ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [2]
I am figuring out a way for simultaneous English/Tamil versions. Please bear with me till then. This is about the empty coffers in many a secret accout abroad.
என்னத்தைச் சொல்ல?! ~6
‘நாய் விற்ற பணம் குரைக்குமா?’ என்று அசட்டையுடன் அசட்டுத்தனமாக கேட்டே, பல கோடி ரூபாய்களை இழந்த ‘மகா கனம்’ஜனம், லாயத்தை விட்டு குதிரை ஓடி பற்பல மாமாங்கங்கள் ஆன பிறகு தான் அடுத்த வீட்டுக்காரன் வீட்டு லாயத்தை நோட்டம் விட்றேன் பேர்வழி என்று சால்ஜாப்புகளை அள்ளி வழங்கியது, பிற்கால அரசின் செயல்பாடாக. தற்கால அரசும் வீராப்புடன் தேர்தலுக்கு முன்னால் சவால் விட்டது. சமாளிப்போம் என்றது. ஆனால், இப்போது உச்சநீதிமன்றத்திலேயே, கை கட்டி, வாய் புதைத்து, தெனாலி ராமன் குதிரை மாதிரி ஜகா வாங்கியது. பட்டியல் கொடுத்தால் போதுமா? காசுல்ல திரும்பி வரணும். எதற்கும் பிரதமர் ‘நான் விடாப்பிடி’ என்கிறார். நல்லதே நடக்கட்டும்.
ஆனால், அப்டேட் உதைக்கிறதே. ஸ்பெஷல் டீம் [Special Investigation Team (SIT)] போட்டாங்க இல்லை. கசியும் தகவல் யாதெனின்:
- 600 அக்கவுண்ட்லெ காசில்லை, பணமில்லை, சில்லறை கூட இல்லை. பணம் படைத்து, அதை ஒளித்த பணமூட்டைகள் ரகசியமா எடுத்து வேறு எங்கேயே ஒளித்து வைத்துக்கொண்டார்கள் போல.
- 200 பெயர்கள், பாதிக்கு பாதி ரிபீட், இரண்டு தலை மண்ணுளி பாம்பா என்ன? எல்லாரும் எஸ்கேப்? இது ஒரு சிக்கல்.
- HSBC வங்கி தான் இந்த சந்தேஹோபஸ்த ஆசாமிகளை கையாண்டது. 289 கேஸ்களில் கஜானா காலி.122 கேஸ்களில் ரிபீட் மஹாத்மியம்.
- வருமானவரி துறை 628 கேஸ்களில், பாதிக்கும் குறைவாக 300 கேஸ்களில் மட்டுமே தாவா பண்ண போறாங்களாம்!
- ஒரு கேஸிலாவது அவர்கள் காசை கையாண்ட முறை பற்றிய தகவல் இல்லை.
- இருந்தாலும், இன்றைய நிலைமையில் ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்த்தான்’ என்ற வகையில், பழைய ‘இரண்டும் கெட்டான்’ உடன்படிக்கைகளை மாற்றப்போறாங்களாம்.
இன்னம்பூரான்
நவம்பர் 6, 2014
சித்திரத்துக்கு நன்றி
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
No comments:
Post a Comment