Saturday, April 27, 2013

எப்படி ஆடினரோ! -1


எப்படி ஆடினரோ! -1
1 message

Innamburan S.Soundararajan Sat, Apr 27, 2013 at 11:34 AM


எப்படி ஆடினரோ! -1
Inline image 1

     இது மீனா முத்து ஸ்பெஷல். அவர் கடவுள் துணை நாடியதற்கு நன்றி நவிலல் எனலாம். எத்தனை தூரம் ஓடினாலும், அவ்வப்போது ஒரு ஆட்டம் போடுவதும் நாடக மரபு. இக்காலத்து தமிழ் சினிமாவானால், ஒரு மரத்தையே பூந்தோட்டமாகப் பாவிகம் செய்து, சுற்றி ஓடுவார்கள், ஆடுவார்கள், தற்காலிகத் தலைவனும், தலைவியும். வேறு யாரோ பாடுவார்கள், சினிமா மொழியில்; தமிழ் என்பார்கள். இது நிற்க.

     ‘தில்லானா மோஹனாம்பாள்’ பார்த்த ஞாபகம் வருதே! எல்லாமே ஸூபர், அந்த திரைப்படத்தில். மங்காத நினவலைகள். கிட்டத்தட்ட  உடன்போக்கு தான், பல இன்னல்களுக்கு நடுவில். நாகரீகமாக, அவ்வப்போது, ‘மறைந்து இருந்து பார்ப்பதின் மர்மம் என்ன?’ என்று பத்மினி குறிப்பால் உணர்த்தியும், கண்ணசைவில் சிவாஜி கணேசன் தலைவியை அலக்கழித்தும், ‘ஸடன்’ பாங்கி ஜில்ஜில் ரமாமணி கலக்கியும்! அடடா! பிரமாதம். அந்தக்காலத்தில், பேபி/குமாரி/செல்வி கமலா சிறிது காலம் தான் கொடி கட்டி, பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் தன் பெயர் சூடி, ஆதிக்கம் செலுத்தினார். பத்மினியும், வைஜயந்திமாலாவும், ரிலே ரேஸில், கொடியை, மாறி மாறி பிடித்தனர். லலிதா, ராகினி சுமார் தான். யாமினி கிருஷ்ணமூர்த்தி ரொம்ப ஜோரா குச்சுப்பிடி ஆடுவார். ஒரே குறை. அவரின் தந்தை இடை விடாமல் பேசி, பேசி, டார்ச்சர் பண்ணுவார். என்னைக்கேட்டா, பத்மினியின் அடவும், முத்திரையும், அரை மண்டியும், நிகரற்ற பரதநாட்டியம். அவள் ஆட.

     இப்படியாக, இந்த தரணி உருண்டு பிரண்டு வரும் போது, ஒரு நாள் ஒரு திவ்ய தரிசனம் கிட்டியது. பாலசரஸ்வதி அவர்கள் ( வயதாகி விட்டது) அபிநயம் பிடித்தார். ஒரு காட்சி: ‘கிருஷ்ணா! நீ பேகனே பாரோ’. பாம்பு பிடாரன் மகுடி ஊதியபோது போல, சபையே மயங்கிக் கிடந்தது. சொன்னா நம்பமாட்டீங்க. நாங்கள் எல்லாரும் இந்த மாயக்கூத்தனை விழுந்து விழுந்து தேடினோம். 

     “...துன்னிய பிணைமலர்க்கையினர் ஒரு பால்/ தொழுகையர் அழுகையர் துவன்கையர் ஒரு பால்... (திருவாசகம்) 

என்று துவண்டு கிடந்தோம். கிருஷ்ணா! வாடா!

