Tuesday, November 19, 2013

மானஸ சஞ்சரரே…அன்றொரு நாள்: நவம்பர் 19


அப்டேட்: 20 11 2013
சாந்தி நிலவ வேண்டும்: நோபல் பரிசு: சான்றோர்கள் என்று தொடங்கிய இந்த இடுகை எல்லாருடைய தலைகளையும் குடைந்து, திசை மாறி/திரும்பி யாத்ரீகம் செய்ததை இரு வருடங்களுக்கு  பிறகு படித்தபோது சுவை கூடியது. ஓய்! நான் இடாக்கூடர் அரசியலில் தலையிடவில்ல்லைங்காணும்! முசிரியின் குடுமி நம்ம கைலெ சிக்கித்துப்பாருங்கோ!
மானஸ சஞ்சரரே…
இன்னம்பூரான்
அன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.
33 messages

Innamburan Innamburan 20 November 2011 17:38


அன்றொரு நாள்: நவம்பர் 20
பொன்மொழி இணைப்பில்.

“சாந்தி நிலவவேண்டும் என்று வாழ்த்துக்கூறுவது எமது மரபு. எமது உணர்ச்சிகளையும், அபிலாஷைகளையும் அது பிரதிபலிக்கிறது. இது எமது மனோவாக்கு.”
~நோபல் பரிசு விழாவில் எகிப்திய அதிபர் அன்வர்-எல்-சாதத்: 1978
“அதிபர் அன்வர்-எல்-சாதத் அவர்கள் ஒரு வீரனாக போருக்குத் தலைமை தாங்கினார்; எனினும், அசாத்திய தைரியத்துடன் அமைதி நாடினார். ஜன்மவைரிகளான எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டி, முதலடி எடுத்து வைத்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார்., அவர் இன்று நம்மிடையில் இல்லையெனினும், அவருடைய மனிதநேயமும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு மார்க்கபந்துக்கள். மென்மையான போக்கு உடைய மூதறிஞர் அன்வர்-எல்-சாதத் அவர்களை என்றுமே ஒரு கதாநாயகனாக அமெரிக்க மக்கள் போற்றுவர்.”
~அமெரிக்க அதிபரின் சுதந்திர மெடல் விழா:26 03 1984: விருது மொழி: 
மறைந்த தந்தையின் சார்பில் பெற்றுக்கொண்டது: கமால் எல்-சாதத். 

எனக்கு பிடித்த இஸ்லாமிய சமயம் சார்ந்த சொல், ‘ரஹம்’; பொருள்: தனிப்பெருங்கருணை. மனித இனம் ஓரினமே. அன்யோன்யத்திற்கும், மனித நேயத்திற்கும் ‘ரஹம்’ தான் அடித்தளம். அதை புரிந்து கொள்ளாமல் ‘பத்து நாள்’ தாயாதிகள் பத்துத் தலைமுறைகளுக்கு பகைமை பாராட்டுவர். துவாரகையில் யாதவர்கள் உலக்கைத்தாக்குதல் நடத்தி தங்கள் குலத்தையே அழித்துக்கொண்டமாதிரி, தம்மையே மாய்த்துக்கொள்ளுவர். என்றோ ஒரு நாள் விவேகம் தலையெடுத்து விமோசன காண்டம் தொடங்கினால், அண்ணன் தம்பியென கட்டி மகிழ்வர். அதுவும் காலாவதியானால், வீராவேசம், பரவசம், உணர்ச்சி பிரவாகம், போர்க்களம், வெட்டு, குத்து, குண்டு வெடிப்பு. ‘இது தாண்டா உலகம்’ என்று அரட்டையடிப்பவர்களும் உண்டு. எதற்கும் இதையும் பாருங்கள். நாடு கடந்த தேசாபிமானம் யூதர்களுக்கு உண்டு;ஏனெனில் அவர்களுக்கு நாடென்று ஒன்றுமில்லையே! வல்லரசுகளின் உபய/ உபாயமாக இஸ்ரேல் நாடு நிறுவப்பட்டது என்றும், அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனிய இஸ்லாமியர் என்றும், அதன் பொருட்டு இஸ்லாமிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்வது மிகையன்று. இஸ்ரேலியர்களின் தேசாபிமானத்தை உடும்புப்பிடி எனலாம். இந்த பின்னணியில்...

காசி மாநகரம் போல, எகிப்திய தலை நகரம் கெய்ரோவும் பழைய பெருமை நிறைந்த, தென்மதுரையை போல ராப்பகலும் கூட்டம் நெருக்கும் நகரம், நவம்பர் 21,1977 அன்று இரவு தத்தளித்துக்கொண்டிருந்தது; அப்டியொரு ஜே ஜே கூட்டம். ஆயிரக்கணக்கான மக்கள், ஏதோ ஒரு வேலன் வெறியாட்டம் நடந்தது போலதொரு லாஹிரியில் மயங்கி, ‘சதத்~அமைதி நாயகனே! வாழ்க நீ எம்மான்!’ என்றெல்லாம் பாடி, 20 11 1977 அன்று இஸ்ரேல் சென்று, அமைதி நாடி, வாகை சூடி திரும்பிய அதிபரை அமர்க்களமாக வரவேற்றனர் என்று ந்யூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. நடை நடையாக நடந்து, ‘மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்’ என்ற அறிவுரையை, பொது நலம் கருதி, தள்ளி வைத்து, ராஜாஜி மு.கருணாநிதியின் வீட்டுக்கு வந்து ‘மதுவும், கள்ளும், சாராயமும், தேறலும் வேண்டாமப்பா’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது. சான்றோர்கள் தன்னலமும் கருதமாட்டார்கள்; சுயமரியாதையை பொது நலனுக்கு பலியிடுவார்கள். அம்மாதிரி: கேளும் பிள்ளாய்!

‘கத்தியை சுழட்டி கண்ட சுகம் என்ன? என்ன?
புத்தியை தீட்டி பகைவனுக்கு அருள்வோம் அப்பனே!
சத்தம் போடாமல் சமாதானம் பேசுவுமே என்று,
பத்திரமாகவே இஸ்ரேலுக்கு போனாரே, ஐய்யன் சாதத்.

‘வாங்க! அண்ணாச்சி! அப்டீனார் தம்பித்துரை அவுகளும்,
அங்கிட்டு  பிரதமர் மெனெச்சம் பெகின் ஐயாவை சொல்றேனுங்க.
சங்கதியெல்லாம் பேசிக்கிட்டாஹ, ஆனந்தமாகவே!
பொங்கப்பானையும் மங்களம் பாடியதே.

