Tuesday, March 19, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 7:ஸர். ஆற்காட் லக்ஷ்மணசாமி முதலியார்




அன்றொரு நாள்: அக்டோபர் 7
9 messages

Innamburan Innamburan Thu, Oct 6, 2011 at 9:59 PM
To: mintamil

அன்றொரு நாள்: அக்டோபர் 7
‘பல கோடி நூறாயிரம் ஆண்டு’ சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், பிரபல மகப்பேறு மருத்துவராகவும் இருந்த ஸர். ஆற்காட் லக்ஷ்மணசாமி முதலியார்  விடலை பருவத்திலே முடி திருத்தும் கடை சென்று: உரையாடல்:
ல: முகக்ஷவரம்.
கடைக்காரர்: அம்மாவிடம் சொல்லி விட்டு வந்தாயா? ( அரும்பு மீசை, பூனை மயிர்: இளப்பம்)
ல: எனக்கு தினமும் இருமுறை முகக்ஷவரம் செய்யவேண்டும்; அப்படி வளர்கிறது.
க: ஓ! சாயங்காலம் வா. ஃப்ரீ!  (அந்தக்காலத்திலேயே க்ஷவரம் இலவசம்!)
திகைத்துப்போய்விட்டார். அந்த அளவுக்கு அடர்த்தி! வந்தது அண்ணாச்சி ஸர். ஆற்காட் ராமசாமி முதலியார்!
இருவரும் இரட்டைப்பிறவிகள். தாடி மட்டுமல்ல; ஸர் பட்டத்திலும், புகழிலும் இரட்டையர். 
ஒரே முட்டை இரு கருவாக வளர வாய்ப்புண்டு. மரபணு ஒற்றுமையால், அப்படி பிறக்கும் இரட்டையர் ஒரே அச்சு, பல விதங்களில். அவர்களுக்குள், உடல் ரீதியாக, மனரீதியாக வித்தியாசங்கள் தென்பட்டால், அவற்றின் காரணம் சூழல் அல்லது வெளியில் இருந்து வந்த தாக்கம் என நினைக்க முடியும். ஆகையினால், இரட்டைப்பிறவிகளின் வாழ்வியலை நோட்டம் விட்டால், பிறவி/சூழல் தாக்கங்களை இனம் காண இயலலாம்.
அக்டோபர் 7, 1977 அன்று இம்மாதிரியான ‘ஒரே அச்சு’ இரட்டையர்கள் 90 ஜோடிகளை, கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் வாய்ந்த நார்வே பல்கலைக்கழகம், ஆய்வு ரீதியாக, ஒரு ஜாலி ஷாப்பிங்க் கூட்டி சென்றார்கள். கப்பல் பயணம் ஃபெலிக்ஸ்டவ் என்ற ஊருக்கு. இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியான உடை. குழப்பம், கலாட்டா, குஷி. ஆய்வின் நோக்கம்: சூழலுக்கும், மனித நடத்தைக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்வது. ஏற்பாடு செய்த கேப்டன் டாஹ்ல்ஸ்ட்ரோம் ஒரு இரட்டையர். ஒரு இரட்டை சகோதரிகள் இரட்டை குதிரைகளில் சவாரி செய்ததைக் கண்டு இந்த எண்ணம் உதயமானது என்றார், இவர். 11 ~80  வயது இரட்டையர் கூட்டம், இங்கு. இரட்டையர் ஜோடிகள் ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல, எனவே, இன்று கூடியதை மகிழ்ச்சியுடன் அனுபவித்தார்கள்.
ஸ்வீடனில் இரட்டைப்பிறவிகளின் வரலாற்று புள்ளி விவரங்களை சேகரித்து, ஆய்வுகளுக்கு உதவும் ‘இரட்டையர் பட்டியல்’ என்ற நிறுவனம் 1886 -1990 காலகட்டத்தில் பிறந்த 70 ஆயிரம் ஜோடிகளின் விவரங்களை ஆவணப்படுத்தி, 370 ஆய்வுகளை நடத்த உதவியிருக்கிறது.

