Showing posts with label ஈ.வே.ரா.. Show all posts
Showing posts with label ஈ.வே.ரா.. Show all posts

Wednesday, September 11, 2019

திரு. வி. க. குருகுலம் ~ 2

திரு. வி. . குருகுலம் ~ 2

முன்குறிப்பு

பின்னூட்டம் அளித்து, ஆர்வத்தைக் கூட்டிய 26 வாசக நண்பர்களுக்கு வந்தனம். எல்லாருமே வரவேற்றதுடன், மேலும் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது என் கடமையை உணர்த்துகிறது. தொடருவோம்.
இன்னம்பூரான்.
செப்டம்பர் 11, 2019

3. 'வீட்டுக்கு போய், நாளை வருக.’

நண்பர்காள்! நிராயுதபாணியாகிய இராவணனை நோக்கி ஶ்ரீராமன் போரில் இவ்வாறு கூறினான் என்று சொல்லப்படுவது வழக்கம், அது கம்பராமாயணத்திலிருந்து அல்ல. அது ஒரு புறமிருக்க, இங்கு அதன் பொருள் வேறு. சென்னையின் பட்டாளம் பகுதியில் தான் தொழிளாளர்கள் பெரும்பாலும் வசித்தனர். திரு.வி.. அவர்கள் ஒரு தொழிளார் சங்கத்தலைவர் என்பதை நம்மில் பலர் அறிந்ததில்லை. தொழிலாளர்களின்  அலை வரிசை வேறு. இலக்கியக்கர்த்தாக்களின் அலை வரிசை வேறு. இடைவெளி அதிகம். திரு.வி.. இங்கும் தலைமை தாங்குவார்; அங்கும் போற்றப்படுவார். அவர் ஆணையிட்டு விட்டால், எத்தனை ஆவேசத்திலிருந்தாலும், தொழிலாளர்கள் மகுடிக்கு மயங்கிய அரவம் போல அடி பணிவார்கள். அவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டார்கள். மறு நாளை, நோன்பு தினத்தை, என்னால் முடிந்த வரை சொற்சித்திரமாக தருகிறேன்.

இது நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. ஸத்யாக்கிரஹ தினம்சென்னை மாநகரம். பட்டாளத்திலிருந்து தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெரிய  தொழிலாளர் பட்டாளம், காத தூரத்துக்கு மேல் நடந்து வந்து  ராயப்பேட்டையில் இருக்கும் திரு.வி.. அவர்களின்     அவர்களின் அச்சுக்கூடத்தில் வந்து சேர்ந்தது. சத்யாக்ரஹ சிந்தனைகடலில் மூழ்கி அவர்கள் உணர்ச்சிப்பெருக்கால் தத்தளித்தாலும், தலைவரின் ஆணையை மறக்கவில்லை.அதனால் நிம்மதியில்லாத அமைதி

வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.. அவர்களின்தேசபக்தனின்சாது அச்சுக்கூடம்.அதுவே யான் கூறும் குருகுலம்). அந்த வேப்பமரம் ஒரு போதி மரமன்றோ! அதனடியில் அமர்ந்து திரு.வி.. அவர்களுடன் அளவளாவிய மேன்மக்கள் யார், யாரோ? துறவி.சுப்ரமண்ய சிவா, ராஜாஜி, அரசியல் எதிர்துருவமாகிய .வே.ராமசாமி நாயக்கர், துடிப்பு சுதேசிமின்சாரநீர்புகழ் வரதராஜுலு நாயுடு, மஹா கவி சுப்ரமணிய பாரதியார் போன்ற மேன்மக்கள். அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு  அந்த பேரலை ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்ந்துவிட்டது.ஒரு குளிர்; ஒரு வெயில். ஒரு கவிதை.

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. ஐயம் ஒன்றும் இருப்பது சாத்தியமில்லை. இன்றைய அரசியல்வாதிகளை, சமுதாய பிரமுகர்களை நடிப்பு சுதேசிகள் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு கொண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தவர். அவருக்கு ஏப்ரல் 6, 1919 ஒரு சுபதினம் என்று தோன்றியதும், அவர் ஆதவனின் பொற்சுடர்களை வருணித்ததும் வியப்புக்குரியவை அல்ல. அவருடன் கோரஸ்ஸாக, அந்த திருபள்ளியெழுச்சி பாடலை பாடி மகிழ்ந்து, அன்றைய நிகழ்வுகளை காண்போமாக.

திருப்பள்ளியெழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் ோயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
பொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ
குதலை மொழிக்கிரங்காதொரு தா
மகளே!பெரும் பாரதர்க்கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே.”

குஹானந்த நிலையத்திலிருக்கும் தேசாமபிமானிகளின் பேரலையியில் பாரதியார் இல்லாவிடின், அது பெருங்குறையன்றோ! தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இதை நூறாண்டுகளுக்கு (20 நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்.) பின் எழுதும் போது, அர்ஜுனனின் உடல் நடுங்கியது போல, என் நாவு உலர்ந்து விட்டது. தேகமாடுகிறது. நடை தளர்ந்து விட்டது. இது என் அனுபவம்.


இந்த கூட்டம், களிறு போல், கடற்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். இது, வணிக பெருமக்கள் அரசாணையை மீறிய அருங்காட்சி. திலகர் திடம். புனித பூமி. (தற்காலம்அழகுபடுத்தப்பட்டு உரம் இழந்தது.) தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.. அவர்கள். அவரை கைது செய்வார்கள் என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது.
(தொடரும்)
இன்னம்பூரான்
11 09 2019