Google+ Followers

Thursday, May 9, 2013

அன்றொரு நாள்: மே 10: காயா! பழமா!
அன்றொரு நாள்: மே 10: காயா! பழமா!
19 messages

Innamburan Innamburan Thu, May 10, 2012 at 10:17 PM

ன்றொரு நாள்: மே 10:
காயா! பழமா!

பிராது: சர்க்கரை என்று மணலை பொட்டலத்தில் விற்றான்.

‘எஜமான்! நான் வீசை எட்டணா என்று கூவினேன். வாங்கிட்டுப்போனாங்க. அது தப்பா?’

‘பிராது தள்ளுபடி. அவன் பொய் சொல்லவில்லை. நிஜமும் சொல்லவில்லை.’ (கனம் கோர்ட்டார்).
*

இந்த சட்டம் இருக்கிறதே. அதில் விந்தைகள் பல உண்டு. போர்ட்ஸ்மத் ஹார்பர். போலண்டு கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. இரண்டு மாலுமிகள் தண்ணி போட்டு அடிச்சுக்கிட்டாங்க. கோர்ட்டில் வழக்கு, ஆங்கிலத்தில். இவங்களுக்கு அரைகுறையாகத்தான் தெரியும். தண்ணியின் எஃப்பெக்ட் குறையவே, இரண்டு பேருக்கும் ராஜியாயிடுத்து. இதை ஒத்தருக்கு ஒத்தர் மொழிபெயர்ப்புச் செய்ய, கோர்ட்டாரும் மனமுவந்து தள்ளுபடி செய்தார்கள். ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்று ஓடப்பார்த்தால், கூப்பிட்டு காசு கொடுக்கிறது, கோர்ட்டு! மொழிப்பெயர்ப்புக்கு சன்மானமாம்! அந்தக் காசையும் தண்ணிலெ போட்டாங்க!
*
நீங்கள் எக்மோர் சில்லறை கோர்ட்டு (ஸ்மால் காஸ்) போயிருக்கிறீர்களோ? ஸூப்பருங்க.
சைக்கிள்ளெ டபிள்ஸ் போய் மாட்டிக்கொண்டோம். எங்களை இற்செறித்த தண்டல்காரர் சொன்னார், ‘பேசாம ஃபைன் கட்டிட்டுப் போய்க்கிணே இரு. மவனே! வாதாடாதே. நாங்க கேட்டாத்தானே.

கோர்ட்டுக்காட்சி:

கோர்ட்: இரண்டு ரூபாய் அபராதம்

நான்: யுவர் ஆனர்!

கோர்ட்: அஞ்சு ரூபாய்.

நான்: நாங்கள்..

கோர்ட்: பத்து ரூபாய்.

நான்: (தனி மொழி) என்ன ஏலம் போடறார். (பாம்புச்செவி, அந்த கிழத்துக்கு)

கோ: நூறு ரூபாய்.

கட்டிட்டு ஓடியாந்தோம்.

*
ஜஸ்டிஸ் ராஜமன்னார் என்று ஒரு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. இருந்தார். குடும்பமே நீதிபதி குடும்பம். நல்லா ஊறியிருக்கு. ஒரு நாள் மாலை கடற்கரையில் நடை பயிலப்போறார். விடலைப்பசங்க ஈவ்-டீஸ்ஸிங். ஓரமா நின்றுகொண்டிருந்த அப்பாவி போலீஸ்காரனை கூப்டு அவங்களை அரெஸ்ட் பண்ண ஆணையிட்டார். ஜட்ஜுக்கு அந்த பவர் உண்டாம். பெரிய வீட்டுபசங்க எல்லாம் ராத்திரி கொசுக்கடிலெ. அடிச்சுப்பிடிச்சுக்கினு அப்பனும் ஆத்தாளும் மறுநாள் கோர்ட்டுக்கு ஓடிவாராஹ. ஜட்ஜ் ஐயா கூலா சொல்றாரு, ‘உன் பையனை கண் அடிக்க விடாதே.’ இத்தனைக்கும் அவரை பற்றியே ஒரு தினுசா பேசிப்பாஹ. நமக்கேன் வம்பு? இதெல்லாமே செவி வாய் செய்தி.
*
நான் நினெச்சுக்கறது. சில பேர் ‘ பெண்ணாய் பிறக்கலாகாதா’ என்று அங்கலாய்ப்பார்கள். நாம நீதித்துறையில் புகுந்து இருக்கலாம் அல்லவா! சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேனே!
*
இன்றைய தினம்: மே 10, 1893: அமெரிக்காவின் உச்ச நீதி மன்றத்தில், வரலாறு காணாத தீர்ப்பு ஒன்று அளிக்கப்பட்டது, வழக்குத் தொடர்ந்து ஆறு வருடங்களான பிறகு: NIX v. HEDDEN, 149 U.S. 304 (1893)

கோர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன், வாங்கோ.
ஜட்ஜ் மும்ம்மூர்த்திகள் வந்தவுடனே டவாலி கூவினார். எல்லாரும் எழுந்து நின்றார்கள். மூவரும் அமர, கோர்ட்டுத் தொடங்கியது. மூன்று கனமான அகராதிகள் கொண்டு வரப்பட்டன. புரட்டப்பட்டன. பொருள் திரட்டப்படப்ட்டது. 

சாக்ஷி1: ‘கடவுள் மீது ஆணை! அகராதிகள் எல்லாவற்றையும் வகைப்படுத்துவதில்லை. ஆனால், செய்தவரை சரி. அறுபது வருடங்களில் அர்த்தம் அதிகமாக மாறவில்லை. அதாவது கொஞ்சம், கொஞ்சம் மாறியிருக்கலாம்.......’ இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போனார்.

சாக்ஷி 2: இந்த சொற்களுக்கு எல்லாம் அறுபது வருடங்களுக்கு முன்னாலும், பின்னாலும் விசேஷமான அர்த்தங்கள் இருப்பதாக.....இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போனார்.
இரண்டு சாக்ஷிகளும், இரு தரப்பு வழக்குழப்பவர்களும் ( அதாவது வழக்கறிஞர்களும்) அதே மூன்று அகராதிகளையும் வைத்துக்கொண்டு, அவரவர் நிலைப்பாடுகளை நிலைப்பாட்டினார்கள். வாயிருந்தா, அகராதி அழுதிருக்கும்.
வணிகப்பெயருக்கும், பாமர மக்கள் பேசும் மொழியில் உள்ள அர்த்தத்துக்கும், விஞ்ஞான பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் அலசப்பட்டன. 
தீர்ப்புக்கு வந்த சிக்கல்:

கொடியாக வளர்ந்து, வளைந்து, பூத்துக்குலுங்கி, கொத்துக்கொத்தாக ஒரு வஸ்துவை தரும் தாவரத்தின் பெயர் ‘Solanum lycopersicum’. அதை பறித்துக்கொடுத்தால், கீதா, ராஜம், ஸுபாஷிணி ஆகியோர் சட்னி, ரசம், பிசைந்த சாதம், ஊறுகாய் செய்வார்கள்; அதற்கு முன் ஃபோட்டோ போடுவார்கள். தாவர இயல் சாத்திரம் இதை பழம் என்கிறது. உபவகை: பெர்ரி. 1773ல் இதை உருளைக்கிழங்குடன் வகைப்பாடு செய்தார்கள்.1768ல் வைத்த புது நாமகரணமான Lycopersicon esculentum இன்றும் வளைய வருகிறது. உங்களுக்கு புதிரவிழ்க்க உதவவேண்டும் என்ற கடமையினால், இந்த விவரங்கள் அளிக்கிறேன். நன்றி கூறவும்.

தீர்வு: விஞ்ஞானம் ‘பழம்’ என்றாலும், இது காய்.

அடடா! எதை பற்றி இந்த ‘காயா’ ‘பழமா’ தாவா? 

அந்த காய்/பழத்தின் பூவின் படம் கிடைத்தது. இணைத்துள்ளேன். நீங்கள் உடனே கண்டு பிடித்து, ‘

ஏன் இந்த தாவா?’ என்ற வினாவுக்கு விடை அளிப்பீர்களாக.

இன்னம்பூரான்
10 05 2012

உசாத்துணை:
U.S. Supreme Court:149 U.S. 304:NIX et al. v. HEDDEN, Collector. No. 137: May 10,1893

rajam Thu, May 10, 2012 at 11:14 PM


என்னைப்போல் கண் கோளாறு உள்ளவர்களூக்கு இதுபோன்ற பதிவுகளைப் படிக்கத் துன்பம். தயவு செய்து வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்தில் தட்டவும். நன்றி!
ராஜம்


N. Kannan Thu, May 10, 2012 at 11:43 PMவழிமொழிகிறேன்!

க.>
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, May 10, 2012 at 11:48 PM

கண்ணன் சாரே! நாள் தவறாமல், இந்த கலர் அரிதாரம் பூசாத நான் இன்றொரு நாள் காரணார்த்தமாக ரோஸினால், அடிக்க வாரீரே. இதோ போட்டுட்டேன். ஆனா அந்த கலர்? ஐயகோ!


2012/5/10 N. Kannan &l
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, May 10, 2012 at 11:50 PM


renuka rajasekaran Thu, May 10, 2012 at 11:55 PM


இப்படி க்ளோசப் வியூவில் காட்டி, ரோமத்தை முள்ளே என்று நினைத்து, சுண்டைக்காய், தூதுவளை, என்று பிதற்றுக என்று காட்டுவதா?
இந்த போமேடோ ஒரிசனல் டோமேடோ , தக்ளியை -
பூவா தலையா போடாமலேயே கண்டுபிடித்தாகிவிட்டது!
மணமான தக்காளி - நேற்று கே மேரேஜ் ஓகே சொல்லி விட்டார் ஒபாமா
யாருக்கு மாப்பிள்ளை யாரோ? 

என்ன பரிசு?


rajam Fri, May 11, 2012 at 12:01 AM


ஒரு பதிவைப் போட்டுவிட்டு, அதோடு கொக்கியெல்லாம் போட்டால் ... நான் ஓடியே போய்விடுவேன். என்னால் படிக்கத்தான் முடியும். அதுக்குமேல் ஆராய்ச்சி செய்து பதில் கொடுக்க நான் என்ன ஐ.ஏ.எஸ் / ஐ.ஏ.ஏ.எஸ் பதவிக்குப் படிக்கிறவளா? ஆளை விடுங்கள். பதிவை மட்டும் போட்டுவிட்டு, "சும்மா இருங்கள்" பெரியவரே! :-) :-) :-) எப்படியோ ... தகவல் கிடைக்கிறது. நன்றி, அன்பரே! 


N. Kannan Fri, May 11, 2012 at 12:02 AM


மெக்கிண்டாஷ் கணினியர் கண்டுசொன்னது, வெள்ளைப் பின்னணியில்
கருப்பெழுத்து. கண்ணை உறுத்தாது என்பது.

நான் பல காலமாகச் சொல்லிவருவது, அவசியம் என்றாலொழிய வெட்டியாக formatted
text அனுப்பாதீர்கள் என்பது. எளிய plain text இருக்கும் போது formatting
ஏன்?

சிலர் நேரடியாக ஜிமெயிலில் எழுதுவதில்லை. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற
எழுதிகளைப் பயன்படுத்தும் போத் default ஆக formatting text அமைந்து
விடுவதுண்டு.

பொதுவாக மற்றவர் கவனம் வேண்டுவோர் குறைந்த பக்ஷம் அவர்களுக்கு தொந்தரவு
தரமால் இருப்பது நலம் இல்லையா?

ஏதோ தோன்றியது! நீங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர் :-)


rajam Fri, May 11, 2012 at 12:29 AM


கணினித் திரையின் பின்புலம் பற்றி எழுத எனக்கு மிகவும் ஆவல், ஏனென்றால் ...

