சிக்குபுக்கு ரயிலே! ஜிக்குப்புக்கு ரயிலே! சாக்கோபுக்கு ரயிலே…
Update
15 03 2014
இன்னம்பூரான்
15 03 2014
இன்றைக்கு கூடியும் கூடாத ஜாயிண்ட் பார்லிமெண்டரி கமிட்டி ‘புகழ்’ பி.சி. சாக்கோ அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய செய்திகள்:
1.காங்கிரசுக்கு ஊழல்களால் சோதனைக்காலம் என்று ‘சாக்கோபுக்கு ரயிலே’ ன்னு புஃப் புஃப்ன்னு ஊதினார். மாஜியாகப்போகும் பிரதமர் மீது ஒரு தாக்குத்தாக்கினார். பொருளியல் வல்லுனராகிய பிரதமர் பொருள் விளக்கம் செய்யவில்லையே ஊடகங்களுக்கு என்று பரிதாபப்பட்டார். யானும் தாம் தவறுகள் பல செய்தேன் என்று பச்சாதாபம் பட்டார். அவருடைய ‘அரசியல் இலக்கணமாகிய’ 2 ஜி ரிப்போர்ட்டை யாரும் விவாதிக்கவில்லையே என்று ‘சாக்கோபுக்கு ரயிலே’ ன்னு புஃப் புஃப்ன்னு ஊதினார்.
2. ஆ.ராசா! வா.ராசா! மத்தவங்க ஜே போடுவாங்க. நீங்க ஜீ ஜீ போடுவீங்க. முழுப்பூசணிக்காயை என்ன? பூசணித்தோட்டதையில்ல காணாம அடிச்சுட்டு, ‘அம்மா’ என்னை விமரிசிக்கக் கூடாதுன்னு, ஆடிட்டர் ஜெனெரலுக்கு என்ன தெரியும் என்று ஸ்டிஃப்பா டோஸ் கொடுத்து விட்டு ஜிக்குப்புக்கு ஜிக்குப்புக்கு ரயிலே.. னு ஜட்புட் ஜட்புட் னு எக்காளமிட்டார்.
3.ஊடே புகுந்த ஊடகம் ஒன்று: டிபாசிட் கூட கிடைக்காமல் அல்லாடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். முதல் தேர்தலில் 40 % டிபாசிட் இழந்தார்கள். அது ஏறிக்கிணே போவது மீட்டர் வட்டி மாதிரி. 11வது தேர்தலில் 13,952 வேட்பாளர்களில் 12,688 ஆசாமிகள் டிபாசிட் இழந்தார்கள். இதான் ஐயா பிரதிநிதித்துவம்! 2014ம் வருடம் அரசுக்கு எத்தனை வரவோ?
4.ஒரு ஊடகூகம்: பிஜேபிக்கு 195 சீட் கிடைக்குமாம். ஆனால் அதன் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. ததிங்கணத்தோம். ஆனால், விஜயகாந்த் இன்னிக்கு ஆபத்பாந்தவனாக வந்தாரே. நாளை என்ன நடக்குமோ, நானறியேன். காங்கிரஸ் கூட்டணிக்கு 129 ஆம். ஆனால் அதன் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. ததிங்கணத்தோம்.
5.காங்கிரஸ் பேரிகை தமுக்கவில்லை. 21ம்தேதி சிக்குபுக்கு ரயிலின் சங்கு ஊதுமாமே?
Image credit:http://img1.dinamalar.com/admin/Bookimages/44426.jpg
No comments:
Post a Comment