வைத்து, பிரதிபலன் யாதும் நாடாத தேசபக்தர்களாக அவர்களை நியமித்த வரலாற்றை தற்கால மாணவசமுதாயம், ஏன்? வயது வந்தவர்கள் கூட அறிந்ததாகவோ அல்லது அறிந்த பின் சான்றோர் வழி நடத்தலை ஏற்றுக்கொண்டதாகவோ, வரலாறும், அன்றாட சம்பவங்களும், அளவளாவுதல்களும் நமக்கு சேதி கூறவில்லை. இந்தத் தொடரின் சிந்தனை, கருத்து, நடைமுறை எல்லாமே, அந்த விட்ட குறை, தொட்டகுறை ஆகிவற்றை ‘கவனித்து’ சுருக்கமாக சில செய்திகளை சொல்வதே. வினவிய வினாக்களுக்கு, பின்னர் வரும் கட்டுரைகளில் விளக்கம் இருக்கக்கூடும். பீடிகை முற்றிற்று.

ஆனந்த மடம் என்றொரு புதினம் வாசகர்களை உலுக்கி எடுத்தது. அதன் தாரகமந்திரம்: அன்னையை வணங்குதல்: வந்தே மாதரம். எழுதியவர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்கள். அந்த பாடலுக்கு மெட்டு அமைத்துப் பாடியவர்: திலீப்குமார் ராய் என்ற பாடகர், இசையமைப்பாளர், சிந்தனையாளர். தத்துவ ஞானி. ஶ்ரீ அரவிந்தரின் அத்யந்த சிஷ்யன், லிகிதம் பரிமாரிக்கொள்ளும் சகபாடி. அவரும், உலக புகழ் பாரதரத்னா எம்.எஸ் அவர்களும் சேர்ந்து பாடிய வந்தே மாதரம் பாடலை கேளுங்கள். முழுப்பாடலையும், தமிழாக்கத்தையும் படியுங்கள். கொஞ்சம் தேசீயம் ஒட்டிக்கொள்ளட்டும். நண்பரொருவர் அனுப்பிய பாட்டைக்கேட்டால், அது நடக்கும். அனுமதி கொடுத்த அவர், பெயரை வெளியிட அனுமதித்த பின், அது கூறப்படும்.
அன்னாருக்கு நன்றி.
வினாக்களும் பின்னூட்டமும் வரவேற்கப்படுகின்றன. 

கேட்டுப்படித்து மகிழ்ந்து செயல்பட: Bankim's Vandhe Matharam  ( MS & DILIP KUMAR  ROY)


சித்திரத்துக்கு நன்றி: https://tamilandvedas.files.wordpress.com/2015/09/bharati-bharatamata.jpg?w=600

No comments:

Post a Comment