அது முதன் முதலில் உருவான இடத்தில் (Netscape) அப்போது நான் வேலை பார்த்தேன். அந்தத் திரை எப்படி உருவானது என்று எனக்குத் தெரியும்.  என் பங்கும் அதில் சிறிதளவாவது உண்டு.அண்மையில் கண்ணன் லண்டனிலிருந்து அனுப்பிய அழைப்பிதழை என்னால் ஒரு நொடிக்கு மேல் பார்க்க-படிக்க முடியவில்லை.

ஒரே வண்ண மயக்கம். எழுத்தும் பின்வண்ணமும் போட்டி. ஓர் அழைப்பிதழின் பின்புலம் முக்கியமா? அதன் உட்பொருள் முக்கியமா? இந்தக் குறிப்பிட்ட அழைப்பிதழ் ஒரே கலவரம்.இப்படி ... பல. இதெல்லாம் கணினிப் பொறியாளர்/முகப்பாளர் கவனத்துக்கு வரவேண்டும்.

ஃபோட்டோ எடுப்பதற்கு என்று பல நுணுக்கம் உண்டு. அதேபோல ... கணினித் திரையில் கருத்தை இடுவதிலும் பல நுணுக்கம் உண்டு.


பலருடைய இடுகைகளையும், பலருடைய வலைத்தளப் பதிவுகளையும், பார்த்தவுடனே "நறுக்"கி விடுவேன் --- காரணம் இந்த வண்ணக் குழப்பமே! :-(


Innamburan Innamburan Fri, May 11, 2012 at 12:41 AM
இனி நான் 'கறுக்கிடு'வேன் என்பதால் 'நறுக்க' வேண்டாம்.

[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, May 11, 2012 at 3:06 AM


நீங்கள் எக்மோர் சில்லறை கோர்ட்டு (ஸ்மால் காஸ்) போயிருக்கிறீர்களோ? ஸூப்பருங்க.அங்கேயே பொருளாதாரக் குற்றங்களுக்கான கோர்ட் ரெண்டுங்க.  டபுள் சூப்பருங்க.  பெரிய கம்பெனி போர்டு மெம்பர்கள் மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க. ஆனாலும் சுத்தமாப் பல்லுப்போய் சத்தம் மட்டுமே போடும் சட்டப்பிரிவுகள்.  ஜாலியா இருக்கும். நானே மூனூ முறை பொருளாதாரக் குற்றக் கோர்ட்டுக்குப் போயிருகேன்

இத்தனைக்கும் அவரை பற்றியே ஒரு தினுசா பேசிப்பாஹ. நமக்கேன் வம்பு? இதெல்லாமே செவி வாய் செய்தி.
சொல்லாமாட்டேன் ஆனாச் சொல்லீடுவேன் என்கிறமாதிரி.  ரொம்ப வயசாகிப்போய் நடக்கவே முடியாமக் கஷ்டப்பட்டு ஒரு பார்ட்டிக்கு வந்தாஹ.  நான் முனிவனுமல்ல அவள் படிதாண்டாப் பத்தினியுமல்ல என்ற லைஃப் ஸ்டைல்.  இவருடைய நண்பர் ஒரு சினிமா நடிகையைக் கீபா வச்சிக்கிட்டார்.  அது எங்களுக்குத் தெரியும்.  எங்களுக்குத் தெரியும்னு அவருக்கும் தெரியும்.  சென்னைத் தொலைக்கட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி நடத்துறவனுக்குத் தெரியுமா?  திடீர்னு டுயெட்ல அந்தம்மா சைக்கிள்ள முன்னால ஒக்காந்து பாடிக்கினே வருவாங்க இந்த ஐயா அதைப் பாத்ததும் எழுந்து ஓடிக்கினே இருப்பாரு. நமக்கேன் வம்பு

‘காயா’ ‘பழமா’ தாவா?
வரி வரியாப் பொடுவாய்ங்களே அதாங்க விற்பனை வரி, வருமானவரி.  தேங்காய் காயா பழமான்னு இன்னும் முடிவு செய்யல
ஏதோ என்னாலான இரண்டு தம்பிடி(த்த) பின்னூட்டம்
நாகராசன்


