Google+ Followers

Sunday, April 21, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -16.: ” எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -16.: ” எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?

Innamburan S.Soundararajan Sun, Apr 21, 2013 at 10:59 AM

16 01 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -16.:  எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?
Inline image 1


நல்ல காலமும் பிறந்தது.  ஃபண்ட்ஸ் வேதாளத்திற்கு வேறு முருங்கை மரம். எனக்கு டிபுடி அக்கெளண்டண்ட் ஜெனெரலாக ப்ரமோஷன்அதே ஆஃபீஸில். பொறுப்பு  பொதுப்பணித்துறை தணிக்கை. கண்ணில் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. PWD (Public Works Department) என்ற அந்த துறையை, Public Waste Department என்று ராஜாஜி சாடியதையும்அதை தனது முதல் எதிரி என்று பிரகடனம் செய்தததையும் நினைவு கூர்ந்துவேலையில் மும்முரமாக இறங்கினேன். கண்கூடாக தெரிந்த விஷயமஆஃபீஸில் உட்கார்ந்து கொண்டு தணிக்கை செய்வதுதபாலில் கல்யாணம் செய்து கொண்டு இருப்பது போல என்றும்களத்தில் இறங்கி தணிக்கை செய்வதே உகந்தது என்றும் சொல்லலாம். ஆனால்களத்தில் இருந்து வரும் இன்ஸ்பெக்க்ஷன் ரிப்போர்ட் எல்லாவற்றுக்கும். அதே புரியாத மொழியில் வரும் பதில்களை கண்டு களைத்துப்போனேன்.


ஆபத்பாந்தவனாக வந்தார் திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் என்ற அக்கவுன்ட்ஸ் ஆஃபீஸர். அவரோ ஜாம்பவான். நானோ கத்துக்குட்டி/அவருக்கு மேல்நிலை அதிகாரி. அவருடைய திருமகனார் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு இது தெரியவேண்டும்.  திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் பொறுமையாக பாடம் எடுத்தார். வேலை வாங்கினார். டெஸ்ட் வைத்தார். பதவி நிலைகளையும் மறக்கவில்லை/ அதீதமாக பாராட்டவுமில்லை. அதேமாதிரிதிரு.ஜி.டி.சுந்தரராஜன்,திரு.டி,கே,வெங்கடாசலம். இவர்கள் எல்லாம் வேலை நன்கு அறிந்தவர்கள். மாற்றம் விரும்பாதவர்கள். என்று அந்த மூத்த அதிகாரிகள்நம்மை ஒருமையில் அழைக்கிறார்களோஅன்று தான் பாடம் தொடக்கம் எனலாம். அப்படி ஒரு இடைவெளி.
தகரியமாமுதல் தடவை களத்தில் இறங்கியபோதுமற்றொரு விஷயம் புலப்பட்டது. போன இடம் ஒரு அணைக்கட்டுமாலை ஏழு மணிஇருட்டிவிட்டது. உயர்நிலை பொறியாளரோ சகதியில் நின்று கொண்டு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அறிமுகம் ஆனவுடன், 'எனக்கு தணிக்கை ரிப்போர்ட்டுக்கு ஏன் பதில் போட நேரமில்லை என்று புரிகிறதா?'என்றும் கேட்டுவிட்டார். அது நியாயாமாகதான் பட்டது.  அவரும் பிறகு  Field realities என்று பாடம் எடுத்தார். நாம் அடக்கி வாசித்தால்அவர்கள் முனைந்து சொல்லிக்கொடுப்பார்கள். இது நிற்க.
ஆடிட் என்ற சொல்லுக்கு கேட்டு அறிவது என்று பொருள். கேட்ககேட்கமுடிச்சுகள் அவிழும். 'தாட் பூட்என்று லெட்டர் போட்டால், 'பூட் தாட்என்று பதில் வரும். இப்டியேப்போனாஇங்குள்ள குமாஸ்தாவும்அங்குள்ள குமாஸ்தாவும்அதிகாரிகளின் கையொப்பத்தை பினாமியாக பாவித்து,குத்துச்சண்டைபழிச்சண்டை போட்டுக்கொள்வார்கள்எந்த ஏ.ஜீ.க்கு ப்ரீதி?

இன்னம்பூரான்

பி.கு.

கீதா சொல்ற மாதிரிஓம் ஐயா மாவட்ட ஆட்சிமுறைகளை எளிதாகதெளிவாகபகிர்ந்து கொண்டார். நல்லதாபோச்சு..ஆஃபீசுக்கு ஆஃபீசு வெவ்வேறு நடைமுறைகள். அவரவர் குழப்பங்கள் அவரவருக்குமற்றவர்களையும் பாதிக்கும். இந்த டாட்டந்ஹாம் துரையை பார்த்திருக்கிறேன். ஆட்டொக்ரஃப் கூட வாங்கியிருக்கிறேன். பஹூ கார்யாமாக, 1946ல் புதுக்கோட்டையில் அவருக்கு இறுதி மரியாதை வேறு. ஸ்கூல் லீவாபுதைத்த பிறகு தான் வீடு திரும்பினேன். அவரே ஒரு மாமாங்கம் புதுக்கோட்டை அட்மினிஸ்ட்ரேடர் ஆக காலம் போக்கினார். வேலையத்த வேலை. அவரை  விடுவோம்.

