Google+ Followers

Thursday, April 24, 2014

அமைதிச்சாரல் : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருக்கிடிச்சு ! : 13

அமைதிச்சாரல் : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருக்கிடிச்சு ! : 13இன்னம்பூரான்
24 4 2014

தமிழ்நாட்டில் இன்று நடந்து முடிந்த தேர்தல், அசம்பாவிதம் ஒன்றும் இல்லாமல் நடந்தேறியதாக செய்தி. ஆனால் மதியம் மூன்று மணி வரை 60% மட்டுமே. (update: @ 5pm: 70%) வங்காளத்தில் 80%, மத்ய பிரதேசத்தில் 59%, ராஜஸ்தானில் 56%, ஆனானப்பட்ட உத்தர பிரதேசத்தில் 55%, மாலை ஐந்து மணி வரை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மதியத்திற்கு மேல் மந்த கதி என்று கேள்வி. கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை போன்ற சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் சற்றே மக்கார் செய்தன. மொத்தத்தில் தேர்தல் கமிஷனின் ஆளுமை, மேலாண்மை, பாரபக்ஷமின்மை, திறன், நடைமுறை சிக்கலவிழ்ப்பது பற்றி பெரும்பாலோர் சிலாகித்தனர். இன்று சினிமா தியேட்டர்கள் கூட மூடப்பட்டன. ஷரத்து 144 போட்டது நலனே. கள்ளுக்கடையை மூடியதும் நலனே. இதில் உள்ள படிப்பினையை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை. 550 லக்ஷம் வாக்காளர்கள் உள்ள் 61,000 வாக்குச்சாவடிகளில், 9000 சாவடிகளுக்கு அதிக பாதுகாப்பு தேவை என்ற கணிப்பு. ஆயினும், சராசரி பாமரர்கள் ஆன அரசு ஊழியர்கள் செவ்வனே அவரவரது கடமைகளை செய்ததற்கு நன்றி கூறுபவர்கள் தென்படவில்லை. 
தேர்தல் கமிஷனின் அரசாங்கத்தை மெச்சத்தான் வேண்டும். சில சமயம், தேர்தல் கமிஷனையே மக்கள் பிரதிநிதியாக பாவித்து, குடியரசை அவர்கள் கையில் ஒப்படைக்கலாம் என்ற நப்பாசை கூட எழுகிறது என்ற பேச்சு அடிப்பட்டது. புதிய பாராளுமன்றமும், சட்டசபைகளும் தேர்தல் ஊழியர்களுக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அத்தகைய பேச்சு அடிபட்டாலும், எடுபடாது என்பது தெரியும். அண்டைக்காலம் வரை தேர்தலில் வாகை சூடிய மக்கள் மன்னர்-பிரதிநிதிகளில், மக்கள் நலனுக்கு பாதகம் விளைவித்தவ்ர்களை இனம் கண்டு கொண்டாலும், சாதி அடிப்படை தான் ஆணிவேர் என்றாலும், மக்கள் அவர்களுக்கு வாக்கு அளிப்பது கண்கூடு. வாக்களிப்பில் நேர்மை இருக்க வேண்டும் என்ற பிரசாரங்கள் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் புகழக்கூடிய வகையில் அமைந்திருந்தாலும், காசு பணம் புரண்டது, ஆங்காங்கே என்பதும் உண்மை. பறிமுதல் புள்ளி விவரங்களை பார்த்தால், எல்லா கட்சிகளும் காசே தான் கடவுளடா என்று செயல்பட்டதாகத் தெரிகிறது. கூட்டணிகள் கேலிக்குரியவை. கீரிப்பிள்ளை பாம்பை வாழ்த்துகிறது; பாம்பு கீரிப்பிள்ளையை வாழ்த்துகிறது. சகோதர போர்க்களம் தாய்க்கட்சியை குலைத்து விடும் என்று அஞ்சுகிறார்கள். ஆளும் கட்சி தனித்து நின்று போட்டியிடுகிறது. காங்கிரஸ்ஸும் அப்டியே!  ஆனால், நிர்க்கதி பொருட்டு. பி ஜே பியும் ஆம் ஆத்மியும் இறக்குமதிகள். ஆனாலும் மோடி, மஸ்தானாகத்தான் உலவினார். நீங்கள் எந்தக்கட்சியின் பிரகடனங்களை படித்தாலும், குழம்பிப் போவீர்கள். கொள்கைகள் தென்படவில்லை. தூஷணைகள் பறந்த வண்ணம்.

இறை துணை வேண்டும்.
அடுத்த இடுகை, நாடு முழுவதற்கும் தலை விதி அறிவிக்கப்பட்ட பின்.
சித்திரத்துக்கு நன்றி:http://nandhavanam.files.wordpress.com/2010/09/innocent-baby-boy-sleeping.jpg