நல்லது நடக்கும் என்றால் நாலு பேருக்கும் சம்மதம். தன்னுடைய நோபல் சொற்பொழிவில் அதிபர் சாதத் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு நன்றி கூறியது சாலத்தகும். அன்னாரின் நல்லெண்ண யாத்ரீகம் பயன் அளித்தது. ஐ.நா.வின் தீர்மானங்கள் 242ம் 338ம் வழி வகுத்தன. மார்ச் 26, 1979 அன்று இரு நாடுகளும் ஒரு அமைதி உடன்பாட்டில் கையொப்பமிட்டன. அண்ணனுக்கும், தம்பிக்கும் 1978ம் வருட நோபல் பரிசு கிடைத்தது. அந்த விழாவில் எகிப்திய அதிபர் சாதத் அவர்களின் அருமையான சொற்பொழிவின் ஈற்றடி:

‘...யாவரும் என்னுடைய பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள். உலகெங்கும் சாந்தி நிலவட்டும். நியாயமும், தர்மமும், மனித உரிமையும் தலை நிமிர்ந்து பீடு நடை போடட்டும். மனித இனம், ஆங்காங்கே, தன்னுடைய வாழ்வியலை வகுத்துக்கொள்ளட்டும். அவரவருடைய வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளட்டும். உலகின் சுபிக்ஷம் செழிக்கட்டும்.’

பாவி மனுஷா! இத்தனை நல்லவனாக இருப்பாயோடா?
சாவி கொடுத்த பொம்மை மாதிரி அண்டை அரேபிய விரோதமடா!
ஆவி பறித்த சண்டாளர்கள், சுட்டுத்தள்ளினார்களடா.
கேவி, கேவி அழுதது எகிப்திய பிரஜைகளடா.’
இன்னம்பூரான்
20 11 2011
பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு  நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera. 

993_001.jpg
... after '1979 Peace Treaty' with Israel signed by President Anwar Sadat.
















Sadat.pages
37K

Geetha Sambasivam 23 November 2011 22:15

‘மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்’ என்ற அறிவுரையை, பொது நலம் கருதி, தள்ளி வைத்து, ராஜாஜி மு.கருணாநிதியின் வீட்டுக்கு வந்து ‘மதுவும், கள்ளும், சாராயமும், தேறலும் வேண்டாமப்பா’ என்று கெஞ்சியது நினைவில் வந்தது. சான்றோர்கள் தன்னலமும் கருதமாட்டார்கள்; சுயமரியாதையை பொது நலனுக்கு பலியிடுவார்கள்//
நடு நடுவே இம்மாதிரியான மசாலாக்களைத் தூவுவது மெருகு ஏற்றுகிறது.  யாருக்காக எழுதறீங்கனு யார் கேட்டாங்களோ தெரியாது; என் மாதிரியான நிரக்ஷரகுக்ஷிக்கள் ஓரளவாவது பலனடைவோம்.
2011/11/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>


பின் குறிப்பு: இது 20 11 1979 தின நிகழ்வை பற்றி மட்டும். தலைமாந்தர்களின் வரலாறு அன்று. பக்கம் பக்கமாக எழுதலாம். தகும். ஒரு  நண்பர் கேட்டார், ‘யாருக்காக இதையெல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று. பாயிண்ட் மேட். எனக்கு தெரியவில்லை. ஒரு சமயம் எனக்காகவே எழுதுகிறேனோ என்றும் தோன்றுகிறது. ஒரு சமயம் ‘புதியது தருவோம்’ என்ற அவா என்றும் தோன்றுகிறது. Que sera sera. 



Innamburan Innamburan 23 November 2011 22:27

நன்றி, கீதா. என் மீது யாருக்கு ஆளுமை தற்காலம் என்றால், அது, 'அன்றொரு நாள்'. அது எனக்கு டிஸ்கவரி ராஜபாட்டையாக அமைந்து விட்டது. அப்றம் ஒரு சீக்ரெட். தினம் உங்கள் கருத்தை எதிர்நோக்கிய நான், ராஜம், சீதாலக்ஷ்மி, ஸுபாஷிணி கருத்துக்களையும் நாட துவங்கிவிட்டேன். நானொரு வரலாற்று பைத்தியம்.


Geetha Sambasivam 23 November 2011 22:35

அனைவரும் படிக்கிறார்கள் ஐயா.  அவங்கல்லாம் கொஞ்சம் பிசி என்பதால் பின்னூட்டம் இட முடிந்திருக்காது.  இப்போது சுபாஷிணியும், சீதாம்மாவும், ராஜம் அம்மாவும் தினம் பின்னூட்டம் இட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியாவும் இருக்கிறது.  பல்நோக்குப் பார்வையில் படிக்கவும் முடிகிறது. 


Innamburan Innamburan 23 November 2011 22:46

I wish to enhance the contents from others' contribution, as I am one of the many.
Thanks & Regards,
innamburan



2011/11/23 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>

நிரக்ஷரகுக்ஷிக்கள்  எபப்டி இருப்பார்கள் ??? 
சுபா

Innamburan Innamburan 25 November 2011 21:11

திருமதி.கீதா சாம்பசிவம் ஒரு சூப்பரக்ஷரகுக்ஷிணி, அபார நளபாகினி, அருமருந்து பின்னூட்டினி.  இது நிற்க.

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.


Geetha Sambasivam 25 November 2011 21:18


நன்றி ஐயா,  பல சிறப்புப் பெயர்களைத் தாங்கி வந்திருக்கும் இந்த மடலுக்குப் புத்தம்புதிய மடிக்கணினியில் இருந்து, முதல்முறையாகப் பதிலளிக்கிறேன்.  பையர் சொந்தமாய் எனக்கே எனக்கென வாங்கித்தந்திருக்கிறார்.  தாங்க்ஸ் கிவிங்  நாளுக்கான பரிசு.

Innamburan Innamburan 25 November 2011 21:51

அடி சக்கை! உங்களுக்கு வாழ்த்துக்கள், பையருக்கு வாழ்த்துக்கள். கணினி (பெண்பால்)க்கு வாழ்த்துக்கள். போய்ட்டுப்போறதுன்னு சாம்பசிவத்துக்கும் வாழ்த்துக்கள். 
இன்னம்பூரான்
Innamburan Innamburan 25 November 2011 21:54


 
[Quoted text hidden]


Geetha Sambasivam 25 November 2011 23:33


நன்றி.
[Quoted text hidden]

Hari Krishnan 26 November 2011 02:05




2011/11/26 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நிரக்ஷரகுக்ஷி ஆண்பால். படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.
இன்னம்பூரான்

Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல்.  இதன் நேரடிப் பொருள் வேடிக்கையானது.  நிர் அக்ஷர குக்ஷி.  குக்ஷி என்றால் வயிறு.  வயித்துல எழுத்தில்ல. தொப்பைல ஏன் ஒரு எழுத்தையும் காணும்?  ஏன்னா இது எந்த எழுத்தையும் இதுவரைக்கும் தின்னு தொலைக்கல. அதான் குக்ஷி நிர் அக்ஷரமா இருக்கு.  எழுத்தையே இன்னமும் கற்காதவன்.  (எழுத்தைக் கற்றால்தானே படிக்கிற கஷ்டம்?)  கல்வியோ கேள்வியோ அற்ற வயிறன்.  என் ஸ்டைல்ல மொழிபெயர்த்தால் நிரக்ஷரகுக்ஷி=இடாகுடர்.  

(டிஸ்கி: ‘நீ டாக்டரா‘ என்று அடிக்கடி கேள்விகேட்கும் கனவானுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘இந்தத் துறையில் போதுமான பயிற்சி இருக்கிறது என்ற தகுதியே போதுமானது’ என்று சிலமுறை நான் சொல்வது இங்குள்ள டாக்டர் பெருமக்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக அறிந்தேன்.  நான், அளிப்பது தன்னிலை விளக்கம்.  அது மெய்நிலை டாக்டர்களை பரிகசிப்பதாகக் கொள்ளத் தக்கதன்று.  அந்த நோக்கத்திலும் செய்யப்படுவதன்று.  எல்லா டாக்டர் பட்டம் பெற்றவர்களையும் மதிக்கிறேன்.  பெறாதவர்களையும் மதிக்கிறேன். Kindly understand me and my predicament and kindly do not distort and brush me with another shade)
--
அன்புடன்,
ஹரிகி.



rajam 26 November 2011 02:19


நான் "நிரக்ஷர குஷி" ஆக இருக்க விரும்புகிறேன்! அப்படிப்பட்ட நிலையில் எனக்கு-னு எதாவது ஒரு பட்டம் குடுங்கோ, ஹரீ! :-) :-) :-) 


rajam 26 November 2011 02:23


ம்ம்ம் ... கீதா பையர் வீட்டிலெ எதோ திட்டம் நடந்திருக்கு! மாமியார் கைலெ கணினியெக் கொடுத்தாச்சுன்னா ... மத்தவங்களுக்கு கொஞ்சம் தனிமை கிடைக்குமில்லெ! :-) :-) -)
எதுன்னாலும், நல்லதே நடந்திருக்கு! மகிழ்ச்சி! :-) :-) :-)



Hari Krishnan 26 November 2011 02:31




2011/11/26 rajam <rajam@earthlink.net>
நான் "நிரக்ஷர குஷி" ஆக இருக்க விரும்புகிறேன்! அப்படிப்பட்ட நிலையில் எனக்கு-னு எதாவது ஒரு பட்டம் குடுங்கோ, ஹரீ! :-) :-) :-) 

ஐ!  ஆசைப்பட்டாலும் கிடைக்காதாக்கும்.  நீங்க ஸர்வக்ஷர குக்ஷி; ஸாதக பக்ஷி; ஸரஸ்வதி என்னை ரக்ஷி. :D

[Quoted text hidden]

Nagarajan Vadivel 26 November 2011 02:50


//Kindly understand me and my predicament and kindly do not distort and brush me with another shade)//
இடாக்குதர் இட்டகுடர் டாக்டர், ஹானரிஸ் காசா டாக்டர், நிழல் டாக்டர், டாக்டர் ஆக விரும்பாதோர், டாக்டர் ஆக வாய்ப்பில்லாதோர், டாக்டருக்கு ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போனவர் என சகல் (அறிவு)ஜீவ ராசிகளுக்கும் ஆதரவு தரும் அரசியல் கட்சி நடத்தும் தலைவியே,
ஒங்களைத் தப்பாச் சொன்னா தப்பிலையா

அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்

நிரக்ஷரகுக்ஷி Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல் உங்கள் கட்சி
நிரக்ஷரகுக்ஷி ஆண்பால்
கணினி பெண்பால்
நிரக்ஷரகுக்ஷிக்குப் பொருந்துமா என்று நிங்கள் சொல்லவேண்டும்
Electronic chips cannot fill empty bellies
                                             - by Dr.Lalitha Ramdoss, Chair, International Adult Education Association
Hungry ... cannot understand Bhagavat Gita
                                              - byMahatma Gandhi
வயிற்றுக்குச்  சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் (முதலில்) பின்பு பயிறுப் பல கல்வி கற்றுப் பாரில் (டாஸ்மாக் அல்ல) உயர்த்திடவேண்டும்

//படிக்காத மேதை. எழுத்தறியா கழுத்தறுப்பு கனவான். தனித்தமிழில் தற்குறி. சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்.//
தமிழகத்தில் வாழும் எண்னற்ற படிக்க எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் படிக்க எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் ஒன்றாக இணயும் இடம் நிரக்ஷரகுக்ஷி
பிறந்த எல்லாத் தமிழர்களும் நிரக்ஷரகுக்ஷி
நாகராசன்

Geetha Sambasivam 26 November 2011 02:53

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நீங்க வேறே அம்மா; :)))  அப்படி நடக்கட்டும்; காத்திருக்கோம்.  ஆளுக்கு ஒரு கணினியை வைச்சுட்டு உட்காரத் தான் இந்த யோசனையோனு எனக்கு சந்தேகம்.  

Geetha Sambasivam 26 November 2011 02:53


சரஸ்வதி கடாக்ஷம்


Hari Krishnan 26 November 2011 03:51

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com

2011/11/26 Nagarajan Vadivel <radius.consultancy@gmail.com>
இடாக்குதர் இட்டகுடர் டாக்டர், ஹானரிஸ் காசா டாக்டர், நிழல் டாக்டர், டாக்டர் ஆக விரும்பாதோர், டாக்டர் ஆக வாய்ப்பில்லாதோர், டாக்டருக்கு ஆசைப்பட்டு அது நிறைவேராமல் போனவர் என சகல் (அறிவு)ஜீவ ராசிகளுக்கும் ஆதரவு தரும் அரசியல் கட்சி நடத்தும் தலைவியே,
ஒங்களைத் தப்பாச் சொன்னா தப்பிலையா


எப்பாலிற் சென்றாலும் எதிர்ப்பாலில் வந்துநிற்கும்
அப்பாலின் அரவரசா! ஆண்பாலும் பெண்பாலா?
தப்பாலும் தலைவிக்கா? தவறாத தலைவலி்க்கா?
இப்பாலில் என்செய்தேன்? என்றானேன் பெண்பால்நான்!


அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்


அது பெரிய அரசியல்தாங்கண்ணா.  பெரியவங்க அரசியல் பெருமாளுக்கே வெளிச்சம்.   நமக்கெதுக்கு வம்பு?



