‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:3
இன்னம்பூரான்
03 01 2015
குறிப்பு? யார், எப்போது, எங்கே, ஏன் என்றா கேட்கிறீர்கள்? ஊகிப்பதில் மன்னர்களும், ராணிகளும் வாழுமிடம் இது அல்லவோ?!
1.2.3....
கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
*
எல்லா கடிதங்களும் தனித்தமிழ் இலக்கியமாக அமைவதில்லை. அவற்றின் பொருள் காண்பது தான் இவ்விடத்து இலக்கிய விசாரணை என்பது பீடிகையிலேயே சொல்லப்பட்டது. இன்று சற்றே வித்தியாசமான கடிதம், ஏ.ஜி. ஆபீஸ் லீவு லெட்டர் போல: “..pain all over the body...’ மாதிரி இருந்தாலும், எள்ளல் செய்யலாகாது, இதை.
*
மதிப்புள்ள வாத்தியாருக்கு...
நேத்து ராத்திரி
என்னோட அப்பாவை
யாரோ சாதிச்சண்டையிலே
அடிச்சுக் கொண்ணு எரிச்சிட்டாங்க;
அம்மா உடம்பு சரியில்லாம
தர்ம ஆஸ்பத்திரியிலே
படுத்துருக்காங்க.
வேலை தேடி
பட்டணம் போன அண்ணன்
இன்னமும் வீடு திரும்பல;
வயசுக்கு வந்த
என்னோட அக்காவையும்
நாலு நாளா காணலே
என்னோட டவுசர்
பின்பக்கம் கிளிஞ்சி போயிருச்சி
அதனால் ஐயா
இன்று நம் பள்ளியில்
நடை பெறும் சுதந்திர தினவிழாவில்
............
என்னால் வர முடியாது
இப்படிக்கு
உங்கள் கீழ்ப்படிந்துள்ள மாணவன்
கே.குப்புசாமி”
[இது என்னால் எழுதப்பட்டது இல்லை; இரவல்].
குப்புசாமிக்கு லீவு கொடுப்பீங்களா? இல்லையா?
ஒரு எளிய இலக்கிய விசாரணை: கடிதம் உங்களுக்கு சொல்லும் செய்தி என்ன?
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://www.manithan.com/
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment