Google+ Followers

Saturday, March 16, 2013

அன்றொருநாள்: மார்ச் 16 பிழிந்தெடுத்த மொழி
அன்றொருநாள்: மார்ச் 16 பிழிந்தெடுத்த மொழி
4 messages

Innamburan Innamburan Thu, Mar 15, 2012 at 6:31 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 16
பிழிந்தெடுத்த மொழி
எனக்கென்னெமோ தெருவில் நம்ம வீட்டு முகப்பு தான் கம்பீரமாக படுகிறது. அடுத்த வீட்டு இஸ்மாயிலும் தன் வீட்டை பற்றி இப்படி தான் அருமை சாற்றுகிறான். அன்னையின் கூறைப்புடவையை (திருமணப்புடவை) அருமை மகள் போற்றி பாதுகாப்பது போல், தாய்மொழியை போற்றுபவர்கள் அதனுடைய எழுத்துருவை பேணுவது இயல்பே. உடனே கிரந்தம், தேவநாகரி, தமிழ் எழுத்து என்று நான் கோதாவில் இறங்கப்போவதாக நினைத்து, கத்தி தீட்டவேண்டாம். மூன்று எழுத்துரு தளங்களையும் போற்றுபவன் நான். நான் சொல்ல வரும் விஷயம், லிதுவேனியாவில் ‘புத்தகங்களை கள்ளக்கடத்தல் தினம்‘ என்று மார்ச் 16ம் தேதியன்று விழா எடுப்பதின் ‘பிழிந்தெடுத்த மொழி‘ பின்னணி.   
அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21:தாய்மொழி’ என்ற இழையில், லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டது பற்றி பேசப்பட்டது.  தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும் என்ற கருத்தும் வரலாற்றுப்பாடமாகக் கூறப்பட்டது.
ரஷ்யாவின் மேலாண்மைக்குட்பட்ட சுற்றுவட்டாரங்களில் ஒன்றாகிய லிதுவேனியா, அந்த ஆதிக்கத்தை எதிர்த்து 1863ல் முரண்டு பிடித்தது, மக்களின் தேசாபிமானத்தின் தாக்கத்தினால்.  ஆணிவேரான மரபை கழித்து, கட்டி காக்கும் ரோமன் கத்தோலிக்க சமயத்தை இழித்து, லிதுவேனியாவை அடக்கி ஆள, ரஷ்யா ஒரு உத்தியை கையாண்டது. அதாவது, 1866 ஆண்டு ஒரு மட்டமான சட்டம் போட்டது: ‘லத்தீன் எழுத்து தடை செய்யப்பட்டுள்ளது. இனி லத்தீன் எழுத்து செல்லுபடி ஆகாது. ரஷ்யா விரும்பும் சிரிலிக் எழுத்துக்களில் தான், இனி லித்துவேனிய மொழி வழங்கும்.’ ஜார் மன்னனின் வாய்மொழி ஆணை: இனி லத்தீன் எழுத்தில் எழுதக்கூடாது. இது சட்டரீதியான தடை இல்லாவிடினும் 1904 வரை, தடை இருந்தது. அதை மீற ஒரே வழி: கள்ளக்கடத்தல். லத்தீன் எழுத்துருவில் லிதுவேனிய மொழியில் எழுதப்பட்ட நூல்களை அவ்வாறு கடத்தி வருபவர்களுக்கு அபராதம், நாடு கடத்தல். ஸைபீரியாவில் கடுங்காவல் எல்லாம் உண்டு. சுட்டுக்கொலையும் நடந்திருக்கிறது. 
1867லியே, சமோகிதியாவின் பிஷப் மோடிஜெஸ் வாலான்ஷியஸ் அவர்கள் தான் இந்த சட்டவிரோத இயக்கத்தின் தூண்.1900ம் ஆண்டு காலகட்டத்தில் வருடம் தோறும் முப்பது/நாற்பது ஆயிரம் நூல்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டன. நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும், அவை காணப்பட்டன. எங்கெங்கும் தன்னார்வக்குழுக்கள். லத்தீன் மொழி தடை உதவாக்கறை சட்டம் என்பதை புரிந்து கொண்ட ரஷ்யா, சாக்கு போக்குச் சொல்லி, அதை நீக்கியது, 1904ம் வருடம். அடுத்த வருடமே, ஜுவோஜாஸ் மஸியுலிஸ் ஒரு புத்தகக்கடையை திறந்தார். நூறு வருடங்களுக்கு மேலாக அந்தக்கடை, இன்றும் இயங்கிவருவதாக, விக்கிப்பீடியா கூறுகிறது. 
இந்த மாதிரியான சுதந்திர போர்கள் ஸோவியத் ரஷ்யாவுக்கு பிடிக்குமா? அவர்கள் இந்த வரலாற்றை மூடி மறைத்தனர். ஸோவியத் ரஷ்யாவின் மரணத்துக்குப் பிறகு, மார்ச் 16, 1846 அன்று பிறந்த புத்தக கள்ளக்கடத்துனர் ஜுர்கிஸ் பியலினிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக, ஒவ்வொரு வருடமும், மார்ச் 16ம் தேதி ‘புத்தகங்களை கள்ளக்கடத்தல் தினம்‘(Knygnešio diena) கொண்டாடப்படுகிறது.
அது சரி. லிதுவேனியாவின் ‘பிழிந்தெடுத்த மொழி’ தகவலால், நமக்கு என்ன ஆதாயம் என்று சிலர் கேட்கலாம். மக்கள் சக்தியை பிரதிபலிக்கும் வரலாறுகளை இந்தியாவின் வருங்கால தலைவர்களாவது அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசாபாசம் தான். வேறு என்ன?
இந்த இழைக்காக ஆய்வு தொடங்கும்போது, மின் தமிழில், திரு, தேவ், சில மொழிகளின் எழு(டு)த்துக்காட்டுக்களை (கல்யாண்ஜி சொல்றமாதிரி) பதிவு செய்தார். அவருக்கு நன்றி கூறி, அவற்றை, இங்கு இணைக்கிறேன். பேராசிரியர், தமிழ் லிபி ப்ராம்மி/இண்டஸ் லிபிகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்கிறார். .
தேவ நாகரி லிபி:
क्रमेण गत्वा हेमकूटम्, आसाद्य गन्धर्वराजकुलम्, अवाप्य कन्यान्तःपुरम्,
श्रीमण्टपस्य मध्यभागे नातिमहतः पर्यङ्कस्योपाश्रये
धवलोपधानन्यस्तभुजलतावष्टम्भेनावस्थितां
सर्वरमणीयकानानामेकनिवासभूतां कादम्बरीं ददर्श।

போஜ்புரி, ஹிந்தி, மராடி, அவதி, பஹாடி, கொங்கணி,
மைதிலி, மார்வாடி, பிலி, நேவாரி,  போன்ற மொழிகளும்
தேவ நாகரியைக் கையாள்கின்றன;

ஸாந்தலி, ஸிந்தி,டோக்ரி, ஷெர்பா
மொழிகளையும் சிலர் தேவநாகரியில் எழுதுவர்.
காச்மீரத்தின் ஹிந்துக்கள் காச்மீரத்தை
தேவ நாகரியில் எழுதுவர்.
*
குஜராதி (ஷராஃபி) லிபி:
મારૉ નામ દેવરાજ છે
કોઈ કાળે કેટ્લાક કલાપી કલા કરતા કુદાકુદ કરે કુદાકુદ કરી કેકારવ કરતા
કોઇ કલાપી ના કપાયેલાં કલગી
કલાપ કાગડે કયાંકથી કબ્જે કર્યા. કપાયેલા કલગી કલાપથી કાયાને કલાત્મક કરી
કાગડ કાવ્યસભમા કુચ કરી .
કાવ્યસભામા કોયલના કર્ણમધુર કુંજનની કાબર , કબુતર ,કુંજડે કદર કરી.કલાપી
એ કળા કરી કલાન્રુત્ય કર્યુ.
કલાપીની કલાથી કોયલે કલ્લોલથી કલશોર કર્યો.કલાપીની કેળા કેરીથી કદર કરી.
કેવળ કુદાકુદ કરતા
કલાપીની કદરથી કાફર કાગડો કોચવાયો.

சிறுபான்மையராகிய பார்ஸிகளின் பேசும்‘அவெஸ்தன்’
மொழியும் குஜராதி லிபியில்தான் எழுதப்படுகிறது;
10ம் நூற்றாண்டில் முகமதியர் தாக்குதலுக்கு
அஞ்சி ஈரானிலிருந்து கப்பலேறி வந்த இவர்களுக்கு
குஜராத் அடைக்கலம் அளித்தது.


சாரதா லிபி -
ப்ராமிலிபியிலிருந்து தோன்றியது;
இந்த லிபி குர்முகி தோன்றுவதற்கு வழிவகுத்தது.
*
குருமுகி (அ) குர்முகி லிபி:
ਤਿੱਖੇ ਪੰਜੇ ਦੀ ਪਾਮੇਂ ਰਕਾਬੀ
ਤੁਰਦੀ ਨਾਲ ਮਿਜਾਜਾਂ
ਲੜ ਕੁੜ੍ਹਤੀ ਦੇ ਬਾਂਹ ਨਾਲ ਉੱਡਦੇ
ਨੰਗੀਆਂ ਹੋ ਗੀਆਂ ਢਾਕਾਂ
ਪੰਜ ਸੱਤ ਕਰਮਾਂ ਭਰਗੀ ਖੁਸ਼ੀ ਵਿੱਚ
ਮਗਰੋਂ ਪੈਂਦੀਆਂ ਹਾਕਾਂ
ਕਰਾਂ ਅਰਜੋਈਆਂ ਮਿਲਜਾ ਪਟੋਲਿਆ
ਗੁਜ਼ਰ ਗਈਆਂ ਬਰਸਾਤਾਂ
ਨੀ ਦਿਲ ਮਿਲ ਗਿਆਂ ਤੋਂ
ਕਾਹਨੂੰ ਪਰਖਦੀ ਜਾਤਾਂ

ஷாமுகி லிபி
کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں

குருமுகி - குருமொழி
ஷாமுகி - அரசமொழி


*

வர்ரட்டா?
இன்னம்பூரான்
16 03 2012
Inline image 1
உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Mar 16, 2012 at 8:05 AM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan

வர்ரட்டா?
இன்னம்பூரான்//

தினம் தினம் வந்து இது போன்ற அரிய தகவல்களைத் தரவேண்டும்.

On Fri, Mar 16, 2012 at 12:01 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 16
பிழிந்தெடுத்த மொழி

கி.காளைராசன் Fri, Mar 16, 2012 at 3:44 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம் 

2012/3/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நூறு வருடங்களுக்கு மேலாக அந்தக்கடை, இன்றும் இயங்கிவருவதாக, விக்கிப்பீடியா கூறுகிறது. 
மொழிகள் பற்றி அறிஞர்கள் ஆராய்ந்து வரும் இந்நேரத்தில் அரியதொரு வரலாற்றுத் தகவலை வழங்கியதற்கு நன்றி ஐயா.
இதெல்லாம் நீங்கள் சொல்லித்தான் அறிந்து கொள்கிறோம்.

அன்பன்
கி. காளைராசன்


DEV RAJ Fri, Mar 16, 2012 at 5:01 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
இன்னம்பர் ஐயா இண்டு இடுக்குகளில்
நுழைந்து செய்தி திரட்டுகிறார்;
உலகில் 7,358 மொழிகள் தற்போது உள்ளதாகவும்
அவற்றில் 90%, 2050க்குள் அழிந்து விடும்
என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
யூதர்கள் பரிசிரமப்பட்டுத்  தம்
தாயகத்தையும், தாய் மொழியையும்
மீட்டுப் பேணுகின்றனர்


தேவ்

On Mar 15, 11:31 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
> கள்ளக்கடத்தல் தினம்‘(*Knygnešio diena*) கொண்டாடப்படுகிறது.
>