     ஒரிஸ்ஸாவில் இருந்தபோது, சஞ்சுக்தா பாணிக்கிரஹியின் நட்பு கிடைத்தது. அற்புதமான ஒடிஸி நடனம். அவருடைய கணவர் ரகுநாத் பாணிக்கிரஹி மாதிரி பதம் பாட ஆள் பிறக்கவேண்டும். எங்கள் கொடுப்பினை என்னவெனின், அவருடைய ஆசான் குரு. கேளுச்சரண் மஹாபாத்ராவின் நடனத்தை ஒரு பிரத்யேக நிகழ்வில் கண்டு வியக்க முடிந்தது. ஒரு நாள் பிருகு மஹராஜின் கதக் நடனம் பார்த்து மகிழ்ந்தோம். சுத்தோ சுத்தோ என்று சுற்றினார். பாயிண்ட் என்னவென்றால், ஆண் பெண் எல்லாரையும் கவர்ந்து விட்டார்.

     தற்கால கதக் சிரோன்மணி ஷோவனா நாராயண்  என்னுடன் சக உத்யோகஸ்தர்.  எங்கள் துறைக்கே பெருமிதம். அலஹாபாத்தில் வந்து தன் நாட்டியத்திற்கு அழைத்தார். கவின் நிறைந்ததாக அமைத்திருந்தது, அவரின் பெளத்த நாட்டிய நாடகம். அவரின் சிறுமகன் (மூன்று வயதிருக்கும்) குழந்தை ராகுல் ஆக நடித்து, அற்புதமாக நடனம் ஆடினான். எங்கோ ஆரம்பித்து எங்கோ போகிறது? சொல்ல வந்தது, ருக்மணி தேவி அருண்டேல் அவர்களையும், கமலா தேவி சட்டோபாத்யாயவையும் சென்னை வந்த போது சந்தித்தது, பற்றி.  கமலா தேவி சரோஜினி நாயுடுவின்/ஹரீந்தரனாத் சட்டோபாத்யாவின் சஹோதரி. இருவரும் வெகு நேரம் பேசினர். அதெற்கென்ன இப்போ? அப்போது தெரியாது, என் பேத்திக்கு ருக்மணி என்று (பாட்டிக்கு பாட்டி பேர் ஆச்சு. கலாக்ஷேத்ராவின் ஸ்தாபகர் பேரும் ஆச்சு) பெயர் வைப்போம் என்று. அற்புதமாக பரதநாட்டியம் ஆடுகிறாள், அம்மாவைப்போல. ஆடுக. ஆடுக.

    சங்கக்காலத்தை பற்றி கேட்டால், பீடிகை பலமாக இருக்கிறதே என்றா கேட்கிறீர்கள்? அக்காலத்தில் நாட்டியம் மங்கலம் நிறைந்து வாழ்ந்தது. ஆடல் இலக்கணம் காண வேண்டுமா? 

     “...its baroque splendour and by the charm and magic of its lyrical parts belong to the epic masterpieces of the world...”

Kamil Zvelabil (1956)  Tamil Contribution to World  Literature.

(தொடரும்)

devoo
7/16/10

 மாறி  பிடித்தனர் -> மாறிப் பிடித்தனர்

பாம்பு பிடாரன் -> பாம்புப் பிடாரன்

நட்பு கிடைத்தது  -> நட்புக்  கிடைத்தது

பற்றி கேட்டால்   -> பற்றிக் கேட்டால்

 ப், க் ஒற்றெழுத்துக்கள் உடம்படாமல் ஓடிவிட்டனவா ?


சங்கக்காலத்தை  -

’க்’ இங்கு உடம்பட்டு ஓவரா ஒட்டிக்கொண்டு விட்டது

தமிழ் மாணவர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்னும் நம்பிக்கையில்

தேவ்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/17/10

தெய்வம் தந்த வீடு என்று பாடினர் அன்று. தேவ் தந்த மெய்யுணர்வு இன்று. சந்துலே புகுந்து சந்திப் பிழை திருத்தி விட்டார். பத்திக்கிட்டா, ஓவர் என்கிறார்.'ப்க்' என்றால் ஓட்டமா என்கிறார். 

1. உமது நம்பிக்கை பொய்க்கவில்லை. நன்றி பல.