PARTHA SARATHI Fri, May 11, 2012 at 5:02 AM


இந்திய நாட்டில் எத்துணையோ நீதியரசர்கள் நீதி வழுவாது, தீர்ப்பு சொன்ன
வரலாறு உண்டு.  அவர்களில் நீதியரசர் பி.வி. ராஜமன்னாரும் ஒருவர் என்று
படித்திருக்கிறேன்.  நீதியரசர் ராஜமன்னார் பற்றி ஓரிரு வரிகளை உங்கள்
எழுத்துக்களில் கண்டேன். பல அரசியல் தலைவர்கள் போற்றிய ஜஸ்டிஸ் பி.வி.
ராஜமன்னார் அவர்களை நினைவு கூறும் வகையில் சென்னை கலைஞர் நகரில்  ஜஸ்டிஸ்
பி.வி. ராஜமன்னார் பெயரில் இருக்கும் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும்
மேலாக வசித்து வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மற்றபடி நீங்க என்னோட காயா? இல்ல பழமா? என்று கேட்டதை என் சிறுவயதில்
கேள்விப் பட்டிருக்கிறேன்.  நண்பர் நடராசன்வடிவேல் சொன்னதுமாதிரி தேங்கா
மாதிரியே பூசனிக்கும் "காய்" மட்டும் தான் பின்னால் வரும், 'பூசனிப்பழம்'
என்று யாரும் சொல்வதில்லை.

பெருவை பார்த்தசாரதி
[

கி.காளைராசன் Fri, May 11, 2012 at 6:07 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/5/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

நீங்கள் எக்மோர் சில்லறை கோர்ட்டு (ஸ்மால் காஸ்) போயிருக்கிறீர்களோ? ஸூப்பருங்க.
சைக்கிள்ளெ டபிள்ஸ் போய் மாட்டிக்கொண்டோம்.
1978ஆம் வருடம், நானும் எனது நண்பரும் அதிகாலை 6 மணிக்கு கன்னிமாரா அருகே மாட்டிக்கொண்டோம்.
இரண்டு ரூபாய் கொடுத்தோம்.  விட்டுவிட்டார்கள்.

எங்களை இற்செறித்த தண்டல்காரர் சொன்னார், ‘பேசாம ஃபைன் கட்டிட்டுப் போய்க்கிணே இரு. மவனே! வாதாடாதே. நாங்க கேட்டாத்தானே.
கோர்ட்டுக்காட்சி:
கோர்ட்: இரண்டு ரூபாய் அபராதம்
நான்: யுவர் ஆனர்!
கோர்ட்: அஞ்சு ரூபாய்.
நான்: நாங்கள்..

இந்தச் துணிச்சல் யாருக்கு வரும். 


 சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேனே!

மறப்பதா, 
இலையில் சோறு போடுவதற்கு முன், 
தண்ணீர்தெளித்து, உப்பு வைத்து, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு வெஞ்சனங்களை வைத்துப் பின்னர் சோறு வைத்துக் குழம்பு ஊற்றிச் சாப்பிடச் சொல்வார்கள்.
அதுபோல்தான் தாங்களும்,  ஒவ்வொன்றாகச் சிறிது சொல்லிவிட்டு கடைசியில் விசயத்திற்கு வருவீர்கள்.
அதனால் நீங்கள் போடும் இழை(இலை)யில் சுவை கூடுகிறது.

*
இரண்டு சாக்ஷிகளும், இரு தரப்பு வழக்குழப்பவர்களும் ( அதாவது வழக்கறிஞர்களும்) 

கொடியாக வளர்ந்து, வளைந்து, பூத்துக்குலுங்கி, கொத்துக்கொத்தாக ஒரு வஸ்துவை தரும் தாவரத்தின் பெயர் ‘Solanum lycopersicum’. அதை சட்னி, ரசம், பிசைந்த சாதம், ஊறுகாய் செய்வார்கள்; அதற்கு முன் ஃபோட்டோ போடுவார்கள்.
சாப்பிட்டு முடிந்ததும், அட்டணக்கால் போட்டு உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு வம்பு அளப்பார்கள்.

