'அண்ணல்' காந்தி வாங்கிய லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும்... [2]
நம்முடைய ஸ்பெஷல் ட் ராஃபிக் ராமசாமி, ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவால், அவரது குருநாதர், யோகா டீச்சர் ஆகியோர் போல சிலர் தகவல் உருவும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டால் தட்டிக்கேட்கும் மனப்பான்மையுடையோர்களில் ஒருவர் தான் 'அண்ணல்' காந்தி . ஒரு சில்லறைக்கடைக்காரர், அதிகாரி லைசன்ஸ் தரமறுக்கிறார் என்று அவரிடம் புகாரித்தார். இலை மறைவு காய் மறைவாக, அதிகாரி மீது லஞ்சக்குற்றம் சொல்வது போல சொல்லாமல் சொன்னார். நம் 'அண்ணல்' காந்தியும் விரைந்து சென்று அதிகாரியை தட்டிக்கேட்க, அவர் சமாதானமாக, 'பள்ளிக்கூடம் அருகே புகையிலை விற்பது சட்ட விரோதம்' என்றார். நம்மடவர் பலமாகவே தட்டிக்கேட்கவே, பயந்த அதிகாரி உரிமத்தைக் கொடுத்து விட்டார். இவரை வீட்டில் கொண்டு வந்த கடைக்காரர், கை குவித்து நன்றி கூறி பழங்களும், மிட்டாயும் நிறைந்தக் கூடையை, வலுக்கட்டாயமாகக்கொடுத்தார், ஆவலுடன் பழங்களை அடுக்கி வைத்த மருமகள் கையில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது; உள்ளே சலவை நோட்டு ரூபாய் 500/-. புளகாங்கிதம் அடைந்த அவள் புடவை வாங்க ரூபாய் 300 ஐ ரவிக்கைக்குள் நுழைத்துக்கொண்டு, ஹெல்மெட் வாங்கிக்கொள்ள சகதர்மிஷ்டனிடம் ரூபாய் 200 கொடுத்து, பையனிடன் பத்து ரூபாய் கொடுத்தாள், மிட்டாய் வாங்க. அதற்குள் வந்த மிட்டாய்களை அவன் ஸ்வாஹா பண்ணி விட்டான். அவளும் மாமனாருக்கு கும்பகோணம் டிகிரி காஃபி கொடுத்து பலமாகவே அவரை உபசரித்தாள். இரவு வேளையா! அவர் பாயை விரித்துப்படுத்தார். உறக்கம் வருமோ? அவரோ கடமையே கண்ணாயினார் ஆவர். வாய்மையின் சுபுத்திரன். அந்த வீட்டில் அசுப ஜெனனம் மூன்று, அன்று:லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும். அவற்றின் கரு 'அண்ணல்' காந்தி உருவெடுத்த தினம். சுபாஷிணியின் சினம் புரிகிறது. இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் ஊற்று, இது தான். ஒரு அன்பளிப்பு நஞ்சாகி விட்ட சமாச்சாரம். முழுதும் எழுதி விட்டால், சுபாஷிணியின் சினம் தணிந்து விடும். அண்ணல் என்ற சொல், அடைப்புக்குள் இருப்பதால், நான் மஹாத்மா காந்தியை பற்றி இதை எழுதவில்லை என்பது தெளிவு. முழுதும் எழுத முடியவில்லை. கை வலி. நேரமின்மை. இப்போதே நடு நிசி நெருங்குகிறது. எனக்கும் உறக்கம் வரப்போவதில்லை. காலை 5 மணிக்கு எழுந்தால் தான் அலுவல்களை கவனிக்க முடியும்.
பொறுத்தாள்க.
(தொடரும்): 24 09 2013 அன்று.
இன்னம்பூரான்
No comments:
Post a Comment