Showing posts with label பேஷ்! பேஷ்! சீரீஸ். Show all posts
Showing posts with label பேஷ்! பேஷ்! சீரீஸ். Show all posts

Tuesday, August 21, 2018

பேஷ்! பேஷ்! சீரீஸ்

பேஷ்! பேஷ்! சீரீஸ்


  • Monday, August 20, 2018, 5:04

சுருங்கச்சொல்வது நாகரீகமாகி விட்டது. ஒரு பக்கக்கதை, ஒரு வரி தத்துவம், படம் போட்டு ஃபிலிம் காட்டுவது, கேலிச்சித்திரம் வரைந்து மூக்கொடைப்பது எல்லாம் தற்கால வைர, முத்து, பவள ரத்னங்கள். ‘பேஷ்! பேஷ்!’ சீரீஸ் நாட்டுநடப்பு, நடவாத உடைப்பு, நடை, உடை, பாவனைகளில் புதைந்து இருக்கும் அவல நிலை, கோக்கு மாக்கு, செரிமான போக்கு, ‘கர்மம்’ என்று தலையில் அடித்திக்கொள்ளவேண்டிய மர்மம், ‘நாயை கடித்த மனிதன்’ போன்ற விந்தை செய்திகள் வகையறாவை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ‘பளிச்’ என்று பதிவு செய்யும். வாசகர்கள் இதை தந்தி போல் பாவித்து சிந்தனைப்பகிர்வு செய்து கொண்டால், துரித கதியில் கடுமா ( துரகம். சரி, குதிரை)
போல் நானும் ஓடலாம். இல்லையெனில் திருமால் போல படுத்துக்கிடக்கலாம்.
இன்னம்பூரான்
18 08 2018
பேஷ்! பேஷ்! [1]
மதுரை நகராட்சி மன்றம் வருடாவருடம் தந்தி அனுப்பிய செலவுகளை பதிவு செய்து இருக்கிறது.
2015-16 – ரூ.4,44,685/-
2016-17 – ரூ.1.74,132/-
பெரிசா சொல்றதுக்கு ஒன்றும் இல்லை.ஆனால், சார், தந்தி சேவையை தபால் துறை நிறுத்தியது ஜூலை,15, 2013 அன்று.
பேஷ்! பேஷ்!
இன்னம்பூரான்
18 08 2018
பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=87064#respond