நிரக்ஷரகுக்ஷி Manager, Director என்பனபோல் பாலில்லாப் பெயர்ச்சொல் உங்கள் கட்சி

நிரக்ஷரகுக்ஷி ஆண்பால்
கணினி பெண்பால்
நிரக்ஷரகுக்ஷிக்குப் பொருந்துமா என்று நிங்கள் சொல்லவேண்டும்


திருச்சி, சிவகாசி, திருப்பதி எல்லாம் பெண்பால்; பாம்பன், முடிகொண்டான், எல்லாம் ஆண்பால்னா, கணினி பெண்பால்தாங்கண்ணா; நிரக்ஷரகுக்ஷி ஆண்பால் தானுங்கண்ணா.  

[

K R A Narasiah 26 November 2011 04:37


கல்கி வ. ரா வை நிரக்ஷரக்க்ஷி எனக்குறிப்பிட்டார்!
நரசய்யா
[Quoted text hidden]
[Quoted text hidden]

Hari Krishnan 26 November 2011 04:55




2011/11/26 K R A Narasiah
கல்கி வ. ரா வை நிரக்ஷரக்க்ஷி எனக்குறிப்பிட்டார்!
நரசய்யா

தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.  இது எந்தச் சந்தர்ப்பத்தில் நடந்தது என்று சொல்ல முடியுமா?  நல்லகவி-மஹாகவி போரில் இந்த அஸ்திரப் பிரயோகம் நிகழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.  (அந்தச் சமயத்தில் கல்கி எழுதிய கட்டுரைகள் தேவைப்படுகின்றன.  கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?  விடை கிடைத்தால் மிக்க நன்றியுடையவனாவேன்.)  

[

K R A Narasiah 26 November 2011 05:33


கணையாழியில் எழுதியுள்ளேன். விகடனில் வந்த கடிதங்கள் மூலம் தெரிந்தது. சாதாரணமனிதனிலும் பதிவு செய்துள்ளேன். 3-11-1935 அன்று கல்கி, தாமே இலக்கிய மாணாக்கன் என்றபெயரில் ஒரு கடிதம் ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு எழுதினார். அதற்குப் பதிலும் அவரே அளித்துள்ளார். இங்கே பார்க்கவும்image.png

அதற்கு அவர் எழுதிய பதில் இதோ:

image.png


தவிரவும் கல்கி சொன்னது:
பாரதி எழுதிய வள்ளிப்பாட்டை டால்ஸ்டாய் படித்திருந்தால் அபாரதியின் எல்லாபாட்டுகளையும் தீயில் போட்டு கொளுத்தியிருப்பார்!

விவரம் எல்லாம் கணையாழியில் எழிதியுள்ளேன்
நரசய்யா


s.bala subramani B+ve 26 November 2011 07:00


மதிற்பிற்குரிய நரசையா அவர்களுக்கு 

சமிபத்தில் 59 களில் குமதத்தில் எழுதி பின்னால்  புகழ் அடைந்த பள்ளிஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 
வையவன்

 மற்றும் பல புனை பெயர்களில் எழுதி வந்த ம.ச.ப> முருகேசன் அவர்களை சந்தித்த போது நீங்கள் அவருக்கு எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டார் 

அன்புடன் பாலு 





Innamburan Innamburan 26 November 2011 09:12



அருள் கூர்ந்து இன்னம் பூரனார் அரசியலிக் கொஞ்சம் கவனியுங்கள்


‘கத்தியை சுழட்டி கண்ட சுகம் என்ன? என்ன?

புத்தியை தீட்டி பகைவனுக்கு அருள்வோம் அப்பனே!
சத்தம் போடாமல் சமாதானம் பேசுவுமே என்று,
பத்திரமாகவே இஸ்ரேலுக்கு போனாரே, ஐய்யன் சாதத்.


*
அடுத்தபடியாக, ‘நிரக்ஷரகுக்ஷி’ சுழல, சுழல,  திரு.நரசய்ய அளித்த அருமையான பழம்பொருள் காட்சி அளித்த சுகானுபவம் என்னே! என்னே!
இன்ன்ம்பூரான்
26 11 2011

Geetha Sambasivam 26 November 2011 11:07

"நிரக்ஷரகுக்ஷி" என்ற பதத்தின் மூலம் பல அருமையான விளக்கங்கள் கிடைத்தன.  அனைவருக்கும் நன்றி.

Subashini Tremmel 27 November 2011 08:07


ஆஹா.. இந்த புத்தம் புது மடிக்கணினி கிடைத்திருக்கிறதா. அப்போது செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்று எழுதிக் கொண்டேயிருக்க் வாழ்த்துக்கள்.

சுபா

Subashini Tremmel 27 November 2011 08:09



2011/11/26 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
நீங்க வேறே அம்மா; :)))  அப்படி நடக்கட்டும்; காத்திருக்கோம்.  ஆளுக்கு ஒரு கணினியை வைச்சுட்டு உட்காரத் தான் இந்த யோசனையோனு எனக்கு சந்தேகம்.  


சரியா கண்டு பிடிச்சிட்டீங்க.. இப்போ எல்லோருக்கும் கணினிமேல் இருக்கும் மோகத்தைப் போல வேறெதிலும் இல்லை .. :-)

சுபா

[Quoted text hidden]

Nagarajan Vadivel 27 November 2011 08:24


எனக்கென்னவோ இரண்டு சிந்தனைகள்
1. ஒன்று கருப்பு வெள்ளியை ஒட்டி ஆடித்தள்ளுபடியைப்போல் 60%-80% வரை ஆடித் தள்ளிவிடுகிறர்கள்.  அந்த வலையில் இருந்து தப்புவது எளிதல்ல.  அதென்னவோ அமெர்க்காவில் இந்நாளில் அதிகம் கொடுப்பதும் பெறுவதும் மடிக்கணினியாகவே இருக்கிறது.  இந்தமுறை நோகணினி என்று சொல்லிவிட்டேன்
2. அந்தக் காலத்தில் காசைக் கரியாக்காமல் இருக்கு விரும்பும் விவரமானவர்கள் வீட்டுப் பெண்களுக்குக் கட்டாயம் கார் ஒட்டக் கற்றுக் கொடுத்து குறிப்பாக சேலை நகைக்கடை வழியாகப் பெண்களை ஒட்டச் செய்து அவர்களின் கவனம் கடைப் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.  இப்போது அந்தபாச்சா பலிக்காதுபோகவே மடிக்கணியைப் பயன்படுத்தி அவர்களை இணையக் கயிற்றில் கட்டி விடுகிறார்கள்.   கூப்பிட்டாலும் எனக்கு மெயில் மடலாடல் வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள்
புதுக் கணினி எந்தச்  சிந்தனைக்குப் பொருந்தும் என்பதை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன்
நாகராசன்

