Wednesday, January 8, 2014

தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?



தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
1 message

Innamburan S.Soundararajan Wed, Jan 8, 2014 at 10:09 PM




‘...தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?...’

முதுமொழிகளும், அழமொழிகளும், புதுமொழிகளும், சொலவடைகளும் ஆங்காங்கே உரையாடல்களிலும், சொற்பொழிகளிலும், உரை நடைகளிலும் பயின்று வந்தாலும், மஹாகவி பாரதியார், திரு.வி.க. போன்றோர்களின் சொல்லாற்றால் மனதை கவ்வி, உள்ளத்தைக்கொள்ளை கொண்டு, இதயத்தை உருக்கி, தமிழார்வத்தை பெருக்கி நம்மை ஆட்கொள்ளுவதை காண்கிறோம். அந்த வகையில் அரைவட்ட ஆலோசனை மன்றத்தின் தனிக்காட்டு ராசாவும், நாகராஜன் என்ற புனைப்பெயரும் கொண்ட வித்தகர் சக்ராதிபாதி மேதகு இம்சை அரசன் அவர்கள், ‘மின் பாணனின் மின்னுலகாற்றுப்படை’ என்ற அற்புத இலக்கியத்தில், ‘தாளம் படுமோ? தறி படுமோ’ என்ற மஹாகவி பாரதியாரின் சொற்றொடரை உகந்தவாறு பதித்து எம்மை ஆட்கொண்டார். 
இனி பேசும் தமிழில் ஒரு உரையாடல்: அப்பனுக்கும் பிள்ளைக்கும்:
பி: அப்பா! ஒரு பத்தாயிரம் ரூபாய் வேணும். கொடேன். ஊம்ம்ம்!
அ: என்னடா! உங்கப்பன் கச்சா எண்ணையும் விக்கலை. ஆதர்ஷ் கொடையிருப்பும் வாங்கல்லெ.
டில்லிலெ தண்ணியும் ஊத்தலெ. மனை வாங்கி விக்கலெ. எங்கேயிருந்து கொடுப்பேன்? 
பி: டியரப்பா! நான் ஒரே பிள்ளை. வாரிசு. ஒரு ஜாலி செலவுக்கு உதவாத அப்பனும் அப்பனா? நீ தான் கச்சா எண்ணெய்காரனுக்கு கண்டிஷன் போட்றே. நீலாங்கரைலெ பினாமி மனை நாலு வாங்கி வச்சுருக்கே. டில்லிலெ தண்ணி ஊத்தாட்ட என்ன? இங்கே டாஸ்மாக் ஆறு நீ தானே வச்சுருக்கே. ( மொபைலில் கால் வந்துருக்கு; அன்னாண்டே போய் பேசறான். அதற்குள் அப்பன்காரன் ஜேப்பில் இருந்த நோட்டுக்கட்டை மேஜை டிராயரில் பதுக்கிறான். பையர் அதை பாத்துக்கினாரு.)
பி: அப்பா! என் அப்பா! ஃபோனில் அனுஷா பேசினா. அவ பிறந்த நாள் பார்ட்டிக்குத் தான் பணம் கேட்டேன். அவ ஃப்ரெண்ட் மார்கரெட் அமெரிக்காலேருந்து வர்ரா. பார்ட்டி தாஜ்லெ. லக்ஷம் ரூபாய் ஆயிடும். மொத்தம் இருபது பேர் வராங்க. (சுவாதீனமாக போய் மேஜை டிராயரை திறந்து லக்ஷம் லவட்டினான். அப்பன் கை, கன்னத்தில்
அப்பத்தான் சிவகாமி பாட்டி வந்து சொல்றாள்:
‘எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். நீ ஜமாய்டா பேராண்டி! எதுக்கும் அந்த மார்கரெட்டை பத்தி எங்கிட்ட சொல்லு.’ 
தன் மகனிடம்: ஹூம்! உனக்கென்ன ராசா! கடலலை எண்ணச்சொன்னாக்கூட காசு பாத்துடுவே.
தாளம் படுமோ? தறி படுமோ?


கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு துளிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5
ஒன்றே யதுவாய் உலகமெலாந்தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
நாளொன்று போயினது; நானு மெனதுயிரும், 10
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்,
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், 15
புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் 20
சென்றுநான் பார்க்கையிலே செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்
மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்
~ மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.
பி.கு. சித்திரத்தின் பின்னணி என்ன? முதலில் பதில் சொன்னால் தாளம்; அடுத்த பதிலுக்கு: தறி.

இன்னம்பூரான்
08 01 2014

No comments:

Post a Comment