2. இந்த தட்டச்சு ரொம்ப விவகாரமான விஷயம். தடால்னு 'பாட்டுத்தி' என்று காவு (கால்) வாங்கும்.

3. மெய்யுணர்ந்தேன்.

4. ஓரளவு, பவணந்தி முனிவரிடமிருந்து முறையே விலகி, பேராசிரியர் நூஃமான் அவர்களின் இலக்கனத்தை பின்பற்றுகிறேன்.

5. ஆமாம். மெய்யுணர்ந்தும் கதையை பற்றி கதைக்காததின் மர்மமென்ன?

நன்றி, வணக்கம்.
Madhurabharathi 
7/17/10

2010/7/16 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
எப்படி ஆடினரோ! -1

  
  “...துன்னிய பிணைமலர்க்கையினர் ஒரு பால்/ தொழுகையர் அழுகையர் துவன்கையர் ஒரு பால்... (திருவாசகம்) 


என் பங்குக்கு இதோ:
 
துவன்கையர் -> துவள்கையர்
ஒரு பால் -> ஒருபால்
 

 பிருகு மஹராஜின் கதக் நடனம்
 
எனக்குத் தெரிஞ்சு பிர்ஜூ மஹராஜ் என்பவர்தான் கதக்கில் பிரபலம் :-)
 
அன்புடன்
மதுரபாரதி
 
(நறநறநற (ஒபீலிக்ஸ் கோபத்தில் முனகுவதுபோல) என்று பல்லைக் கடித்துக்கொண்டு “தப்புக் கண்டுபிடிக்கன்னா கச்சைகட்டிக்கிட்டு கெளம்பிடுவானுகளே”)    :-)

devoo 
7/17/10

இன்னம்பூரர் பிறருக்கு இணையாக மாகாணியத்தில் மலை ஏறிய மாவீரர்; கீழே
வந்ததும் தான் சற்றுக் களைப்புற்றார். அவர் வந்திராவிட்டால் அந்தச்
சுற்றுலா இத்தனை  மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்திருக்குமா ? அவர் வயதில்
இத்தனை ஆர்வத்துடன் நாம் மொழிகளைக் கற்போமா, தெரியாது.

உடல் நிலையைச் சட்டை செய்யாமல் அவர் பணியாற்றி வருகிறார். உரிமை
எடுத்துக் கொண்டு அவர் எழுத்தில் பிழைகளைச் சுட்டினேன்; மன்னிக்க
வேண்டும்

தேவ்
Madhurabharathi 
7/17/10

தேவ் ஐயா,
 
நான் போட்ட நகைக்குறிகளைத் தவறவிட்டீர்கள் போலும். பெரியோரை மதித்து, அதே நேரத்தில்
சிறு பிழைகளைச் சுட்டுவதால் ஏனையோருக்குப் பயன் தருமே என்ற எண்ணத்தில்தான் நான்
எழுதினேன்.
 
பெரியோரைத் திருத்துவதோ, மிகுந்த சிரமங்களுக்கிடையேயும் ஆர்வம் மற்றும் அனுபவ மிகுதியோடு 
அவர்கள் எழுதுபவற்றில் பிழைகாண்பதோ எனது நோக்கமன்று.

devoo 
7/17/10

அடடா, தவறு எனதே. பிழைகளைச் சொன்ன  அதே பதிவோடு சேர்த்து இதை
எழுதியிருக்க வேண்டும்; இங்கு  ஆற்காட்டார்  அடிக்கடி
அச்சுறுத்துகிறார்.
பட்டைப் பாட்டாக்கியதன் காரணமும் அதுவே.

உங்களைச் சுட்டும் நோக்கம் அடியோடு இல்லை.
’நானேதானாயிடுக’

தேவ்
Geetha Sambasivam 
7/17/10

அந்தக்காலத்தில், பேபி/குமாரி/செல்வி கமலா சிறிது காலம் தான் கொடி கட்டி, பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் தன் பெயர் சூடி, ஆதிக்கம் செலுத்தினார்.//

ஆமாம் , இப்போக் கூட அந்த ட்ரம் டான்ஸ் பார்க்கும்போது உடல் வளைவதையும் நெளிவதையும் பார்த்தாலே பிரமிப்புத் தான். வைஜயந்திமாலா, பத்மினி எல்லாம் அப்புறம்தான் என் கருத்தில்! 


