தனி நபர் மஹாத்மியம் [1]
திருமதி. அப்ராமோவிட்ஸ் (Sheppie Glass Abramowitz) ஒரு தனி நபர் படை. உலகளவில் அகதிகளை மீட்டு புத்துயிர் அளிப்பதில் 17 வருடமாக செயல்ப் படுகிறார். தவிப்பவர்களுக்கு பரிந்து பேசி, ஆகவேண்டியதை செய்வது ஒரு கலை; பயிற்சி; பணி; மனநிறைவு. அதற்கு அட்வகஸி என்று பெயர். அமெரிக்க அரசுக்கு இவ்வகையில் அகதிகளுக்கு அவர் செய்த பரிந்துரைகளும், அவற்றின் வெற்றியும் போற்றத்தக்கவை. தனியார் துறைகளுடனும், தன்னார்வக்குழுக்களுடன், அவர் இணைந்து செய்த தொண்டுகளின் புகழ் ஓங்கி நிற்கிறது. 1979-இல் பல்லாயிரக்கணக்கான கம்போடிய அகதிகள் தலை தெறிக்க ஓடோடி வந்த போது, இவர் ஓடோடி செய்த அவசர உதவிகளுக்கு, உலகம் கடன் பட்டுள்ளது. தற்பொழுது, அவர் பெண்ணின அகதிகள் கமிஷனர்.
தகவல்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக்த்தின் சட்டம்பள்ளி.
இன்னம்பூரான்
11 03 2014
பி.கு.ஆண் தனி நபர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.
சித்திரத்துக்கு நன்றி: http://www3.law.harvard.edu/orgs/womeninspiringchange/files/2014/02/Sheppie-Abramowitz.jpg
No comments:
Post a Comment