தற்காலம்அதிகாரிகளுக்கோஊழியர்களுக்கோ இந்த முறை தெரிந்திருக்காது. தெரிந்தாலும் செய்யமாட்டார்கள். கேள்விமுறை இல்லை. கடந்த சில வாரங்களாகஜூனியர் விகடனில் மாவட்ட நிர்வாகங்கள் அலசப்படுகின்றன,வெளிப்படையாக. நிர்வாகத்தின் எல்லா உறுப்புகளும் பழுது அடைந்ததாக தோற்றம். தணிக்கைத்துறையும் பலவீனமாகாமல்இழுத்துப் பிடித்துக்கொண்டு வேலை செய்யவேண்டும். அங்கும் சீர்திருத்தம் தேவை.
Geetha Sambasivam 
1/16/10

//ஆஃபீஸில் உட்கார்ந்து கொண்டு தணிக்கை செய்வதுதபாலில் கல்யாணம் செய்து கொண்டு இருப்பது போல என்றும்களத்தில் இறங்கி தணிக்கை செய்வதே உகந்தது என்றும் சொல்லலாம்//

அற்புதமான உவமை!
//ஆடிட் என்ற சொல்லுக்கு கேட்டு அறிவது என்று பொருள். கேட்ககேட்கமுடிச்சுகள் அவிழும். 'தாட் பூட்என்று லெட்டர் போட்டால், 'பூட் தாட்என்று பதில் வரும்//

இதுக்குத் தான் விநயம் என்ற சொல்லே தோன்றி இருக்கு!


//ஆபத்பாந்தவனாக வந்தார் திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் என்ற அக்கவுன்ட்ஸ் ஆஃபீஸர். அவரோ ஜாம்பவான். நானோ கத்துக்குட்டி/அவருக்கு மேல்நிலை அதிகாரி. அவருடைய திருமகனார் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு இது தெரியவேண்டும்.  திரு. ஆர். ஸ்வாமிநாத அய்யர் பொறுமையாக பாடம் எடுத்தார். வேலை வாங்கினார். டெஸ்ட் வைத்தார். பதவி நிலைகளையும் மறக்கவில்லை///

பார்க்கக் கொடுத்து வச்சிருந்தேன், இம்மாதிரியான நிகழ்வுகளை! மலரும் நினைவுகள்!!!!!!!!


//அவருடைய திருமகனார் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு இது தெரியவேண்டும்//

குருபக்தி!!!
Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
1/16/10

ஓ! அவரும் களப்பணிதான் செய்து கொண்டிருந்தாரா?
:-)))

2010/1/15 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
இருட்டிவிட்டது. உயர்நிலை பொறியாளரோ சகதியில் நின்று கொண்டு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/16/10

இது எப்டி? இன்றைய ஜூனியர் விகடனில் வந்த  ஒரு பகுதி:
"...''சமீபத்தில் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு களின்போது சாலையோரங்களில் இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிஞ்சி ருச்சு. ஈட்டி, சில்வர் ஓக், செண்பகம் உள்ளிட்ட அந்த மரங்களோட மதிப்பு கோடிக்கணக்கில் இருக்குமாம். இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அவற்றை வெட்டும் ஏலத்தை எடுக்ககான்ட்ராக்டர்களுக்குள் கடும் போட்டியாம். ஆனா, அவங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு, ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவரோட கை பாணத்துக்கு டெண்டரை குடுத்துட்டாங்களாம். அதுவும் சில லட்சங்களுக்குள்ளே சீப்பா கொடுத்திருக்காங்க. டெண்டரை எடுத்த அந்த கை பாணமோ, இதுதான் சாக்குன்னு சொல்லி, நல்லா இருக்கிற மரங்களிலும் ரம்பத்தை பாய்ச்சுறாராம். இந்த மேட்டர் தெரிஞ்சு விசாரணைக்கு வந்த வனத் துறையினரையும் வாகாய் 'கவனிச்சு' வாயடைச்சுட்டு, மங்களகரமா சுந்தரமா தொடருதாம் மரம் வெட்டு.'' 
மின் தமிழில்  ஜோதிஷம் பற்றி ஒரு இழை சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஸீலிட்ட டெண்டர் கவருக்குள் இருக்கும் மர்மம் காணப்பெறுமோ? 'முடியும். டாட்டந்ஹாம் கையேடு போடுவார். நாஙக் திரிபு மன்னர்கள்' என்று ஒரு பீ.டபிள்யூ.டீஆசாமி சொல்றாரு.
--
இன்னம்பூரான்
 
 

Geetha Sambasivam 
1/16/10


இன்னம்பூரான்
21 04 2013