Innamburan Innamburan 
7/18/10

திரு. மதுரபாரதியின் திருத்தங்களும் நல்வரவு. பாடபேதமோ என்று சரி பார்த்தேன். கண் மங்கல் என்று புரிந்தது. Bhrigu Maharaj பாடபேதம். வடநாட்டில், இரு பெயர்களும் வழக்கில் உள்ளன. இலக்கணத்திருத்தங்களால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! திருத்தம் + நிறைவு ( மத்தவங்க சொல்லாட்டக்கூட, இவர்கள் உன்னிப்பாகப் படித்தார்களே என்று). திரு. தேவ் தவறு ஒன்றும் செய்யவில்லையே. அவர் 'காலை' வாரி விட்டதாகி விட்டதே. அவர் மென்மையான மனிதர். அதான், சந்திரா எனக்கு குல்லா போட்ட கதையை சொல்லவில்லை. திருமதி. கீதா சொல்லும் முரசு நடனம் நினைவில் இருக்கிறது. 
அடுத்தபடியாக, திருமதி.ருக்மணி அருண்டேலிடம், தமிழ்த்தாத்தா என்ன சொன்னார் தெரியுமா? 

Tthamizth Tthenee 
7/19/10

திருமதன்  பற்றி விளக்கம் இன்னும் வரவில்லையே?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
Innamburan Innamburan 
7/19/10

யாமொன்று சொல்ல, அவரொன்று நினைத்துவிட்டார். என் அருமை தங்கை ஜெம்பகம்
இப்போது இல்லை. அது பெருங்குறை. நானும் அவளும் நகமும், சதையும் போல்
இருந்தோமாம். சிறுவயதில் நடந்தது. அவள் க்ராஸ்-ஸ்டிச் (த,தே. க்கு
புரியவில்லை எனின், திருமதி.கீதாவிடம் கேட்கவும்.)
போட்டுக்கொண்டிருந்தாள், ஒரு பை. ஒரு பக்கம் படம் 'லேடி'. அடுத்தப்பக்கம்
என்ன என்று கேட்டேன். தத்க்ஷ்ணமே 'லேடன்' என்றாள், ஆங்கிலத்துக்கு
இயல்பு-இலக்கணம் படைத்த, அந்த குட்டிப்பொண்ணு! அம்மாதிரி, 'திருமதனுக்கு'
வேர்ச்சொல் 'திருமதி'. 'திரு' என்றால் மஹாலக்ஷ்மி. அச்சொல் எப்படி
ஆண்பாலாக முடியும்? த.தே. கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு, 'மன்மதன்'
என்று நெஞ்சுடன் கொஞ்சுகிறார்!
இப்படிக்கு,
இன்னம்பூரான்

Tthamizth Tthenee 
7/19/10

த.தே. கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு, 'மன்மதன்'
என்று நெஞ்சுடன் கொஞ்சுகிறார்
 
எத்தனையோ பின்லேடன்களை உருவாக்கிய நாடிது
 
நான் சற்றே முந்திக்கொண்டேன்
 
முன் லேடன்
 
ஆனால் எனக்கும் முந்திக்கொண்டார்
திரு இன்னம்புரான்  க்ராஸ் ஸ்டிச்  கண்டு
 
இன்னம்புராரின் அருமை தங்கை ஜெம்பகத்தின் நுண்ணுணர்வு நகைச்சுவை உணர்வு வியக்கத்தக்கது\
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 _______________________________________________________________________________________________________________Photo Credit: http://www.exoticindia.com/books/kathak_indian_classical_dance_art_idj967.jpg

 
 
 


No comments:

Post a Comment