[Quoted text hidden]

coral shree 27 November 2011 08:39



2011/11/27 Nagarajan Vadivel
எனக்கென்னவோ இரண்டு சிந்தனைகள்
1. ஒன்று கருப்பு வெள்ளியை ஒட்டி ஆடித்தள்ளுபடியைப்போல் 60%-80% வரை ஆடித் தள்ளிவிடுகிறர்கள்.  அந்த வலையில் இருந்து தப்புவது எளிதல்ல.  அதென்னவோ அமெர்க்காவில் இந்நாளில் அதிகம் கொடுப்பதும் பெறுவதும் மடிக்கணினியாகவே இருக்கிறது.  இந்தமுறை நோகணினி என்று சொல்லிவிட்டேன்
2. அந்தக் காலத்தில் காசைக் கரியாக்காமல் இருக்கு விரும்பும் விவரமானவர்கள் வீட்டுப் பெண்களுக்குக் கட்டாயம் கார் ஒட்டக் கற்றுக் கொடுத்து குறிப்பாக சேலை நகைக்கடை வழியாகப் பெண்களை ஒட்டச் செய்து அவர்களின் கவனம் கடைப் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.  இப்போது அந்தபாச்சா பலிக்காதுபோகவே மடிக்கணியைப் பயன்படுத்தி அவர்களை இணையக் கயிற்றில் கட்டி விடுகிறார்கள்.   கூப்பிட்டாலும் எனக்கு மெயில் மடலாடல் வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார்கள்


சரியாகச் சொன்னீர்கள் ஐயா.. கரெக்டா பாயிண்ட்டைப் பிடித்த ஐயாவிற்கு ஒரு மடிக்கணினி இலவசம்....


புதுக் கணினி எந்தச்  சிந்தனைக்குப் பொருந்தும் என்பதை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன்
நாகராசன்


                                                          

செல்வன் <27 November 2011 08:47


கருப்பு வெள்ளியை சாமர்த்தியமாக பயன்படுத்தினால் நிறைய காசை மிச்சபடுத்தலாம்.

வருடம் முழுவதும் நண்பர்கள்/எங்கள் பிறந்தநாள், ஏனிவெர்சரிகளுக்கு அளிக்கவேண்டிய பரிசு பொருட்களை கருப்பு வெள்ளியன்று வாங்கிவிடுவோம். இதனால் நிறைய பணம் மிச்சமாகிறது. அலைச்சலும் மிச்சம்.

--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"

Geetha Sambasivam 27 November 2011 11:21


நாள் என்னவோ கறுப்பு வெள்ளி. ஆனால் தள்ளுபடியில் வாங்கவில்லை. தள்ளுபடி சரக்கெல்லாம் காலை பத்துமணிக்குள் விற்றுவிடும் என்றார்கள்.  நான் போகவில்லை. :)))  கூட்டத்திற்கும் பயம்;  பையரோடும், மருமகளோடும் ஷாப்பிங் செய்யவும் பயம்.  :)))))

Nagarajan Vadivel 27 November 2011 13:11


சோதனைமேல் சோதனை போதுமடா சாமி. சிறு குழந்தைக் கணினி நாலு மடிக்கணினி மூனு ஏழில் அஞ்சு கருப்பு வெள்ளியில் கிடைத்தது
இப்பவும் நேற்று என் மகள் நியூயார்க் போயிருக்கிறாள். திங்கள் கூட்டம் முடிந்ததும் செவ்வாய் திரும்ப வரும்போது கணினி வேண்டாம் ஐபோன் வாங்கிவரச் சொன்னேன்.  இன்னொரு நண்பர் கனடாவிலிருந்து ப்ரீ-கிறிஸ்துமஸ் பர்சேஸ் பன்னி ஜனவரி 2-ஆம் தேதி கொண்டு வருவார் அவர் என்ன கொன்டு வருகிறாரோ நான் அறியேன்
இங்கே இந்தியாவில் இருக்கும்போதே கருப்பு வெள்ளி ஆன்லைன் மூலம் 60% தள்ளுபடிக்கு ஒரு செர்வர் ஸ்பேசும் வீடியோ தயாரிக்கும் மென் பொருளும் வாங்கினேன்
சென்றமாதம் என் மருமகன் சென்றபோது என்ன வேண்டும் என்று கேட்டார்.  அப்போ மின் தமிழில் நிறைய நறநறவென்று பல்லைக் கடிக்க வேண்டியிருந்தது.  இந்திய டென்டோபஃபிக்சர் தாக்கு பிடிக்க முடியாமல் பல் கழன்றுகொண்டே இருந்தது.  அவர் புன்னியத்தில் அரை டஜன் ட்யூப் கைவசம். நல்லா பல்லை நற நறவென்று கடிக்க முடிகிறது
நாகராசன்

[Quoted text hidden]

Geetha Sambasivam 27 November 2011 15:29


நல்லாக் கடிங்க! :))))))


Monday, November 18, 2013

ஆட்டிப்படைத்திடவே: அன்றொரு நாள்: நவம்பர் 19



அன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!
10 messages

Innamburan Innamburan 19 November 2011 18:10

அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

தலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன மாதிரி. யார் அந்த முபாரக் அலி? 

நவம்பர் 19, 1917 அன்று பிறந்த  ஸ்திரீ பிரஜையை, அவளுடைய ‘தலை நிமிர்ந்த’ பாட்டியே சூள் கொட்டித்தான், அரைமனதுடன், வரவேற்றாளாம்.  அந்த மாளிகையின் முதிய மாஜி ஊழியர் முபாரக் அலியிடம், வழக்கம் போல், எடுத்துச்சென்றால், அவர் குழவியை ஆணாக பாவித்து ‘சுபிக்ஷம் உண்டாகட்டும்’ என்று ஆசி வழங்குகிறார், சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல்.  இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி நேற்றைய (18 11 2011) எகனாமிக்ஸ் டைம்ஸ் இவ்வாறு கட்டியம் கூறுகிறது. இன்று எதிர்க்கட்சியும் புஷ்பாஞ்சலி செய்கிறது. தீர்க்க தரிசி தான் அந்த முபாரக் அலி, பத்தாம் பசலியாக இருந்தாலும்.

இந்த கட்டுரைக்கான ஆய்வில் பல மணி நேரம் வீணாயின, எனக்கு. கட்டுரைத்தலைவியை பற்றி அதிகம் கிடைத்தவை: பொய் மிகு மெய் கீர்த்திகள் & பொய் மிகு பொய் அபகீர்த்திகள். அது போகட்டும். மோதிலால் நேருவின் செல்ல பேத்தி இந்திரா பிரியதர்ஷிணி தனக்கே இழைத்துக்கொண்ட அநீதி: எமெர்ஜென்சி. எடுத்தவுடன் அது தான் பேச்சு, வாதம், விவாதம், விதண்டாவாதம், நிந்தனை. அவருடைய மற்ற சிறந்த பணிகள் மறக்கடிக்கப்படுகின்றன. அதை பற்றி நான் சொல்ல வேண்டியதெல்லாம், ‘அன்றொரு நாள்’ தொகுப்பில், ஜூன் 25 & 26 ஏற்கனவே சொல்லி விட்டேன். இங்கு அது பற்றி பேசப்போவதில்லை. ‘மின் வேலி’ என்ற கட்டுரையில் நான் எழுதியதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே.