அன்பன்
கி.காளைராசன்

N. Kannan Fri, May 11, 2012 at 10:23 AM


> அண்மையில் கண்ணன் லண்டனிலிருந்து அனுப்பிய அழைப்பிதழை என்னால் ஒரு நொடிக்கு
> மேல் பார்க்க-படிக்க முடியவில்லை.
>
> ஒரே வண்ண மயக்கம். எழுத்தும் பின்வண்ணமும் போட்டி. ஓர் அழைப்பிதழின் பின்புலம்
> முக்கியமா? அதன் உட்பொருள் முக்கியமா? இந்தக் குறிப்பிட்ட அழைப்பிதழ் ஒரே
> கலவரம்.
வண்ணக்கலவரம்! நல்ல வார்த்தை.
நானும் சொன்னேன் எளிமையாக கருப்புப் பின்னணியில் எளிய வர்ணங்களில்
செய்யுங்கள் என்று. சீர் செய்ய நேரமில்லை. இவர்களெல்லாம் பல
வேலைக்குக்கிடையில் இலக்கியப் பணியில் ஈடுபடுபவர்கள். ஆர்வத்தைப்
பாராட்டி அமர வேண்டியதுதான் :-)


Innamburan Innamburan Fri, May 11, 2012 at 2:45 PM

கலரடிச்சதின் காரணம்:அட்டேச்ச்டு. நன்றி, ஸுபாஷிணி.wintertomato.jpg
67K

rajam Fri, May 11, 2012 at 4:33 PM


ம்ம்ம் ... கொஞ்சம் துணிச்சலோடெ இதெச் சொல்றேன் ... . ஃபொட்டாக்ரஃபி (photography) நுணுக்கம் வேறு; காகிதத்தில் அச்சடித்தலும் கணினியில் தட்டுவதும் வேறு. ஒரு பொருளின் பரிமாணத்தின் (dimensional), கோணங்களின் (angles) தாக்கம் ஃபோட்டோ பிடிக்கிறதில் முக்கியம். அதெல்லாம் இயற்கைக்குத் தக்கபடி அமையும். அந்தப் பரிமாணங்களைக் காகித அச்சில் கொண்டுவருவதுக்குப் பெரு முயற்சி தேவை. அதைக் கணினியில் கொண்டுவர CAD போன்ற மென்பொருள்கள் உதவுகின்றன. நம் மதுரை உதயனைக் கேட்டால் தெரியும்.
பாருங்கள் ... சுபாவின் படத்தில் ஒரு சில தக்காளிப் பழங்கள் மட்டுமே. அந்தப் பழங்களின் உருண்டை வடிவம் மிக அழகாகத் தெரிகிறது. அதுவே முன் நிற்கிறது. சாம்பல் கருப்பு ~ கருப்பு நிறப் பின்னணி முன்னணியில் உள்ள பழங்களைப் பார்ப்பதைத் தடுக்கவில்லை.

இதே படத்தை நான் எடுத்திருந்தால், பின்னணியை வேறு மாதிரி, டிசைன் இல்லாமல், அமைத்திருப்பேன். அது வேற விஷயம். என் சுவைக்கு ஏற்றபடி, பின்னணி மிகவும் எளிமையாக இருக்கவேண்டும். நாம் சுட்டிக் காட்டும் பொருள் தனித்துத் தெரியவேண்டும். 

அதனால் ... வண்ணக் கலவையை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப் பின்பற்றிச் சொல்லியது என்னைக் குழப்பிவிட்டது.  அவ்வளவே! :-) :-) :-) 

sk natarajan Sat, May 12, 2012 at 2:54 
அத்தனையும் அருமையான தகவல்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.


Geetha Sambasivam Sat, May 12, 2012 at 10:00 AM
பல புதிய விஷயங்கள் ஃபோட்டோகிராஃபி பற்றித் தெரிந்து கொள்ள முடிந்த பதிவுக்கு நன்றி.