Google+ Followers

Saturday, May 18, 2013

அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(2)
அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(2)
1 message

Innamburan S.Soundararajan Sat, May 18, 2013 at 3:06 PM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88


அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(2)
Inline image 1

கீழ்க்கண்டதை எழுதியபின் இரண்டாண்டுகள் கடந்தன. எகிப்து, லிபியா போன்ற அடக்குமுறையில் தத்தளித்த நாடுகள் கொதித்து எழுந்தன. ஆனால், விடிவு காலம் பிறக்கவில்லை. இந்தியாவில் தடுமாற்றம் அதிகரித்தது.
இன்னம்பூரான்
18 05 2013

திரு. ரெ.கா

இங்கிலாந்தில்  மக்களால் மட்டுமே அரசை மேய்க்க முடியும் என்றும்,. நாள் தோறும்அரசு மான்யம் பெற்று அதை செய்கிறோம்!  என்றல்லவவா கூறினேன். அரசு - மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு - ஒரு சிறந்த நிர்வாகியாக
இருக்க முடியாது என வரலாறும்பல நாடுகளின் அனுபவங்களும் நிருபித்துள்ளன. என்பதற்குஆதாரம் சுட்டினால் நல்லது. இந்த கருத்துடன் என் அனுபவத்திற்கு உடன்பாடு இல்லை. எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம்முதலாளித்துவம்கலந்து கட்டிதனியார் ஏகாதிபத்தியம்மக்களாட்சிசர்வாதிகாரம்தவறுகள் இழைக்கின்றன என்பதும்அவற்றில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.

தற்கால சூழ்நிலையில் தனியார் வந்தால்இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள். தமிழ்நாட்டு இலவச மருத்துவ சிகிச்சை காப்பீடு ஒரு உதாரணம. அரசு பணிகளோ மோசம். என் செய்யலாம் என்பது தான் சர்ச்சை. இருந்தும்நீங்கள் சொல்வது போல அரசு என்ன செய்யவேண்டாம் என்பதை விளக்கினால்அதற்கு பொதுஜன வரவேற்பு இருந்தால் நல்லது. அரசு செய்யும் சில அநாவசிய வேலைகள் நீக்கப்படவேண்டும்அவை எல்லாமே தனியாரிடம் போக தேவையில்லை. அத்துடன்மக்களிடமேசில சேவைகளை ஒப்படைக்க  இயலும். சோஷலிசம்ுதலாளித்துவம் தனியார் பெருமை எல்லாமேதோல்வியடைந்து விட்டன.

திரு.கண்ணன்:

வரும் மின்னூல்களுக்கு காத்திருந்து விரிவான பதில் போடுகிறேன். இந்திய அரசு முறைகளில்புராணங்களில் தவிர,ஆன்மீகத்தின் தாக்கம் கிடையாது. தார்மீகத்தின் தாக்கம் இருந்ததுநீதி நூல்களின் நல்வரவாக. அர்த்த ஸாஸ்திரம் ஆன்மீகத்தை அரசியலில் ஈடுபடுத்தவில்லை. தமிழ்நாட்டு அரசர்களும்அகம்,புறம் என்று திரிந்தார்கள். ஆன்மீகமில்லை. சமயத்தின் தாக்கம் கூட ஓரளவு தான் இருந்ததது. ஆட்சிமுறைகளை மாற்ற முயலவில்லை. கோரமான சுயநலமும்,ஊழலும்ஒழுங்கின்மையும் செய்முறை
வாழ்வாகியும்விட்டது. ஒருபுறம் சோஷலிசம்இன்னொருபுறம் தனியார் துறை. இரண்டையும் ஊழலே அங்குகட்டுப்படுத்துகிறது.
ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாகஅடிப்படை அலகாக மாறிவிட்டது. என்பது மறுக்கமுடியாத உண்மை. இது ஜனநாயகத்தின் பக்க விளைவு. அரசு நிர்வாகம்அரசியல் வாதிகள்அதிகாரமையங்கள்ஊழியர் சமுதாயம்மக்கள் ஆகியோர் எப்படி இயங்கவேண்டும் என்பதை ஆராய முடியும்இந்த இழையில். மக்காளாட்சி வேண்டாம் என்றும்,யதேச்சிதிகாரம் வேண்டும் என்று சொல்வது சரியல்ல என்று வரலாறு கூவிய வண்ணம் உள்ளது.

திருஓம். வெ.சுப்பிரமணியன்
 ஒரு சோவியட் ரஷ்யா ஜோக்: ஒரு தொழிற்சாலையில் மின் இயக்கும் தள்ளு வண்டிகள் தினம்தோறும் காணாமல் போயின,பலத்த சோதனைகள் இருந்தாலும். வேறு வழியில்லாமல்நிர்வாகம்திருட்டை ஒப்புக்கொள்பவர்களுக்குபரிசில் தருவதாக (முதலாளித்துவ ட்ரிக்) ஆசை காட்டியது. ஒருவர் சொன்னார்: 'தினந்தோறும் குப்பையை தள்ளுவண்டியில் இட்டுச்செல்வேன். குப்பையைக் கிளரிவிட்டுவண்டியை விட்டுவிடுவார்கள் என்று! நீங்கள் கூறிய சம்பவம் அந்த வகை. தணிக்கையில்இந்த மாதிரி கொள்ளைகளை எடுத்துக்காட்டியிருக்கிறோம்.
கோலாலம்பூர் ஜெட் எஞ்சின் திருடு விந்தையாக இல்லைஆனால் பாருங்கள்அங்கு தண்டனையின் கடுமையை. இந்தியாவில்  ஜாமீன் கொடுத்து விடுவார்கள்!

புதுவரவு

12 01 2010 Economist

Freedom is in decline in many places around the world

Political rights and civil liberties around the world suffered for the fourth year on the trot in 2009, according to the latest report published by Freedom House, an American think-tank. This represents the longest continuous period of deterioration in the history of the report. The number of electoral democracies dropped from 119 to 116, the lowest figure since 1995. Six countries were downgraded: Lesotho to partly free and Bahrain, Gabon, Jordan, Kyrgyzstan and Yemen dropped into the “not free” category. Around a third of the world’s population live in countries deemed not free, although over half of these live in China. In the Middle East and North Africa 70% of countries are not free. Still, freedom was on the march in 16 countries, notably in the Balkans, where Montenegro is now considered free, and Kosovo is partly free.
இன்னம்பூரான்


 
K R A Narasiah 
1/14/10

 
கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்ப்டும் ஜனநாயக நாடுகளிலும் மக்க்ளுக்கு உண்மையான் சுத்ந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக் உள்ளது. வீணாக்காப்படும் மக்கள் செல்வம் அதிகமாகியுள்ளது (சேது சமுத்திரத் திட்டம் ஒரு மாபெறும் உதாரணம்)
எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம்முதலாளித்துவம்கலந்து கட்டிதனியார் ஏகாதிபத்தியம்மக்களாட்சிசர்வாதிகாரம்,தவறுகள் இழைக்கின்றன என்பதும்,
அவற்றில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.
மிக நன்றாகச் சொன்னீர்கள்!
நரசய்யா
_________________________________________________________________________________________________
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com