Friday, June 26, 2015

நாளொரு பக்கம் 50

நாளொரு பக்கம் 50



மன்மத வருட ஜாதகம்


Tuesday, the 14th April 2015
நன்மை மிகும் ‘மன்மத’ வருடம்
‘பிரபவ’ என்று தொடங்கி அறுபது வருடங்கள் சுழன்று சுழன்று வரும் காலச் சக்கரம் அநாதி என்க. ‘ஜெய’ வருடம் முடிந்து, மங்கலவாரம் (செவ்வாய்கிழமை) ஏப்ரல் 14 2015 அன்று ’மன்மத’ வருடம் கிருஷ்ணபட்சம் தேய்பிறை தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் சுபம் நாமயோகம் பத்திரை கரணம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 01-47 மணியளவில் சிம்மம் லக்கினத்தில் மன்மத வருடம் சுப ஜனனம். இந்தப் பஞ்சாங்கப் படனம், வருஷாந்திர பலன், வாஸ்து புருஷ வர்ணனை, புளிப்பும் இனிப்பும் கலந்த மாங்காய்ப் பச்சடி, கோயில், குளம், புத்தாண்டு வாழ்த்துகள், தீர்மானங்கள் எல்லாம் எதற்கு? மனசுக்கு சந்துஷ்டி தேடிண்டு தான். இந்த மனசு, சொன்னபடியா கேட்கிறது? இல்லை. அது சொன்னபடியா நமது நடை, உடை, பாவனை எல்லாம்?  
எல்லா தினங்களும் மங்களகரமானவை தான்.

இடைக்காட்டு சித்தர் என்றோ ஒரு நாள் வருடாரூடங்கள் பாடியுள்ளார்.

“மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மை மிகும் பல் பொருளு நண்ணுமே – மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற் காற்று மிகுதி 
கானப்பொருள் குறையுங்காண்.’’


நல்ல மழை பெய்து பல விளைவும் பெருகி உயிர்களுக்கு நன்மையுண்டு. சீன தேசத்தில் சண்டையுண்டு. தென் திசையில் காற்று அதிகமாகும். காட்டுப் பொருள் விளைவு குறைவு. வருட அதிபதி புதன் ஆவார்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://tamil.oneindia.com/img/2015/03/02-1425268813-manmatha-varudam-6069.jpg
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com







No comments:

Post a Comment