“...இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977  இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து...”

நான் அவரை முதலில் பார்த்தது 1962/63. குடியரசு தின ஜனாதிபதியின் தேனீர் விருந்தில். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பலவருடங்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் நிக்சனுடன் ஒரு புகைப்படம். நிஜமா சொல்றேன். மாமியாரிடம் அஞ்சும் மருமகப்பெண் போல நிக்ஸனார். அம்மையோ லண்டன் எகானமிஸ்ட் வரைந்த காளிப்படம் போல, சீற்றமான முகத்துடன், அதில் ஒரு புன்முறுவலுடன் . நிக்சனும், அவருடைய சகுனி கிஸ்ஸிங்கரும், திரைக்கு பின்னே வசை பாடுகின்றனர்.தந்தைக்கும் அருமந்த புத்திரிக்கும் ஒரு வித்தியாசம். முக்கியமான பொறுப்புகளில், முழுதும் பொருந்தாதவர்களை, அமர்த்திவிட்டு திண்டாடிய நல்ல மனிதர், நேரு. ~ சர்தார் கே.எம். பணிக்கர் ஒரு உதாரணம். உரிய நேரத்தில் சர்தார் படேல் எச்சரித்தார். நேரு கேட்கவில்லை. அசடோ, சமத்தோ, ஜகதல பிரதாபனோ, அபூர்வ சிந்தாமணியோ, அதற்கதற்கு ஆளை பொறுக்குவதில், அம்மணி நிகரற்றவரே. காமராஜரும், மொரார்ஜி தேசாயும் லகுவாக உதறப்பட்டனர். 

இந்த தீன் தேவிகளை சீனியாரட்டிப்படி ஒருகண் பார்த்து விடுவோம்.1898ல் பிறந்த கோல்டா மீயர் ஒப்பற்ற பிரதமர். இஸ்ரேல் பிறக்கும் முன்னரே தேசாபிமானத்தின் உருவகம், அன்னை கோல்டா மீயர். தன்னினம் ஈவிரக்கம் நாடலாகாது என்பதில் தீவிரமாக இருந்தார். ஏழு மிலியன் டாலர் நிதியுதவி புரட்டமுடியாத இடத்தில்  50 மிலியன் திரட்டினார். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசும் கறார் குணம். இஸ்ரேல் உருவாக்கத்துக்கு நான்கு நாட்கள் முன்னால், மாறுவேடத்தில் சென்று அப்துல்லா மன்னரிடம், ‘எம்மை எதிர்க்கவேண்டாமே’ என்று வேண்டுகோள் விடுவிக்க, அவரும் ‘அவசரப்படேல்’ என்றார், ஏதோ ஞானியை போல. பதில்: ‘அவசரமா? நாங்கள் இரண்டாயிரம் வருடம் காத்திருக்கிறோமே.’ ஒரே வார்த்தையில் கோல்டாமீயரின் புருஷலக்ஷணம். ம்யூனிச் நகர படுகொலை பற்றி, ‘அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 5’  இழையில் எழுதியிருந்தேன். கோல்டா மீயர் எதிர்ப்பார்த்த அளவுக்கு சர்வ தேச ஆதரவு கிட்டவில்லை. அந்த  கொலைகாரர்களை இருபது வருடங்களாகத் தேடி பிடித்து ஒழித்து விட ஆணை பிறப்பித்து, அதை செய்து காட்டியது கோல்டா மீயர். தேவி நம்பர் 1.
இந்திய பிரதமர் இந்திரா காந்தி நம்பர் 2 சீனியாரிட்டியில். பல விஷயங்களில் நம்பர் 1. அவருடைய குணாதிசயங்களை புரிந்து கொள்ள, சில் மேற்கோட்கள்: 
~ என் தந்தை ராஜாங்கம் ஆளுபவர்; நான் அரசியல் வாதி பெண். அவர் ஒரு ஸைண்ட். நான் அப்படியில்லை.
~ நான் செய்வதெல்லாம் அரசியல் விளையாட்டுக்கள். ஜோன் ஆஃப் ஆர்க் மாதிரி நான் அவ்வப்பொழுது பலிகடா ஆகிறேன்.
~ என் தாத்தா சொல்லுவார்: உழைப்பவர்கள் ஒரு இனம்; பேர் தட்டிச் செல்பவர் மற்றொரு இனம். முதல் இனத்தில் சேரு. போட்டி கம்மி.

உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்கு தெரிந்து இருக்கப்போகிறது? இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அவரது புகழை நிலை நாட்டுகிறது. அதனுடைய முதல் துணை வேந்தர் டாக்டர் ராமி ரெட்டி எனது நண்பர். அடிக்கடி அந்த நிறுவனத்துக்காக, அவருடன் அநாமதேயமாக உழைத்தது உண்டு. அப்படி வேலை வாங்குவது இந்திரா காந்தி ஸ்டைல். டாக்டர் ராமி ரெட்டியை, தீவிர ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்த பிரதமர் இந்திரா காந்தி சொன்னது, ‘உம்மை இங்கு அமர்த்தியதுடன் என் வேலை முடிந்தது. இனி வெற்றியோ தோல்வியோ,உம் கையில். யாரும் குறுக்கிடமாட்டோம்.’

இனி தேவி நம்பர் 3: 1925 ல் பிறந்த மார்கெரட் தேட்சர். இங்கிலாந்தின் பிரதமர் 1979 -1990. கன்செர்வேட்டிவ். அவரது ஆட்சி பல விதங்களில் ஒரு எதிர்நீச்சல். விலாவாரியாக பேச இது இடமில்லை. ஆனால், இரண்டு விஷயங்கள். 1. அவருக்கு இந்திரா காந்தி மாடல் எனலாம். 2. குடிசை மாற்று வாரியம் போல், இங்கிலாந்தில் முனிசிபாலிட்டிகளுக்கு சொந்தமான மலிவு குடியிருப்புகளில் ஏழை பாழை வாழ்வார்கள். அவற்றை பாதி விலைக்கு அவர்களுக்கு விற்கப்போவதாக இன்று (19 11 2011) அறிவிப்பு. இதற்கு நன்றி மார்கெரெட் தாட்சருக்கு சொல்ல வேண்டும். 
அதே போல், நாமும் இந்திரா பிரதர்ஷிணி காந்திக்கு பல விஷயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். பல விஷயங்களை நினைத்து திருந்தவும் வேண்டும்.
இன்னம்பூரான்
19 11 2011  
scan0017-300x174.jpg




உசாத்துணை:

18 NOV, 2011, 12.10PM IST, IANS 


Seethaalakshmi Subramanian 19 November 2011 19:47


அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan 19 November 2011 19:54
To: mintamil@googlegroups.com
நீயும் நவம்பர் அல்லி அரசாணி தான், சீதா! எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கிறாய்! ஆட்டிப்படைத்திடவே வந்துருளிய பெண்ணியத்தில் நீயும் அடக்கம். என் வாழ்த்து. படங்கள் எல்லாம் பார்க்கவும்.அரிய புகைப்படங்கள் உளன்.
அண்ணா இன்னம்பூரான்

2011/11/19 Seethaalakshmi Subramanian <seethaalakshmi@gmail.com>
அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!



Seethaalakshmi Subramanian 19 November 2011 20:12


அண்ணா, நான் சிறுமியாக இருக்கும் பொழுதே என் அப்பா என் பொண்ணை இந்திராகாந்தி மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்பொழுது அந்த அம்மாள் எந்தப்பதவியிலும் இல்லை. நேருஜிக்கு ஒரே பெண். அப்பாவிடம் கேட்டதற்கு துணிச்சலான பொண்ணா இருன்னு சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தமான பெண். அவர்கள் செய்த செய்ல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தவில்லை. அவரது துணிச்சல் பிடிக்கும். அதுவும் அரசியலில், ஆண்கள் உலகில் துணிச்சலுடன் இருந்தே ஆக வேண்டும். அவர்களை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க விரும்பினேன். போட்டொ எடுத்துக் கொள்ள விரும்பினேன். இரண்டும் நடந்தது அண்ணா
சீதா

[Quoted text hidden]

Innamburan Innamburan 19 November 2011 20:48
To: mintamil@googlegroups.com

கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, சீதா. தற்கால வரலாறு எழுதும்போது, தெரிந்ததை எல்லாம் எழுதிவிடமுடியாது. எல்லாரும் மனிதர்கள் தானே. சந்ததிகள் மனம் நோகலாகாது. இந்திரா காந்தியின் அசாத்திய துணிச்சல் மோதிலால் நேருவுக்கு இருந்தது. பிறகு யாருக்கும் இல்லை. நான் குறிப்பிட்ட முப்பெருந்தேவிகளில் மார்கெரட் தாட்சரின் அணுகுமுறையை நான் ஏற்கவில்லை. ஆனால் அவருடைய தீர்மானத்தின் பிற்கால நல்ல பயனை புறக்கணித்தால், வரலாறு எழுதும் தகுதியை இழந்து விடுவேன். அம்மாதிரி தான் இந்திரா காந்தியின் தீர்மானங்களில் சில. என்றுமே, ஆளை பொறுக்குவதிலும், கழிப்பதிலும் அவருடைய அபார திறனை நான் வியக்காத நாள் கிடையாது.

அது சரி. உன்னை சேர்த்து எனக்கு ஐந்து தங்கைகள். கடைக்குட்டிக்கூட என்னை பன்மையில் விளிப்பதில்லை. நீயும் அந்த பழக்கத்தை நிறுத்தி விடு.
அண்ணா இன்னம்பூரான்


Seethaalakshmi Subramanian 19 November 2011 22:01


அண்ணா, ஒரு விஷயம். ஒரு பெரிய அரசியல் பிரமுகரிடம் நான் "நீங்கள் அரசியலுக்கு அவ்வளவு சரியில்லை" என்றேன்.அவர் என் மீது கோபித்துக் கொள்ளவில்லை. ஆனால் உடனே ஒரு கேள்வி கேட்டார். "நீ யாரை பொருத்தம் என்று நினைக்கின்றாய்? உடனே தயங்காமல் இந்திராகாந்தி என்றேன். நேருஜி நல்லவர். ஆனால் மகள் வல்லவர். 
அரசியலில் தலைமையேற்று நடப்பது சாதாரணமல்ல.
உங்களுக்குத் தெரியும். நாம் வேலை செய்வது எளிது. ஆனால் பலரிடம் வேலை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.  management is not easy. he should have special skill.
போர்க்களத்தில் கொலைகள் எப்படி நியயப்படுத்தப்படுகின்றதோ அரசியலிலும் சில போக்குகள் அவசியமாகின்றது. சாணக்கிய தந்திரம் என்கின்றோம். எதற்கும் அஞ்சாத ராட்சசி அந்த அம்மாள்
ஆனால் அவர்களும் சாதாரண மனுஷி என்பதை ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அலக்பத் தீர்ப்பு வந்தது. எமெர்ஜென்சியும் வந்தது. அதன் பின்னர் அவர்கள் காஞ்சிக்கு மகாப் பெரியவரைப் பார்க்க வந்தார்கள். தேனப்பாக்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பெரியவர் ஒன்றும் பேசவில்லை. நேரகப் பார்க்கக் கூட இல்லை. அங்கே அமைதியாக கிழே அமர்ந்திருந்த அம்மையாரின் கண்கணில் கண்ணீர் வழிந்தோடியது. அவர்கள் ஆத்மாவின்  கண்ணீர்
இதுவரை இதனை நான் யாரிடமும் சொன்னதில்லை. சிலர்தான் அக்காட்சியைக் காணமுடிந்தது
கண்ணன் பார்தப்போரில் செய்யாத சூழ்ச்சியா? அவனால் சிரிக்க முடியும். ஆக்கலும் அழித்தலும் அவனுக்கு ஒன்றே. நாம் மனிதர்கள். துணிச்சல் எத்தனை இருந்தாலும் ஏதாவது தவறுகள் செதிருந்தால் (மனிதன் செய்யாதிருப்பானா) என்றாவது ஒருநாள் 
கண்ணீர் சிந்தத்தான் வேண்டும். . முதுமை கால்த்தில் வேலைகள் எதுவும் செய்யாதிருந்தால் நம் பழங்கணக்கைப் பார்க்கத்தோன்றும். அப்பொழுது சிரிப்பதும் அழுவதும் நேரிடும்
இந்திராகாந்தி பெயரே என்னை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது. பலரும் புத்தகத்திலும் படங்களிலும் பார்க்க முடிந்த பல பெரியவர்களுடன் அருகில் இருக்கும் வாய்ப்பு நம்மிருவ்ருக்கும் அதிகம் உண்டு. நாம் பேசியிருக்கின்றோம்

Geetha Sambasivam 19 November 2011 23:16


அரிய தகவல்கள். தெரிந்த தகவல்கள் எனினும் தொகுப்பு அபாரம். வழக்கம் போல் தெரியாத தகவல்களும் உண்டு.
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

இன்னம்பூரான்
19 11 2011  

Geetha Sambasivam 19 November 2011 23:18


Subashini Tremmel 20 November 2011 09:01



இப்பதிவை வாசித்து மகிழ்ந்தேன் திரு.இன்னம்புரான். 

