Thursday, June 25, 2015

சோத்துக்கடை




சோத்துக்கடை
இன்னம்பூரான்
25 06 2915
பூரண ஞானம் பொலிந்த நன்னாடும், புத்தர் பிரான்அருள் பொங்கிய நாடும்
பழம் பெரும் நாடாகியதும், பாருக்குள்ளே நல்ல நாடாகியதுமான நமது நாட்டின் நாடாளும் மன்றம் ஒன்று இருக்கிறது. ஆமாம். மகாகவி பாரதி சொன்ன மாதிரி, நமக்கு ஈடு இல்லை, நமது நாடாளும் மன்றத்துக்கும் ஈடு இல்லை. அங்குள்ள சோத்துக்கடைக்கு ஈடு இணை இல்லையே. ஈடு இணை இல்லையே!
ஊருக்கெல்லாம் மான்ய கட்டுப்பாடு விதிக்கும் மாண்புமிகு மத்திய அரசு, இந்த பணம் படைத்தவர்களின் (சம்பளம், இந்த படி, அந்த படி, மேல் படி, கீழ் படி, இந்த இனாம், அந்த இனாம் என்று லக்ஷக்கணக்கில் அவர்களுடைய வரும்படி.) வவுத்து பசி போக்க 14 கோடி ரூபாய் மான்யம் கொடுத்திருக்கிறது. வரவு பத்தணா, செலவு பத்து தம்பிடி என்று தடித்தனம் என்று ( தட்டச்சுப்பிழை: மன்னிப்பீர்களாக.) பாங்காகக் குடித்தனம் செய்யும் நமது பிரதிநிதிகளுக்கு Rs 41.25 செலவில் வாங்கி வேகவைத்த கறிகாய் கூட்டு நாலு ரூபாய்க்கு விற்பனை. சப்பாத்தி ஒரு ரூபாய். ஆக்கும் செலவு 77 பைசா. அதை இனாமாக கொடுத்த கூட நாலு சாப்பிடுவாங்க. தகவல் சர்க்கார் தந்தது, அகர்வால் என்பவரின் தகவல் உரிமை சட்டப்படி.

விலை பட்டியலை பார்த்தால் மயங்கி விடுவீர்கள்.
இன்னம்பூரான்
25 06 2015

சித்திரத்துக்கு நன்றி:http://www.teluguwishesh.com/images/parliament-canteen.jpg







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment