Friday, May 10, 2013

தண்டோரா! ~3




 தண்டோரா! ~3

Innamburan Innamburan Sat, Feb 4, 2012 at 12:40 PM

thandora.jpg
மீண்டும் தண்டோரா!
ஹெச்சரீக்கா! மீண்டும் தண்டோரா! தண்டோரா-4 பெங்களூருலேயிருந்து தோம்! தோம்! னு மேளதாளத்தோட/பாண்டு வாத்தியத்தோடெ, தூள் கிளப்பிக்கிணு வந்த் கொண்டே இருக்கு. அப்டேட் கம்ப்ளீட்டு.
இன்னம்பூரான்
10 05 2013
2ஜி உரிமங்களை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்வு ஆட்சிபீடத்தை ஆட்டிவிட்டது என்றாலும், நொண்டி சாக்குகளும், சால்ஜாப்புகளும் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. எந்த அமைச்சரோ, பிரதமரோ ராஜிநாமா செய்வது பற்றி, அதிகார வட்டங்களில் பேச்சு எழவேயில்லை. இங்கிலாந்தில் முந்திய ஆட்சியின் உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளங்கட் பதவியிலிருந்து விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: தன் ஆசைக்கிழத்தியின் தாதியின் பயண அனுமதி பற்றி லேசாக விசாரித்தது. அவருடைய காதலை பற்றி யாருக்கும் கவலையில்லை. இங்கிலாந்து போற்றும் க்யூ முறையில் எட்டிப்பார்க்க முயன்றது; அதுவும் அவருடைய துறை அதிகாரிகளிடம் தான் விசாரித்தாராம்.
ஃபெப்ரவரி 3, 2012 அன்று இங்கிலாந்தில் க்ரிஸ் ஹூஹ்னெ என்ற அமைச்சர் விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: இங்கிலாந்தில் போக்குவரத்து விதிகளை மீறினால், கடுமையான தண்டனை, காரோட்டும் உரிமத்தில் குற்றம் பதிவு செய்து, மைனஸ் மார்க் போடப்படும். ஓரளவுக்கு மேல் மீறினால், கார் ஓட்டும் உரிமமே ரத்து செய்யப்படலாம். க்ரிஸ் ஹூஹ்னெ 2003ல், விதித்த வேகத்தை மீறினார். உரிமம் பறி போகுமோ என்ற அச்சத்தில், தன் மனைவி (இப்போது மாஜி) விக்கி ப்ரைஸ்ஸை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார். அவள் இப்போது குட்டை உடைத்து விட்டாள். போலீஸோ இருவரையும் தண்டிக்க ஹேது இருக்கிறது என்கிறது. குற்றச்சாட்டு: ்க்ரிஸ் ஹூஹ்னெ பொய் சொல்லிவிட்டார்; எங்களுக்கு பொய் சொன்ன அமைச்சர் வேண்டாம்.
என்னே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்!
இன்னம்பூரான்
04 02 2012
சித்திரத்துக்கு நன்றி:http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/thandora.jpg
பிரசுரம்: வல்லமை

No comments:

Post a Comment