Google+ Followers

Thursday, May 9, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா!

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா! 
Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 4:09 PM


02 03 2010
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா! 
Inline image 1

டில்லிக்கு வந்தேனா! காலம்பறப்பார்த்த அஞ்சாறு தலைகள் எனக்கு; பத்தும் ஆச்சு கூடிய சீக்ரம். நானே அன்டர்செக்ரடரி: (ஆயுதங்கள் + தளவாடங்கள் + நிதி ஆளுமை + யுத்தக்கையேடு + தணிக்கைத்தொடர்பு + பொதுக்கணக்குக்குழு வேலைகள் + நாடாளுமன்றக்குறிப்பு எடுப்போன் + விஞ்ஞான ஆலோசகர் நடத்தும் விவாதங்களுக்கு குறிப்பாளன் (Rapporteur) + இது + அது + எதுவும்!). போறாக்குறைக்கு, நான்கு டிபுடி செக்ரடரிகளுக்கு/ மூன்று ஜாயின்ட் செக்ரடரிகளுக்கு (எல்லாரும் ஐ.ஸி.ஸ் பெருமகனார்கள்)/ ஒரு  விஞ்ஞான ஆலோசகருக்கு பதில் சொல்லியாகவேண்டும்; மேலதிகாரி யார் கூப்பிட்டக்குரலுக்கும்  தத்க்ஷணமே பதில் சொல்லியாகவேண்டும். போக வர பஸ்ஸும் நின்றுவிடும்; டாக்சியும் கிடைக்காது; நடுநிசியானால் அப்டித்தான். அதற்காகவே கார் வாங்கினேன். ராணுவ அமைச்சகம்  ஆழம் தெரியாதக்கடல்;  சைனா போரும் வந்துவிட்டதா? வேறு வினை வேண்டாம். 500/600 கார்கள் வரும் அலுவலகம். மூன்று கார்களூக்கு மட்டு ஒதுக்கப்பட்ட இடம். ஒன்று ராணுவத்துறைக்காரியதரிசிக்கு. பாக்கி இரண்டும் க்யூ. நம்ம இரண்டு பேருக்கும் ( ஸெள & ஸெள) நிச்சயம். வேறு யாரு காலை 6 மணிக்கு ஆஃபீஸ் வருவார்கள்?
காலை ஆறு மணிக்குப்போய், ராத்திரி 11 மணிக்கு வந்தால், நான்கு தடவையாவது 'பட்பட் படார்' என்று மோட்டார் சைக்கிள் தூதுவர்கள், கோப்பைகளோடு. எது எப்படீருந்தாலும், எனது உடனடி மேலதிகாரிக்கு, இது மேலும் பொருந்தும். பார்க்கவேண்டியிருந்தவர்கள் எல்லாரையும் பார்த்தபிறகு, அவரை மட்டும் அணுகமுடியவில்லை. அவ்வளவு பிஸி, அந்த அஷ்டாவதானி + சா.வ.கோ.ப + வே.வா.ம.
ஒருநாள் ஃபோன் போட்டார்: அன்றைய மீட்டிங்க் ஒன்றுக்கு எனக்கு பதில் நீ போய்விட்டு வந்து சொல்லு என்றார். அது மிகவும் ரகசியமான உயர்மட்டக்குழுவின் கூட்டம். சங்கேதச்சொற்கள் இல்லையெனில் நுழையமுடியாது. சமர்த்தாகப் போய் அமர்ந்தேன், எல்ல சம்பிரதயங்களையும் முடித்து விட்டு. குழுதலைவர் என்னைப்பார்த்து முறைத்தார்; நாமம் கேட்டார்; நவின்றேன். சங்கேதம் ஒலித்தார்; எதிரொலித்தேன்.  முறைத்தார் மறுபடியும்; வெளியில் சென்று வந்தார், புன்சிரிப்புடன். கனிவாக என்னை அறிமுகம் செய்து, மிலிடரி ஸ்டைலில் எனக்கு நாமகரணம் செய்தார் 'பாக்கெட் எடிஷன்' என்று! அந்த பெயர் நிலைத்து விட்டது. பல வருடங்கள் கழித்து ராணுவ அமைச்சரகம் சென்றபோது, 'பாக்கெட் எடிஷன்' வந்திருக்கிறார் என்று நினைவு கூர்ந்தார்கள்.
 ஒரு பாடாக, என் டிபுடி செச்ரெடரியின் தரிசனம் கிடைத்தது, அதிர்ச்சி தரும் சூழலில்!
இன்னம்பூரான்
_____________________________________
சித்திரத்துக்கு நன்றி: http://sagotharan.files.wordpress.com/2010/05/ravana.jpg
பி.கு. இன்றைக்கும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், 50 வருடங்கள் கழித்து. 
இன்னம்பூரான்
06 05 2013
_________
பி.கு: வே.வா.ம = வேலை வாங்குவதில் மன்னன்.

சா.வ.கோ.ப = சாளரம் வழி கோப்பை பறிமுதல் செய்வோன்.