நாளொரு பக்கம் 10
Friday,the 6th March 2015
திருமால்
பக்தி ஒரு பிரவாகம். பெருக்கெடுத்தொடும் பிரவாகம். குடமுருட்டும் வேகம். அள்ளி அள்ளி பருக தெவிட்டா இன்பம் தரும் நீரோட்டம் தான் இந்த பிரத்யேகமான/சமஷ்டி பக்தி. அப்படி ஒரு காட்சி. காணக்கண் கோடி வேண்டும். ஆம். பூர்ணமாகவே சந்திரவதனம் ஆகாயத்தை அலங்காரம் செய்யும் சாயரக்ஷை சிறுபொழுது. ஆனந்தமயம். நமது விசாலமான கிருஹத்து திருமால் உலா வருகிறான். விடு தேடி வந்த பிரசன்னம்.
பரிபாடல் சங்ககாலத்துப்பாடல். ஶ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் என்றே கூட சொல்லலாம். ஊரை சுற்றிவிட்டு வந்து மஹாலக்ஷ்மிக்கும் கோதா பிராட்டிக்கும் கட்டியம் கூறிய பின்னர் தோளுக்கினியானாக ஒய்யாளி நடை நடந்து யாவரின் மனத்தைக் கொள்ளை கொண்டபோது, ஒரு பரிபாடல் செவியின்பம் பாய்ச்சுகிறது. எண்ணி பாருங்கள், ஒரு கை யாக்கை ஆன உலாவை!
நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை
-x-
No comments:
Post a Comment