Thursday, April 10, 2014

ஆனை !: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 6

ஆனை !: வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 6

இன்னம்பூரான்
10 04 2014


  • தி.மு.க. வெளியேற்றிய மு.க. அழகிரியின் அன்பர் திரு. ஜே.கே. ரித்தீஷ் அ.இ. தி.மு.க. வில் சங்கமம். மணியோசை கேக்குது; ஆனை வருமோ?
  • காசா கொடுக்கிறாக? தருமமிகு சென்னையில் தொழிற்மையமான பாடி என்ற இடத்தில் பிரச்சார துண்டுக்கடுதாசிகளை ஒரு கவரில் போட்டு, பொறுக்கி எடுத்த சிகாமணிகளுக்கு மட்டும் அரசியல் கட்சி ஊழியர்கள் கொடுத்தார்கள். இரு தரப்பும் மவுனம். லீக் ஆன செய்தி: அந்த கவர்களை குறிப்பிட்ட இடத்தில் கொடுத்தால் கணிசமாகக் காசு பணம் தருவார்கள். பேஷ்! என் செய்வாய் தேர்தல் கமிஷனே ?
  • இந்தி எதிர்க்கும் கொள்கையிலிருந்து விலகாத தி.மு.க.வுக்கு ஆதரவாக ஹிந்தியில் பேசி வாக்கு சேகரிக்கிறார், திருமதி. குஷ்பூ. 

No comments:

Post a Comment