Friday, October 14, 2011

அன்றொரு நாள்: அக்டோபர் 8.1

அன்றொரு நாள்: அக்டோபர் 8.1

இன்று நம் விமானப்படை தினம். இந்திய விமானப்படை துவக்கிய தினம்: அக்டோபர் 8. 1932, ஆறு அதிகாரிகளுடனும், 19 ஊழியர்களுடனும், நான்கு சிறிய விமானங்களுடன். முதல் விண் போர் 1937ல், வடக்கு வஸிரிஸ்தானில். நாளொரு சின்ன மேனியாகவும், பொழுதொரு நுண்ணிய வண்ணமாகவும், மெல்ல மெல்ல வளர்ந்தது. ஆகஸ்ட் 1941ல் தான் புது வரவுகள் இடம் பெற்றன. இந்திய விமானப்படைக்கு முதல் சவால், பர்மாவில் ஜப்பானுடன் போரிட நேர்ந்த போது. இன்னல்களும், நஷ்டங்களும் அதிகம் என்றாலும், ரங்கூன் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி இருந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை என்பதில் ஐயமில்லை. 1942ல் நிறுவப்பட்ட பத்து பயிற்சி மையங்கள் அடுத்த ஆகாய மைல் கல். 1943 வருகை தந்த அமெரிக்க ‘பழிக்குப் பழி’ விமானங்கள் பெரிதும் பேசப்பட்டன, பிரச்னைகள் பல இருந்தாலும். 1944ல் ஹரிக்கேன்/ஸ்பிட்ஃபையர் விமானங்களுடன் பத்து விமானப்படைகள் இயங்கின. ரங்கூன் மே 3, 1945 அன்று கை வசம் ஆக்கும் பணியில் இந்திய விமானப்படை திறனுடன் இயங்கியது. ஆனால், தூசிப்படையின் உதவிக்கரமாகத்தான் கருதப்பட்டது. மார்ச் 1945 காலகட்டத்தில், இதன் முக்கியத்துவம் உணர்ந்து ‘ராயல்’ விருது. ஐந்தே வருடங்களில் அது காணாமல் போய் விட்டது! ஆகஸ்ட் 1947 காலகட்டத்தில் 1600 அதிகாரிகள், 27000 ஊழியர்கள். அக்டோபர் 27, 1947 அன்று காஷ்மீரில் சுதந்திர இந்தியாவின் விமானப்படைக்கு ஆகாயப்போர் வெள்ளோட்டம், அருமையாக நிறைவேறியது. இந்தோ-சீன போரின் போது, நமது விமானப்படை எல்லா சவால்களையும் சந்தித்தது, திறனுடன். 1965 ல் நடந்த இந்தோ-பாகிஸ்தான் போரில் வாகை சூடியது, நம் விமானப்படை. ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் அவர்களால் ஏப்ரல் 1, 1954 அன்று கெளரவிக்கப்பட்ட நம் விமானப்படையின் முதல் இந்திய தளபதி ஏர் மார்ஷல் முகர்ஜி. தபால் தலையில் இருக்கும் நாட் விமானம் சும்மா புகுந்து விளையாடும் ரகம்.

இன்னம்பூரான்

pastedGraphic.pdf08 10 2011

http://www.indianarmedforcesthroughstamps.com/temp/25.jpg


பி.கு. உசாத்துணை ஒரு அதிகாரபூர்வமான இணையதளம். அலுப்பும், சலிப்பும் தட்ட, உறக்கம் வர அதை படித்தால் போதும். நத்தை வேகத்தில் கழுகு புராணம்! அதை படித்து, இதை பிடித்த எனக்கு மின் தமிழர்கள் பரிசுகள் பல அளிக்கவேண்டும்! என்ன சொல்றேள்?

உசாத்துணை:

http://indianairforce.nic.in/


No comments:

Post a Comment