இந்த இழையில் நீங்களும் சீதாம்மாவும் செய்யும் கலந்துரையாடலும் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் சுவாரசியாமகவும் இருக்கின்றது. 


சுபா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா


Innamburan Innamburan 20 November 2011 10:16




~ நன்றி, ஸுபாஷிணி, அரிய படங்களையும், ஒரு நேர்காணலையும் இணைத்திருக்கிறேன். நேரம்கிருக்கும் போது பார்க்கவம்.
இன்னம்பூரான் 

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!


Sunday, November 17, 2013

அமர் சித்ர கதா:அன்றொரு நாள்: நவம்பர் 18



அன்றொரு நாள்: நவம்பர் 18 அமர் சித்ர கதா

Innamburan Innamburan 18 November 2011 17:15
அன்றொரு நாள்: நவம்பர் 18
அமர் சித்ர கதா

அமர் சித்ர கதா இதழ் நிறுவிய நண்பர் திரு. அனந்த் பாய் அவர்கள் நான் தலைப்பை இரவல் வாங்கியதை கண்டு மகிழ்ந்திருப்பார். ஏனெனில், கதாநாயகன் அமரர்; சித்ராங்கதர்; காவியமும், ஓவியமும், இசை, இயல், நாடகமும் ஒருங்கே உருவகமான சகல கலா வித்தகர். ஆங்கிலத்தில் லெஜெண்ட் என்பார்கள், வாழும் காலத்தே வரலாறு படைத்தவர்களை. தாதாசாஹேப் பால்கே விருது பெற்ற டைரக்டர் பத்ம பூஷண் வி.ஶாந்தாராம் அவர்கள் ஒரு லெஜெண்ட் தான். இந்திய திரைபடக்கலையின் எல்லா கலையம்சங்களிலும், பொறியியல் நுட்பங்களிலும், சினிமா தியேட்டரில் திரைதூக்கும் சில்லறை வேலையில் தொடங்கி அமர சித்திர கதைகளை திரைப்படங்களாக படைப்பது வரை, 75 ஆண்டுகள் தன்னை இந்திய திரைப்படக்கலைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர். மற்றவர்களுக்குக் கலங்கரை விளக்காக விளங்கினார். அவர் விட்டுச் சென்ற கருவூலங்களும் சிறந்தவை. கொடுத்து வைத்த மனிதர். அவருடைய மனைவிகளும், மக்களும் அவருடைய புகழை மங்காமல் பார்த்துக்கொண்டனர். என்றுமே, அவர் ஒரு ‘பளிச்’ மனிதர்.
நவம்பர்  18, 1901 அன்று கோலாப்பூரில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த திரு.ராஜாராம் வாங்குதிர் ஶாந்தாராம் பள்ளிக்கு செல்லவில்லை. எடுபிடி வேலைகள் செய்து பிழைத்தார். அதுவே அவருக்கு நடிப்புத்துறையின் அணு-நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தது. வல்லுனர்களுக்கு அணுக்கத்தொண்டு செய்ததின் பிரதிபலனும் கிடைத்தது. வாய்ப்பை ஆற்றிக்கொள்ளும்  ஆற்ரலும் உடன் பிறந்தது என்க. பிரபல டைரக்டர் பாபுராவ் பெய்ண்டர் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார், 1925ல். டாம்லே, பெய்ண்டர், குல்கர்னி, சையத் ஃப்தேஹ்லால் போன்ற ஜாம்பவான்களுடன் 1929ல் ஒரு சுபயோக சுபதினத்தில் பிரபாத் என்ற சினிமா கம்பெனி ஆரம்பித்தார், ஶாந்தாராம்.
கோபால் கிருஷ்ணா (1931) என்ற முதல் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு. தொன்மை நாடகங்களில் தற்கால சமுதாய பிரச்னைகளை நுட்பமாக ஆராய்வதே, இவரது தனிச்சிறப்பு. அடுத்த வருடமே ‘அயோத்தியா கா ராஜா’ என்ற பேசும் படம். அத்துடன் விட்டாரா? ஜெர்மனிக்கு சென்று கலர் சினிமா உத்திகளை கற்று வந்தார். உடனடியாக, கலர் படங்கள். பூனாவுக்கு சென்று ஸ்டூடியோ அமைத்துக்கொண்டஅர். 1941ல் எடுத்த ‘படோஸி’ (பக்கத்து வீட்டுக்காரன்) என்ற படம் இனவெறியை தணிக்கும் செய்தியாக அமைந்தது. பெளத்தம் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் எதிர்த்ததை பிரதிபலித்த ‘அம்ருத் மந்தன்’ சமகாலத்து சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மென்மையாகக் கண்டித்தது. அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு சேதி சொல்லின.
1942ல் மும்பைக்குத் திரும்பி ராஜ்கமல் ஸ்டூடியோவை துவக்கிய ஶாந்தாராம் ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ என்ற படம் எடுத்ததும் இல்லாமல், அவரை பிரதான நாயகனாக நடித்தார். 1957ல் அவர் எடுத்த ‘தோ ஆங்க்கேன் பாரா ஹாத்’  பெர்லின் சினிமா பரிசு, மெட் ரோ கோல்ட்வின் மேயர் பரிசு, ஜனாதிபதியின் தங்க மெடல் எல்லாம் பெற்று, போடு போடுன்னு போது போட்டது. அதற்கும் மேலாக தடபுடல் வரவேற்பு. ‘ஜனக் ஜனக் பாய்லெ பாஜே’ (1955) என்ற நிருத்திய நாடகத்திற்கு.
சுருங்கச்சொல்லின், 1990ல், 89 வயதில் அமரரான திரு. ஶாந்தாராமும், இந்திய சினிமாவும், தோளுடன் தோள் வளர்ந்த ஜிக்ரி தோஸ்த்துக்கள். இந்திய சினிமாவின் ‘பொழுதொரு வண்ண, நாளொரு மேனி’ வளர்ச்சியின் ஒட்டு மாங்கனி: டைரக்டர் ராஜாராம் வாங்குதிர் ஶாந்தாராம் அவர்கள். 
இன்னம்பூரான்
18 11 2011
photo5.jpg

Stamp-Rel14.gif
உசாத்துணை

Geetha Sambasivam 20 November 2011 02:56

சாந்தாராம் பற்றிய அருமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.  எனக்குப் பிடிச்ச படம் தோ ஆங்கே, பாரா ஹாத். அதில் வரும் பாடல்
 
"யே மாலிக்"  பால் ராஜ் சஹானி(??) அற்புதமாக நடித்திருப்பார்.  சந்தியாவும்.  கீத் காயா பத்தரோனே தான் பிடிக்கவில்லை.