Showing posts with label ஜமாய் பாபு !!! தொடர். Show all posts
Showing posts with label ஜமாய் பாபு !!! தொடர். Show all posts

Friday, July 17, 2015

ஜமாய் பாபு !!! தொடர் [1] & [2]


அந்தோ பரிதாபம்!!! தொடர் [1]
ஜமாய் பாபு !!! தொடர் [1]
கஜானா காலி !!! தொடர் [1]
பந்து மித்திர சோதரர்காள் !!! தொடர் [1]

இன்னம்பூரான்
ஜூலை 17, 2015

அன்றாடம் பற்பல தகவல் களஞ்சியங்கள் கூறையை பிரித்து கொட்டுவதால், மேற்கண்ட தலைப்புகளில், சுவாரஸ்யமானவை தந்தி போல் சுருக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்படும். சட்புட்னு எழுதுவதால், உசாத்துணை மிஸ்ஸிங் ஆகலாம். இஷ்டப்பட்ட போது வரும்.

இங்கே:
ஜமாய் பாபு !!! தொடர் [1]




அது ஒரு மனமகிழ்மன்றம். எல்லாரும் ஜாலியா வருவாங்க. ஜாலியே அங்கு அவர்களுக்கு ஜோலி. இடத்தை அதிகாலையில் காலி பண்ணச்ச ஸூப்பர் ஜாலி. பேரே தேனொழுகும் பெயர்- ஹனிபோர்ன் ரயில்வே கிளப். காரியதரிசி சாம் போல்டர் போல்டா உள்ளே போய் பாக்கிறாரு; அதிர்ச்சியில் மயங்கி விழல்லை என்றாலும், கன்னா பின்னா என்று பீர் பாட்டில்களும், ஒயின் போத்தல்களும் சுக்குநூறாக உடைந்து கிடந்தன. திகில்லெ, ஐயா இங்கையும் அங்கையும் பார்த்தால் குடிகாரன் தடுமாறிக்கிணே ஒரு மாகியோ, வத்தலோ, வடாமோ, வறுவலோ அடுக்கிய பெட்டி மேலே உறங்கறாரு, பெருமூச்சு விட்டுக்கிணே. ஆரு? ஒரு அணில்! தண்ணி போட்ட அணில்!  சுத்தி முத்திபார்த்தார். ஒரே திகில்! அவரே திக்குமுக்காடிப்போய் (பேய் இங்கிலாந்திலே காமன்.) கண்டது யாதெனில், ‘... எங்கு பார்த்தாலும் போத்தல்கள். நோட்டும், சில்லறையும் சிதறியவாறு. பீர் பீப்பாயின் மூடியை எப்படியோ களட்டி, கைப்பிடி மேலே விழுந்து புரண்டு, திறந்து, பீர் சாந்தி நடத்தியிருக்கிறார், அணிலார். தள்ளாடிக்கிணே நகராறு. போதை தான் ஐயமில்லை! ஐயமில்லை!! ஐயமில்லையே!!!


ஜமாய் பாபு !!! தொடர் [2]

‘அணிலுக்கு இருக்கிற தகரியம், தெனாவட்டு, ஆம்பளைக்கு வராது.’ இது நம்ம கோணமூக்கு கோபுவோட பித்தளை வாக்கு. ஆனா நிஜம். சொல்வது எல்லாம் நிஜம். ஆஸ்ட்ரிலேயாவில், ஒரு அழகியை அழவைத்ததொரு அணில். அந்தம்மா போலீஸுக்கு ஃபோன் போட்டு சொல்றாக, ‘சார்! என்னை பின்னால் நிழல் போல் துரத்திக்கிணு வர அந்த பயலை என்ன பண்றது என்று தெரியவில்லை.இப்படிப்போனா, அப்டி வாரான். அப்டிப்போனா, இபடி வாரான். சொல்லிப்பாத்தேன். அவன் கண்டுக்கவே இல்லை. எனக்கு கஷ்டமா இருக்குது சார்.. ‘வந்தனன், வந்தனன்’ என்று அபயஹஸ்தத்தோட போலீஸ் கார் வந்து அவனை அரஸ்ட் பண்ணிட்டாங்க, சார். அவனொரு அணில்.
அடக்க ஒடுக்கமா இருக்கரவங்க, நம்ம க்ரூப்லெ தன்னை அணில் என்பார்கள். இனிமேல் அவங்க அனில் என்று சொல்லிக்கொண்டால் தான் தப்பலாம்.

தகவல்: இன்றைய  நாளிதழ் ஒன்று.

சித்திரத்துக்கு நன்றி:http://www.funnfun.in/wp-content/uploads/2013/12/drunk-squirrel-funny-wallpapers.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com