என்ன ஆச்சு உமக்கு? தேசாபிமானத்தையும், வரலாற்றுப்பாடங்களையும், வினா~விடை யென்று துவஜாரோகணம் செய்து விட்டு, வியாசங்களுடன் ‘தினாவெட்டாக’ அலைவதையும், ஆன்மிகோபன்யாசம் செய்வதையும் விட்டு விட்டு, துக்கடாவெல்லாம், பக்கோடா போடலாமா? இது தகுமோ? என்று கேட்கிறீர்களா? நேற்று, ஒரு மின் தமிழர் நம்முடம் அளவளாவினார். 
அவர்: என்ன அடுக்குமொழி பறக்குது? அறிஞர் அண்ணா என்று கற்பனையா?
நான்: இல்லை! வந்து!
அ: என்ன இல்லை! வந்து? கொஞ்சம் டல்லடிக்க்குதே! விடாக்கொண்டன் மாதிரி நாட்டுப்பற்றை பற்றி, எந்த இடமாக இருந்தாலும் பேசுகிறீர். கொஞ்சம் இடம் கொடுத்தால், பாமரகீர்த்தி பாடுகிறீர். கிரீன்லாந்தில் பனிமழை! ஸோ வாட்? யாருக்கு வேணும், மிலேச்சர்கள் சரிதம்? 
நா: இன்றைய ஜெனெரேஷனுக்கு இதெல்லாம் தெரியணும், ஸ்வாமி. எத்தனை நாள் நாம் கிணத்துத்தவளையாக் இருப்பது...
அ; என்ன சொல்லப்போறேள்னு புரியறது. சார்! நாமெல்லாம் கஷ்டஜீவனம் பண்றோம். மின் வெட். விலைவாசி கூரையை கிளிச்சது. குடக்கூலி அதை பாத்து இளிச்சது. ஏதோ அஞ்சு நிமிஷம் சிரிச்சுப்பேசிக்கலாம்னு வந்தா...
நா. பிடியும் துக்கடா ~1.
லன் கட்.
இன்னம்பூரான்
07 10 2011
Smellie_twins.jpgpastedGraphic.pdf

உசாத்துணை:

rajam Fri, Oct 7, 2011 at 1:32 AM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
திரு ஏ. லட்சுமணசாமி முதலியார் மதுரையில் பாத்திமாக் கல்லூரிக்கு வருகை. பாத்திமாக் கல்லூரி வளாகம் விளாங்குடியில் கட்டப்பட்டு வகுப்புக்கள் அங்கே நடக்கத் தொடங்கியபின் முதல் ஆண்டுவிழாவின்போது (1958-1959?) எடுத்த படங்கள் இரண்டு கீழே.  
அன்புடன்,
ராஜம்
[Quoted text hidden]



Nagarajan Vadivel Fri, Oct 7, 2011 at 1:39 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
1966-67-ல் ஏ.எல் முதலியார் பழனியில் எங்கள் கல்லூரி விழாவுக்கு வந்திருந்தார்.  அவர் பழனி முருகனை வணங்க பலைமேல் கோவிலுக்குச் சென்றார்.  அவரால் தரையில் உட்கார அதிக நேரம் நிற்க முடியாததால் சன்னிதியில் அவர் அமர நாற்காலி ஒன்று போடப்பட்டு அவர் அமர்ந்துகொண்டி முருகனை வணங்க முருகனும் நின்றுகொண்டே ஏ.எல்.முதலியாருக்கு அருள்பாலித்தார்
நாகராசன்
[Quoted text hidden]

Narayanan Kannan Fri, Oct 7, 2011 at 3:02 AM
To: rajam
Cc: mintamil@googlegroups.com, Innamburan Innamburan
படம் மிகச்சிறியதாக உள்ளது அக்கா!

சிறுவனாக அக்கா கையைப் பிடித்துக்கொண்டு வந்தது. பாத்திமா கல்லூரி
என்றால் போகும் வழியில் வரும் மயான வாடை பயமுறுத்தும். சகுந்தலாதேவியும்
கூட (அக்கா சொல்லித்தான்). பின்னால் அவர்கள் ஓய்வுற்ற போது மதுரை
மருத்துக்கல்லூரி டீன் பார்வதி தேவி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த
விழாவில் சகுந்தலாதேவியோடு ஒரே மேடையில். என் பேச்சை மிகவும்
ரசித்தார்கள். இருந்தாலும் கொஞ்சம் பயம் :-)

நா.கண்ணன்
[Quoted text hidden]

rajam Fri, Oct 7, 2011 at 3:24 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Narayanan Kannan
இங்கே ... பெரிதாக்கிப் பார்க்க முடியுமா என்று பாருங்கள்:

( < http://viruntu.blogspot.com/2011/10/3.html >)

மின்மடலில் பெரிய அளவுப் படம் அனுப்பினால் சிலர் கணினிக்குப் போவதில்லை. அதனால் அளவைக் குறைத்தேன்.

ஆமாம், எங்க சகுந்தலா "மிஸ்"ஸுக்கு எங்களைத்தான் பிடித்தமாதிரிக் காட்டிக்கொள்ளமாட்டார்கள் -- ஒரே திட்டுதான் எப்போதும்! உள்ளூர அன்பு இருக்கும், பாவம் சரியாக் காட்டத் தெரியாம முரட்டுப் பட்டம் வாங்கிக்கொண்டார்கள்.

ஆகா! கவர்ந்தீர்களா! :-) :-) :-)
[Quoted text hidden]
[Quoted text hidden]

Narayanan Kannan Fri, Oct 7, 2011 at 3:38 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: 
Cc: mintamil@googlegroups.com
2011/10/7 rajam <rajam@earthlink.net>:

> ஆமாம், எங்க சகுந்தலா "மிஸ்"ஸுக்கு எங்களைத்தான் பிடித்தமாதிரிக்
> காட்டிக்கொள்ளமாட்டார்கள் -- ஒரே திட்டுதான் எப்போதும்! உள்ளூர அன்பு
> இருக்கும், பாவம் சரியாக் காட்டத் தெரியாம முரட்டுப் பட்டம்
> வாங்கிக்கொண்டார்கள்.
>
முதன் முதலாக என் தந்தை செல்லம்மாவை அழைத்துக்கொண்டு சகுந்தலா மிஸ்ஸைப்
பார்த்து இருக்கிறார். கிராமத்தில் வளர்ந்தவர்கள். கல்லூரி செல்லும்
முதல் அனுபவம். அப்பா தைர்யப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார். மிஸ்
அதை நினைவில் வைத்து என் தந்தை இறந்த போது உடனே செல்லம்மாவிற்கு வேலை
போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். பாவம் சின்ன வயதிலேயே செல்லம்மாவிற்கு
குடும்ப பாரம். மிஸ்ஸை நினைத்துக்கொள்வோம்

> ஆகா! கவர்ந்தீர்களா! :-) :-) :-)
>
நான் இக்கதையைப் பின்னால் அவரிடம் சொல்லி நன்றி பாராட்டியபோது மிகவும்
அன்பாக நடந்து கொண்டார்கள். ஆயினும் செல்லம்மாவின் பாத்திமா கல்லூரி
வாழ்வு, அவள் மிஸ்ஸிடம், பத்மாசனி மேடத்திடம் பட்ட அவஸ்தையெல்லாம் ஒட்டு
மொத்த குடும்ப அனுபவமாகிப்போனது. எனவே இப்போது நினைத்தாலும் அவர்களைக்
கண்டால் பயம்தான். கூட்டுப்பிரக்ஞை என்பது இதுதான்!!

ஏதோ கனவு போல் உள்ளது....

நா.கண்ணன்
[Quoted text hidden]
"Be the change you wish to see in the world." -Gandhi
[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, Oct 7, 2011 at 3:58 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து புகைப்படத்தின்மீது சுட்டியை வைத்து அ்ழுத்தவும்.  படம் புதிய திரையில் தோன்றும்.  ஜூமசெய்து பெரிதாகப் பார்க்கலாம்
http://viruntu.blogspot.com/2011/10/3.html
 
நான் ஐ.ஈ திரையைப் பயன்படுத்தினேன்.  மற்ற திரைகளில் எப்படி என்பதை நாமறியோம் பராபரமே.
 
நாகராசன்
பி.கு.  முதல்வர் சகுந்தலா அவர்களின் தோற்றமே போதுமே அவரைப்பபார்த்து பயப்பட
நா>
[Quoted text hidden]

coral shree Fri, Oct 7, 2011 at 5:57 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: rajam
ஆகா..... அருமை. இ சார், ராஜம் அம்மா, கண்ணன் சார், நாகராஜன் சார் அனைவரின் நினைவலைகளையும் பார்த்துப் பூரிப்பாக உள்ளது....... இ சாருக்கு நன்றி. பல சுவையான உணர்வுப்பூர்வமான விசயங்கள் கொட்டித் தீர்ப்பதற்கு நல்லதொரு மேடை அமைத்துத் தருகிறீர்கள் அடிக்கடி. 
[Quoted text hidden]
--

                                                              
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.
[Quoted text hidden]

Innamburan Innamburan Fri, Oct 7, 2011 at 6:03 AM
To: mintamil@googlegroups.com
Bcc: 
அசத்தி வீட்டீர்கள். பாமர கீர்த்தி சக்கை போடு போடுகிறது. எனக்கு மன நிறைவு. என்னுடைய டிகிரியில் டாக்டர் ஏ.எல்.எஸ்.ஸின் கையெழுத்து பிரதி.
ராஜத்தில் விருந்தில் யான் உரைத்து யாதெனில்:
.'பாமர கீர்த்தியை சித்திரங்களாலும் இசைக்கமுடியும் என்பதற்கு, இது அத்தாட்சி.'
அன்புடன், இன்னம்பூரான்

1 comment:

  1. “இன்றைய ஜெனெரேஷனுக்கு இதெல்லாம் தெரியணும், ஸ்வாமி. எத்தனை நாள் நாம் கிணத்துத்தவளையாக் இருப்பது...“

    நன்றி ஐயா.
    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete